ஜனவரிக்கான ஊழியக் கூட்டங்கள்
ஜனவரி 1-ல் துவங்கும் வாரம்
7 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
13 நிமி: “உட்பார்வையோடு பிரசங்கிப்பீர்.” முக்கிய குறிப்புகளை கலந்தாலோசியுங்கள். ஓரிரண்டு பிரசங்கங்களை நடித்துக்காட்டச் செய்யுங்கள். தற்சமயம் கையிருப்பில் என்ன பழைய புத்தகங்கள் உள்ளன என்பதை சபைக்குத் தெரியப்படுத்துங்கள்.
10 நிமி: “கம்ப்யூட்டர் தொழிற்நுட்பத்தைக் குறித்து சமநிலையான ஓர் நோக்கை காத்துக்கொள்ளுதல்.” உட்சேர்க்கை. கேள்விகளும் பதில்களும். சபைக்குப் பொருத்துங்கள். கம்ப்யூட்டரிலோ அல்லது வேறுவிதத்திலோ நம் பேச்சுக்களையும், கூட்டங்களுக்கானப் பகுதிகளையும், மற்றவர்களைத் தயார்செய்ய வைப்பதைப் பற்றிய எச்சரிப்புக்கு கவனத்தை திருப்புங்கள். சபை தஸ்தாவேஜுகள் வெறும் தாளிலே பதிவு செய்து வைக்கப்பட்டிருந்தாலும், அவற்றை நம்பகமாக வைத்திருக்க வேண்டிய தேவையைப்பற்றி அழுத்திக் கூறுங்கள். சபையின் பணிக்கு சங்கம் கொடுத்திருக்கும் நமூனாக்களைப் பயன்படுத்துவதற்கான அறிவுரையை வலியுறுத்துங்கள். அச்சடிக்கப்பட்ட நமூனாக்களை சங்கம் கொடுத்திருக்கும் தறுவாயில், தனிப்பட்ட முறையில் செய்யப்பட்ட நமூனாக்களைப் பயன்படுத்துவது சரியல்ல என்பதைக் குறிப்பிடுங்கள்.
15 நிமி: சபை தேவைகள். (அல்லது காவற்கோபுரம், அக்டோபர் 1, 1995, பக்கங்கள் 25-8 வரையுள்ள “உங்கள் அவசர உணர்வைக் காத்துக்கொள்ளுங்கள்,” என்ற கட்டுரையின் அடிப்படையில் ஒரு பேச்சு.)
பாட்டு 28, முடிவு ஜெபம்.
ஜனவரி 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. நற்செய்தியை உள்ளூரிலும், உலகமுழுவதிலும் பிரசங்கிப்பதற்குத் தேவையான நிதி உதவியைக் கொடுத்ததற்காக தகுந்த போற்றுதலை தெரிவியுங்கள்.
15 நிமி: மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டை அளிக்கும் பாதுகாப்பின் மதிப்பு. ஒவ்வொருவரும் மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை சரியாகப் பூர்த்திசெய்து, எல்லா சமயங்களிலும் அதை எடுத்துச் செல்வதின் முக்கியத்துவத்தையும், பிள்ளைகளுக்கான அடையாள அட்டை எப்பொழுதும் அவர்களிடமிருக்க வேண்டிய அவசியத்தையும், சபையுடன் மூப்பர் கலந்தாலோசிக்கிறார். அந்த அட்டையின் தலைப்பு குறிப்பிடுகிறதுபோல, மருத்துவப் பராமரிப்புக்கு என்ன தேவை (அல்லது என்ன தேவையில்லை) என்பதைப் பற்றி அது முன்கூட்டியே அறிவிப்பு கொடுக்கிறது. இது ஏன் ஒவ்வொரு வருடமும் செய்யப்படுகிறது? பழமையான அல்லது ஒருவரின் நம்பிக்கையை இனிமேலும் பிரதிபலிக்காத ஓர் அட்டையைவிட தற்போதிருக்கும் ஒரு புது அட்டை அதிக செயல்நோக்கத்துடனிருக்கும். நீங்கள் பேச இயலாதவர்களாயிருக்கும் போது, அப்பத்திரம் உங்களுக்காகப் பேசுகிறது. இன்று இரவு, அட்டைகள் கொடுக்கப்படும். அவை வீட்டிலே கவனமாகப் பூர்த்திசெய்யப்பட வேண்டும். ஆனால், அவற்றில் கையெழுத்துப்போடக் கூடாது. கடந்த இரண்டு