உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 3/93 பக். 2
  • மார்ச் ஊழியக் கூட்டங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மார்ச் ஊழியக் கூட்டங்கள்
  • நம் ராஜ்ய ஊழியம்—1993
  • துணை தலைப்புகள்
  • மார்ச் 1-ல் துவங்கும் வாரம்
  • மார்ச் 8-ல் துவங்கும் வாரம்
  • மார்ச் 15-ல் துவங்கும் வாரம்
  • மார்ச் 22-ல் துவங்கும் வாரம்
  • மார்ச் 29-ல் துவங்கும் வாரம்
நம் ராஜ்ய ஊழியம்—1993
km 3/93 பக். 2

மார்ச் ஊழியக் கூட்டங்கள்

மார்ச் 1-ல் துவங்கும் வாரம்

பாட்டு 9 (19)

15 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து அறிவிப்புகளும். தேவராஜ்ய செய்திகளிலிருந்து சிறப்பு அம்சங்கள், பூமியின் பல்வேறு பாகங்களிலுள்ள தம்முடைய ஊழியர்களின்மீது யெகோவாவின் ஆசீர்வாதம் எவ்வாறு இருந்துவருகிறது என்பதை அழுத்திக் காட்டுங்கள். பொருத்தமாயிருந்தால், உள்ளூர் சபை அனுபவங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.

15 நிமி:“‘வா!’ என்று சொல்லிக்கொண்டேயிருங்கள்.” கேள்வி பதில் சிந்திப்பு. பத்தி 4 கலந்து பேசுகையில், என்றும் வாழலாம் புத்தகத்தில் அதிகாரம் 18-ல், விசேஷமாக இயேசுவைக் குறித்தும் மற்ற தீர்க்கதரிசனங்களைக் குறித்தும் 150-153 பக்கங்களிலுள்ள விளக்கப்படங்களையும் ஒருசில குறிப்புகளையும் நன்கு-தயாரிக்கப்பட்ட பிரஸ்தாபியை முக்கியப்படுத்திக் காட்டச் சொல்லுங்கள்.

15 நிமி:“உங்களுடைய ஊழியத்தில் திறம்பட்டவர்களாயிருங்கள்.” பேச்சு, ஒருவாறு சபையாரும் பங்குகொள்கின்றனர். பத்தி 3-5 கலந்து பேசுகையில், சுருக்கமான இரண்டு நடிப்புகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள். பத்தி 4, 5-ல் உள்ள குறிப்பை நடித்துக்காட்டுகையில், கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிற வண்ணம் வீட்டுக்கு-வீடு ஊழியத்தில் எவ்வாறு ஒரு வயோதிப பிரஸ்தாபியும் இளம் பிரஸ்தாபியும் சேர்ந்து வேலைசெய்யலாம் என்பதைக் காட்டுங்கள். பலன்கள் என்னவாயிருந்தாலும், ஊழியத்தில் மகிழ்ச்சியைக் கண்டடையவேண்டும் என்பதை அழுத்திக் காட்டுங்கள்.

பாட்டு 114 (61), முடிவு ஜெபம்.

மார்ச் 8-ல் துவங்கும் வாரம்

பாட்டு 128 (4)

5 நிமி:சபை அறிவிப்புகள். ஏப்ரலில் துணை பயனியர்களாக எவ்வளவு பேர் ஏற்கெனவே ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதைக் குறிப்பிடுங்கள். பயனியர் செய்ய திட்டமிடுபவர்கள் சீக்கிரமாக விண்ணப்பங்களை எழுதிக்கொடுக்க உற்சாகப்படுத்துங்கள்.

20 நிமி:“யெகோவாவைக் கனப்படுத்துவதில் உங்களால் அதிகத்தைச் செய்யமுடியுமா?” பத்திகள் 1 முதல் 10 வரை கேள்வி பதில் கலந்தாலோசிப்பு.

