கடவுளுடைய பெயரை முழுமையாக துதியுங்கள்
1 யெகோவாவின் அநேக ஆசீர்வாதங்களின் பேரில் நாம் எவ்வாறு சந்தோஷப்படுகிறோம்! இந்தியாவில் இந்த ஊழிய வருடத்தின் போது, பிரஸ்தாபிகள், பயனியர்கள் மேலும் வீட்டு பைபிள் படிப்புகள் ஆகியவற்றில் புதிய உச்சநிலைகள் இருந்திருக்கின்றன. ஞாபகார்த்த நாளுக்கு ஆஜரானவர்கள் 28,866 பேர் என்ற சிறந்த எண்ணிக்கையும் இருந்தது. ஆயிரக்கணக்கான பிரஸ்தாபிகள் பல்வேறு தேசங்களில் விசேஷ மாநாடுகளுக்கு ஆஜரானார்கள். நம்முடைய சிறந்த வட்டார அசெம்பிளியிலிருந்தும், விசேஷ அசெம்பிளி தின நிகழ்ச்சி நிரலிலும் ஏற்பாடு செய்யப்பட்ட ஏராளமான ஆவிக்குரிய உணவிலிருந்து நாம் அனைவரும் நன்மையடைந்தோம். நாம் மற்ற அநேக ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டோம்.
2 யெகோவா நமக்காக செய்யும் எல்லாக் காரியங்களுக்காகவும் நாம் எவ்வாறு நம் போற்றுதலை காண்பிக்கலாம்? கடவுளின் பெயரை முழுமையாக துதிப்பதன் மூலம் நாம் இதைச் செய்யலாம்!—சங். 145:21.
கடவுளுடைய பெயரை துதித்துக்கொண்டே இருங்கள்
3 செப்டம்பர் மாதத்தின் போது நாம் எவ்வாறு யெகோவாவின் பெயரை முழுமையாக துதிக்கலாம்? பத்திரிகை–அளவான புரோஷுர்களை நாம் தொடர்ந்து சிறப்பித்துக் காட்டுவோம். ஊக்கமாக தயாரிப்பதன் மூலமும், வெளி ஊழியத்தில் நம்மோடு பல்வேறு வகையான புரோஷுர்களை எடுத்துச் செல்வதன் மூலமும் யெகோவாவை துதிப்பதற்கு நாம் தகுதியுள்ளவர்களாயிருப்போம், மற்றவர்களும் அவரை எவ்வாறு துதிப்பது என்பதைக் கற்றறிய உதவி செய்கிறவர்களாயிருப்போம்.
4 “ஒரு புதிய உலகம்—யார் மூலம்?” என்பது சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளாகும். நியாயங்கள் புத்தகம், பக்கங்கள் 9–15-ல் உள்ள தகவலை அடிப்படையாகக் கொண்டு பொருத்தமான முன்னுரைகளை நாம் தயாரிக்கலாம். உலகத்தை மேம்படுத்துவதற்கு தற்போதைய நம்பிக்கைகளைப் பற்றி உலக தலைவர்கள் என்ன சொல்கின்றனர் என்பதைப் பற்றி தயக்கமின்றி உங்களோடு சில வீட்டுக்காரர்கள் பேசுவர். அநேக ஜனங்கள் சமாதானமான நிலைமைகளுக்காக ஏங்கிக்கொண்டிருந்தாலும், மனிதன் தன் சொந்தப் பிரச்னைகளை தீர்க்க முடியாது என்று எரேமியா 10:23 காண்பிக்கிறது. இன்றுள்ள உலக நிலைமைகளைப் பற்றி ஏதோவொன்று செய்வார் என்ற கடவுளின் வாக்கு தவறாது என்பதை அறிவது திரும்பவும் நம்பிக்கையூட்டுவதாயிருக்கிறது. இந்த வாக்கு 2 பேதுரு 3:13-ல் காணப்படுகிறது. பின்பு ஒரு பொருத்தமான புரோஷுரை அளியுங்கள்.
நன்றாக தயாரியுங்கள்
5 மற்றவர்களுக்கு கற்பிப்பதில் நாம் திறம்பட்டவர்களாயிருக்க வேண்டுமென்றால் தயாரிப்பு இன்றியமையாதது. மற்ற குடும்ப அங்கத்தினரோடோ, சத்தியத்தை உங்களுக்கு கற்பித்தவரோடோ அல்லது உங்கள் புத்தகப் படிப்பு தொகுதியில் இருக்கும் ஒருவரோடோ ஏன் தயாரிக்கக் கூடாது? உங்கள் அளிப்பை ஒத்திகை பார்ப்பதன் மூலம், பிராந்தியத்தில் இருக்கும் ஜனங்களோடு பேசும்போது நீங்கள் அதிக நம்பிக்கையுடையவர்களாக உணருவீர்கள், மேலும் தனிப்பட்ட நம்பிக்கையையும் வெளிக்காட்டுவீர்கள்.
6 நம்முடைய அளிப்புகள், ஜனங்களில் நமக்கு இருக்கும் அக்கறையை பிரதிபலிக்க வேண்டும். சோர்வுற்றவர்களுக்கும், உற்சாகமிழந்தவர்களுக்கும் நம்பிக்கை அளிப்பதற்கு புதிய உலகத்துக்கான பைபிளின் வாக்குறுதியை அழுத்திக் காட்டுங்கள். வீட்டுக்காரர் புரோஷுரை ஏற்றுக்கொள்ளும்போது, நம்முடைய பைபிள் படிப்பு ஏற்பாட்டை நீங்கள் நடித்துக் காட்டலாம். அல்லது அதை மறுசந்திப்பில் செய்வது அதிக பொருத்தமானதாயிருக்கும் என்று நீங்கள் ஒருவேளை தீர்மானிக்கலாம்.
7 ஊழிய வருடம் முடிவடைதலோடு, யெகோவாவிடமிருந்து அநேக ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்டவர்களாயிருப்பது எவ்வளவு சந்தோஷமாயிருக்கிறது! புதிய ஊழிய ஆண்டுக்குள் நாம் செல்கையில், அவருடைய புதிய உலகில் யெகோவாவை என்றென்றுமாக சேவிப்பதற்கு ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருப்பவர்களாக நாம் யெகோவாவின் பெயரை முழுமையாக துதிப்போமாக.