வெளி ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு இருங்கள்
பகுதி 2: உற்சாகத்தை வளர்த்தல்
1 ஒரு வேலையை நாம் அனுபவிக்கும் போது அதைப் பற்றி உற்சாகமாயிருப்பது சுலபமாயிருக்கும். ஒரு நபர் ஏதோவொன்றை செய்வதற்கு தயாராய் இருக்கையில் அதை அவர் அனுபவித்து மகிழ்கிறார் என்பதும் பொதுவாக உண்மையாய் இருக்கிறது. நம்முடைய ஊழியத்தை முழுமையாக நிறைவேற்றுவதில் அது நிச்சயமாகவே உண்மையாய் இருக்கிறது.—2 தீமோ. 4:5.
தயாரிப்பு இன்றியமையாதது
2 நாம் எவ்வளவு நன்றாக தயாரித்திருக்கிறோம் என்பதும் எவ்வளவு அடிக்கடி வெளி ஊழியத்துக்குச் செல்கிறோம் என்பதும் வெளி ஊழியத்தில் நமக்கிருக்கும் உற்சாகத்தோடு நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறது. உதாரணமாக, வீட்டுக்கு வீடு ஊழியத்தில் நாம் சந்திக்கும் ஒரு நபர் தன்னை ஒரு முகமதியராக அடையாளங்காட்டிக் கொண்டால், நாம் என்ன சொல்லலாம்? நன்கு தயாரித்திருக்கும் பிரஸ்தாபி இவ்வாறு பிரதிபலிக்கலாம்: “அது அக்கறைக்குரியதாயிருக்கிறது. நான் அநேக முகமதியர்களோடு பேசியிருக்கிறேன். உங்களுடைய மதத்தின் போதனைகளில் சிலவற்றைப் பற்றி இந்தப் புத்தகத்தில் நான் சமீபத்தில் வாசித்தேன். [நியாயங்கள் புத்தகத்தில் பக்கம் 23-க்கு திருப்புங்கள்.] இயேசு ஒரு தீர்க்கதரிசி என்றும், ஆனால் முகமது அதிக முக்கியமானவராகவும் கடைசி தீர்க்கதரிசியாகவும் இருந்தார் என்றும் நீங்கள் நம்புவதாக இது சொல்கிறது. அது அப்படிதானா? [பிரதிபலிப்புக்காக அனுமதியுங்கள்.] மோச ஓர் உண்மையான தீர்க்கதரிசியாக இருந்தார் என்றும் நீங்கள் நம்புகிறீர்களா? [பிரதிபலிப்புக்காக அனுமதியுங்கள், அது ஆம் என்பதாக இருக்கும்.] கடவுளுடைய தனிப்பட்ட பெயரைப் பற்றி மோச கடவுளிடமிருந்து என்ன கற்றுக்கொண்டார் என்பதை பரிசுத்த எழுத்துக்களில் நான் உங்களுக்கு காண்பிக்கட்டுமா?” பிறகு நீங்கள் யாத்திராகமம் 6:3-ஐ வாசிக்கலாம். இந்த விதத்தில் நீங்கள் ஓர் அக்கறைக்குரிய கலந்தாலோசிப்பை ஆரம்பிக்கலாம்.
3 திட்டவட்டமான பக்கங்களின் எண்களை ஞாபகத்தில் வைப்பது நம்மில் அநேகருக்கு கடினமாயிருக்கிறது. ஆனால் சிறிது தயாரிப்போடும் பயிற்சியோடும், நியாயங்கள் புத்தகத்தின் ஆரம்பத்தில் இருக்கும் உரையாடலை நிறுத்தும் பதிற்சொற்கள் என்றழைக்கப்படும் பகுதியை நாம் உபயோகிக்கலாம். ஒரு குறிப்பிட்ட மதத்தோடு தங்களை அடையாளங் காட்டிக்கொள்ளும் ஜனங்களுக்கு பதிலளிப்பதில் நமக்கு உதவி செய்ய அந்தப் பகுதியில் அநேக பக்கங்கள் அடங்கிய தகவல் சேர்க்கப்பட்டிருக்கிறது.