20 நிமி:நம்முடைய பைபிள் மாணாக்கருக்கு உதவுதல். வெறுமனே படிப்பை நடத்துவதோடு மட்டுமல்லாமல், பைபிள் மாணாக்கருக்கு கூடுதலான உதவியளிக்கவேண்டிய அவசியத்தை அழுத்திக் காட்டச் சபையாரோடு கலந்தாலோசிப்பு. (1 தெ. 2:8) கூட்டங்களுக்கு ஆஜராகவும், பங்குகொள்ளவும் மனப்பூர்வமான ஆசையைத் தூண்டுவிக்கக் கூடுதலான நேரத்தைச் செலவிடுங்கள். வட்டார அசெம்பிளிகள், விசேஷ அசெம்பிளி தினங்கள், மாவட்ட மாநாடுகள் ஆகியவற்றை விளக்கிக்காட்டி, அமைப்பிடமும் சர்வதேச சகோதரத்துவத்திடமும் போற்றுதலை வளருங்கள். யெகோவாவின் சாட்சிகள் ஒற்றுமையுடன் உலகம் முழுவதிலும் கடவுளுடைய சித்தத்தைச் செய்கிறார்கள் என்ற சிற்றேட்டிலுள்ள ஒரு பகுதியை ஒவ்வொரு படிப்புக்குப் பிறகும் சம்பாஷிக்கக் கொஞ்சம் நேரம் செலவிடுங்கள். அதிலிருந்து அவர்கள் என்ன கற்றுக்கொண்டனர் என்று மாணாக்கர்களிடம் கேளுங்கள். கற்றுக்கொண்ட காரியங்களை எவ்வாறு சந்தர்ப்பம் வாய்க்கும்போது மற்றவர்களோடு பகரலாம் என்று மெதுவாகக் காட்டுங்கள். நம் ஊழியம் புத்தகத்தின் 98, 99 பக்கங்களில் கூறப்பட்டிருக்கிற தராதரங்களைப் பூர்த்திசெய்கிற பைபிள் மாணாக்கரும் பொது ஊழியத்தில் பங்குகொள்ள விரும்பும் ஆட்களும் முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகளாவதற்கு உதவப்படவேண்டும். படிப்பின்போதும் அதற்கு பிற்பாடும் ஒப்புக்கொடுத்து, முழுக்காட்டுதல் பெறுவதற்கான ஆசையை வளர்க்க மாணாக்கர்களுக்கு உதவிசெய்வதற்கு நேரத்தைச் செலவிடுவது முக்கியமாயிருக்கிறது. நம்முடைய மாநாடுகளில் நடக்கும் முழுக்காட்டுதல்களைப்பற்றிய படங்களையோ செய்தித்தாள் கட்டுரைகளையோ மாணாக்கர்களுக்குக் காட்டுங்கள். நடிப்பு: பிரஸ்தாபி பைபிள் மாணாக்கரை சந்தர்ப்ப சாட்சி கொடுக்க உதவி செய்கிறார். என்றும் வாழலாம் புத்தகத்திலிருந்து ஊழிய குறிப்பைத் தெரிந்தெடுத்து, சொல்கிறார்: “உங்களுடைய ஒருசில உறவினரிடத்திலோ அயலவரிடத்திலோ அந்தக் குறிப்பைப் பகருவது நல்லது, முன்பு அறியாத ஏதோவொன்றை பைபிளிலிருந்து கற்றுக்கொண்டீர்கள் என்று நீங்கள் அவர்களிடத்தில் சொல்லலாம்.” பைபிள் மாணாக்கர்களை உதவிசெய்ய பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள், முழுக்காட்டுதல் எடுத்தப் பிறகுங்கூட அன்பான அக்கறையைக் காட்டச் சொல்லுங்கள்.

பாட்டு 123 (63), முடிவு ஜெபம்.

