பிப்ரவரி ஊழியக் கூட்டங்கள்
பிப்ரவரி 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பத்திரிகை விலை மார்ச் 1, 1996-லிருந்து அதிகரித்திருக்கிறது என்பதைக் கவனத்திற்கு கொண்டுவாருங்கள்.
15 நிமி: “இயேசுவின் முன்மாதிரியைப் பின்பற்றி தினந்தோறும் சத்தியத்தை அறிவித்தல்.” கேள்விகளும் பதில்களும். பத்தி 5-ஐ வாசிக்கவும்.
20 நிமி: “உண்மையான சந்தோஷத்திற்கு ஒரு திறவுகோல்.” குறிப்பிட்டுள்ள அறிமுகப்படுத்துதல்களைக் கலந்தாலோசித்து, ஒன்று அல்லது இரண்டு நடிப்புக்களைக் கொண்டிருங்கள். என்றும் வாழலாம், குடும்ப வாழ்க்கை புத்தகங்கள் மிகவும் நடைமுறைக்கு ஏற்றவையாகவும் அளிப்பதற்கு எளிதானவையாகவும் இருப்பதனால் அவற்றை எப்பொழுதும் தங்களுடன் எடுத்துச்செல்ல பிரஸ்தாபிகளுக்கு ஆலோசனை கொடுக்கலாம்.
பாட்டு 14, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
13 நிமி: “ஏப்ரலில் பத்திரிகை அளிப்புக்குத் தயாரிக்கவும்.” நற்செய்தியை அறிவிப்பதில் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! வகிக்கும் மதிப்பை சிறப்பித்துக்காட்டுங்கள். இரண்டு பத்திகளையுடைய இந்தக் கட்டுரையை வாசிக்கவும், ஏப்ரலை பத்திரிகை விநியோகத்திற்கு ஒரு விசேஷ மாதமாக ஆக்குவதற்கு உள்ளூர் சபை என்ன செய்யும் என்பதைக் குறிப்பிடவும். ஏப்ரல், மே-ல் அல்லது இரண்டு மாதங்களிலும் துணைப் பயனியர் செய்ய சபையில் உள்ள அனைவரையும் உற்சாகப்படுத்தவும்.
22 நிமி: “செவிசாய்க்கிற ஒருவரை நான் எப்படி கண்டடைவது?” கேள்விகளும் பதில்களும். இரண்டு பிரஸ்தாபிகளை பள்ளி துணைநூல் புத்தகத்தில் பக்கங்கள் 165-7, பத்திகள் 10-21 வரை கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளில் சிலவற்றை உபயோகித்து, வீடுகளில் பேசும்போது எவ்வாறு இன்னும் அதிக கனிவுக்காட்ட தாங்கள் முயற்சிக்கலாம் என்பதை கலந்தாலோசிக்க செய்யவும். பிராந்தியத்தில் எதிர்ப்பை எதிர்ப்படுகையில் சாதுரியத்துடன் இருப்பதன் தேவையை வலியுறுத்திக்காட்டுங்கள்.
பாட்டு 133, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 19-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “1996-க்குரிய தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து நன்மையடைவீர்—பகுதி 2.” பள்ளிக் கண்காணியால் கொடுக்கப்படும் பேச்சு. கடவுளுடைய வார்த்தையைத் தினந்தோறும் படிப்பதன் தேவையை வலியுறுத்தவும்.
20 நிமி: “புரிந்துகொள்ள அவர்களுக்கு உதவுங்கள்.” மறுசந்திப்பு செய்வதற்காகக் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள். மூப்பர் இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளுடன், என்றும் வாழலாம் மற்றும் குடும்ப வாழ்க்கை புத்தகங்களிலிருந்து சிறப்பு அம்சங்களையும், எவ்வாறு இவற்றை மேன்மைப்படுத்திக் காட்டலாம் என்பதையும் கலந்தாலோசிக்கிறார். ஓரிரண்டு அறிமுகப்படுத்துதல்களை நடித்துக்காட்டவும். எந்தக் குறிப்பில் அக்கறையை வளர்த்தால் பைபிள் படிப்பு துவங்கப்பட முடியுமோ அந்தக் குறிப்பில் ஆர்வத்தை எவ்வாறு வளர்க்கலாம் என்பதன் பேரில் ஆலோசனைகளை அளிக்கவும்.
