1996-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து நன்மையடைவீர்—பகுதி 1
1 “1996-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை”யில் கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை நீங்கள் வாசித்துவிட்டீர்களா? அதிலுள்ள சில மாற்றங்களை நீங்கள் கவனித்தீர்களா? ஆங்கில மொழி அட்டவணையில், ஜனவரி முதல் ஏப்ரல் வரை, நியமிப்பு எண் 3, நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை (பிற மொழி அட்டவணைகளில் கலந்து பேசுவதற்கான பைபிள் பேச்சுப் பொருள்கள்) அடிப்படையாகக் கொண்டிருக்கும், மே முதல் டிசம்பர் வரை புதிதாக வெளியிடப்பட்ட அறிவு என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கும். ஆங்கில மொழி அட்டவணை, பேச்சு நியமிப்பு எண் 4-ல் ஒவ்வொரு வாரமும் வெவ்வேறு பைபிள் கதாபாத்திரங்களைப் பட்டியலிடுகிறது, அதே சமயத்தில் மற்ற மொழிகளில் இந்த நியமிப்பு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து அட்டவணையிடப்பட்டுள்ளது.
2 மாணக்கர் நியமிப்புக்கள்: நியமிப்பு எண் 3 ஒரு சகோதரிக்குக் கொடுக்கப்படும். இது பேச்சுப் பொருட்கள் அல்லது நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கையில், பேச்சு அமைப்பு வீட்டுக்கு வீடு அல்லது சந்தர்ப்ப சாட்சிகொடுத்தலை உட்படுத்த வேண்டும். அறிவு புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டிருக்கையில், அது ஒரு மறுசந்திப்பாகவோ வீட்டு பைபிள் படிப்பாகவோ அளிக்கப்பட வேண்டும். அறிவு புத்தகத்தை வீட்டு பைபிள் படிப்புகள் நடத்துவதற்கு மிகப் பரவலாக பயன்படுத்தவிருப்பதால், இது அதிக பயனுள்ளதாக இருக்க வேண்டும்.
3 பேச்சு அமைப்பு வீட்டு பைபிள் படிப்பாக இருந்தால், சகோதரிகள் இருவரையும் இருக்கைகளில் உட்கார வைக்கலாம். சுருக்கமான முன்னுரையைக் கொடுத்துவிட்டு, நேரடியாக படிப்பை ஆரம்பிக்கலாம், பிறகு அச்சிடப்பட்ட கேள்விகளை கேட்கவும். வீட்டுக்காரரின் கதாபாத்திரம் தத்ரூபமாக நடித்துக்காட்டப்பட வேண்டும். இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை நேரம் அனுமதிப்பதற்கு ஏற்றாற்போல் வாசிக்கலாம். அந்தச் சகோதரி கேள்விகளை கேட்டும், கொடுக்கப்பட்டுள்ள வசனங்களின் பேரில் நியாயங்காட்டி பேசுவதன் மூலம் தன்னுடைய கற்பிக்கும் கலையைப் பயன்படுத்தி வீட்டுக்காரரை மனம்திறந்து பேசவைக்க வேண்டும்.
4 நியாயங்காட்டிப் பேசுதல் அல்லது அறிவு புத்தகங்களிலிருந்து ஐந்து நிமிடத்திற்குள் கொடுப்பதற்காக நியமிக்கப்படும் பகுதியில் அதிகமான வசனங்கள் இடக்குறிப்பு கொடுக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப்படவேண்டும்? முக்கியமான குறிப்புகளைக் கோடிட்டு காட்டும் அடிப்படையான வசனங்களை தேர்ந்தெடுங்கள். சில வசனங்கள் மாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தால், அந்தப் பாடத்திலுள்ள முக்கிய குறிப்புகளை மேலும் விலாவாரியாக கலந்துபேசலாம். அவ்வப்போது, புத்தகத்திலிருந்து ஒரு பத்தியை அல்லது ஒரு வாக்கியத்தை வாசித்துவிட்டு, பிறகு வீட்டுக்காரருடன் கலந்துபேசலாம். பேச்சுப் பொருட்கள் என்ற சிறுபுத்தகத்திலிருந்து பேச்சு தயாரிக்கப்படுகையில் குறைந்தபட்சம் ஒவ்வொரு குறிப்பிலிருந்தும் ஒரு வசனத்தை பயன்படுத்துவது மிகச் சிறந்தது.
