பொருளடக்கம்
டிசம்பர் 15, 2013
© 2013 Watch Tower Bible and Tract Society of Pennsylvania.
படிப்பு இதழ்
பிப்ரவரி 3-9, 2014
‘உடனே நிதானம் இழந்து விடாதீர்கள்’!
பக்கம் 6 • பாடல்கள்: 65, 59
பிப்ரவரி 10-16, 2014
கடவுளுடைய அரசாங்கத்திற்காக தியாகங்கள் செய்வீர்களா?
பக்கம் 11 • பாடல்கள்: 40, 75
பிப்ரவரி 17-23, 2014
இது ‘உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது’
பக்கம் 17 • பாடல்கள்: 109, 18
பிப்ரவரி 24, 2014–மார்ச் 2, 2014
‘என் நினைவாக இதைச் செய்யுங்கள்’
பக்கம் 22 • பாடல்கள்: 99, 8
படிப்புக் கட்டுரைகள்
▪ ‘உடனே நிதானம் இழந்து விடாதீர்கள்’!
பைபிளுக்கு முரணான கருத்துகளையும் ஊகங்களையும் நம்பி மோசம்போகாமல் இருப்பது மிக முக்கியம். தெசலோனிக்கேயர்களுக்கு எழுதிய இரு கடிதங்களில் காலத்திற்கேற்ற எச்சரிப்புகள் உள்ளன.
▪ கடவுளுடைய அரசாங்கத்திற்காக தியாகங்கள் செய்வீர்களா?
கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்களில் அதிகமாக ஈடுபட சுயதியாக மனப்பான்மை மிகவும் அவசியம். பூர்வ இஸ்ரவேலர்கள் செலுத்திய பலிகளிலிருந்து இது சம்பந்தமாக நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதை இந்தக் கட்டுரை விளக்குகிறது. கடவுளுடைய அரசாங்கத்தை ஆதரிப்பதற்காக பல தியாகங்கள் செய்வோரின் உதாரணங்களையும் இதில் காணலாம்.
▪ இது ‘உங்களுக்கு நினைவுகூருதலான நாளாய் இருக்கக்கடவது’
▪ ‘என் நினைவாக இதைச் செய்யுங்கள்’
வருடந்தோறும் யூதர்கள் பஸ்கா பண்டிகையைக் கொண்டாடுகிற அதே நாளில்தான் கிறிஸ்தவர்கள் இயேசுவின் மரண நினைவு நாளை அனுசரிக்கிறார்கள். பஸ்காவைப் பற்றி நாம் ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்? எஜமானரின் இரவு விருந்தை எப்போது அனுசரிக்க வேண்டும்? நமக்கு அது எந்தளவு முக்கியமானது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இக்கட்டுரையில் காணலாம்.
இதர கட்டுரைகள்
3 மலைகளின் நிழலில் யெகோவா அவர்களைப் பாதுகாத்தார்
16 உங்களுக்கு நினைவிருக்கிறதா?
அட்டைப்படம்: இங்குள்ள குன்றுகள் நிறைந்த பகுதிகளில் ஆங்காங்கே குடியிருக்கும் மக்களைச் சந்திப்பது பெரும் சவால்தான். சில குன்றுகளில் ராட்சத பாறைகள் கம்பீரமாக நின்றுகொண்டிருக்கும். ஆனாலும், ஜிம்பாப்வேயில், மட்டாபிலிலாந்திலுள்ள மட்டோபோ மலைத்தொடர் பகுதிகளில் சகோதரர்கள் ஊழியம் செய்கிறார்கள்
ஜிம்பாப்வே
மக்கள்தொகை:
1,27,59,565
பிரஸ்தாபிகள்:
40,034
பைபிள் படிப்புகள்:
90,894
ஜிம்பாப்வே மக்கள் நம் பிரசுரங்களை சந்தோஷமாக வாங்கி படிக்கிறார்கள். ஒவ்வொரு பிரஸ்தாபியும் ஒரு மாதத்திற்கு சராசரியாக 16 பத்திரிகைகளை அளிக்கிறார்கள்