உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 2/8 பக். 29
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1998
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2005
  • உயிருடனிருப்பதில் இப்போது எனக்கு சந்தோஷம்!
    விழித்தெழு!—1997
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2003
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1998
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 2/8 பக். 29

எமது வாசகரிடமிருந்து

மதமும் போரும் போரில் மதம் (ஏப்ரல் 22, 1997) பற்றி கலந்தாலோசித்த, தகவல் நிறைந்த கட்டுரைகளுக்கு போற்றுதல் தெரிவிக்கவே எழுதுகிறேன். “கடவுளின் பெயரில் கொல்லுதல்” என்ற முதல் கட்டுரை உண்மையிலேயே என் கவனத்தை ஈர்த்தது. அது சுருக்கமாகவும் குறிப்பாகவும் இருந்தது. முக்கியமாக, கானானியரை கொல்லும்படி பூர்வகால இஸ்ரவேலரை யெகோவா ஏன் அனுமதித்தார் என்ற நியாயவிவாதத்தை அளிக்கையில் அவ்வாறு இருந்தது.

எஸ். ஜே., ஐக்கிய மாகாணங்கள்

ஜின்ஜர் க்ளாஸின் கதை “உயிருடனிருப்பதில் இப்போது எனக்கு சந்தோஷம்!” (ஏப்ரல் 22, 1997) என்ற ஜின்ஜர் க்ளாஸின் அனுபவத்தால் நான் எவ்வளவாய் உற்சாகமடைந்தேன் என்பதைக் கூறுகிறேன். அவர்களைப் போலவே நானும், தன்னம்பிக்கை முழுவதையும் இழந்து, உபயோகமற்றவளாகவும் அன்புகூரப்படாதவளாகவும் உணர்ந்தேன். இந்த உணர்ச்சிகளை தாங்க முடியாதவளாக, இறந்துபோக வேண்டும் என்று தினமும் கடவுளிடம் கண்ணீரோடு ஜெபித்து வந்தேன். மரணம்தான் விமோசனம் என கருதினேன். ஆனால் ஒருநாள், “நான் வாழவேண்டும் என்பதே உம்முடைய சித்தமானால் அதற்காக எனக்கு உற்சாகத்தைத் தாரும்” என்று ஜெபம் செய்தேன். அவ்வாறு ஜெபம் செய்த உடனேயே, இந்த விழித்தெழு!-வை பெற்றேன். இந்தக் கட்டுரையைப் பார்த்ததுமே, கடவுள் என் ஜெபத்திற்கு பதிலளித்திருக்கிறார் என்றுதான் எனக்குத் தோன்றியது. நகைச்சுவை உணர்வுள்ளவளாகவும் சுயநலமில்லாதவளாகவும் இருப்பது, சாதகமான மனநிலையை காத்துக்கொள்ள எனக்கு உதவும் என்று ஜின்ஜருடைய அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டேன். வாழவேண்டும் என்ற தூண்டுதலை இந்த ஒரே பத்திரிகை எனக்குத் தந்தது என என்னால் உறுதியாக சொல்ல முடியும்.

எம். கே., ஜப்பான்

இப்போதுதான் ஆறாவது முறையாக இந்தக் கட்டுரையை வாசித்து முடித்திருக்கிறேன், மீண்டும் வாசிப்பேன்! முழுநேர ஊழியம் செய்யும் எனக்கு வயது 21. சக்கர நாற்காலியில் இருக்கவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தும், பிரசங்க வேலையில் ஜின்ஜர் க்ளாஸுக்குள்ள வைராக்கியத்தின் காரணமாக அவர்கள்மீது அதிக மதிப்பு வைத்திருக்கிறேன். யெகோவாவை சேவிப்பதில் என்னாலான மிகச் சிறந்ததைச் செய்யும்படி அவர்களுடைய அனுபவம் என்னைத் தூண்டியது.

எஸ். ஸெட்., இத்தாலி

உருக்கமான அந்த அனுபவத்திற்காக கோடானுகோடி நன்றி. எனக்கு சதை நலிவு வியாதி இருப்பதனால் ஒருநாளின் பெரும்பகுதியை படுக்கையிலேயே கழிக்க நேரிடுகிறது. சக்கர நாற்காலியிலிருந்தே பிரசங்க வேலை செய்வதும் எனக்கு அதிக கஷ்டமாக இருக்கிறது. ஜின்ஜருடைய அனுபவம் என்னை அதிக உற்சாகமூட்டி, என் வியாதியின் காரணமாக கொஞ்சம் மனச்சோர்வடையும் சமயங்களை சமாளிக்கவும் எனக்கு உதவுகிறது.

எம். ஆர்., இத்தாலி

ஏன் தீராத வியாதி? “இளைஞர் கேட்கின்றனர் . . . எனக்கு ஏன் இந்தத் தீராத வியாதி?” (ஏப்ரல் 22, 1997) என்ற கட்டுரைக்காக உங்களுக்கு நன்றி. எனக்கு 21 வயது; மேலும் எனக்கு அரிவாள் செல் சோகை வியாதி இருக்கிறது. இந்தக் கட்டுரையிலுள்ள இளைஞரின் உணர்ச்சிகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. எனக்கு இந்த வியாதி இருந்தபோதிலும், யாராவது என்னை காதலித்து திருமணம் செய்துகொள்ள விரும்புவார்களா என நான் அடிக்கடி நினைத்ததுண்டு. ஆனால் உங்கள் கட்டுரை எனக்கு உதவியது. ஏனென்றால், நான் மட்டுமே இவ்வாறு உணருவதில்லை என்பதை இப்போது அறிந்திருக்கிறேன்.

டி. ஆர்., ஐக்கிய மாகாணங்கள்

இணைபிரியா தோழிகள் ஆன்-மாரி ஏவால்ட்சானின் அனுபவத்திற்காக (ஏப்ரல் 22, 1997) உங்களுக்கு நன்றி. இந்தச் சகோதரி, தன் குறைபாட்டின் மத்தியிலும் ஆவிக்குரிய விதத்தில் தொடர்ந்து முன்னேறுவதைக் கண்டு வியப்பில் ஆழ்ந்துபோனேன். அந்தக் கட்டுரை என்னை சிந்திக்க வைத்தது. யெகோவாவை சேவிப்பதில் உபயோகிப்பதற்காக நமக்கு கொடுக்கப்பட்டிருப்பவற்றை நம்மில் அநேகர் மதித்துணராதிருக்கிறோம். அந்தச் சகோதரியையும் அவருடைய உண்மையுள்ள தோழியையும் பாராட்டுகிறேன். என்னே ஓர் சிறந்த முன்மாதிரி!

ஆர். ஏ., ஈக்வடார்

கண் பார்வையற்ற ஒருவர் வேலை செய்கிறார், வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறார், பைபிள் படிப்புகளை நடத்துகிறார், ஒவ்வொரு வாரமும் கிறிஸ்தவ கூட்டங்களுக்கு செல்கிறார் என்று அறிவது அதிக உற்சாகமளிக்கிறது. ஊழியத்திற்கு முதலிடம் கொடுத்து, அதில் என்னாலான மிகச் சிறந்ததை செய்வது தகுதியானதே என அது உணரச் செய்தது. ஆவிக்குரிய பார்வையின் மதிப்பு உண்மையில் தலைசிறந்தது. ஆன்-மாரி ஏவால்ட்சானை ஆழ்ந்த அன்போடும் போற்றுதலோடும் நினைவுகூருவேன்.

ஜே. ஓ., நைஜீரியா

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்