சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
செப்டம்பர் 10-ல் துவங்கும் வாரம்
பாட்டு 30 (117)
12 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். கேள்விப் பெட்டி வாசித்து, யெகோவாவின் அமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும்போது ஒழுங்கான உடை, சிகை அலங்காரம் மேலும் சீரொழுங்குடன் இருப்பதைப் பற்றி சுருக்கமாக குறிப்பிடுங்கள். இந்தச் சனிக்கிழமை பத்திரிகை ஊழியத்திற்கு உற்சாகமளியுங்கள்.
18 நிமி: “ராஜ்ய செய்தியை பரப்புவதில் வைராக்கியமாய் இருங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாரா 6 கலந்தாலோசித்த பின்பு, பாராவில் குறிப்பிட்டுள்ளபடி புரோஷுர்களை எவ்வாறு அளிக்க வேண்டும் என்பதை நடித்துக் காட்டுங்கள். சம்பாஷணைக்குப் பேச்சுப்பொருளை உபயோகியுங்கள். வெளி ஊழியத்தில் வைராக்கியமாய் இருப்பதற்கான தேவையை மேம்படுத்திக் காட்டுங்கள்.
15 நிமி: “வெளி ஊழியத்தில் முன்னேற பள்ளியை உபயோகித்தல்.” தேவராஜ்ய ஊழியப் பள்ளி உதவி நூலில் உள்ள 19-ம் பாடத்தை பள்ளி கண்காணி சபையாரோடு கலந்தாலோசிக்கிறார். வெளி ஊழியத்தில் நாம் முன்னேறுவதற்கு பள்ளி எந்த முறைகளில் உதவியளிக்கிறது என்பதை மேம்படுத்திக் காட்டுங்கள். உள்ளூர் பிராந்தியத்தில் நடைமுறையானதாக இருக்கும் மேடை அமைப்புகளையும், பேச்சுகளையும் உபயோகிக்க பள்ளியில் சேர்ந்திருப்பவர்களை உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 31 (3), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 17-ல் துவங்கும் வாரம்
பாட்டு 211 (105)
10 நிமி: சபை அறிவிப்புகளும் கணக்கு அறிக்கையும். சங்கத்தின் உலகளாவிய வேலைக்கு நன்கொடைகள் செலுத்தியிருப்பதை சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவித்திருக்கும் கடிதங்களை வாசியுங்கள். அப்பேர்ப்பட்ட நன்கொடைகளுக்காகவும் உள்ளூர் சபையின் ஆதரவிற்காகவும் சகோதரர்களை பாராட்டுங்கள். வாரக் கடைசியில் வெளி ஊழியத்திற்கான ஏற்பாட்டில் எல்லாரும் பங்குகொள்ளுமாறு உற்சாகப்படுத்துங்கள்.
18 நிமி: “சகிப்புத்தன்மையோடு தொடர்ந்து கனிகளை பிறப்பியுங்கள்.” சேர்க்கையின் அடிப்படையிலான பேச்சு. கருத்துக்களை உங்கள் சபைக்குப் பொருத்தி விளக்குங்கள். தங்கள் தனிப்பட்ட சூழ்நிலைகளை யெகோவாவின் நோக்குநிலையிலிருந்து காணும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
17 நிமி: “நீங்கள் ஏன் ஒரு பைபிள் படிப்பு நடத்த விரும்ப வேண்டும்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. ஒருவரை ஒப்புக்கொடுத்தலுக்கும் முழுக்காட்டுதலுக்கும் உதவி செய்த ஒரு பிரஸ்தாபியையோ அல்லது பயனியரையோ சுருக்கமாக பேட்டி காணுங்கள். மாணாக்கருக்கும் அவருக்கும் அல்லது அவளுக்கும் இடையே என்ன விதமான உறவு வளர்ந்தது என்பதையும், படிப்புகளை நடத்துவதன் மூலமாக என்ன நன்மைகள் பெற்றுக்கொண்டனர் என்பதையும் கேளுங்கள்.
பாட்டு 133 (68), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 24-ல் துவங்கும் வாரம்
பாட்டு 29 (11)
10 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். வாரக் கடைசியில் வெளி ஊழியத்தில் பங்கு கொள்ளும்படியும் உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: “உங்கள் பிள்ளைகள் பள்ளியில் உறுதியாக நிற்கின்றனரா?” சபையாரோடு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. பாராக்களையும் வேதவசனங்களையும் படியுங்கள். குறிப்புகளை ஆதரிக்கும் வண்ணம் உள்ளூர் அனுபவங்கள் ஏதாவது இருந்தால், நேரம் அனுமதிக்குமேயானால் அவைகளையும் குறிப்பிடலாம்.
