உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/96 பக். 7
  • ராஜ்யத்தைப் பிரசங்கிப்பீர்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ராஜ்யத்தைப் பிரசங்கிப்பீர்
  • நம் ராஜ்ய ஊழியம்—1996
  • இதே தகவல்
  • ராஜ்ய நம்பிக்கையை அறிவிக்கிறோம்
    நம் ராஜ்ய ஊழியம்—2007
  • ‘மேலான ஒன்றைப் பற்றிய நற்செய்தியை அறிவித்தல்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • நம்பிக்கையூட்டும் விதமாக பேசுதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • கடவுளுடைய சேவையை முழுமையாகச் செய்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—1996
km 9/96 பக். 7

ராஜ்யத்தைப் பிரசங்கிப்பீர்

1 எபிரெயர் 10:23-ல் “நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்க” நாம் துரிதப்படுத்தப்படுகிறோம். நமது நம்பிக்கை கடவுளுடைய ராஜ்யத்தில் மையம் கொண்டிருக்கிறது. சகல தேசத்தாருக்கும் ராஜ்யத்தின் நற்செய்தி பிரசங்கிக்கப்பட வேண்டும் என்று இயேசு குறிப்பாகக் கட்டளையிட்டார். (மாற். 13:10) நமது ஊழியத்தில் ஈடுபடும்போது இதை மனதில் வைத்திருப்பது அவசியம்.

2 நாம் மக்களோடு தொடர்புகொள்ளும்போது, அவர்களுக்கு அக்கறையூட்டும் அல்லது அவர்களை உட்படுத்தும் ஏதேனும் காரியத்தின்பேரில் ஒரு சம்பாஷணையைத் துவங்க முயலுவோம். பொதுவாக நாம் அக்கம்பக்கத்திலுள்ள குற்றச்செயல், இளைஞரின் பிரச்சினைகள், ஜீவனத்திற்கு சம்பாதிப்பதற்கான கவலைகள் அல்லது உலக விவகாரங்களில் உள்ள நெருக்கடியான நிலைமைகள் போன்ற அவர்கள் நன்கு தெரிந்துவைத்திருக்கும் காரியங்களைக் குறிப்பிடுவோம். பெரும்பாலான மக்களது மனங்கள் இத்தகைய ‘லவுகீக கவலைகளில்’ ஒருமுகப்படுத்தப்பட்டிருப்பதால், நாம் அக்கறையுள்ளவர்களாகவும் புரிந்துகொள்ளுதலுள்ளவர்களாகவும் இருக்கிறோமென வெளிப்படுத்தும்போது, மக்கள் தங்கள் மனதில் என்ன இருக்கிறது என்பதை பெரும்பாலும் சொல்லிவிடுவார்கள். (லூக். 21:34) இது நமது நம்பிக்கையைப் பகிர்ந்துகொள்வதற்கு வழியைத் திறக்கக்கூடும்.

3 இருப்பினும், நாம் கவனமாக இல்லையென்றால், ராஜ்ய செய்தியைப் பிரசங்கிக்கவேண்டும் என்று நாம் சென்றதன் நோக்கத்தை நிறைவேற்ற தவறவிடுமளவுக்கு அந்தச் சம்பாஷணையானது எதிர்மறையான காரியங்களில் மையம்கொண்டிருக்கலாம். இவ்வளவதிக துயரை அளித்திடும் கெட்ட நிலைமைகளினிடமாக நாம் கவனத்தை ஈர்த்தபோதிலும், கடைசியில் மனிதவர்க்கத்தின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்துவைக்கும் ராஜ்யத்தினிடமாக கவனத்தை ஈர்ப்பதே நமது நோக்கம். நாம் உண்மையில் அருமையான நம்பிக்கையைக் கொண்டுள்ளோம், அதைப்பற்றி மக்கள் கேட்கவேண்டியதன் தேவை தீவிரமாக இருக்கிறது. ஆகவே, ‘சமாளிப்பதற்கு கடினமான கொடியகாலங்களின்’ சில அம்சங்களை நாம் முதலில் சம்பாஷிக்கக்கூடும், ஆனால் நாம் உடனே நமது முதன்மையான செய்தியாகிய அந்த ‘நித்திய சுவிசேஷத்தினிடமாக’ கவனத்தை ஒருமுகப்படுத்த வேண்டும். இவ்விதம் நமது ஊழியத்தை நாம் முழுமையாக நிறைவேற்றுவோம்.—2 தீ. 3:1, NW; 4:5; வெளி. 14:6.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்