ராஜ்ய செய்தி இதைப் பயன்படுத்தி வெற்றிகரமான அளிப்பு ஏற்பாடு
“வாழ்க்கையில் ஏன் இவ்வளவு பிரச்சினைகள்?—தொல்லையற்ற ஒரு பரதீஸ் சாத்தியமா?” இது, சென்ற ஆண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களின்போது, 139 மொழிகளில் உலகமெங்கும் பரவலாக வினியோகிக்கப்பட்ட, நான்கு பக்க துண்டுப்பிரதியாகிய, ராஜ்ய செய்தி எண் 34-ன் தலைப்பாக இருந்தது. இந்த ஊழிய அளிப்பு ஏற்பாட்டை, “அந்த ஆண்டின் முக்கியத்துவம் வாய்ந்தவற்றில் ஒன்று,” என்பதாக ஜமைகாவிலிருக்கும் சாட்சிகள் விவரித்தனர். “சகோதரர்களுக்கு மகிழ்ச்சியின் ஒரு பெரும் மூலகாரணம்,” என்று பெல்ஜியத்திலுள்ள சாட்சிகள் அதைக் குறிப்பிட்டனர். செக் குடியரசில் இதுவே முதல் தடவையாக, ராஜ்ய செய்தி வினியோகிக்கும் ஒன்றில் பங்குகொள்ள யெகோவாவின் சாட்சிகளுக்குக் கிடைத்த வாய்ப்பாக இருந்தது. அந்தக் கிளை அலுவலகம் அறிவிப்பதாவது: “இந்த அளிப்பு ஏற்பாடு ஆர்வ மற்றும் உள்ளக்கிளர்ச்சிக்குரிய ஆவியைத் தூண்டி எழுப்பியது.” இவற்றைப்போன்ற நல்லுரைகள் மற்ற பல நாடுகளிலிருந்தும் கேட்கப்பட்டன.
ராஜ்ய செய்தி எண் 34-ஆனது, மதத்தின் பெயரில் செய்யப்படும் அருவருப்புகளினிமித்தமாகப் பெருமூச்சுவிட்டு அழுகிறவர்களுக்கு தனிப்பட்ட செய்தியை உடையதாக இருந்தது. (எசேக்கியேல் 9:4) தங்களுக்கு அதன்மீது கட்டுப்பாடு இராத ‘கையாளுவதற்குக் கடினமான கொடிய காலங்களின்’ நிமித்தமாகத் தங்கள் வாழ்க்கையில் தொல்லைப்படுத்தப்படுவோருக்கு அது ஆறுதலைக் கொண்டிருந்தது. (2 தீமோத்தேயு 3:1, NW) வாழ்க்கையின் பிரச்சினைகள் வெகு சீக்கிரத்தில் தீர்க்கப்படும் என்று, அந்தத் துண்டுப்பிரதி, பைபிளிலிருந்து குறிப்பிட்டு காட்டினது. துன்பமே இராத ஒரு பரதீஸ் நிச்சயமாயிருக்கிறது. (லூக்கா 23:43) ராஜ்ய செய்தி பிரதியை வாசித்த பலர், அதன் செய்தியால் செயல்பட தூண்டப்பட்டனர். சாட்சி ஒருவரிடம் டோகோவில் உள்ள ஒரு மனிதர்: “நீங்கள் சொல்லியிருப்பது மறுக்கமுடியாதது,” என்று சொன்னார்.
மறுக்க முடியாதபடி, இந்த ராஜ்ய செய்தியின் வினியோகிப்பு அரிதான தனி கவனத்தைக் கவர்ந்தது. டென்மார்க்கில் இந்தத் துண்டுப்பிரதியை அளித்த சாட்சிக்கு ஒரு வீட்டுக்காரர் இவ்வாறு பதிலளித்தார்: “நான் இப்போதுதான் ஐக்கிய மாகாணங்களிலிருந்து திரும்பிவந்திருக்கிறேன். நான் அங்கிருந்து புறப்படும்போதுதானே, ஒருவர் உங்கள் துண்டுப்பிரதியை எனக்கு அளித்தார். இதோ இப்போதுதான் நான் வந்து சேர்ந்திருக்கிறேன், உடனடியாக அதே துண்டுப்பிரதி டேனிஷில் அளிக்கப்படுகிறது!”