வருடங்களாகச் செய்தபடியே, கையெழுத்திடுவதும், அதற்கு சாட்சியாயிருப்பதும், புத்தகப் படிப்பு நடத்துபவர்களின் மேற்பார்வையின்கீழ், சபை புத்தகப்படிப்பு நடக்கும் இடங்களிலே செய்யப்படும். சாட்சிகளாக கையெழுத்திடுபவர்கள், அட்டை வைத்திருப்போர் கையெழுத்துப் போடுவதை நிஜமாகவே பார்க்கவேண்டும். ஜனவரி 15-ல் துவங்கும் வாரத்தில் நடக்கும் புத்தகப் படிப்பிற்குப் பின் இது நடக்கும். (செயற்படுத்தும் முறைகளுக்கான விவரங்களுக்கு, ஜனவரி 1994 நம் ராஜ்ய ஊழியம் பக்கம் 2-ஐப் பார்க்கவும். அக்டோபர் 15, 1991, தேதியிட்ட கடிதத்தையும் பார்க்கவும்.) எல்லா முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளும் மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை பூர்த்திசெய்யலாம். முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள், விருப்பப்பட்டால் தங்களுடைய சொந்த சூழ்நிலைமைகளுக்கும், பற்றுறுதிகளுக்கும் தக்கவாறு, இந்த அட்டையிலிருக்கிற மொழிநடையைத் தழுவி தங்களுடைய சொந்த கோரிக்கையை எழுதலாம். பெற்றோர்கள் தங்களுடைய முழுக்காட்டப்படாத பிள்ளைகளுக்கு அடையாள அட்டையை பூர்த்திசெய்ய உதவலாம்.
20 நிமி: “கேட்கிறவர்களாக மாத்திரம் இராமல்—செய்கிறவர்களாய் இருங்கள்.” கேள்விகளும் பதில்களும். நேரம் அனுமதிக்கும்போது, உட்பார்வை புத்தகம், தொகுதி 2, பக்கம் 521, பாராக்கள் 1, 2-ன் அடிப்படையிலிருந்து கீழ்ப்படிதலின் அவசியத்தை கலந்தாலோசியுங்கள்.
பாட்டு 70, முடிவு ஜெபம்.
ஜனவரி 15-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். வீட்டில் இல்லாதவர்களைக் குறித்த வளரும் பிரச்சினையைப் பற்றி சுருக்கமாக கலந்தாலோசியுங்கள். கடந்து செல்கிற, நடைபாதை ஓரத்தில் நிற்கிற, அல்லது காரில் உட்கார்ந்திருக்கிற ஆட்களை அணுகத்தொடங்குவதன் மூலம் இழந்துபோன நேரத்தை மீட்க பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
18 நிமி: “சிலரைக் காப்பாற்ற திரும்பவும் செல்வீர்.” குறிப்பிடப்பட்டுள்ள பிரசங்கங்களை மறுபார்வை செய்யுங்கள். நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்திலிருந்து பைபிள் படிப்புகளைத் தொடங்குவதற்கான இலக்கை வைக்க பரிந்துரையுங்கள்.
15 நிமி: “நம் பத்திரிகைகளை மிக நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.” உட்சேர்க்கையிலுள்ள 1-13 வரையான பாராக்களின் அடிப்படையில் ஊழியக்கண்காணி ஆர்வமிக்க ஒரு பேச்சைக் கொடுக்கிறார்.
பாட்டு 156, முடிவு ஜெபம்.
ஜனவரி 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள்.
18 நிமி: “1996-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து நன்மையடைவீர்—பகுதி 1.” பள்ளி கண்காணியின் பேச்சு. அக்டோபர் 1995 நம் ராஜ்ய ஊழியத்தில் தேவராஜ்ய ஊழியப் பள்ளி அறிவுரைகளில், மாணக்கர்களுக்கான நியமிப்புகளுக்குக் கொடுக்கப்பட்டுள்ள வழிகாட்டிக் குறிப்புகளை மறுபார்வையிடுங்கள்.
