தூண்டுவிக்கும் அறிமுகத்தைத் தோற்றுவியுங்கள்
1 காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! ஆகிய இவ்விரண்டும் வாசகரின் மனதிலும் இருதயத்திலும் சத்தியத்தின் விதைகளை நடுவதில் பயனுள்ளவை. ஆகையால், இந்தப் பத்திரிகைகளை, அவற்றில் அடங்கியுள்ள ஆவிக்குரிய நவரத்தினங்களிலிருந்து பயனடைக்கூடிய ஜனங்களின் வீட்டுக்குள் சென்றடைவதற்கான திறம்பட்ட வழிகளைத் தோற்றுவிக்க விரும்புகிறோம்.
2 நம்முடைய பத்திரிகைகளை ஏற்று, வாசிக்கும்படி வீட்டுக்காரர்களை எவ்வாறு தூண்டுவிக்கலாம்? அவற்றை நாம் அறிமுகஞ்செய்யும் முறையின்பேரில் அதிகம் சார்ந்திருக்கிறது. பயன்தரும் அறிமுகங்களைத் தயார்செய்வதற்கு மிகச் சிறந்த ஆலோசனைகள், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 9-15-ல் காணப்படுகின்றன.
3 நவம்பர் 1 காவற்கோபுர பிரதியை அளிக்கையில், நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் 14-ம் பக்கத்தில் “முதிர்வயது/மரணம்” என்ற தலைப்பின்கீழுள்ள அந்த முதல் ஆலோசனையைப் பயன்படுத்த நீங்கள் முயற்சி செய்யலாம்.
உங்களை அறிமுகப்படுத்தின பின்பு, நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நீங்கள் தெரிந்துகொள்ளக்கூடுமானால், இப்பொழுது உலகத்தை எதிர்ப்படும் பல பிரச்னைகளில் எதை, முதல் தீர்க்கப்படும்படிக் காண விரும்புவதாகத் தெரிந்துகொள்வீர்கள்?” வீட்டுக்காரரின் பதிலுக்குச் செவிகொடுத்துக் கேட்டு, அவருடைய அக்கறையை ஒப்புக்கொள்ளுங்கள். பின்பு நீங்கள் தொடர்ந்து, பின்வருவதைப்போன்று சொல்லலாம்: “அத்தகைய பிரச்னைகளுக்கு பைபிள் அளிக்கும் பரிகாரத்தைக் கவனியுங்கள். [ஏசாயா 9:6, 7-ஐ வாசியுங்கள்.] ஆகையால் மனிதவர்க்கத்தின் எல்லா பிரச்னைகளுக்கும் உண்மையான பரிகாரம், நித்தியகாலமாக வாழ்ந்து, ஆட்சிசெய்யும் நீதியும் நியாயமுமுள்ள அரசரைக் கொண்டிருப்பதில் தங்கியிருக்கிறது. மேலும் கடவுள் முதிர்வயதையும் மரணத்தையும் நீக்கி என்றென்றும் பரதீஸான பூமியில் வாழ்வதற்கான நல்வாய்ப்பை மனிதருக்குக் கொடுப்பாரெனவும் பைபிள் வாக்குக் கொடுக்கிறது.” பின்பு காவற்கோபுரத்தின் 6-ம் பக்கத்துக்குத் திருப்பி “கடவுளின் அளிப்பாகிய நித்திய ஜீவன்,” என்ற உபத்தலைப்பைக் காட்டுங்கள்.
4 நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தின் 13-ம் பக்கத்தில், உயிர்/மகிழ்ச்சி என்ற தலைப்பின்கீழ் காணப்படுகிற முதல் இரண்டு அறிமுகங்கள், நவம்பர் 1-ன் காவற்கோபுர பிரதியோடு நீங்கள் பயன்படுத்தக்கூடிய மற்ற இரண்டாகும். இந்த எண்ணங்களையும் கேள்விகளையும் உங்கள் சொந்த வார்த்தைகளில் நீங்கள் எடுத்துக் கூறலாம் அல்லது நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் சொல்லியிருப்பதை அவ்வாறே குறிப்பிடலாம். அந்த நபரின் பதிலை ஒப்புக்கொண்ட பின், தொடர்ந்து காவற்கோபுர பிரதியின் 7-ம் பக்கத்திலுள்ள தகவலைப் பகிர்ந்துகொள்ளுங்கள். பின்பு ஏசாயா 65:21-23-ஐ வாசித்து, நித்திய ஜீவனின் ஆசீர்வாதங்கள் எல்லாருக்கும் கிடைக்கக்கூடியதாயுள்ளதெனக் குறிப்பிட்டுக் காட்டுங்கள்.
5 “ஜனத்தொகை வெடி”ப்பின்பேரிலுள்ள நவம்பர் 8 விழித்தெழு! பத்திரிகையை நீங்கள் பயன்படுத்தினால், “உயிர்/மகிழ்ச்சி” என்ற தலைப்பின்கீழுள்ள மூன்றாவது அறிமுகத்தை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். சங்கீதம் 1:1, 2-ஐ இணைத்துக் காட்டினபின், விழித்தெழு! 20-ம் பக்கத்திலுள்ள “யெகோவாவின் தேவராஜ்ய ஆட்சி என்ன நிறைவேற்றும்” என்ற குறிப்புப் பெட்டிக்கு கவனத்தை இழுக்கலாம்.
6 தங்களுக்குத் தங்கள் சொந்த மதப் புத்தகங்கள் இருக்கின்றனவெனக் கூறும் வீட்டுக்காரர்களை நீங்கள் ஒருவேளை எதிர்ப்படலாம். நமக்கும் நம்முடைய சொந்த உபயோகத்துக்கான பிரசுரங்கள் (நம் ராஜ்ய ஊழியம் போன்றவை) இருக்கின்றனவென நீங்கள் விளக்கலாம்; எனினும், நம்முடைய பத்திரிகைகளை யெகோவாவின் சாட்சிகளாயிராத லட்சக்கணக்கான ஆட்கள் வாசிக்கின்றனரெனக் கூறலாம்.
7 பவுல் 1 கொரிந்தியர் 3:6-ல் பின்வருமாறு கூறினார்: “நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார்.” அக்கறைகாட்டுவோரின் இருதயத்தில் சத்தியத்தின் விதைகளை யெகோவா விளையச் செய்யும்படி நாம் விரும்பினால், தூண்டி செயல்படவைக்கும் அறிமுகங்களைப் பயன்படுத்துவதன்மூலம் இந்த விதைகளை பயனுறுதியுள்ள முறையில் நடுவதற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்.