இயேசு கிறிஸ்துவை கனப்படுத்துங்கள்—அவர்நம்முடைய விசுவாசத்தின் அஸ்திபாரம்
1 யெகோவா தேவனுடைய நோக்கத்தின் செயல்திட்டத்தில் இயேசு கிறிஸ்துவின் பாகத்தை விளங்கிக்கொள்வது இன்றியமையாதது. கீழ்ப்படிதலுள்ள மனிதவர்க்கத்துக்கு மீட்கும் பொருளாக இயேசு தம்முடைய உயிரைக் கொடுத்தார். (மத். 20:28) இயேசு கிறிஸ்துவின் மூலமாக யெகோவாவின் அன்பான ஏற்பாடுகள் இல்லாவிட்டால், எதிர்காலத்துக்கான எவ்வித நம்பிக்கையுமில்லாமல் நாம் தொடர்ந்து மரித்துக்கொண்டிருப்போம்.
2 முக்கியமாக, ஞாபகார்த்த காலத்தின்போது, நாம் இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கை, போதனை மற்றும் அவருடைய பலி ஆகியவற்றின் பேரில் சிந்தனைச் செய்வோம். (லூக். 22:19) “நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினாலே, தேவன் நம்மேல் வைத்த அன்பை விளங்கப்பண்ணுகிறார்” என்பதை மதித்துணர்ந்தவர்களாக மற்றவர்களோடு நற்செய்தியை உற்சாகமாய் பகிர்ந்துகொள்வதன் மூலம் நாம் கடவுளையும் இயேசு கிறிஸ்துவையும் கனப்படுத்துவதற்கு உந்துவிக்கப்படுகிறோம். இதை நாம் எப்படி செய்யலாம்?—ரோ. 5:8, 10.
நன்றியறிதலைக் காட்டுதல்
3 யெகோவாவின் காணக்கூடிய அமைப்பு இயேசு கிறிஸ்துவினுடைய தலைமையின் கீழ் பணியாற்றுகிறது என்பதை நாம் மதித்துணருகிறோம். இங்கே பூமியில் நமக்குத் தேவைப்படக்கூடிய ஆவிக்குரிய போஷாக்கை அந்த உண்மையுள்ள அடிமை வகுப்பு நமக்குக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவருடைய வாலிப வயது முதற்கொண்டு இயேசு தன் தகப்பனுடைய வார்த்தைக்கு ஆழமான போற்றுதலைக் காண்பித்தார். மற்றவர்களுக்குத் திறமையுடன் கற்பிக்கவேண்டும் என்ற நோக்கு நிலையோடு கொடுக்கப்படும் ஆவிக்குரிய உணவை படிப்பதன் மூலமும் கிரகித்துக்கொள்வதன் மூலமும் நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்ற விரும்புகிறோம். (மத். 24:45, 46; லூக். 2:46-50) அமைப்பின் பேரிலும் அது அளிக்கக்கூடிய ஆவிக்குரிய ஏற்பாடுகளின் பேரிலுமான நமது நன்றியறிதல் அதன் வழிநடத்துதல்களைப் பின்பற்றுவதன் மூலமும் மற்றும் மூப்பர்களுடன் ஒத்துழைப்பதன் மூலமும் காண்பிக்கப்படுகிறது.
4 கடவுளுடைய வார்த்தையிலிருந்து நாம் எதைக் கற்றுக்கொள்ளுகிறோமோ அதைப் பொருத்துவதன் மூலமாகவும்கூட நாம் கிறிஸ்துவை கனப்படுத்துகிறோம். மற்றும் நமது ஊழியத்தை அலங்கரிக்கிறோம். இயேசு கிறிஸ்து குற்றமற்ற “பாவிகளிடமிருந்து விலகின” பிரதான ஆசாரியராக இருந்தார். (எபி. 7:26) அவர் சொன்னது ஒன்றும் செய்வது ஒன்று என்ற பழிக்கு அவர் ஆளாகவில்லை. உடன் அடிமைகளாக, நாமும் அந்த உயர்ந்த தராதரத்தின்படி வாழ்வது அவசியம். ஆகவே, யெகோவா வாக்களித்துள்ள நீதியான புதிய ஒழுங்குமுறையைப் பற்றி நாம் மற்றவர்களிடம் சொல்லும்போது, அந்தப் புதிய உலகத்தோடு நம்மை அடையாளப்படுத்தக்கூடிய ஒரு முறையில் நாம் இப்பொழுதே வாழ்ந்துகொண்டிருக்க விரும்புகிறோம்.—மத். 7:21; 1 கொரி. 1:18; 1 யோ. 2:17.
கிறிஸ்துவினுடைய தலைமையின் கீழ் பிரசங்கித்தல்
5 மே மற்றும் ஜூன் மாதங்களின்போது, நாம் காவற்கோபுர சந்தாவை அளிப்போம். காவற்கோபுரத்தின் நோக்கமானது, ஒவ்வொரு இதழின் 2-ம் பக்கத்தில் காணப்படுகிறபடி, “மனிதவர்க்கம் நித்திய ஜீவனைப் பெறுவதற்கு வழிவகுக்கும் அரசராகிய இயேசு கிறிஸ்து சிந்தின இரத்தத்தின்பேரில் விசுவாசம் வைக்க உற்சாகப்படுத்து”வதற்கே என்பதை எதிர்கால வாசகருக்குக் காண்பிப்பதன் மூலம் நாம் இயேசுவை கனப்படுத்தலாம். கூடுமான எல்லாச் சமயங்களிலும் சந்தா அளிக்க நிச்சயமாயிருங்கள். சந்தா ஏற்கப்படவில்லையென்றால் நீங்கள் இரண்டு பத்திரிகைகளையும் ஒரு புரோஷுரும் அளிக்கலாம். இவ்வாறாக சத்தியத்தில் விதைகளை விதைக்கலாம்.
6 இன்னும் சாட்சிகளாயிராத ஒரு மாபெரும் கூட்டம் ஞாபகார்த்த தினத்துக்கு ஆஜராகி இருந்ததன் மூலம் இயேசு கிறிஸ்துவுக்கு மரியாதை காண்பித்தார்கள். ஒரு தனிப்பட்ட பைபிள் படிப்பின் மூலம் மிகுதியான ஆவிக்குரிய முன்னேற்றத்தை செய்வதற்கு அவர்களுக்கு உதவி கொடுக்கப்படக்கூடுமா? யாராகிலும் ஒருவர் அவர்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவைப்படும் உதவியைக் கொடுப்பதற்கு நிச்சயமாயிருப்பது நல்லது. அன்பார்ந்த உதவியின் மூலம் அவர்களில் ஒருசிலர் அடுத்த கர்த்தருடைய இராபோஜன நாளுக்கு முன்பு ஊழியத்தில் கலந்துகொள்ளும் அளவுக்கு முன்னேற்றம் செய்யக்கூடும்.
7 நமது மீட்பர் இயேசுவின் அன்பார்ந்த பலிக்குரிய மரணத்துக்காக நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம்! அவர் நமக்கு நிச்சயமான நம்பிக்கையை அருளியிருக்கிறார். அவருடைய வாழ்க்கை பாணியும் அவருடைய ஊழியத்தின் பதிவும் நாம் பின்பற்றுவதற்குரிய பரிபூரண மாதிரிகளாக இருக்கின்றன.