பாட்டு 53, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: கவர்ச்சியூட்டும் அறிமுகப்படுத்துதல்களைத் தயாரித்தல். ஊழியக் கண்காணியோ மூப்பரோ மூன்று அல்லது நான்கு பிரஸ்தாபிகளுடன் வீட்டுக்கு வீடு ஊழிய அறிமுகப்படுத்துதல்களில், உள்ளூரின் அக்கறையைத்தூண்டும் ஏதேனும் ஒன்றை குறிப்பிடுவதனால் பெறும் நன்மைகளைக் கலந்தாலோசிக்கிறார். உதாரணத்திற்கு, அடிப்படை வாழ்க்கைத்தரத்தை முன்னேற்றுவிப்பதில் தற்போதைய முயற்சிகள், விவாக சம்பந்தமான பிரச்சினைகள் வளர்ந்துகொண்டிருப்பதன் போக்கு, குற்றம்புரியும் சிறார்கள் அல்லது வேலைக்கிடைப்பதில் கஷ்டம் போன்றவை சம்பந்தமான உள்ளூர் செய்தி அறிக்கைகள் அல்லது அரசியல்வாதிகள் மற்றும் கிறிஸ்தவ குருமார்கள் அளிக்கும் தீர்வுகளில் ஏன் மக்கள் அதிகம் அதிகமாக ஐயுறுகிறார்கள் என்பதைக்காட்டும் செய்தி குறிப்புகள் முதலியன. உங்கள் சமுதாயத்தில் உள்ள தற்போதைய செய்தி குறிப்புகள் சிலவற்றைக் குறிப்பிடுங்கள், சம்பாஷணைகளைத் துவங்க அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்று கலந்தாலோசியுங்கள்.
20 நிமி: மார்ச்சில் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகத்தை அளித்தல். சம்பாஷணைகளைத் துவங்க உபயோகிக்கக்கூடிய அக்கறையூட்டும் அம்சங்கள் சிலவற்றை புத்தகத்திலிருந்து குறிப்பிட்டுக் காட்டுங்கள். (1) பக்கங்கள் 4-5, 86, 124-5, 188-9-ல் காட்டப்பட்டுள்ளதைப்போன்ற கண்ணைக்கவரும் படங்களிடமாகக் கவனத்தை ஈர்க்கவும். (2) ஒவ்வொரு அதிகாரமும் மறுபார்வை செய்யும் கேள்விகள் அடங்கிய ஒரு பட்டியலுடன் முடிவுறுகிறது என்பதைக் காட்டி, அவற்றை எப்படி அறிமுகப்படுத்துதல்களுக்கு அடிப்படையாகப் பயன்படுத்தலாம் என்பதை விளக்கவும். பதில்களை அறிந்துகொள்ள விரும்புகிறாரா என்று வீட்டுக்காரரைக் கேட்கலாம். பக்கங்கள் 11, 22, 61, 149-ல் பட்டியலிடப்பட்டுள்ள அந்தக் கேள்விகள் சிலவற்றை தேர்ந்தெடுங்கள். (3) பக்கம் 102-லுள்ள பெட்டியைக் குறிப்பிடவும், “கடைசி நாட்களின் சில அம்சங்கள்” எப்படி அக்கறையைத் தூண்டுவதற்கு பயன்படுத்தப்படலாம் என்று காட்டும் ஆலோசனைகளைக் கொடுக்கவும். (4) இந்தப் புத்தகம் எவ்வாறு, சீராக முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துவதற்கென்றே விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதை வலியுறுத்தவும். அதிகாரங்கள் சுருக்கமாக உள்ளன, விஷயங்கள் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியவையாய் உள்ளன, வலிமையான வசனங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன, துருவி ஆராயும் கேள்விகள் முக்கிய குறிப்புகளில் கவனத்தை ஒருமுகப்படுத்துகின்றன. பைபிள் படிப்பு ஆரம்பிக்கவேண்டும் என்ற இலக்குடன் இந்தப் புத்தகத்தை அளித்திட அனைவரையும் துரிதப்படுத்தவும். ஒருவேளை இந்தப் புத்தகம் உங்கள் மொழியில் இன்னும் வரவில்லையென்றால், இந்தப் பகுதியை என்றும் வாழலாம் புத்தகத்தை அளிப்பதில் பின்பற்றலாம். பிரஸ்தாபிகளை எப்போதும் தங்களுடன் குடும்ப வாழ்க்கை புத்தகத்தைக் கொண்டுசெல்லவும், சரியான சந்தர்ப்பத்தில் அதனை அளிக்கவும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 151, முடிவு ஜெபம்.