மார்ச் 15-ல் துவங்கும் வாரம்

பாட்டு 72 (58)

10 நிமி:கணக்கு அறிக்கையும் நன்கொடை ஒப்புகைகளும் உட்பட சபை அறிவிப்புகள். “காலத்திற்கேற்ற ஒரு செய்தி” என்று இந்தக் கட்டத்தின் கீழுள்ளதைக் குறிப்பிடுங்கள். மார்ச் 28 அன்று கொடுக்கவிருக்கும் விசேஷ பேச்சின் தலைப்பைக் குறித்துவைத்துக்கொள்ளுமாறும் ஆர்வங்காட்டுகிற ஆட்களை அதற்கு ஆஜராகும்படி அழைப்பு விடுக்கவும் அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

15 நிமி:“ஆர்வங்காட்டியிருக்கிற அனைவருக்கும் உதவுதல்.” பேச்சு, ஒருவாறு சபையாரும் பங்குகொள்கின்றனர். நேரம் அனுமதிப்பதற்கேற்ப, இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வசனங்களைச் சிந்தியுங்கள். பத்தி 3-ல் உள்ள ஆலோசனையை நடித்துக் காட்டுங்கள். முதல் விசை ஆஜராபவரின் ஆர்வத்தைப் பின்தொடருவதன் அவசியத்தை முக்கியப்படுத்திக் காட்டுங்கள்.

20 நிமி:“யெகோவாவைக் கனப்படுத்துவதில் உங்களால் அதிகத்தைச் செய்யமுடியுமா?” பத்திகள் 11 முதல் 22 வரை கேள்வி பதில் கலந்தாலோசிப்பு.

பாட்டு 32 (10), முடிவு ஜெபம்.

மார்ச் 22-ல் துவங்கும் வாரம்

பாட்டு 66 (37)

10 நிமி:சபை அறிவிப்புகள். கேள்விப் பெட்டி. ஏப்ரலின்போது ஊழியத்தில் அதிகமான பங்குவகிக்க அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.

20 நிமி:முதியோர்பேரில் அக்கறை செலுத்துதல். இரண்டு சகோதரர்களுடைய கலந்தாலோசிப்பும், பேட்டிகளும். “ஒளி கொண்டுச்செல்வோர்” மாவட்ட மாநாடுகளில், “கிறிஸ்தவக் குடும்பத்தில் ஒருவர்மீது ஒருவர் அக்கறை செலுத்துதல்” என்ற பொருளைக் கொண்டு ஒரு தொடர்பேச்சு ஞாயிற்றுக்கிழமை காலை அளிக்கப்பட்டது. “முதியோர்பேரில் அக்கறை செலுத்துவதன் மூலம்” என்ற கடைசி பகுதி குடும்பத்துக்கும் சபைக்கும் முதியோர் அளிக்கும் மதிப்புவாய்ந்த பங்கை அழுத்திக் காட்டியது. (நீதி. 16:31) என்னென்ன வழிகளில் நாம் முதியோருக்கு உதவி செய்யலாம்? குடும்பத்துக்குத் தலையாய பொறுப்பு இருக்கிறது. (1 தீ. 5:3, 4, 8, 16) பொறுமையும், பரிவும் அவசியம். கடந்த காலத்தில் பெற்றோரும் பாட்டன், பாட்டியும் அளித்த அன்புக்கும், வேலைக்கும், அக்கறைக்கும் வளர்ந்த பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் போற்றுதலைக் காட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. (w87 6/1 13-18, ஆங்கிலம்) சபையுங்கூட முதியோருக்கு உதவி செய்யலாம். அரசாங்க ஆதரவுக்குத் தகுதிபெற சிலருக்கு உதவி தேவைப்படலாம். அவர்களை விருந்துக்கும் கூட்டுறவுகளுக்கும் அழைப்பதன் மூலம் உபசரிப்பைக் காட்டுங்கள். (ரோ. 12:13) வெளி ஊழியத்தில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். கூட்டங்களுக்கும் அசெம்பிளிகளுக்கும் அவர்களுக்குப் போக்குவரத்து வசதி ஏற்பாடுச் செய்யுங்கள். கடைக்குச் செல்வது, வீட்டைக் கவனிப்பது போன்ற பணிகளில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள். (w87 6/1 4-7, ஆங்கிலம்) முதியோருக்கு எப்போதுமே மரியாதை காட்டுங்கள். (1 தீ. 5:1, 2) நல்ல முன்மாதிரிகளாயிருக்கும் ஓரிரண்டு வயோதிபரைப் பேட்டி காணுங்கள். தங்களுடைய குடும்பமும் சபையும் காட்டிய தயவிலிருந்து அவர்கள் எவ்வாறு பயனடைந்தனர் என்பதை முக்கியப்படுத்திக் காட்டுங்கள்.

