உடன்பாடான மனப்பான்மையுடன் நற்செய்தியை அறிமுகப்படுத்துதல்
1 நாம் செய்யும் காரியத்தில், விசேஷமாக சீஷராக்கும் வேலையில், சந்தோஷத்தையும் நிறைவேற்றலையும் காண நாம் அனைவரும் விரும்புகிறோம். அத்தகைய திருப்தியைக் கொண்டுவருவது எது? மற்றவர்களுக்கு உதவுதல் என்னும் செய்வதற்குத் தகுதியான வேலையில் நம்மைச் சுறுசுறுப்பாக வைக்கும்போது நாம் ஓர் உடன்பாடான மனப்பான்மையைத் தொடர்ந்து வைத்திருப்பதிலிருந்து அது ஆரம்பமாகிறது. (நீதி. 11:25) நாம் என்ன சொல்கிறோமோ அதையே உண்மையில் நம்புகிறோம் என்பதை நற்செய்தியை நாம் அளிக்கும் விதம் காட்டவேண்டும். நமது உள்ளத்திலிருந்து நாம் பேசுவோமாகில், அதில் நமது உண்மை மனதும் தனிப்பட்ட நம்பிக்கையும் பிரதிபலிக்கும். (லூக். 6:45) நமது அறிமுகப்படுத்துதலை ஒத்திகை பார்ப்பதன்மூலம், பிராந்தியத்தில் மக்களுடன் பேசும்போது அதிக தன்னம்பிக்கையோடு இருப்பதை உணருவோம். இது குறிப்பாக, உங்கள் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியுள்ளதாக்குதல் என்ற புத்தகத்தை அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தை நாம் செப்டம்பரில் அளிக்கும்போது மதிப்புள்ளதாக இருக்கும். உடன்பாடான மனப்பான்மையோடு நற்செய்தியை அறிமுகம் செய்கையில் பின்வரும் ஆலோசனைகள் பயனுள்ளவையாக இருப்பதை ஒருவேளை நீங்கள் காணக்கூடும்.
2 முதல் சந்திப்பில் “குடும்ப வாழ்க்கை” புத்தகத்தை அளிக்கும்போது நீங்கள் இவ்வாறு சொல்லலாம்:
◼ “நம்முடைய அக்கம்பக்கத்தாரோடு பேசும்போது, மக்களில் பலர் அவர்களுடைய குடும்பத்தின் எதிர்காலத்தைப் பற்றி அக்கறையுள்ளவர்களாக இருப்பதை நாங்கள் கண்டோம். அவர்களைச் சுற்றி இருக்கும் ஆட்கள் அடிக்கடி வெளிக்காட்டும் விரும்பத்தகாத பண்புகளின் காரணமாக தங்கள் குடும்பங்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், தீங்கும்கூட இழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் காண்கிறார்கள். இத்தகைய மனப்பான்மைகளை மக்களில் பலர் வெளிக்காட்டுவதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா? [2 தீமோத்தேயு 3:2, 3-ஐ வாசித்துவிட்டு, பதிலளிக்க அனுமதியுங்கள்.] மக்கள் பலர் இவ்விதமாக இருப்பார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகையில், நம்மைச் சுற்றியுள்ள பிரச்சினைகளின் மத்தியிலும் பலமான மற்றும் சந்தோஷமான குடும்பத்தை எவ்வாறு கட்டியமைப்பது என்பதன்பேரில் நடைமுறையான புத்திமதியையும் பைபிள் கொடுக்கிறது.” குடும்ப வாழ்க்கை புத்தகத்தில், பக்கம் 182-ல் துவங்கும் பத்திகள் 5 மற்றும் 6-லிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட வாக்கியங்களை வாசித்துவிட்டு, சரியான போதனைகளைக் கொண்டு நித்திய எதிர்கால நம்பிக்கையோடு குடும்பத்தை நம்மால் கட்டியமைக்க முடியும் என்பதைக் காட்டுங்கள். புத்தகத்தை 20.00 ரூபாய் நன்கொடைக்கு அளிக்கவும்.
