உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w96 4/15 பக். 5-7
  • நற்செய்தி எதிர்காலத்தில்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நற்செய்தி எதிர்காலத்தில்!
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • எல்லா கெட்ட செய்திக்கான காரணங்கள்
  • கெட்ட செய்தியில் ஏன் இந்த உயர்வு?
  • இது எப்போதுமே அவ்வாறு இருக்காது
  • கெட்ட செய்தியின் சம்பவங்கள் அதிகரிப்பு
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • மீட்பர் வந்தாரே!
    “யெகோவாவைப் புகழ்ந்து ‘சந்தோஷமாகப் பாடுங்கள்’”
  • நித்திய வாழ்க்கைக்கு ஓர் எதிரி
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
  • ஆவி மண்டலத்தில் ஆட்சியாளர்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
w96 4/15 பக். 5-7

நற்செய்தி எதிர்காலத்தில்!

த னிப்பட்ட விதத்தில் நம்மை பாதிக்கும் கெட்ட செய்தியை பெறும்போதெல்லாம் நாம் அனைவரும் வருத்தப்படுகிறோம். மறுபட்சத்தில், நற்செய்தி வரும்போது—நமக்கோ அல்லது நம்முடைய அன்பானவர்களுக்கோ சந்தோஷமான செய்திகள் வரும்போது—நாம் மகிழ்ச்சியடைகிறோம். ஆனால் கெட்ட செய்தி நம்மை பாதிக்காமல் மற்றவர்களை பாதிக்கும்போது, அடிக்கடி ஆவல் மனப்பான்மை ஏற்படுகிறது; மற்றவர்களுக்கு நிகழும் தீங்கைக் குறித்து தெரிந்துகொள்வதில் சிலர் மகிழ்ச்சியும் அடைகின்றனர். கெட்ட செய்தி ஏன் இவ்வளவு நன்றாக விற்பனையாகிறது என்பதை இது ஓரளவுக்கு விளக்கும்!

கடுந்துயரத்தின்பேரில் சில ஜனங்களுக்கு இருக்கும் கோரமான ஆர்வத்தின் ஒரு தெளிவான உதாரணத்தை, இரண்டாவது உலகப்போரின் ஆரம்பப் பகுதி கொண்டிருந்தது. 1939-ல் 10,000-டன் எடையுள்ள ஜராஃப் ஷ்பா (Graf Spee) என்ற படைக்கலம் பூண்ட ஒரு போர்க்கப்பல், ஜெர்மன் கடற்படையின் பெருமைக்குரிய ஒன்றாக இருந்தது. தென் அட்லாண்டிக் பெருங்கடலிலும் இந்தியப் பெருங்கடலிலும் உள்ள, உடன்படிக்கையால் ஒன்றுபட்ட, வாணிகச் சரக்குக் கப்பல்களுக்கிடையே இந்தப் போர்க்கப்பல் பல வாரங்களாக சேதத்தை ஏற்படுத்தி வந்தது. கடைசியில், மூன்று பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள் ஜராஃப் ஷ்பாவை பின்தொடர்ந்து பிடித்து தாக்கின. இது உயிர்ச்சேதத்தை விளைவித்து, மான்டவிடியோவின் யுரகுவா துறைமுகத்திற்குள் கப்பல் பழுதுபார்ப்பதற்காக தள்ளாடிச்செல்லும்படியான கட்டாயத்தை உண்டுபண்ணியது. மீண்டும் கடலுக்குள் உடனடியாகச் செல்லும்படி போர்க்கப்பலுக்கு யுரகுவா அரசாங்கம் உத்தரவிட்டது, இல்லையென்றால் எல்லைக்குள் அதன் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஆகவே குரூரமான, சரியாகச் சொன்னால் ஒருசார்பான யுத்தம் அண்மையில் நிகழப்போவதாகத் தோன்றியது.

இதைக் கேள்விப்பட்டு, ஐக்கிய மாகாணங்களைச் சேர்ந்த பணக்கார வர்த்தகர்களின் குழு ஒன்று, இரத்தம் தோய்ந்த அந்த யுத்தத்தைப் பார்ப்பதற்கு யுரகுவாவுக்குச் செல்ல, ஒவ்வொருவருக்கும் கிட்டத்தட்ட 2,500 டாலர் செலவான ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்தது. அவர்களுக்கு ஏமாற்றம் உண்டுபண்ணும் விதத்தில், யுத்தம் நடைபெறவே இல்லை. ஜராஃப் ஷ்பாலில் துளைகளை உண்டுபண்ணி அதை மூழ்கடிக்குமாறு அடால்ஃப் ஹிட்லர் உத்தரவிட்டார். ஒரு குரூரமான, அசாதாரணமான கடல்யுத்த காட்சியைப் பார்க்கும் எதிர்பார்ப்புடன் கரையில் கூட்டம்கூடியிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள், மாறாக, சொந்த கப்பலோட்டிகளே ஜராஃப் ஷ்பாவை துளைகளிட்டு மூழ்கடிக்கச் செய்ததால் ஏற்பட்ட காதடைக்கும் வெடிப்போசையைக் கேட்டனர், பார்த்தனர். கப்பலின் தளபதி தன் தலையை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டான்.