இந்த அளிப்புக்கு ஆர்வமிகுந்த ஆதரவு
உலகமுழுவதிலுமுள்ள யெகோவாவின் சாட்சிகள், இந்தத் துண்டுப்பிரதியை வினியோகிக்கும் ஊழியத்தில் மிகுந்த ஆர்வத்துடன் சேர்ந்துகொண்டனர். ஆஸ்திரியா, எல் சால்வடார், ஹைதி, ஹங்கேரி, இத்தாலி, நியூ காலிடோனியா ஆகியவை, இந்த ராஜ்ய செய்தி வினியோகிக்கப்பட்டுவந்த மாதங்களின்போது, பிரஸ்தாபிகளில் முன்னொருபோதும் இராத உச்சக்கட்டங்களை அறிவிப்பு செய்த பல நாடுகளில் சிலவேயாகும்.
ஜாம்பியாவில் வட்டாரக் கண்காணி ஒருவர், தன் மூன்று வயது மகள் டெப்ராவை வீடுவீடாகப் பிரசுரங்களை அளிப்பதற்குப் பயிற்றுவித்திருந்தார். ராஜ்ய செய்தி எண் 34-ன் இந்த அளிப்பு ஏற்பாட்டின்போது, டெப்ரா 45-க்கு மேற்பட்ட துண்டுப்பிரதிகளை அளித்தாள். டெப்ராவிடமிருந்து இந்த ராஜ்ய செய்தி பிரதிகளை ஏற்றிருந்தவர்கள் சிலருடன் அவளுடைய தாயார் பைபிள் படிப்புகளைத் தொடங்கினார்கள்.
தென் ஆப்பிரிக்காவில் ஒரு பருவவயதுப் பெண், காஷியா என்ற பெயருடைய பள்ளித் தோழிக்கு இந்தத் துண்டுப்பிரதியை அளித்தாள். காஷியா இந்தத் துண்டுப்பிரதியை வாசித்து இவ்வாறு சொன்னாள்: “இது மிக ஆச்சரியமானது—பரதீஸான பூமியில் என்றென்றும் வாழ்வது! இதைப்பற்றி ஏன் எனக்கு முன்பே சொல்லப்படவில்லை?” பைபிள் படிப்பு ஒன்று தொடங்கப்பட்டது. ஒரு வாரத்துக்குள் காஷியா மற்றொரு துண்டுப்பிரதியைப் பெற்றாள். இந்த இரண்டாவது துண்டுப்பிரதி, கடிதத்தின் மூலம் நட்புத்தொடர்பு கொள்ளும், சைப்பிரஸில் வாழும் தன் ரோமன் கத்தோலிக்க சிநேகிதியிடமிருந்து வந்தது. இந்தக் கடித-சிநேகிதி, ரோமன் கத்தோலிக்கச் சர்ச்சின் போதகங்கள் ஏன் பொய்யானவை என்று விளக்கிக் கூறி, யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க, தான் திட்டமிட்டிருப்பதாக அவளுக்குச் சொன்னாள். நிச்சயமாகவே அது, தொடர்ந்து படிக்கும்படியான காஷியாவின் தீர்மானத்தை வெகுவாய்ப் பலப்படுத்தியது.
ஸ்விட்ஸர்லாந்தில் பத்து வயது சிறுவன் ஒருவன், தன் தாயாரோடுகூட இந்தத் துண்டுப்பிரதியை வினியோகிப்பதில் பங்குகொண்டான். ஒரு வாலிபப் பெண்ணிடம் ஒரு பிரதியை அவன் கொடுத்து, அதைக் கவனமாக வாசிக்கும்படி அவளை ஊக்கப்படுத்தினான். அதன் முன்பக்கத்தில் உள்ள படம் சித்தரித்திருப்பதை—பூமியில் முடிவற்ற வாழ்க்கையை—அவன் உண்மையில் நம்புகிறானாவென அந்த வாலிபப் பெண் கேட்டாள். அந்தச் சிறுவனின் பதில்? “ஆம், நான் மிக நிச்சயமாக நம்புகிறேன்.” அந்தப் பெண், தன் சொந்த மதத்தில் மிகப் பல முரண்பாடுகள் இருப்பதால், உண்மையான விசுவாசத்துக்காக தான் தேடிக்கொண்டிருந்தாள் என்று அப்போது தெரிவித்தாள். மறுசந்திப்பு ஒன்றில், பைபிள் படிப்பு தொடங்கப்பட்டது.
