சீஷராக்குவதற்கு நமக்கு உதவும் கூட்டங்கள்
செப்டம்பர் 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 165 (81)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகளும். உள்ளூர் பிராந்தியத்துக்கு பொருத்தமாயிருக்கும் ஒன்று அல்லது இரண்டு பத்திரிகை அளிப்புகளை ஆலோசனையாக சொல்லுங்கள், இந்த வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்துக்கு செல்லுமாறு எல்லா பிரஸ்தாபிகளையும் உற்சாகப்படுத்துங்கள். அடுத்த வாரம் ஊழியக்கூட்டத்துக்கு நியாயங்கள் புத்தகத்தை கொண்டு வாருங்கள்.
20 நிமி: “கடவுளுடைய பெயரை முழுமையாக துதியுங்கள்.” கேள்வி–பதில் கலந்தாலோசிப்பு. தற்போதைய சம்பாஷணைக்குப் பேச்சுப் பொருள் எவ்வாறு உபயோகிக்கப்படலாம் என்பதைக் காட்டும் நன்கு தயாரிக்கப்பட்ட ஒரு நடிப்போடு முடியுங்கள். உள்ளூர் சூழ்நிலைமைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக் கொள்ளுங்கள். பொருத்தமாக, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பிறகு, ஒரு பிரஸ்தாபி இவ்வாறு சொல்லலாம்: “எதிர்காலத்துக்காக நம்பிக்கையார்வம் நிறைந்த மனநிலையை கொண்டிருப்பதற்கான அவசியத்தை இன்று நாங்கள் எங்களுடைய அயலகத்தாரோடு கலந்தாலோசிக்கிறோம். உலகத் தலைவர்கள் ஒரு மேம்பட்ட உலகத்துக்கான தங்களுடைய திட்டங்களைப் பற்றி அடிக்கடி பேசுகின்றனர். அவர்களுடைய நம்பிக்கைகள் எதன் பேரில் சார்ந்திருக்கின்றன? ஒரு மேம்பட்ட உலகத்தை கொண்டு வருவதற்கு மனிதர்கள் தகுதிவாய்ந்தவர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா? [பிரதிபலிப்புகாக அனுமதியுங்கள்.] எரேமியா 10:23-ல் பதிவு செய்துள்ளபடி, இதைப் பற்றி சொல்வதற்கு தீர்க்கதரிசியாகிய எரேமியாவுக்கு ஏதோ ஒன்று இருந்தது. [வாசியுங்கள்.] கடவுள்தாமே கொடுத்த வாக்கைப் பற்றி கற்றறிந்திருப்பதன் காரணமாக மட்டுமே நாம் எதிர்காலத்தைப் பற்றி நம்பிக்கையார்வம் உடையவர்களாய் இருக்கலாம். அவருடைய வாக்கு தவறாது. அப்போஸ்தலனாகிய பேதுரு இதை எழுதினார். [2 பேதுரு 3:13-ஐ வாசியுங்கள்.] இந்தப் புரோஷுரில் கடவுளிடமிருந்து வந்துள்ள இந்த நிச்சயமான நம்பிக்கை எவ்வாறு சிறப்பித்துக் காட்டப்பட்டிருக்கிறது என்பதை கவனியுங்கள்.” புரோஷுரில் உள்ள பொருத்தமான தகவலை அளிப்பதை பிரஸ்தாபி வீட்டுக்காரருக்கு காண்பித்த பிறகு தொடருகிறார்.
15 நிமி: “நடுவதும் நீர்ப்பாய்ச்சுவதும்—சீஷர்களை உண்டுபண்ணுவதற்கான படிகள்.” பக்கம் 3, சேர்க்கைக் கட்டுரையிலுள்ள பாராக்கள் 1–9 வரை சபையாரோடு கலந்தாலோசியுங்கள். 7–9 வரை பாராக்களை கலந்தாலோசிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளதை செய்ய முடிந்த பிரஸ்தாபிகளின் மிகச் சுருக்கமான பேட்டிகளை உபயோகிப்பதன் மூலமும் அல்லது குறிப்புகளை சிறப்பித்துக் காட்டும் உள்ளூர் அனுபவங்கள் மூலமும் பொருளை நடைமுறையாக பொருத்துங்கள். அனுபவங்களோ அல்லது பேட்டிகளோ சுருக்கமாகவும் குறிப்புக்கு ஏற்றவாறு நேரடியாக இருப்பதையும் நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.
பாட்டு 130 (58), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 16-ல் துவங்கும் வாரம்
பாட்டு 72 (58)
10 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கை. அனுப்பப்பட்ட நன்கொடைகளை பெற்றுக்கொண்டதாகவும், போற்றுதலை தெரிவிக்கும் சொற்றொடர்களும் சங்கத்திடமிருந்து வந்திருப்பதை சபையாருக்கு வாசியுங்கள். உள்ளூர் சபையின் தேவைகளுக்காக ஆதரவு கொடுத்ததற்கு சபையாரை போற்றுங்கள். வார இறுதி நாட்களிலும், தொகுதியாக சாட்சி கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் மற்ற சமயங்களிலும் வெளி ஊழியத்தில் பங்கெடுக்குமாறு உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “வெளி ஊழியத்தில் முழு ஆத்துமாவோடு இருங்கள்—பகுதி 2.” கட்டுரையில் உள்ள பொருளின் பேரில் மற்றும் நியாயங்கள் புத்தகத்தை உபயோகிப்பதை சிறப்பித்துக் காண்பிக்கும் உற்சாகமூட்டும் போதனை பேச்சும். குறிப்பிடப்பட்டிருக்கும் குறிப்புகளை மற்றவர்கள் நடித்துக் காட்டுமாறு செய்யவேண்டிய அவசியமில்லை, ஆனால் இந்தச் சிறந்த வெளி ஊழிய கருவியிலிருக்கும் பொருளை எவ்வாறு கண்டுபிடித்து உபயோகிப்பது என்பதை பேச்சாளர் வெறுமென காண்பிக்கலாம். வெளி ஊழியத்துக்காக தயாரிக்கையில், பயிற்சி நேர பகுதிகளின் மதிப்பை சுருக்கமாக நடித்துக் காட்டுங்கள். நேரம் அனுமதிக்குமேயானால், இதை எவ்வாறு அவர் செய்கிறார் என்பதை விளக்குவதற்கு பிரஸ்தாபியை அழைக்கலாம்.