சில ஜனங்களுக்கிடையே காணப்படும் சிறிதளவான குரூரத்தின் மத்தியிலும், கெட்ட செய்தியைக் காட்டிலும் நற்செய்தியையே விரும்புவதாக பெரும்பான்மையர் ஒப்புக்கொள்வார்கள். நீங்கள் அவ்வாறு உணரவில்லையா? அப்படியானால் சரித்திரம் ஏன் இவ்வளவு அதிகமான கெட்ட செய்தியையும் இவ்வளவு குறைவான நற்செய்தியையும் பதிவு செய்திருக்கிறது? இந்தச் சூழ்நிலை என்றாவது தலைகீழாக்கப்பட முடியுமா?

எல்லா கெட்ட செய்திக்கான காரணங்கள்

நற்செய்தி மாத்திரமே இருந்த ஒரு காலத்தைப் பற்றி பைபிள் சொல்கிறது. கெட்ட செய்தி, அறியப்படாத, கேள்விப்பட்டிராத ஒன்றாக இருந்தது. யெகோவா தேவன் தம்முடைய சிருஷ்டிப்பு வேலைகளை முடித்த பிறகு, மனிதனும் மிருகமும் அனுபவிப்பதற்கு கிரகமாகிய பூமி தயாராயிருந்தது. ஆதியாகமப் பதிவு நமக்கு இவ்வாறு சொல்கிறது: “தேவன் தாம் உண்டாக்கின எல்லாவற்றையும் பார்த்தார், அது மிகவும் நன்றாயிருந்தது.”—ஆதியாகமம் 1:31.

கெட்ட செய்தியின்மை, மனித சிருஷ்டிப்பிற்கு பிறகு வெகு காலத்திற்கு நீடிக்கவில்லை. ஆதாமுக்கும் ஏவாளுக்கும் பிள்ளைகள் எதுவும் பிறப்பதற்கு முன்பாகவே, கடவுளுக்கும் அவருடைய நன்மையான, ஒழுங்கமைக்கப்பட்டிருக்கும் சர்வலோக ஏற்பாட்டிற்கும் எதிரான கலகத்தைப் பற்றிய கெட்ட செய்தி அறிக்கை செய்யப்பட்டது. உயர்-பதவியிலிருந்த ஓர் ஆவி குமாரன், நம்பிக்கையுள்ள தன் ஸ்தானத்திற்கு ஒரு துரோகியாக மாறினான். மேலுமாக தன்னுடைய கலகத்தனமான, துரோகமான போக்கில் முதல் மனிதத் தம்பதியும் சேர்ந்துகொள்ளும்படி உந்துவிப்பதில் வெற்றிபெற்றான்.—ஆதியாகமம் 3:1-6.

மனிதவர்க்கம் கண்கூடாகப் பார்த்திருக்கும் பெருமளவான கெட்ட செய்தி, அந்தச் சமயத்தில்தான் அதனுடைய ஆரம்பத்தைக் கொண்டிருந்தது. அது முதற்கொண்டு சூழ்ச்சி, வஞ்சகம், பொய், உண்மையின்மை, பாதி உண்மை ஆகியவை இந்த உலகத்தை மூழ்கடித்திருக்கும் கெட்ட செய்தியின் முக்கிய அம்சங்களாக தெளிவாகவே இருந்திருப்பது ஆச்சரியமல்லவே. கெட்ட செய்தியை தோற்றுவித்ததாக பிசாசாகிய சாத்தான்மீது இயேசு கிறிஸ்து நேரடியாக பழிசுமத்தி, தம்முடைய நாளைச் சார்ந்த மதத்தலைவர்களிடம் இவ்வாறு கூறினார்: “நீங்கள் உங்கள் பிதாவாகிய பிசாசானவனால் உண்டானவர்கள்; உங்கள் பிதாவினுடைய இச்சைகளின்படி செய்ய மனதாயிருக்கிறீர்கள்; அவன் ஆதிமுதற்கொண்டு மனுஷகொலைபாதகனாயிருக்கிறான்; சத்தியம் அவனிடத்திலில்லாதபடியால் அவன் சத்தியத்திலே நிலைநிற்கவில்லை; அவன் பொய்யனும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிறபடியால் அவன் பொய் பேசும்போது தன் சொந்தத்தில் எடுத்துப் பேசுகிறான்.”—யோவான் 8:44.

