ஜூன் மாத ஊழியக் கூட்டங்கள்
ஜூன் 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 72 (58)
10 நிமி: சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியம் பிரதியிலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். வார இறுதி நாட்களின்போது வெளி ஊழியத்தில் பங்குகொள்ள பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்தவும்.
20 நிமி: “ஜூன் மாதத்தில் காவற்கோபுரம் பத்திரிகையை அளித்தல்.” கட்டுரையை கேள்வி-பதிலின் மூலம் சிந்தியுங்கள். ஒவ்வொரு இதழிலும் 2-வது பக்கத்தின் மேற்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ள காவற்கோபுரம் பத்திரிகையின் நோக்கத்தைப் பற்றிய ஒரு சம்பாஷணையையும் கொண்டிருங்கள். வெளி ஊழியத்தில் இந்த வாரம் உபயோகிக்கப் போகும் பத்திரிகைகளை சார்ந்து கூடுதலான பிரசங்கங்களையும் குறிப்பிடலாம். சந்தர்ப்பம் கிடைக்கும்போது சந்தாக்களை அளிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் காட்டுங்கள்.
15 நிமி: “அறிமுக குறிப்புகள் வித்தியாசத்தை உண்டுபண்ணக்கூடும்.” கட்டுரையை சபையாரோடு கலந்தாலோசியுங்கள். நம் ராஜ்ய ஊழியத்தின் சமீபத்திய பிரதிகளில் நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்பட்டுள்ள ஒருசில அறிமுகங்களை உபயோகிக்க முயற்சி செய்திருக்கிறார்களா? உள்ளூர் பிராந்தியத்திற்கு எந்த அறிமுகங்களை அதிக பலன்தரும் அறிமுகங்களாக அவர்கள் கண்டிருக்கின்றனர்? வெளி ஊழியத்தில் உபயோகிக்க வேண்டிய அறிமுகங்களை பிரஸ்தாபிகள் எப்போது தயாரித்து, நடிப்புகளைக் கொண்டு செய்து பார்க்கின்றனர்? உள்ளூரில் பலன்தரும் அறிமுகங்களை பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று சுருக்கமான நடிப்புகளை கொண்டிருக்கவும்.
பாட்டு 32 (10), முடிவு ஜெபம்.
ஜூன் 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 9 (82)
5 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: “பலன்தரும் மறுசந்திப்புகளை செய்யுங்கள்.” கட்டுரையிலுள்ள முக்கியமான குறிப்புகளை சபையாரோடு கலந்தாலோசியுங்கள், மறுசந்திப்பு செய்தது எவ்வாறு மேலுமான அக்கறையைக் காட்டுவதற்கு தூண்டியது என்பதை எடுத்துக்காட்டும் ஒரு சமீபத்திய அனுபவத்தை சுருக்கமாக சொல்லுங்கள். சமீபத்தில் வேலைசெய்த உள்ளூர் பிராந்தியத்தில் அக்கறை காட்டிய நபர்களை இரண்டு மூன்று பிரஸ்தாபிகள் திரும்பவும் சென்று சந்திக்க தயாராவதற்கு சபை புத்தகப் படிப்பு நடத்துனர் உதவி செய்வதை ஒரு நடிப்பின் மூலமாக காட்ட இறுதி ஆறு முதல் எட்டு நிமிடங்களை உபயோகியுங்கள். கூடுமானவரை பிரஸ்தாபிகள் இனி செய்ய இருக்கும் உண்மையான மறுசந்திப்புகளை நடிப்பில் பயன்படுத்துங்கள்.
20 நிமி: “உண்மைத்தன்மை அதன் கிரயம் என்ன?”—காவற்கோபுரம், ஆகஸ்ட் 15, 1990, பக்கங்கள் 10-15. (இந்திய மொழியில்: காவற்கோபுரம், ஜூலை 1, 1991.) சபைக்கு பொருந்துமாறு நடைமுறையான காரியங்களை எடுத்துக்காட்டும் ஒரு பேச்சு.
பாட்டு 65 (36), முடிவு ஜெபம்.
ஜூன் 22-ல் துவங்கும் வாரம்
பாட்டு 202 (18)
10 நிமி: சபை அறிவிப்புகள், கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளை சங்கம் பெற்றுக்கொண்டதாக தெரிவிக்கும் கடிதங்களையும் சேர்த்துகொள்ளுங்கள். உள்ளூர் சபைக்கும் சங்கத்தின் உலகளாவிய வேலைக்கும் கொடுக்கப்படும் பண உதவிக்காக சபையை பாராட்டுங்கள்.