20 நிமி: “நடுவதும் நீர்ப்பாய்ச்சுவதும்—சீஷர்களை உண்டுபண்ணுவதற்கான படிகள்.” சென்ற வாரம் சிந்தித்த பொருளோடு இணைத்து ஒரு சுருக்கமான முன்னுரைக்குப் பின், சேர்க்கைக் கட்டுரையின் பக்கங்கள் 3, 4 பாராக்கள் 10–20 வரை கேள்வி-பதில் விமர்சனம் நடத்துங்கள். நம் ராஜ்ய ஊழியத்தின் முந்திய இதழ்களில் கொடுக்கப்பட்டிருந்த ஆலோசனைகளை பொருத்துவதன் மூலம் சில பிரஸ்தாபிகள் எவ்வாறு தங்கள் ஊழியத்தை மேம்படுத்தி, பைபிள் படிப்புகளை ஆரம்பித்திருக்கின்றனர் என்பதை ஒருவேளை சொல்லலாம்.
பாட்டு 48 (28), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 23-ல் துவங்கும் வாரம்
பாட்டு 174 (13)
5 நிமி: சபை அறிவிப்புகள். தேவராஜ்ய செய்திகள். மாவட்ட மாநாடுகளுக்கு ஆஜராவதற்கு முன்கூட்டியே திட்டங்கள் போடும்படி சகோதரர்களை உற்சாகப்படுத்துங்கள். நேரம் அணுமதிக்கும் அளவிற்கு, இந்த வார இறுதி நாட்களில் வீட்டுக்கு வீடு ஊழியத்தில் அளிப்பதற்கு, தற்போதைய பத்திரிகைகளில் இருக்கும் எந்தக் கட்டுரைகள் அதிக பொருத்தமானதாயிருக்கும் என்பதை குறிப்பிடுங்கள்.
20 நிமி: “நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்—அடிக்கடி செய்து முடிக்கப்படும் பிராந்தியத்தில்.” கேள்விகளும் பதில்களும். தகவலை உள்ளூருக்கு பொருத்துங்கள் அல்லது சபையின் தேவைகளுக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.
20 நிமி: “சபை புத்தகப் படிப்பு ஏற்பாடு—பகுதி 2.” திறம்பட்ட புத்தகப்படிப்பு நடத்துபவரால் உற்சாகமூட்டும் பேச்சு.
பாட்டு 25 (119), முடிவு ஜெபம்.
செப்டம்பர் 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 134 (106)
15 நிமி: சபை அறிவிப்புகள். சபையின் வெளி ஊழிய ஏற்பாடுகளைப் பற்றியும் பயனியர் பிரஸ்தாபிகளுக்கு உற்சாகமும் உதவியும் கொடுப்பதற்கு என்ன செய்யப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியும் விவரமான கலந்தாலோசிப்பு. தங்கள் பயனியர் சேவையை ஆரம்பிப்பவர்களின் தேவைகளுக்கு குறிப்பாக கவனம் செலுத்துங்கள். இந்த வார இறுதி நாட்களில் வெளி ஊழியத்தில் பங்கு கொள்ளுமாறு உற்சாகப்படுத்துங்கள். புதிய மாதத்தின் போது வெளி ஊழியத்தில் உபயோகிப்பதற்கு படைப்பு புத்தகத்தை பெற்றுக்கொள்ளுமாறு பிரஸ்தாபிகளை ஞாபகப்படுத்துங்கள்.
15 நிமி: சபை தேவைகள். ஜுன் 8, 1991, ஆங்கில விழித்தெழு! அட்டை கட்டுரைகளில் உள்ள தகவலை அடிப்படையாக வைத்து பேச்சு கொடுக்கலாம் அல்லது வீண்பேச்சு என்ற பொருளின் பேரில் கலந்தாலோசிப்பு. (இந்திய மொழிகளில்: காவற்கோபுரம், மே 1, 1991 “தீங்கிழைக்கும் வீண்பேச்சுக்கு எதிராக எச்சரிக்கையுடன் இருங்கள்.”)
15 நிமி: “ஆவிக்குரிய இலக்குகளை நோக்கி நீங்கள் ஒரு குடும்பமாக உழைக்கிறீர்களா?” கேள்வி–பதில் கலந்தாலோசிப்பு. நேரம் அனுமதிக்குமேயானால் பாராக்களையும் வேதவசனங்களையும் வாசியுங்கள்.
பாட்டு 16 (101), முடிவு ஜெபம்.