மனித ஜனத்தொகை எண்ணிக்கையில் அதிகரிக்க அதிகரிக்க, கெட்ட செய்தியும் அதோடு சேர்ந்து அதிகரித்தது. சந்தேகமில்லாமல், மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிறைந்த காலங்களே இருந்ததில்லை என்று இது அர்த்தப்படுத்துவதில்லை, ஏனெனில் மகிழ்ச்சிக்கான காரணங்களாக அநேக காரியங்கள் வாழ்க்கையில் இருந்தன. ஆயினும், மனிதவர்க்கத்தின் ஒவ்வொரு சந்ததியிலும் இன்றுவரையாக மேகம்போன்ற தொந்தரவும் சோகமும் வெளிப்படையாக இருந்து வந்திருக்கின்றன.

இந்தச் சோகமான நிலைக்கு மற்றொரு அடிப்படையான காரணமும் இருக்கிறது. தவறு செய்வதன் சார்பாகவும் பெரும்துன்பத்தின் சார்பாகவும் நமக்கிருக்கும் சுதந்தரிக்கப்பட்டிருக்கும் மனச்சாய்வுதான் அது. “மனுஷனுடைய இருதயத்தின் நினைவுகள் அவன் சிறுவயதுதொடங்கிப் பொல்லாததாயிருக்கிறது,” என்று சொல்வதன் மூலமாக கெட்ட செய்தியின் இந்தத் தவிர்க்க முடியாத காரணத்தை யெகோவாதாமே அடையாளம் காட்டுகிறார்.—ஆதியாகமம் 8:21.

கெட்ட செய்தியில் ஏன் இந்த உயர்வு?

எனினும், இந்த 20-ம் நூற்றாண்டில் கெட்ட செய்தி ஏன் அதிகரித்திருக்கிறது என்பதற்கு ஒரு காரணமிருக்கிறது. இந்தக் காரணம் பைபிளில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ‘கடைசி காலம்’ அல்லது ‘முடிவு காலம்’ என்பதாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு தனித்தன்மையுள்ள காலப்பகுதிக்குள் இந்த 20-ம் நூற்றாண்டில் வாழும் மனிதவர்க்கம் நுழையும் என்பதாக பைபிள் முன்னறிவித்தது. (2 தீமோத்தேயு 3:1; தானியேல் 12:4) இந்த ‘முடிவான காலப்பகுதி’ 1914-ல் துவங்கியதாக பைபிள் தீர்க்கதரிசனமும் பைபிளின் காலக்கிரம அட்டவணையும் அடையாளங்காட்டுகின்றன. இதைக் குறித்த விளக்கமான வேதப்பூர்வ நிரூபணத்திற்கு, உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவினால் பிரசுரிக்கப்பட்ட நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தில் அதிகாரம் 11-ஐ தயவுசெய்து காண்க.

பூமியிலே கெட்ட செய்தியை தன்னியல்பாகவே உயரச்செய்யும் ஒரு சம்பவத்துடன் இந்தக் கடைசி நாட்கள் ஆரம்பமாக வேண்டியிருந்தது. அது என்ன? அது பிசாசாகிய சாத்தானையும் அவனுடைய பேய்க்கூட்டத்தையும் பரலோகத்திலிருந்து கீழே தள்ளியதாகும். கெட்ட செய்தியின் தவிர்க்கமுடியாத அதிகரிப்பின் இந்தத் தெளிவான விளக்கத்தை வெளிப்படுத்துதல் 12:9, 12-ல் நீங்கள் வாசிக்கலாம்: “உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய பெரிய வலுசர்ப்பம் தள்ளப்பட்டது; அது பூமியிலே விழத்தள்ளப்பட்டது, அதனோடேகூட அதைச்சேர்ந்த தூதரும் தள்ளப்பட்டார்கள். . . . பூமியிலும் சமுத்திரத்திலும் குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கியபடியால், உங்களுக்கு ஆபத்து வரும்.”

ஆகவே இந்தக் கடைசி நாட்கள் அதனுடைய முடிவை எட்டுவதற்கு இன்னும் எவ்வளவு காலம் மீந்திருக்கிறதோ, அவ்வளவு காலத்திற்கு கெட்ட செய்தி தொடருவதையும் அதனுடைய எண்ணிக்கையிலும் தீவிரத்திலும் அதிகரிப்பதையும் நாம் எதிர்பார்க்கலாம்.