15 நிமி: சபையின் தேவைகள் அல்லது ஏப்ரல் 15, 1990 ஆங்கில காவற்கோபுரம் பக்கங்கள் 26-8-ல் உள்ள “‘உறுதியாக நில்லுங்கள்’—இடறலடையாதேயுங்கள்” என்ற கட்டுரையின் பேரில் பேச்சு. (இந்திய மொழிகளில்: “ஜூன் 1, 1990 காவற்கோபுரம் “அவிசுவாசிகளுடன் உங்களைப் பிணைத்துக்கொள்ளாதீர்கள்.”)
பாட்டு 191 (42), முடிவு ஜெபம்.
அக்டோபர் 1-ல் துவங்கும் வாரம்
பாட்டு 92 (51)
7 நிமி: சபை அறிவிப்புகள். இந்தியாவிற்கான மே மாத ஊழிய அறிக்கையையும் மேலும் அந்த மாதத்திற்கான சபை அறிக்கையில் ஏதாவது நல்ல அம்சங்கள் இருந்தால் அதையும் கலந்தாலோசியுங்கள். வெளி ஊழிய அறிக்கைகளை உடனடியாக கொடுப்பதன் முக்கியத்தை குறிப்பிடுங்கள்.
23 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு. மூன்றாவது பாராவை சிந்தித்த பிறகு, சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கு திறந்திருக்கும் மற்ற சந்தர்ப்பங்களைக் குறித்து சபையாரை குறிப்புகள் கேளுங்கள். புது பள்ளி ஆண்டு வாலிபர்களுக்கு எவ்வாறு சத்தியத்தைப் பற்றி பேச வாய்ப்புகளை அளிக்கிறது என்று குறிப்பிட்டுக் காட்டுங்கள். பாரா 6-ஐ தொடர்ந்து சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் வெற்றியடைந்திருக்கும் ஒன்று அல்லது இரண்டு பிரஸ்தாபிகளை பேட்டி காணுங்கள். கேளுங்கள்: ‘எந்தச் சந்தர்ப்பங்களில் அவர்கள் பிரசங்கிக்கின்றனர்? பிரசங்கிப்பின் இந்த அம்சம் திறம்பட்டதாக இருப்பதாக அவர்கள் ஏன் காண்கின்றனர்? தனிப்பட்ட விதமாக அவர்கள் எவ்வாறு பயனடைந்திருக்கின்றனர்?’ ஒவ்வொரு நாளும் நற்செய்தியை பகிர்ந்துகொள்ள ஓர் இலக்கை வைப்பதற்கு எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். ஜனங்களிடம் ஆழ்ந்த அக்கறையை காண்பிப்பதற்கான தேவையை அழுத்திக் கூறி முடியுங்கள்.
15 நிமி: அக்டோபரில் படைப்பு புத்தகத்தை அளியுங்கள். பேச்சு, நடிப்புடன். அக்டோபரில் படைப்பு புத்தகத்தை அளிப்பதற்கு புத்தகத்திலிருந்து பேச்சுக் குறிப்புகளை கலந்தாலோசியுங்கள். அதிகாரங்கள் 16, 17-ல் உள்ள “கடவுள் ஏன் துன்பத்தை அனுமதிக்கிறார்?” மேலும் “நீங்கள் பைபிளை நம்பலாமா?” போன்றவை வீட்டுக்காரரை ஒருவேளை கவர்ச்சிக்கக்கூடும். எபிரெயர் 3:4 மேலும் வெளிப்படுத்துதல் 4:11 போன்ற வசனங்களை உபயோகித்து தகுதி வாய்ந்த பிரஸ்தாபி பரிணாமக் கொள்கை தவறெனக் காட்டி, மனிதனின் சிருஷ்டிகராக கடவுளில் விசுவாசத்தை வளர்க்க நடித்துக் காட்டும்படி செய்யுங்கள். நியாயங்கள் புத்தகத்தில் “படைப்பு” என்ற தலைப்பின் கீழ் உள்ள கருத்துக்களை நேரம் அனுமதிக்குமேயானால் உபயோகிக்கலாம். சபையின் வெளி ஊழிய ஏற்பாடுகளை அறிவியுங்கள், எல்லாரும் பங்குகொள்ளும்படி அழையுங்கள்.
பாட்டு 129 (66), முடிவு ஜெபம்.