உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 2/8 பக். 3
  • ஸ்ட்ரோக்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஸ்ட்ரோக்!
  • விழித்தெழு!—1998
  • இதே தகவல்
  • அதன் விளைவுகளை சமாளித்தல்
    விழித்தெழு!—1998
  • பக்கவாதம்—தாக்குவதற்கான காரணம்
    விழித்தெழு!—1998
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 2/8 பக். 3

ஸ்ட்ரோக்!

தொழில்மயமாக்கப்பட்ட மேற்கத்திய உலகிலே மரணத்திற்கும் சீர்படுத்த முடியாத உடல் ஊனத்திற்கும் ஒரு முக்கிய காரணம் ஸ்ட்ரோக் (பக்கவாதம்). திடீரென “மூளை தாக்கம்” ஏற்படுவதையே, “ஸ்ட்ரோக்” என்ற வார்த்தை சுட்டிக்காட்டுகிறது. இப்பொழுதுதான் நன்றாக இருந்ததாக நீங்கள் உணரலாம், அடுத்த வினாடியே, உங்களை ஒரு மின்னல் தாக்கியதைப்போன்று உணருவீர்கள்—கடுமையான பக்கவாதம் எதிர்பாராமல் உங்கள் வாழ்க்கையை திசைதிருப்பிவிடலாம். உங்கள் உடல் ஊனமுற்று நகர முடியாத கொடுமையான நிலை ஏற்படலாம்; அது ஒருவேளை உங்களை பேச முடியாதவராக்கலாம், உங்கள் உணர்ச்சிகளை நாசமாக்கி, குணங்களை மாற்றி, புரிந்துகொள்ளும் தன்மையை பாதிக்கலாம். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் அனுபவித்த சாதாரண வாழ்க்கையை எட்டிப்பிடிப்பதற்கான முடிவில்லாத போராட்டத்திற்குள் நீங்கள் தள்ளப்பட்டதைப்போல் உணரலாம்.

எலன் மோர்கனுடைய அனுபவத்தை கவனியுங்கள். a 64 வயது பெண்மணியான எலன் புதன்கிழமையன்று ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்தார். வியாழக்கிழமை பொருட்கள் வாங்க தன் கணவனோடு கடைக்குச்சென்ற சமயம் திடீரென அவரால் பேசமுடியவில்லை, அவருடைய முகம் உருக்குலைந்தது. அவருடைய உடல் தளர்ந்து, குடிபோதைக்கு உட்பட்டவரைப்போல் தடுமாறினார். எலன் கடுமையான பக்கவாதத்தினால் தாக்கப்பட்டார்!

பக்கவாதத்தினால் தாக்கப்பட்டப்பின் எலனால் குளிப்பது உடையுடுத்துவது போன்ற சாதாரண வேலைகளைக்கூட சுயமாகச்செய்ய முடியவில்லை. தன்னால் எழுதவோ பின்னவோ தைக்கவோ முடியாது என்பதை அறிந்து, பலமுறை கட்டுப்படுத்தமுடியாதபடி கண்ணீர் சிந்தினாள், மிகுதியான சோர்வையும் உணர்ந்தார். இந்தச் சமயமெல்லாம் அவருடைய சிந்திக்கும் திறமையில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை; ஆனால் மற்றவர்கள் தன்னை அறிவில்லாதவளாகக் கருதுகிறார்கள் என்ற எண்ணம் வரும்போது சங்கடமாக உணருவார். பின்னர் எலன் விவரித்தார்: “இப்படிப்பட்ட திடீர் மாற்றத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சி ஒருவரை உணர்ச்சிரீதியிலும் மனரீதியிலும் எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை சிலரே உணருகிறார்கள். தனிநபராக என்னுடைய வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதோ என்ற அளவுக்கு உணர ஆரம்பித்தேன்.”

பக்கவாதம் ஏற்பட காரணம் என்ன? இந்தப் பாரிசவாயு நோய் வந்தவரெல்லாம் ஒரேவிதமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்களா? இந்நோய் தாக்கப்பட்டவர்கள் எவ்விதம் சமாளித்தார்கள்? பிழைத்தவர்களின் குடும்பங்கள் எவ்விதம் சமாளிக்கின்றன? நாம் அனைவருமே எவ்விதம் உதவி அளிக்க முடியும்? இந்தக் கேள்விகளை விழித்தெழு! அலசியாராய்ந்து, ஸ்ட்ரோக்கில் பாதிக்கப்பட்டவர்களது வாழ்க்கையையும் அவர்களோடு சேர்ந்து போராடும் அவர்களது குடும்பத்தாரது வாழ்க்கையையும், புரிந்துகொள்ள உங்களுக்கு உதவுகிறது.

[அடிக்குறிப்புகள்]

a நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப அங்கத்தினரின் நலன் கருதி சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்