20 நிமி: “ஆவிக்குரிய இலக்குகளை நாடுவதற்கு உற்சாகப்படுத்துங்கள்.” ஒரு மூப்பர் சபையாரோடு கலந்தாலோசிக்கிறார். பாரா 6-ஐ சிந்தித்தப் பிற்பாடு, முன்மாதிரியாயிருக்கும் ஓர் இளைய பிரஸ்தாபி எவ்வாறு ஆவிக்குரிய இலக்குகளை அடைய கொடுக்கப்பட்ட ஊக்குவிப்பிற்கு பிரதிபலித்தார் என்பதை பேட்டி காணுங்கள். அவனோ அல்லது அவளோ எவ்வாறு உற்சாகப்படுத்தப்பட்டார்? பாரா 7-ஐ சிந்திக்கையில், இளைஞர் கேட்கின்றனர் புத்தகத்திலுள்ள 22, 38, 39 அதிகாரங்களை பெற்றோரும் இளைஞரும் சேர்ந்து விமர்சித்து பார்ப்பதன் மூலம் வரும் நடைமுறையான நன்மைகளை எடுத்துக் காட்டுங்கள்.
15 நிமி: “கேள்விப் பெட்டி,” மூப்பர் கொடுக்கும் பேச்சு.
பாட்டு 213 (85), முடிவு ஜெபம்.
ஜூன் 29-ல் துவங்கும் வாரம்
பாட்டு 220 (19)
10 நிமி: சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்திகளும். சந்தாவை அளித்தவர்களிடமிருந்து வரும் அனுபவங்கள் (சபையில் சந்தாக்களை கையாளும் சகோதரரைக் கொண்டு அனுபவங்கள் ஏற்கெனவே தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்).
15 நிமி: விசுவாசத்துரோகத்துக்கு எதிராக உங்களை காத்துக்கொள்ளுங்கள். மேசையின் முன் உட்கார்ந்துகொண்டு மூப்பருக்கும் பிராஸ்தாபிக்கும் இடையே கலந்தாலோசிப்பு. விசுவாசத்துரோக இலக்கியத்தை படித்து வருகிற ஒரு நபரை வெளி ஊழியத்தில் சந்தித்ததாக பிரஸ்தாபி சொல்லுகிறார். வீட்டுக்காரர் கேள்விகளை கேட்பதில் நேர்மையுடனிருந்ததாக தான் உணருவதாக பிரஸ்தாபி மூப்பரிடம் சொல்லுகிறார். விசுவாசத்துரோக இலக்கியத்தை வீட்டுக்காரர் கொடுக்கையில் பிரஸ்தாபி அதை வாங்கவில்லை என்றும் வீட்டுக்காரர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க முயற்சி செய்ய விரும்புவதாகவும் சொல்லுகிறார். மூப்பர் பிரஸ்தாபியின் நல்ல மனநிலையையும் அவருடைய செயல்களையும் போற்றுகிறார். விசுவாசத்துரோகிகள் எழுதியிருப்பவற்றையும் சொல்பவற்றையும் கலந்து பேசுவதற்கு மாறாக, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் காரியங்களின் பேரிலுள்ள வேதப்பூர்வமான நோக்குநிலைக்கு அவர் கவனத்தை ஒருமுகப்படுத்துவது ஞானமுள்ள காரியம் என்று சொல்கிறார். பிரஸ்தாபியை நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை திறக்கும்படியாக அழைத்து, மூப்பரும் அவரும் சேர்ந்து பக்கங்கள் 34-7-ஐ விமர்சிக்கின்றனர். விசுவாசத்துரோகத்தின் சொற்பொருள் விளக்கத்தையும் தடித்த எழுத்தில் உள்ள ஒவ்வொரு உபதலைப்பையும், நேரம் அனுமதிப்பதற்கேற்ப முக்கியமான வசனங்களையும் தெரிந்துகொண்டு பேசும்போது சம்பாஷணை அனலாகவும் உற்சாகமாகவும் இருக்க வேண்டும். கட்டியெழுப்பக்கூடிய, உற்சாகமூட்டக்கூடிய விஷயங்களின் பேரில் உள்ள எல்லாவற்றையும் நாம் படிப்பதற்கு கொண்டுள்ளோம் என்ற சாதகமான குறிப்புகளோடு சம்பாஷணையை முடிக்கவும். வீட்டுக்காரரோடு கட்டியெழுப்பும் செய்தியை பகிர்ந்துகொள்ளுங்கள். அவர் உண்மையுள்ளவராயிருந்தால், சத்தியத்தின் உடன்பாடான அணுகுமுறைக்கும் விசுவாசத்துரோகிகளுடைய பாதகமான, குறைகாணும் அணுகுமுறைக்கும் உள்ள வித்தியாசத்தை காண்பார். விசுவாசத்துரோகிகளுடைய சிந்தனையையும் அவர்களுடைய இலக்கியங்களையும் நிராகரிப்பதன் மூலம் நாம் யெகோவாவுக்கும் அவருடைய காணக்கூடிய அமைப்புக்கும் உத்தமத்தை காட்டுகிறோம் என்பதை வெளிக்காட்டுபவர்களாயிருப்போம்.
20 நிமி: “அன்றாடக ஆவிக்குரிய உணவு—கிறிஸ்தவ குடும்பத்துக்கு இன்றியமையாதது.” இந்தப் பொருளின் பேரில் கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
பாட்டு 108 (95), முடிவு ஜெபம்.