5 அறிவு புத்தகத்தில், ஒவ்வொரு அதிகாரத்திலும் கடைசியில், “உங்கள் அறிவை சோதித்துப்பாருங்கள்” என்று தலைப்பிடப்பட்ட பெட்டி காணப்படுகிறது, அது, கடைசி பத்தியையும் உள்ளடக்கும் நியமிப்பை பெறும் பிரஸ்தாபியால் சுருக்கமாக மறுபார்வை செய்யப்படலாம். நியமிக்கப்படும் பத்திகளில் தகவல் பெட்டிகளும் வருமானால் நேரம் அனுமதிப்பதற்கு ஏற்றாற்போல் அவற்றை கலந்துபேசலாம். தகவல் பெட்டி இரண்டு நியமிப்புகளுக்கு இடையே வருமானால், முதல் நியமிப்பை கையாளும் சகோதரியே அதை கலந்தாராய்வார். அவர்கள் கலந்தாராயும் பொருளை எப்போதெல்லாம் பொருத்துகிறார்களோ அப்போதெல்லாம் படங்களின் பேரில் குறிப்பு சொல்லலாம்.
6 நியமிப்பு எண் 4 மிகவும் விறுவிறுப்பாகவும் நடைமுறைக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும். உங்களுடைய சபை ஆங்கில மொழி அட்டவணையைப் பின்பற்றுகிறது என்றால், நியமிக்கப்பட்ட பைபிள் கதாபாத்திரத்தைப்பற்றி, உட்பார்வை, தொகுதி 1, என்ன சொல்கிறது என்று கவனமாகப் படிக்கவும். பேச்சுப் பொருளை சுற்றி உங்களுடைய பேச்சை அமைக்கவும். உண்மையில் வாழ்ந்த பைபிள் கதாபாத்திரத்திலிருந்தும் அவருடைய ஆளுமையிலிருந்தும் நாம் பின்பற்ற விரும்பும் அல்லது தவிர்க்க வேண்டிய அவருடைய குணாதிசயங்கள், தனித்தன்மைகள் அல்லது உள்ளெண்ணங்கள் ஆகியவற்றின் பேரில் சபையார் தங்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்த உதவும் முக்கிய பைபிள் வசனங்களைத் தேர்ந்தெடுங்கள். பைபிள் கதாபாத்திரத்துடன் நேரடியாக தொடர்பு இல்லாத வசனங்களையும் சேர்த்துக்கொள்ளலாம், ஒருவேளை அவை சில நல்ல அல்லது கெட்ட தனித்தன்மைகளை யெகோவா எவ்வாறு நோக்குகிறார் என்பதை கோடிட்டுக் காட்டினால் அல்லது பேச்சுப் பொருளுடன் அவற்றிற்குத் தொடர்பு இருந்தால் சேர்த்துக்கொள்ளலாம். இந்தப் பேச்சு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்திலிருந்து கொடுக்கப்பட்டால், வெளி ஊழியத்திற்கு பயன்படும் நடைமுறையான குறிப்புகள் வலியுறுத்தி காட்டப்படவேண்டும்.
7 பள்ளியில் அளிக்கப்படும் பயற்சி முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டால், அருமையான “கற்பிக்கும் கலை” வெளிப்படும் விதத்தில் ‘திருவசனத்தைப் பிரசங்கம் பண்ணுவதை’ சிறப்பாக நம்மால் செய்ய முடியும்.—2 தீ. 4:2, NW.