இது எப்போதுமே அவ்வாறு இருக்காது

பூமியின் குடிமக்களுக்கு, சந்தோஷகரமாக, இன்று அதிகமாயிருக்கும் கெட்ட செய்தியை விளைவிக்கும் விவகாரங்களின் துயர்மிகுந்த நிலை எப்போதுமே இருக்காது. உண்மையில், கெட்ட செய்தி தொடர்ந்திருக்கும் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை நம்பிக்கையுடன் நாம் சொல்லலாம். நிலைமை நம்பிக்கையற்று இருப்பதாகத் தோன்றினாலும்கூட, அது அவ்வாறு இல்லை. எல்லா கெட்ட செய்திக்கும் முடிவு அண்மையிலிருக்கிறது, அது கடவுளுடைய உரிய காலத்தில் கண்டிப்பாக வரும்.

கடவுள் கொண்டுவரும் அழிவோடும் கெட்ட செய்திக்கு காரணமாயிருக்கும் எல்லாவற்றையும் நீக்குவதோடும் கடைசி நாட்கள் உச்சக்கட்டத்திற்கு அல்லது முடிவுக்கு வரும் என்பதாக தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருப்பதன் காரணமாக நாம் இதில் நிச்சயமாயிருக்கலாம். தங்களை மாற்றிக்கொள்ளவும், தங்களுடைய தவறான போக்கிலிருந்து திரும்பவும் மறுக்கிற, சச்சரவை முன்னேற்றுவிக்கும் பொல்லாத மனிதர்களை அவர் நீக்குவார். அர்மகெதோன் யுத்தம் என்பதாக பொதுவாக அறியப்படும் சர்வவல்லமையுள்ள கடவுளின் மகா நாளில் நடக்கும் யுத்தத்தில் இது உச்சக்கட்டத்தை அடையும். (வெளிப்படுத்துதல் 16:16) அதற்குப் பின் உடனடியாகவே, பிசாசாகிய சாத்தானும் அவனுடைய பேய் சேனைக் கூட்டத்தினரும் செயலற்றவர்களாக ஆக்கப்படுவர். எல்லா கெட்ட செய்திக்கும் மூலக்காரணனாயிருக்கும் சாத்தானைக் கட்டிப்போடுவதைக் குறித்து வெளிப்படுத்துதல் 20:1, 2 விளக்குகிறது: “ஒரு தூதன் பாதாளத்தின் திறவுகோலையும் பெரிய சங்கிலியையும் தன் கையிலே பிடித்துக்கொண்டு வானத்திலிருந்திறங்கிவரக்கண்டேன். பிசாசென்றும் சாத்தானென்றும் சொல்லப்பட்ட பழைய பாம்பாகிய வலுசர்ப்பத்தை அவன் பிடித்து, அதை ஆயிரம் வருஷமளவும் கட்டிவைத்து, . . . அது ஜனங்களை மோசம்போக்காதபடிக்கு அதைப் பாதாளத்திலே தள்ளியடைத்து, அதின்மேல் முத்திரைபோட்டான்.”

இந்தக் கிளர்ச்சியூட்டும் சம்பவங்களைப் பின்தொடர்ந்து, பூமிக்கும் அதனுடைய குடிமக்களுக்கும் ஈடு இணையற்ற நற்செய்தியின் ஒரு காலம் வரும். கடைசி யுத்தமான அர்மகெதோனில் தப்பிப்பிழைத்திருக்கும் லட்சக்கணக்கானோரும் பிரேதக் குழியில் தங்கள் மரணநித்திரையிலிருந்து உயிர்த்தெழுப்பப்படப்போகிற கோடிக்கணக்கானோரும் இந்தக் குடிமக்களாக இருப்பர். எல்லாவற்றைக் காட்டிலும் மிகச் சிறந்த இந்த நற்செய்தி பைபிளின் கடைசி புத்தகத்தில் இவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது: “மனுஷர்களிடத்திலே தேவனுடைய வாசஸ்தலமிருக்கிறது, அவர்களிடத்திலே அவர் வாசமாயிருப்பார்; அவர்களும் அவருடைய ஜனங்களாயிருப்பார்கள், தேவன்தாமே அவர்களோடேகூட இருந்து அவர்களுடைய தேவனாயிருப்பார். அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.”—வெளிப்படுத்துதல் 21:3, 4.

அந்தச் சந்தோஷமான காலத்தை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? உண்மையில் கெட்ட செய்தியே இனி எப்போதும் இல்லாத பிரகாசமான ஒரு எதிர்காலம். ஆம், எல்லா கெட்ட செய்தியும் முடிவடைந்திருக்கும், அது மறுபடியும் கேட்கப்படாது. அப்பொழுது நற்செய்தி உச்ச உயர்நிலையில் மேலோங்கி நிற்கும், மேலுமாக எல்லா நித்திய காலத்திற்கும் அது மிகுதியாய் பெருகியிருக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்