உடனடியான பிரதிபலிப்புகள்
இந்த ராஜ்ய செய்தி, அதை வாசித்தவர்களில் உடனடியான பிரதிபலிப்பைச் சிலசமயங்களில் உண்டாக்கினது. பெல்ஜியத்தில் உள்ள 11 வயதான ஒரு சிறுமி, இந்தத் துண்டுப்பிரதியை வாசித்தப்பின், யெகோவாவின் சாட்சிகளில் ஒருவரிடம், தான் கடைகளில் களவாடிக்கொண்டிருப்பதாகத் தன் குற்றத்தைத் தெரிவித்தாள். அந்தக் காரியத்தை இரகசியமாக வைக்கும்படி அவளுடைய தாய் விரும்பினாள், ஆனால், தான் வாசித்த விஷயத்தால் அந்தச் சிறு பெண்ணின் மனச்சாட்சி தூண்டப்பட்டிருந்தது, தான் போய் அந்தக் கடை வட்டாரத்தின் மேலாளரைக் காணவேண்டுமென விடாப்பிடியாக இருந்தாள். முடிவில், அந்தச் சாட்சியோடுகூட தன் மகள் அந்தக் கடை வட்டாரத்துக்குச் செல்லும்படி தாய் சம்மதித்தாள். குற்றத்தை அவள் தெரிவித்ததன்பேரில் அந்த மேலாளர் ஆச்சரியமடைந்தார். ராஜ்ய செய்தி தானே அவ்வாறு செயல்படும்படி அவளைத் தூண்டியது என்று அவர் அறிந்தபோது, அவ்வளவு வல்லமைவாய்ந்ததாக அதில் என்ன அடங்கியுள்ளது என்பதைக் காணும்படி தனக்காகவும் ஒரு பிரதியை அவர் ஏற்றார். இந்தப் பெண்ணோடு இப்போது பைபிள் படிப்பு தொடர்ந்து நடத்தப்படுகிறது.
காமரூனில் ஒரு சாட்சி, ராஜ்ய செய்தி ஒன்றை ஓர் ஆளிடம் விட்டு வந்தாள், அவள் சொல்வதாவது: “நாங்கள் திரும்பச் சந்தித்தபோது, அவர் ஏற்கெனவே அதில் அடிக்கோடிட்டிருந்ததைக் கண்டோம், பல கேள்விகளையும் கேட்கும்படி வைத்திருந்தார். திருப்திதந்த பதில்களைப் பெற்ற பின்பு, அவர் இவ்வாறு கூறினார்: ‘மனிதவர்க்கத்தின் துயரத்துக்கு மதம் பங்களித்திருக்கிறது என்பது முற்றிலும் உண்மையே. மிகுதியானவற்றைப் புரிந்துகொள்ள உங்கள் துண்டுப்பிரதி எனக்கு உதவிசெய்திருக்கிறது, ஆனால் இன்னும் அதிகம் அறிந்துகொள்ள விரும்புகிறேன்.’” இப்போது அவருடன் ஒழுங்காக பைபிள் படிப்பு நடத்தப்படுகிறது.
உருகுவேயில் வீடுவீடாகச் சந்தித்துக்கொண்டிருந்த ஒரு சாட்சி ஓர் ஆளிடம் துண்டுப்பிரதி ஒன்றை அளித்தார். வீடுவீடாகப் பிரசங்கிக்கும் தன் ஊழியத்தை அந்தச் சாட்சி தொடர்ந்து செய்துகொண்டு அந்த ஆளின் வீட்டு-பின்கதவை அடையும் வரையில் அந்தக் கட்டிட வட்டத்தைச் சுற்றிவந்தார். அந்த ஆள், துண்டுப்பிரதியைக் கையில் வைத்துக்கொண்டு, தனக்காகக் காத்துக்கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அவர் அதை ஏற்கெனவே வாசித்துவிட்டிருந்தார், இன்னும் அதிகமான தகவலை விரும்பினார். அந்த இடத்திலேயே ஒரு படிப்பு தொடங்கப்பட்டது.