3 குடும்பத்தின் எதிர்காலத்தைப்பற்றி நீங்கள் கலந்தாலோசித்த நபரைச் சந்திப்பதற்கு மறுபடியும் போகும்போது, இவ்வாறு சொல்ல நீங்கள் விரும்பக்கூடும்:
◼ “நான் சென்றமுறை வந்தபோது, சுற்றியிருக்கும் பிரச்சினைகளை எதிர்த்து சமாளிக்கக்கூடிய ஒரு பலமான குடும்பத்தைக் கட்டியமைப்பது எவ்வாறு என்பதைப் பற்றி நாம் பேசினோம். பலமான குடும்பத்தைக் கட்டியமைப்பதற்கான ஒரு வழியானது, நல்ல பேச்சுத்தொடர்பு இருக்கும்படி பார்த்துக்கொள்வதாகும். பேச்சுத்தொடர்பு ஒரு குடும்பத்தின் உயிர் நாடி என்பதாக அழைக்கப்படுகிறது. இதன்பேரில் பைபிளில் காணப்படும் புத்திமதியைக் கவனியுங்கள்.” நீதிமொழிகள் 18:13 மற்றும் 20:5-ஐ பைபிளிலிருந்து அல்லது குடும்ப வாழ்க்கை புத்தகம் பக்கம் 34-லிருந்து வாசியுங்கள். இந்தப் புத்தகம் பைபிளிலுள்ள காலவரம்பற்ற ஞானத்தை நடைமுறையாக பொருத்தி பிரயோகிக்கிறது என்று குறிப்பிடுங்கள். ஒவ்வொரு பக்கத்தின் அடியிலும் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளினிடமாகக் கவனத்தை ஈர்த்து, இந்தப் புத்தகத்தை எவ்வாறு படிக்கலாம் என்று காண்பியுங்கள். அடுத்த சந்திப்பிற்கான நேரத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.
4 “என்றும் வாழலாம்” புத்தகத்தை அளிக்கும்போது, இந்த அறிமுகப்படுத்துதலை நீங்கள் முயன்றுபார்க்கலாம்:
◼ “அக்கம்பக்கத்திலுள்ள மக்களிடத்தில் நான் பேசியபோது, ஒரு பாதுகாப்பான சமுதாயத்திற்காகவும் அமைதியான ஓர் உலகிற்காகவும் பெரும்பான்மையர் ஏங்குவதைக் கவனித்தேன். அத்தகைய நிலைமைகளை அடைவதற்கு மனிதன் ஏன் தோல்வியடைந்துவிட்டான் என்பதைக் குறித்து உங்களது கருத்து என்ன? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] சில தலைவர்கள் உண்மையானவர்களாக இருக்கலாம், நன்மைகள் சிலவற்றைச் செய்யலாம், ஆனால் பைபிள் என்ன ஞானமாக புத்திமதியைக் கூறுகிறது என்று கவனியுங்கள்.” சங்கீதம் 146:3, 4-ஐ வாசித்துவிட்டு, அதன்பிறகு கேளுங்கள்: “மனிதனின் தேவைகளைத் திருப்திப்படுத்தக்கூடியவர் எவரேனும் இருக்கிறாரா?” வசனங்கள் 5-ஐயும் 6-ஐயும் வாசியுங்கள். என்றும் வாழலாம் புத்தகத்தின் பக்கங்கள் 156 முதல் 162 வரையுள்ள படங்களைக் காட்டி, கடவுளுடைய ஆட்சியின் நன்மைகளினிடமாக கவனத்தை ஈர்த்திடுங்கள். புத்தகத்தை அளித்திடுங்கள்.
5 முதன்முதலில் கடவுளுடைய ஆட்சியைப்பற்றி கலந்தாலோசித்திருந்தால், மறுசந்திப்பில் இந்த ஆலோசனையை நீங்கள் முயன்றுபார்க்கலாம்:
◼ “சில தினங்களுக்கு முன் நான் இங்கு வந்தபோது, பூமியில் உண்மையான சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு மனிதன் தோல்வியடைந்ததைப்பற்றி நாம் கலந்தாலோசித்தோம். அத்தகைய தோல்விக்கான காரணத்தை பைபிள் கொடுப்பதன்பேரில் நாம் முடிவுக்கு வந்ததை நீங்கள் ஒருவேளை நினைவுகூரலாம். [மறுபடியும் சங்கீதம் 146:3-ஐ வாசியுங்கள்.] நமது நம்பிக்கைகளை மனிதர்களின்மீது வைக்கக்கூடாது என ஏன் கடவுள் அறிவுரை கூறுகிறார் என்று உங்களால் கவனிக்க முடிகிறதா? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] நிரந்தரமான தீர்வுக்கான எந்தவொரு நம்பிக்கையும் கடவுளிடமிருந்து வரவேண்டும் என்பதை ஒருவேளை நீங்கள் ஒத்துக்கொள்ளக்கூடும். இந்த நம்பிக்கையை நாம் கொண்டிருப்பதற்கான காரணம் சங்கீதம் 146:10-ல் விளக்கப்பட்டிருக்கிறது. [வாசிக்கவும்.] கடவுளுடைய ராஜ்யத்தின் குடிமக்களாக ஆக நாம் விரும்பினால், நாம் என்ன செய்ய வேண்டும்?” என்றும் வாழலாம் புத்தகத்தின் 250-வது பக்கத்தைத் திருப்பி, பத்தி 2-ஐ வாசித்துவிட்டு, எபிரெயர் 11:6-ஐ சிறப்பித்துக்காட்டுங்கள். பைபிள் படிப்பின் வாயிலாக நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் அறிவை எவ்வாறு இலட்சக்கணக்கானோர் பெற்றிருக்கிறார்கள் என்பதை நடித்துக்காட்டுவதாக சொல்லுங்கள். மீண்டும் எப்போது வரவேண்டும் என்று ஏற்பாடு செய்துகொள்ளுங்கள்.