15 நிமி:ஏப்ரலில் துணை பயனியர் சேவை செய்யவிருப்பவர்களையோ முன்பு அச்சேவையில் ஈடுபட்டிருந்த மூன்று, நான்கு பிரஸ்தாபிகளையோ மூப்பர் பேட்டி காண்கிறார். பயனியர் செய்வதற்கு எது அவர்களை உந்துவித்திருக்கிறது? ஏப்ரலுக்கு என்ன திட்டங்களை அவர்கள் செய்திருக்கின்றனர்? துணை பயனியர் சேவை எவ்வாறு தனிப்பட்ட விதத்தில் அவர்களுக்கு உதவியிருக்கிறது? அடுத்த மாதம் துணை பயனியர் சேவை செய்ய திட்டமிடுபவர் யாவரும் ஒரு விண்ணப்பப் படிவத்தைப் பெற்று சீக்கிரமாக அதைப் பூர்த்திசெய்து கொடுக்கும்படி உற்சாகப்படுத்துங்கள்.

பாட்டு 172 (92), முடிவு ஜெபம்.

மார்ச் 29-ல் துவங்கும் வாரம்

பாட்டு 105 (46)

10 நிமி:சபை அறிவிப்புகள். நினைவு ஆசரிப்பு அனுசரிப்புக்கு ஆர்வங்காட்டக்கூடிய ஆட்களையும் பைபிள் மாணாக்கர்களையும் அழைக்குமாறு எல்லாரிடமும் நினைவுபடுத்துங்கள். அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ்களை நன்றாய் பயன்படுத்துங்கள். அழைப்பிதழ்களில் நினைவு ஆசரிப்பு துவங்கும் நேரத்தையும் அது அனுசரிக்கப்படும் இடத்தின் முகவரியையும் திருத்தமாக எழுதிக்கொடுக்க பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.

25 நிமி:“நித்திய ஜீவ நம்பிக்கையை அளிக்கும் இறப்பை அனுசரித்தல்.” நடத்தும் கண்காணி கேள்வி பதில் மூலம் சிந்திக்கிறார். “நினைவு ஆசரிப்பு தினத்துக்கு ஆயத்தமாக” என்ற பெட்டியிலுள்ள விஷயத்தையும் சிந்தியுங்கள். கட்டுரையிலுள்ள பத்தி 5 சிந்தித்தப் பிறகு, பிரஸ்தாபி பைபிள் மாணாக்கரை நினைவு ஆசரிப்புக்கு அழைக்கும் நடிப்பைக் கொண்டிருங்கள். ஏப்ரல் 1-6 நாட்களின்போது பைபிளிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட வசனங்களை வாசிப்பதற்கான ஏற்பாட்டை பிரஸ்தாபி விளக்குகிறார், போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்வதாகச் சொல்கிறார்.

10 நிமி:ஏப்ரலின்போது காவற்கோபுரம் சந்தாக்களை அளித்தல். அம்மாதத்தில் எடுத்துக்காட்டவேண்டிய குறிப்பான பேச்சுக் குறிப்புகளையும் விஷயங்களையும் சிறப்பித்துக் காட்டுங்கள். எல்லா சந்தர்ப்பத்திலும் பத்திரிகைகளிலுள்ள குறிப்புகளுக்குக் கவனத்தைத் திருப்ப விழிப்பாயிருங்கள்.

பாட்டு 87 (47), முடிவு ஜெபம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்