4 முன்னுரைகளின் பேரில் ஒரு சிறந்த பகுதியையும் நியாயங்கள் புத்தகம் கொண்டிருக்கிறது. இவைகளை முன்மாதிரியாகக் கொண்டு உங்கள் முன்னுரைகளை ஏன் அமைக்கக்கூடாது? நிலைமைக்கு ஏற்றவாறு நம்முடைய அளிப்பை நாம் மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டியிருக்கலாம். நியாயங்கள் புத்தகத்தில் அநேக தலைப்புகளின் இறுதியில், “ஒருவர் இவ்வாறு சொன்னால்” என்ற ஒரு பகுதி இருக்கிறது. பொருளுக்கு சம்பந்தப்பட்ட திட்டவட்டமான கேள்விகள் அல்லது மறுப்புகளுக்கு பதில்களாக நேரடியான கருத்துக்களை அது கொடுக்கிறது. என்றபோதிலும், இந்த எல்லா சிறந்த விஷயங்களும், நாம் எந்த அளவு தயாரிக்கிறோமோ அந்த அளவுக்கு மட்டுமே மதிப்புள்ளதாயிருக்கிறது.
எவ்வாறு தயாரிப்பது
5 ஊழியக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படப் போகும் பிரசுரங்கள் எதுவாக இருந்தாலும் விழிப்புள்ளவர்களாய் இருங்கள், கலந்தாலோசிப்புகளின் போதும் நடிப்புகளின் போதும் எடுத்துப் பார்ப்பதற்கு இவைகளை உங்களோடு வைத்துக் கொண்டிருங்கள். இந்த விதத்தில், மற்றவர்களுடைய தயாரிப்பிலிருந்து நீங்கள் அதிக முழுமையாக பயனடையலாம்.
6 ஊழியத்துக்காக தயாரிப்பதில் சிறிது நேரம் செலவழிப்பது பயனுள்ளதாயிருக்கும். உங்களுக்கு தேவைப்படும் பிரசுரங்களை நீங்கள் பெற்றுக்கொண்டிருக்கிறீர்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருளை பார்ப்பதற்கு ஒரு சில நிமிடங்களை எடுத்துக் கொள்ளுங்கள். உபயோகப்படுத்தப்பட்டிருக்கும் வேதவசனங்களை விமர்சியுங்கள், சிறப்பித்துக் காட்டப்போகும் பிரசுரங்களில் உள்ள திட்டவட்டமான பேச்சுக் குறிப்புகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள். இதை ஒன்றாக ஒரு குடும்பமாக செய்வது உதவியளிக்கக்கூடியதாயிருக்கும்.
7 பயிற்சி நேர பகுதிகளை கொண்டிருங்கள். நீங்கள் பல்வேறு சமயங்களில் பயிற்சி செய்யலாம்—சபை புத்தகப் படிப்புக்கு பின், தோழமைக் கூட்டங்களில், வாகன தொகுதிகளில், வீடுகளுக்கு இடையே இருக்கும் நேரங்களில். அளிப்புகளை கொடுப்பது, மறுப்புகளை எவ்வாறு கையாளுவது என்பதை கலந்தாலோசித்து, நடித்துக் காட்டுவது மகிழ்ச்சியானதாயிருக்கும், நம்முடைய திறமைகளை கூர்மையாக்குவதற்கு சிறந்த சமயங்களை ஏற்படுத்தும்.
8 திறம்பட்ட வேலையாட்களாக நாம் ஆவதற்கும், சந்தோஷமான திருப்தியை அடைவதற்கும் ஊக்கமான தயாரிப்பு வெளி ஊழியத்துக்கான நம்முடைய ஆர்வத்தை வளர்க்கும்.—யோவான் 2:17.