இந்த வினியோகிப்பில் பொதுஜனம் உதவிசெய்கிறது
ஜப்பானில் ஓர் இளம் சாட்சி, 50-க்கு மேற்பட்ட வயதான ஒரு நபரை அணுகி, இந்தத் துண்டுப்பிரதியை அவருக்கு அறிமுகப்படுத்தினான். அந்த நபர்: “கண் பார்வையில்லாத ஆட்களை நீ சந்திக்கையில் அந்தத் துண்டு வெளியீட்டைக் கொண்டு என்ன செய்கிறாய்?” என்று கேட்டார். தனக்குத் தெரியவில்லை என்று அந்தச் சாட்சி ஒப்புக்கொண்டான். ஒரு கணநேரம் காத்திருக்கும்படி அவனிடம் சொல்லிவிட்டு அவர் தன் வீட்டுக்குள் சென்றார். ராஜ்ய செய்தி ஒன்றுடன் அவர் திரும்பிவந்து, இவ்வாறு சொன்னார்: “நான் ஏற்கெனவே அந்தத் துண்டுப்பிரதியைப் பெற்றுக்கொண்டேன். அது, கவனத்தை மிகவும் கவரும் முக்கியமான தகவல் அடங்கியதாக இருக்கிறதென்று நான் எண்ணினேன், ஆகவே நான் அதை குருடர்கள் எழுத்துமுறையில் எழுதி பதிவுசெய்தேன். குருடராக இருக்கும் ஆட்களுக்கு தயவுசெய்து இதைப் பயன்படுத்து.” ராஜ்ய செய்தி பிரதியில் அடங்கியது குருடருக்குக் கிடைக்காமல் போய்விடக்கூடாது என்பதற்காக, அதை குருடர் எழுத்துமுறையில் பதிவுசெய்வதற்கு இந்த நபர் பல மணிநேரங்களைப் செலவிட்டிருந்தார்.
ஸ்லோவாக்கியாவில் ஒரு நபர் இந்தத் துண்டுப்பிரதியை அவ்வளவு அதிகமாய் விரும்பினதால், அவர் அதை 20 நகல்கள் எடுக்கச் செய்து, அந்த ஜெராக்ஸ் பிரதிகளை அவரே வினியோகித்தார். ஸ்விட்ஸர்லாந்தில் ஒரு பிரஸ்தாபி, ராஜ்ய செய்தி ஒன்றை ஒரு குடும்பத்துக்கு அளித்துவிட்டு, அந்தக் குடும்பம் வாழ்ந்த கட்டிடத்தின் மேல்மாடிகளில் தொடர்ந்து ஊழியம் செய்துகொண்டு சென்றார். மறுபடியும் கீழிறங்கி வந்தபோது, அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த இளம் சிறுவன் ஒருவன் அவரைச் சந்தித்து, அந்தத் துண்டுப்பிரதியில் இன்னும் 19 பிரதிகள் வேண்டுமெனக் கேட்டான். பிரச்சினைகளையும், அவற்றைத் தீர்க்கும் வழிகளைத் தேடுதலைப் பற்றியும் எழுதும்படி, அந்தச் சிறுவனின் பள்ளியில், மாணாக்கர்களுக்கு வேலை கொடுக்கப்பட்டிருந்தது. தன் வகுப்புத் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பிரதி ராஜ்ய செய்தி வேண்டுமென்று அவன் விரும்பினான்.
ஒருவரும் விடப்படவில்லை
இந்த அளிப்பில் பங்குகொண்டவர்கள், ஒருவரையும் தவறவிடாதிருக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்ள கடினமாய் முயற்சி செய்தனர். நியூ காலிடோனியாவில், இரண்டு சாட்சிகள், ராஜ்ய செய்தி பிரதிகளை வினியோகிப்பதற்காக, நெடுந்தொலைவில் ஒதுக்கமாயிருந்த ஓர் இனத்தவரின் பிராந்தியத்துக்குப் பயணப்பட்டுக் கொண்டிருந்தனர். வழியில், பயன்படுத்தப்படாததாகத் தோன்றின ஒரு பாதையை அவர்கள் கவனித்தனர். எனினும் அது முடியும் இடத்தில் எவராவது வாழ்கிறார்களா என்று காணும்படி தீர்மானித்தனர். காரை விட்டு இறங்கி, அந்தப் பாதை வழியாக நடந்து, நீரோட்டங்களைக் கடந்து, கடைசியாக ஒரு வீட்டைக் கண்டுபிடிக்கும் வரையில் சென்றனர். யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி ஒருபோதும் கேள்விப்பட்டிராத ஒரு தம்பதியினர் அங்கே வாழ்ந்தனர், ராஜ்ய செய்தி ஒன்றை அவர்கள் ஏற்றனர். பிற்பாடு இந்தப் பிரஸ்தாபிகள் மறுசந்திப்பு செய்தனர். தங்களுக்கு ஆச்சரியமுண்டாக, சாட்சிகள் தங்கள் காரை அந்த வீடு வரையாகவும் ஓட்டிக் கொண்டுவரக்கூடும்படி, அந்தத் தம்பதிகள் அந்தப் பாதையையும் பல சிறிய பாலங்களையும் செப்பனிட்டு சீர்ப்படுத்தியிருந்ததைக் கண்டனர். ஒழுங்கான பைபிள் படிப்பு ஒன்று தொடங்கப்பட்டது.
