உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 12/15 பக். 24
  • கொள்ளை முயற்சியில் தோல்வி

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கொள்ளை முயற்சியில் தோல்வி
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • இதே தகவல்
  • ஆயுதங்களோடு வந்து திருடர்கள் தாக்கும்போது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • பயன்படுத்தப்பட்ட கார்—ஒன்றை வாங்குவது எப்படி
    விழித்தெழு!—1996
  • கேள்விப் பெட்டி
    நம் ராஜ்ய ஊழியம்—1990
  • உங்கள் கார்—காப்பிடமா கண்ணியா?
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 12/15 பக். 24

கொள்ளை முயற்சியில் தோல்வி

யூனஸ் ஏபூ சொன்னபடி

“வழக்கமாக எங்கள் வீட்டில் புத்தகப் படிப்பு நடக்கும் நாளில் கொள்ளையர்கள் ஆயுதங்களோடு வந்து எங்களைத் தாக்க திட்டமிட்டிருந்தார்கள். அன்றுதான் சகோதர சகோதரிகளும் ஆர்வமுள்ள ஆட்களும் வருவதற்காக எங்கள் வீட்டின் கதவை முழுவதுமாக திறந்து வைத்திருப்போம். கொள்ளையர்களுக்கு எங்களுடைய இந்தப் பழக்கமும் கூட்ட நேரமும் தெரிந்திருக்க வேண்டும். வேறு எங்கிருந்தோ காரைத் திருடிக்கொண்டு வந்திருந்தது எங்களுக்கு நன்றாகத் தெரிந்தது. நாங்கள் புத்தகப்படிப்பு நடத்தும் நாளில் அதே நேரத்தில் வாசலில் காத்துக்கொண்டிருந்தார்கள்.

“அவர்கள் வந்த வாரம் வட்டார கண்காணியின் சந்திப்பு வாரமாக தற்செயலாக அமைந்துவிட்டது. ஆகவே வழக்கம்போல் எங்கள் வீட்டில் கூடிவராமல் நாங்கள் ராஜ்ய மன்றத்தில் கூடினோம். கூட்டம் முடிந்தபிறகு மூப்பர் கூட்டம் நடைபெற்றது. சாதாரணமாக நானும் என் பிள்ளைகளும் வீட்டுக்குச் சென்றுவிடுவோம், ஆனால் மூப்பராக இருக்கும் என் கணவர் அன்று அதிக நேரமாகாது என்றும் தனக்கு காத்திருக்கும்படியும் எங்களிடம் சொன்னார். ஆகவே நாங்கள் காத்திருந்தோம்.

“அப்போது பார்த்து எங்கள் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. வட்டார கண்காணியும் என் கணவரும் எவ்வளவோ முயன்றும் கார் ஸ்டார்ட் ஆகவில்லை. நாங்கள் அழைத்துவந்த மெக்கானிக்காலும் அதை பழுதுபார்க்க முடியவில்லை.

“பிள்ளைகள் வீட்டுக்கு நடந்துசென்றார்கள். கொஞ்ச நேரம் கழித்து நானும் வீட்டுக்குப் போய்விட்டேன். நான் சுமார் பத்து மணிக்கு வீடுபோய் சேர்ந்தேன். நானோ என் பிள்ளைகளோ காரில் வீட்டுக்குப் போகாததால் பெரிய கதவை திறக்கவே இல்லை.

“என் படுக்கை அறையினுள் நுழைந்தபோது குண்டுவெடிக்கும் சத்தம் கேட்டது. என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை, ஆகவே போலீஸுக்கு ஃபோன் செய்யலாம் என்று போனால் அது துண்டிக்கப்பட்டிருந்தது. நான் படிக்கட்டுகளில் கீழே ஓடிப்போய் இரும்பு நுழைவாயிலை பூட்டினேன். அதற்குப்பின் ஓடிவந்து நடுவில் இருந்த கதவை அடைத்தேன். விளக்குகளை எல்லாம் அணைத்து விட்டேன். என்னுடைய பிள்ளைகள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தார்கள். பதட்டப்படாமல் இருங்கள் என்று நான் அவர்களிடம் சொன்னேன். யெகோவாவின் பாதுகாப்புக்காக நாங்கள் சேர்ந்து ஜெபம் செய்தோம். இதற்கிடையில் என்னுடைய கணவர் காரை ஸ்டார்ட் செய்ய அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தார்; இன்னும் ராஜ்ய மன்றத்தில்தான் இருந்தார்.

“ஜன்னல்வழியாக பார்த்தபோது கதவுக்கு வெளியே ஒரு மனிதன் தெருவில் விழுந்து கிடப்பதை நான் கண்டேன். கொள்ளையர்கள் அவ்விடத்தைவிட்டு போய்விட்டது போல எனக்குத் தோன்றியது, ஆகவே காயப்பட்டிருந்த அந்த மனிதனை என்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தேன். அது மிகவும் ஆபத்தான வேலையாக இருந்தது, ஆனால் நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று நினைத்தேன். செய்ததெல்லாம் வீணாய் போயின; அடுத்த நாள் அவன் மரித்துப்போனதை அறிந்ததும் மிகவும் வேதனை ஏற்பட்டது.

“இது மிகவும் வருத்தமாக இருந்தபோதிலும், காரியங்கள் இதைவிட மோசமாகியிருக்கலாம். வட்டார கண்காணியின் சந்திப்பின் காரணமாகவே புத்தக படிப்பு எங்கள் வீட்டில் நடத்தப்படவில்லை. கார் ஸ்டார்ட் ஆகாத காரணத்தால் தான் நாங்கள் குடும்பமாக சேர்ந்து காரில் வரவில்லை. என் கணவர் சீக்கிரமாக வந்திருந்தால் கொள்ளையர் கையில் அகப்பட்டுக்கொண்டிருப்பார். இதெல்லாம் எங்களுக்கு அன்றிரவு நன்மையாகவே அமைந்துவிட்டது.

“யெகோவா நம்முடைய கோட்டையும் அரணுமாக இருக்கிறார். பைபிள் சொல்வது மிகவும் உண்மை: ‘யெகோவா வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா.’”—சங்கீதம் 127:1, தி.மொ.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்