17 நிமி: “நம் பத்திரிகைகளை மிக நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.” உட்சேர்க்கையிலுள்ள பாராக்கள் 14-17 வரை சபையாருடன் கலந்தாலோசியுங்கள். காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை எல்லா சமயங்களிலும் விசேஷ முயற்சி எடுத்து வழங்க வலியுறுத்துங்கள். பல்வகை மொழிகளிலே இப்பத்திரிகைகள் பிரசுரிக்கப்படுவதால், பிராந்தியத்தில் நாம் ஒழுங்காக எதிர்ப்படுகிற எல்லா மொழிகளையுமாவது எடுத்துச் செல்கிறோம். சுருக்கமான, புதிய குறிப்புகளை அவை அளிப்பதால், நம்முடைய பத்திரிகைகளை வழங்குவது ஆர்வத்தை வளர்க்க மிகவும் பயனளிக்கும் வழியாயிருக்கலாம். யாராவது ஆர்வத்துடனிருந்தால், குறித்துக்கொண்டு, திரும்பவும் அவர்களைச் சந்திக்கத் தவறாதிருங்கள். பத்திரிகை ரஸ்தாக்களை விரிவாக்க முயற்சி செய்யுங்கள். 14-ம் பாராவில் விவரிக்கப்பட்டபடி ஓர் ஒத்திகை கூட்டத்தை, ஒரு குடும்பத்தொகுதியினரை நடித்துக் காட்டச் செய்யுங்கள். மற்றும், பிரசுர அளிப்புகளை அதிகரிக்க, சில நடைமுறையான யோசனைகளை குறிப்பிடுங்கள்.
பாட்டு 92, முடிவு ஜெபம்.
ஜனவரி 29-ல் துவங்கும் வாரம்
7 நிமி: சபை தேவைகள்.
18 நிமி: “தைரியத்துடன் பேசுவீர்.” மூப்பரால் கையாளப்படவேண்டிய பேச்சும், கலந்துரையாடலும். ஞாயிற்றுக்கிழமைக்கான சபை ஊழிய ஏற்பாடுகளை மறுபார்வை செய்யுங்கள். நல்ல ஆதரவுக்காக பாராட்டுதல் தெரிவித்து, முன்னேற்றம் தேவைப்படுமிடத்திற்கு புத்திமதி கூறுங்கள்.
20 நிமி: என்றும் வாழலாம் புத்தகத்தை பிப்ரவரி மாதத்தில் அளியுங்கள். அடிப்படையான பைபிள் சத்தியங்களை உண்மை இருதயம் உள்ளவர்களுக்கு கற்பிப்பதற்கு இப்புத்தகம் ஒரு சக்திவாய்ந்த கருவியாக இருந்திருக்கிறதென சபையோருக்கு ஞாபகப்படுத்துங்கள். இப்புத்தகத்தை அளிப்பதற்கு, பிப்ரவரி மற்றும் செப்டம்பர் 1995 நம் ராஜ்ய ஊழியங்கள் இரண்டிலும் பக்கம் 4-ல் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். நடைமுறைக்கு ஒத்திருக்கிறதாயும், அளிப்பதற்கு இலகுவாயுமிருக்கிற குடும்பம் புத்தகத்தை, பிரஸ்தாபிகள் தங்களுடன் எப்போதும் எடுத்துச் செல்வதை உற்சாகப்படுத்துங்கள். என்றும் வாழலாம் மற்றும் குடும்பம் புத்தகங்களுக்கான பிரசங்கங்களை, ஒவ்வொன்றும் தனித்தனியாக நடித்துக்காட்டுங்கள். என்றும் வாழலாம் மற்றும் குடும்பம் புத்தகங்களை இந்த வாரமுடிவிலே பயன்படுத்துவதற்கு எல்லாரையும் அப்பிரதிகளை எடுத்துச் செல்ல ஞாபகப்படுத்துங்கள்.
பாட்டு 143, முடிவு ஜெபம்.