உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w90 9/1 பக். 3-4
  • பயம் எப்போதுமே மோசமானதா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பயம் எப்போதுமே மோசமானதா?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • இதே தகவல்
  • மனிதனுக்கு அல்ல, கடவுளுக்கு ஏன் பயப்படவேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
  • யெகோவாவுக்கான பயத்தில் மகிழ்ச்சி காண கற்றுக்கொள்வது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
  • யெகோவாவுக்குப் பயப்படுவதற்கேற்ற இருதயத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • யெகோவாவுக்குப் பயந்து அவர் கட்டளைகளைக் கைக்கொள்ளுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1990
w90 9/1 பக். 3-4

பயம் எப்போதுமே மோசமானதா?

அது சந்தோஷத்தை அழித்துப் போட்டு நம்பிக்கையை தகர்த்திடக்கூடும். அது மனதின் நஞ்சு, பகுத்தறிவை பாழாக்கிவிடும் ஒன்று என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அது மிக மோசமான சரீரப் பிரகாரமான நோயைவிட அதிக அழிவை ஏற்படுத்தக்கூடியது என்றும் கூறப்படுகிறது. ஆம், பயம் ஒரு வலிமையுள்ள உணர்ச்சி. இருப்பினும் அது எப்போதுமே மோசமானதா?

ஓர் அறிமுகமில்லாத பாதையில் நீங்கள் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பாதை வளைந்து வளைந்து மலைகளின் மேல் செல்கிறது. இரவு வருகிறது. அதோடு இலேசான தூசியைப் போல் உறைபனியும் விழுகிறது. உங்கள் வண்டி பக்கவாட்டில் இலேசாக சறுக்குகிறது. பாதையில் பனிநிறைந்த சற்று உயரமான இடத்தை நீங்கள் அடைந்துவிட்டதாக உணருகிறீர்கள்.

இப்பொழுது நீங்கள் மிகவும் விழிப்புடையவராக இருந்தாக வேண்டும். பனி நிறைந்த, ஒவ்வொரு வளைவையும் நீங்கள் ஜாக்கிரதையாக கடந்து செல்கையில் அந்தச் சறுக்கக்கூடிய மேற்பரப்பின் மேல், உங்கள் வண்டியின் மீதுள்ள உங்கள் கட்டுப்பாட்டை இழப்பதும், கீழே உள்ள பள்ளதாக்கினுள் விழுந்துவிடுவதும் எவ்வளவு எளிது என்று நினைத்துப் பார்க்கிறீர்கள். மேலுமாக இருளிலே வேறென்ன ஆபத்துகள் மறைந்திருக்கின்றன என்பதும் உங்களுக்குத் தெரியாது. இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்கள் மனதுக்குத் தோன்றுகையில் உங்கள் நாவு உலர்ந்துவிடுகிறது. உங்கள் இருதயம் சற்று வேகமாக அடித்துக் கொள்கிறது. நீங்கள் நன்றாய் விழித்திருக்கிறீர்கள். இதுவரை என்ன நினைத்துக் கொண்டிருந்தாலும் இப்போது நீங்கள் உடனடியாக செய்யவேண்டிய காரியத்தில் முழுமையாக ஈடுபட்டிருக்கிறீர்கள்: அதாவது வண்டி பாதையின் மேலே சென்று கொண்டிருக்கும்படிச் செய்வதும் விபத்தைத் தவிர்ப்பதும்.

முடிவில், பாதை சற்றுத் தாழ்வான மேட்டுப் பகுதிக்கு இறங்குகிறது. தெரு விளக்குகள் இருக்கின்றன. இனிமேல் பனியோ இல்லை. கொஞ்சங் கொஞ்சமாக உங்கள் சரீர இறுக்கம் நீங்குகிறது. நீங்கள் அமைதியாகி நிம்மதியாகப் பெருமூச்சு விடுகிறீர்கள். இந்தப் பயமெல்லாம் ஒன்றுமில்லாததற்கே!

ஆனால் அது எல்லாமே ஒன்றுமில்லாததற்கா? உண்மையில் இல்லை. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களின் கீழ் நியாயமான அளவு நடுக்கம் என்பது இயல்பான பிரதிபலிப்பே. அது நம்மை விழிப்புள்ளவர்களாக, முன்னெச்சரிக்கையுள்ளவர்களாக இருக்கச் செய்கிறது. ஆரோக்கியமான பயம் என்பது எதையும் சிந்திக்காமல் செயல்பட்டு நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்ளாமலிருக்க உதவக்கூடும். ஆம், பயம் என்பது எப்போதுமே சிந்திப்பதைக் கெடுத்துப்போடுவதில்லை, அல்லது மனதின் நஞ்சாகவும் இல்லை. சில சந்தர்ப்பங்களின் கீழ் அது பிரயோஜனமுள்ளதாகவும்கூட இருக்கக்கூடும்.

பயத்தைப் பற்றி பைபிள் பேசுகிறது, அதில் குறிப்பிடத்தக்க இரண்டு வகைகளை நம் கவனத்திற்குக் கொண்டுவருகிறது. ஒருவகை பயம் உண்மையில் மனதின் நஞ்சாகவே இருக்கிறது. ஆனால் மற்றொன்றோ இயல்பானதும் ஆரோக்கியமானதும் மட்டுமல்ல, நமது இரட்சிப்பிற்கு அடிப்படையில் தேவையானதும்கூட. அந்தப் பயத்தின் இரண்டு வகைகள் யாவை? ஒன்றைத் தவிர்க்கையில் மற்றொன்றை எவ்வாறு வளர்த்துக் கொள்ள நாம் கற்றுக்கொள்ளக்கூடும்? பின்வரும் கட்டுரையில் இது கலந்தாராயப்படும். (w89 6/1)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்