6 கடைகள்தோறும் ஊழியம் செய்கையில், “குடும்ப வாழ்க்கை” புத்தகத்தைக்கொண்டு நீங்கள் இந்தச் சுருக்கமான அணுகுமுறையை முயன்றுபார்க்கலாம்:
◼ “இன்று நாங்கள் சமுதாயத்தின் வர்த்தகர்களுக்கு ஒரு விசேஷித்த சேவையைப் புரிகிறோம். நம் பிராந்தியத்தில் கிடுகிடுவென அதிகரித்திருக்கும் விவாகரத்தைக்குறித்தும், சிறார் குற்றம்புரிதலைக்குறித்தும் நாம் அனைவரும் கவலையுள்ளவர்களாக இருக்கிறோம். இத்தகைய போக்குகளை வெற்றிகரமாக எதிர்த்துப்போராடுவதற்கு ஏதேனும் வழியிருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? [பதிலளிக்க அனுமதியுங்கள்.] தீர்வுகள் இருக்கின்றன.” குடும்ப வாழ்க்கை புத்தகத்தின் பொருளடக்க பட்டியலுக்குத் திருப்பி, சில அதிகாரங்களின் தலைப்புகளை வாசித்துக்காட்டுங்கள். இந்தப் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள புத்திமதி மனித தத்துவங்களின்மீது ஆதாரம் கொண்டில்லை; ஆனால் தீர்வுகள் மேலான மூலமாகிய, மனிதவர்க்கத்தின் சிருஷ்டிகரால் அளிக்கப்படுகின்றன. புத்தகத்தை அளித்திடுங்கள்.
7 நீங்கள் “குடும்ப வாழ்க்கை” புத்தகத்தைக் கொடுத்துவிட்டு வந்த ஒரு வர்த்தகரை மறுசந்திப்பு செய்கையில் இதைச் சொல்லலாம்:
◼ “குடும்பத்தில் தலைமைத்துவத்திற்கு கீழ்ப்படிதல், பேச்சுத்தொடர்பு, பயிற்றுவித்தல், சிட்சித்தல் போன்ற காரியங்களில் கடவுளுடைய புத்திமதியைப் பின்பற்றுவதன்மூலம் பல குடும்பப் பிரச்சினைகளை மேற்கொள்ளலாம் என்று நான் சென்றமுறை வந்தபோது குறிப்பிட்டேன்.” பக்கம் 5-லுள்ள முதல் பத்திக்குத் திருப்பி, சந்தோஷமான குடும்பத்தின் சில நன்மைகள் யாவை என்று வாசித்துக்காட்டுங்கள். இந்தப் புத்தகத்தைப் படிப்பதானது பல பல குடும்பங்களை மகிழ்ச்சியுள்ளவையாக ஆக்கியிருக்கிறது என்று குறிப்பிட்டு, நாம் இந்தப் புத்தகத்தைப் படிக்கும் விதத்தை விளக்குங்கள். அவர்களது வியாபார ஸ்தலத்திற்கோ வீட்டிற்கோ தொடர்ந்து வருவதற்கு நீங்கள் முன்வருவதாகச் சொல்லி, இந்தப் புத்தகத்திலிருந்து இலவசமாகப் படிப்பை நடத்துங்கள்.
8 ‘தேவனுடைய உடன்வேலையாட்களாக’ நற்செய்தியை அறிமுகப்படுத்துகையில் உடன்பாடான மனப்பான்மையைக் கொண்டிருப்பதற்கு அனைத்துக் காரணத்தையும் நாம் கொண்டுள்ளோம். (1 கொ. 3:9) வீட்டுக்காரருடைய தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு அறிமுகங்களையும் பிரசுரங்களையும் உபயோகிப்பதைக் குறித்து நாம் உடன்பாடான மனப்பான்மையோடு இருப்போமாக. இந்த மனப்பான்மையைத் தொடர்ந்து வைத்திருப்பதானது யெகோவாவின் ஆசீர்வாதங்களில் விளைவடையும்.