போலந்தில் ஒரு சாட்சி ராஜ்ய செய்தி ஒன்றை ஒரு வீட்டுக்காரருக்கு அளிக்கும்படி, கட்டடம் கட்டும் இடத்தைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. அவர் திரும்பி செல்பவராய்க் கட்டடம் கட்டுமிடத்தின் வழியாக நடக்கையில் வேலையாளர்கள் அவரைக் கவனித்தனர். கடைசியாக, அந்த வேலையாளர்களில் ஒருவர் அவரைக் கூப்பிட்டு, தங்களை மறந்துவிட வேண்டாமெனக் கேட்டுக்கொண்டார். அவர் அவர்களை அணுகிவந்தபோது, அவர்கள் நின்று, அந்தத் துண்டுப்பிரதியின் அளிப்புக்குக் கவனமாய்ச் செவிகொடுத்துக் கேட்டனர். ராஜ்ய செய்தி பிரதிகளையும் பத்திரிகைகளையும்கூட அவர்கள் ஏற்றனர். பின்னால் ஒரு மறுசந்திப்பின்போது புத்தகங்களையும் ஏற்றனர்.
ராஜ்ய செய்தி எண் 34 பிரதிகள், பல மொழிகளில் கோடிக்கணக்கில் வினியோகிக்கப்பட்டன. அதன் செய்தி ஏற்கெனவே வல்லமையாய் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. துன்பமற்ற ஒரு பரதீஸ் சாத்தியமாக உள்ளதென்று பலர் கற்றறிந்திருக்கின்றனர். நேர்மையான இருதயமுள்ளோர் தொடர்ந்து சாதகமாகப் பிரதிபலித்து, முடிவில் ‘பூமியைச் சுதந்தரித்து மிகுந்த சமாதானத்தால் மனமகிழ்ச்சியாயிருக்கப்’ போகிற ‘சாந்தகுணமுள்ளவர்களுக்குள்’ இருக்கும்படி நாங்கள் ஜெபிக்கிறோம்.—சங்கீதம் 37:11.
[பக்கம் 31-ன் பெட்டி]
தொடர்ந்து பத்திரிகைகளை விநியோகியுங்கள்!
ராஜ்ய செய்தி எண் 34-ஐ விநியோகிப்பதில், 1995 ஏப்ரல் மற்றும் மே மாதம் உச்சளவில் வெற்றிகரமான அளிப்பு ஏற்பாட்டைக் கண்டது. அந்த இரண்டு மாதங்களில், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்பதிலும் குறிப்பிடத்தக்க விநியோகிப்பு இருந்தது. உதாரணமாக, செக் குடியரசிலுள்ள ஒரு சகோதரர், ஏப்ரலில் 250 ராஜ்ய செய்தி பிரதிகளையும் 750 பத்திரிகைகளையும் அளித்ததாக அறிக்கை செய்கிறார். குவாடலூப்பில், ஏப்ரல் 15 சனிக்கிழமை, ஒரு விசேஷ பத்திரிகை தினமாக தெரிவுசெய்யப்பட்டது. அந்நாட்டிலுள்ள ஏறக்குறைய ஒவ்வொரு பிரஸ்தாபியும் அந்நாளில் இந்த ஊழியத்தில் பங்குகொண்டனர்! ஏப்ரல் மாத பத்திரிகை விநியோகிப்பில் ஸ்லோவாக்கியா ஒரு புதிய உச்சநிலையை அடைந்தது. மற்றநேக நாடுகளிலிருந்தும் இப்படிப்பட்ட அறிக்கைகள் வந்தன.
எனவே, 1996 ஏப்ரல் மற்றும் மே மாதங்களை ஏன் பத்திரிகை விநியோகிப்புக்கான மாதமாக்கக்கூடாது? சபைகள் விசேஷ பத்திரிகை தினங்களுக்காக ஒழுங்கமைக்கலாம். துணைப் பயனியர் சேவையில் தனிநபர்கள் பங்குகொள்ளலாம். இந்த வழியிலும் மற்ற வழிகளிலும், பத்திரிகை விநியோகிப்பை உற்சாகப்படுத்தலாம்; இதனால் ராஜ்ய செய்தி எண் 34-ல் அறிவிக்கப்பட்டுள்ள இன்றியமையாத செய்தி தொடர்ந்து பரவும். அப்படியானால், கடந்த ஆண்டில் ஏற்பட்டதுபோல, நாம் காண்பிக்கிற வைராக்கியமான மனப்பான்மையை நிச்சயமாகவே யெகோவா ஆசீர்வதிப்பார்.—2 தீமோத்தேயு 4:22