டிசம்பர் ஊழியக் கூட்டங்கள்
டிசம்பர் 5-ல் துவங்கும் வாரம்
பாட்டு 68 (34)
12 நிமி:சபை அறிவிப்புகளும் நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து பொருத்தமான அறிவிப்புகளும். தற்போதைய பத்திரிகைகளை அளிக்கும்போது முக்கியப்படுத்திக் காட்டப்படக்கூடிய, மனதைக்கவருகிற ஓரிரண்டு கட்டுரைகளைச் சுட்டிக்காட்டுங்கள். அந்தக் கட்டுரைகளில் ஒன்றை பயன்படுத்தி, ஒரு திறமையான பிரஸ்தாபி பிரசங்கம் ஒன்றை நடித்துக்காட்டும்படி செய்யுங்கள்.
15 நிமி:“நெருங்கப் பின்பற்ற ஒரு முன்மாதிரியானவர்.” கேள்விகளும் பதில்களும்.
18 நிமி:“மிகப் பெரிய மனிதரைப் பின்பற்ற மற்றவர்களை அழையுங்கள்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். சுருக்கமான இரண்டு நடிப்புகளுக்காக ஏற்பாடு செய்யுங்கள். திருத்தமான வீட்டுக்கு வீடு பதிவுகளை வைத்துக்கொள்ளும்படி வலியுறுத்திக் கூறுங்கள்; பதிவுசெய்யப்பட வேண்டிய தகவல்களைச் சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள்.
பாட்டு 153 (44), முடிவு ஜெபம்.
டிசம்பர் 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 86 (45)
13 நிமி:சபை அறிவிப்புகளும் தேவராஜ்ய செய்தியும். கணக்கு அறிக்கை, அதோடு நன்கொடை ஒப்புகைகள் எதாகிலும் இருந்தால் அவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள். கிறிஸ்மஸ் மற்றும் புதுவருட வாழ்த்துக்கள் போன்ற உலகப்பிரகாரமான பண்டிகை வாழ்த்துக்களுக்கு எவ்வாறு பிரதிபலிப்பது என்பதன்பேரில் ஆலோசனைகள் சிலவற்றை அளியுங்கள். “விடுமுறைநாள் சாட்சிகொடுத்தல்” என்ற பெட்டியை கலந்தாலோசியுங்கள்.
14 நிமி:“உங்களுடைய போதனைக்குத் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள்.” பள்ளிக் கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. “1995-க்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை”யோடு சேர்த்து கொடுக்கப்பட்டிருக்கும் அறிவுரைகளை மறுபார்வை செய்து, விசேஷமாக சபைக்குத் தேவையான எந்தவொரு நினைப்பூட்டுதலையும் சுட்டிக் காண்பியுங்கள்.
18 நிமி:“கடவுளுடைய வீட்டிற்கான போற்றுதலைக் காட்டுங்கள்.” கேள்வி பதில்கள். கூட்டங்களுக்கு காலந்தவறாமல் வருவதன் அவசியத்தைப் பற்றி கூடுதலான குறிப்புரை வழங்குங்கள்.—காவற்கோபுரம் (ஆங்கிலம்), ஜூன் 15, 1990, பக்கங்கள் 26-9-ஐப் பாருங்கள்.
பாட்டு 99 (33), முடிவு ஜெபம்.
டிசம்பர் 19-ல் துவங்கும் வாரம்
பாட்டு 78 (112)
10 நிமி:சபை அறிவிப்புகள். வரவிருக்கிற விடுமுறைநாள் சமயத்தின்போது செய்யப்படுகிற வெளி ஊழியத்திற்கான சபை ஏற்பாடுகளை மறுபார்வை செய்யுங்கள். உள்ளூர் பிராந்தியத்தில் தற்போதைய பத்திரிகைகளை அளிப்பதற்கான வழிகளைத் தெரிவியுங்கள்.
20 நிமி:“தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம் செலுத்துங்கள்.” உட்சேர்க்கை கட்டுரை. 1-8 பாராக்களின்பேரில் கேள்வி பதில்கள், ஒரு மூப்பரால் கையாளப்பட வேண்டும். இடக்குறிப்பு செய்யப்பட்டுள்ள வேதவசனங்களின் பொருத்தத்தைக் கலந்தாலோசியுங்கள்.
15 நிமி:“தொடர்ந்த விஸ்தரிப்பு ராஜ்ய மன்றங்களுக்கான தேவையை அதிகரிக்கிறது.” உட்சேர்க்கை கட்டுரையின் பேரில் கேள்வி பதில் கலந்தாலோசிப்பு. “ஒரு ராஜ்ய மன்றத்தை எவ்வாறு வாங்குவது,” என்ற பெட்டியிலுள்ள குறிப்புகளை மறுபார்வை செய்வதன்மூலம் விஷயத்தைச் சுருங்கக்கூறுங்கள்.
பாட்டு 22 (91), முடிவு ஜெபம்.
டிசம்பர் 26-ல் துவங்கும் வாரம்
பாட்டு 74 (41)
5 நிமி:சபை அறிவிப்புகள். உங்களுடைய சபைக்குப் பொருந்துமானால், “உங்களுடைய கூட்ட நேரங்கள் மாறுமா?” என்பதை கலந்தாலோசியுங்கள்.
20 நிமி:“தீர்க்கதரிசன வார்த்தைக்கு கவனம் செலுத்துங்கள்.” உட்சேர்க்கை கட்டுரை. 9-13 பாராக்களின்பேரில் கேள்வி பதில்கள், ஒரு மூப்பரால் கையாளப்பட வேண்டும். சபை புத்தகப் படிப்புக்கு தயார்செய்தல், ஒழுங்காக ஆஜராதல், பங்குகொள்ளுதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறுங்கள். இந்தக் கடைசி நாட்களில் நம்முடைய வழிநடத்துதலுக்கு இன்றியமையாததாயிருக்கிற ஆவிக்குரிய அறிவுரைக்கான போற்றுதலைக் காண்பியுங்கள்.
10 நிமி:“அவருடைய சீஷர்களாகும்படி அவர்களை உந்துவியுங்கள்.” சபையாரோடு கலந்தாலோசியுங்கள். சுருக்கமான நடிப்பு ஒன்றைக் கொண்டிருங்கள். அனைவரும் மறுசந்திப்புகள் செய்வதற்கு ஒவ்வொரு வாரமும் சிறிது வெளி ஊழிய நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளும்படி சிபாரிசு செய்யுங்கள்.
10 நிமி:ஜனவரி அளிப்புக்காக தயார்செய்யுங்கள். விசேஷ அளிப்புக்காக சொஸையிட்டியால் பட்டியலிடப்பட்டுள்ள பழைய 192-பக்க புத்தகங்கள் ஏதாகிலும். சபையில் கையிருப்பிலுள்ள புத்தகங்களுக்குப் பொருத்தமான ஓரிரண்டு பிரசங்கங்களைத் தயார்செய்யுங்கள். வீடுகளில் அந்தப் புத்தகங்களை எவ்வாறு அளிக்கலாம் என்பதைக் காண்பிக்கிற நடைமுறையான பிரசங்கங்களாக இருக்க வேண்டும். பிரசங்கங்களுக்கான யோசனைகளை நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக்கங்கள் 9-15-ல் காணலாம். அந்த அளிப்பை திறமைவாய்ந்த ஒரு பிரஸ்தாபி நடித்துக்காட்டும்படி செய்யுங்கள்.
பாட்டு 94 (59), முடிவு ஜெபம்.