ஜனவரி ஊழியக் கூட்டங்கள்
ஜனவரி 5-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். ஜனவரி 13 மற்றும்/அல்லது 14-க்கான வெளி ஊழிய ஏற்பாடுகளைப் பற்றி குறிப்பிடுங்கள்.
17 நிமி: “முழுமையாக சாட்சி பகருவதில் பெருமகிழ்ச்சி அடையுங்கள்.” சபையாருடன் கட்டுரையைக் கலந்தாலோசித்தல். திறம்பட்ட பிரசங்கத்திற்கு தேவையான முக்கிய குறிப்புகளை வலியுறுத்திச் சொல்லுங்கள்: (1) சிநேகப்பான்மையோடு வணக்கம் தெரிவியுங்கள், (2) அக்கறையைத் தூண்டும் சமீபத்திய காரியத்தைப் பற்றி குறிப்பிடுங்கள் அல்லது அது சம்பந்தமாக ஒரு கேள்வியை எழுப்புங்கள், (3) பொருத்தமான வேத வசனத்தைக் குறிப்பிடுங்கள், (4) அளிக்கவிருக்கும் பிரசுரத்தினிடம் ஆர்வத்தைத் தூண்டுங்கள். திறம்பட்ட பிரஸ்தாபி ஒருவரை, ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டிருக்கும் முதல் பிரசங்கத்தையும் பிறகு அதற்கான மறுசந்திப்பையும் நடித்துக் காட்ட செய்யுங்கள்.
20 நிமி: இரத்தம் பற்றிய கடவுளுடைய சட்டத்தைக் கைக்கொள்ள இப்போதே தயாராகுங்கள். தகுதிவாய்ந்த மூப்பர், மருத்துவ முன்கோரிக்கை/விடுவிப்பு அட்டையை (Advance Medical Directive/Release card) பூர்த்திசெய்வதன் முக்கியத்துவத்தைப் பற்றி கலந்தாலோசிக்கிறார். சங்கீதம் 19:7-ல் உள்ள ஏவப்பட்ட அறிவுரை, அப்போஸ்தலர் 15:28, 29-ல் கொடுக்கப்பட்டுள்ள இரத்தம் பற்றிய கடவுளுடைய பூரண சட்டத்தின் ஒரு வெளிக்காட்டே என காட்டுகிறது. உண்மைதவறா வணக்கத்தார் அச்சட்டத்தை கடைப்பிடிக்க கடுமுயற்சிசெய்வர். அவ்வாறு செய்வதற்கான உங்கள் தீர்மானத்தை இந்த ஆவணம் வெளிப்படுத்துகிறது; உங்கள் சார்பாக நீங்கள் பேச முடியாமலிருக்கையில் உங்களுக்காக இது பேசுகிறது. (நீதிமொழிகள் 22:3-ஐ ஒப்பிடுக.) புதிய அட்டை நீங்கள் இரத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பது சம்பந்தமான உங்கள் தற்போதைய உறுதிமொழியை கொடுக்கிறது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு, புதிய அட்டை பெற விரும்பும் முழுக்காட்டப்பட்ட சாட்சிகள் தங்களுக்காக ஒரு அட்டையையும், முழுக்காட்டப்படாத வயது வராத இளம் பிள்ளைகளை உடையவர்கள் ஒவ்வொரு பிள்ளைக்கும் ஓர் அடையாள அட்டையையும் (Identity Card) புத்தக கெளண்டரிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த அட்டைகளை இன்று இரவே பூர்த்திசெய்யக் கூடாது. வீட்டில் அவற்றை கவனமாக பூர்த்தி செய்ய வேண்டும், ஆனால் கையொப்பமிடக் கூடாது. எல்லா அட்டைகளையும், கையொப்பமிடுவதும், சாட்சிகள் கையொப்பமிடுவதும், தேதியிடுவதும் புத்தகப் படிப்பு நடத்துபவரின் மேற்பார்வையில் அடுத்த சபை புத்தகப் படிப்புக்குப் பின்பு செய்யப்பட வேண்டும். தன்னுடைய தொகுதிக்கு நியமிக்கப்பட்ட அனைவரும் இந்த மருத்துவ கோரிக்கைக்கு இசைவாக கையெழுத்திட விரும்பினால், தேவையான உதவியைப் பெற்றுக் கொள்வதை இது உறுதிசெய்யும். சாட்சி கையொப்பமிடுபவர்கள் அட்டையை வைத்திருப்பவர் ஆவணத்தில் கையொப்பமிடுவதை நேரில் காண வேண்டும். அட்டையை பூர்த்திசெய்து கையொப்பமிட விருப்பமுள்ளவராக, ஆனால் அந்தச் சமயத்தில் கூட்டத்திற்கு வரத்தவறியவராக இருக்கும் எவருக்கும், எல்லா முழுக்காட்டப்பட்ட பிரஸ்தாபிகளும் தங்கள் அட்டைகளை சரியாக பூர்த்தி செய்யும் வரை அடுத்த ஊழியக் கூட்டத்தில் புத்தகப் படிப்பு நடத்துனர்கள்/மூப்பர்கள் உதவி செய்வர். (அக்டோபர் 15, 1991-ன் கடிதத்தை மறுபார்வை செய்யுங்கள்.) முழுக்காட்டப்படாத பிரஸ்தாபிகள், தங்களுடைய சூழ்நிலைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப, இந்த அட்டையின் மொழிநடையைப் பின்பற்றி தங்களுக்கும் தங்கள் பிள்ளைகளுக்கும் சொந்த மருத்துவ கோரிக்கை அட்டையை எழுதி வைத்துக்கொள்ளலாம்.
பாட்டு 142 மற்றும் முடிவு ஜெபம்.
ஜனவரி 12-ல் துவங்கும் வாரம்
10நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
15நிமி: “கைப்பிரதிகளை நன்கு பயன்படுத்துங்கள்.” சபையாரோடு கலந்தாலோசிப்பு. டிசம்பர் 1, 1996 காவற்கோபுரம், பக்கம் 13, பாரா 15-லுள்ள அனுபவத்தை சேர்த்துக் கொள்ளவும். சபை கைப்பிரதிகளை உபயோகிக்காமலிருந்து சமீபத்தில்தானே அவற்றிற்காக ஆர்டர் செய்திருந்தால் விரைவில் அவை கிடைக்கும் என்பதைக் குறிப்பிடுங்கள்.
20 நிமி:“இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தியை யெகோவா கொடுக்கிறார்.” கேள்விகளும் பதில்களும். (w90 7/15 19, பாராக்கள் 15-16-ஐக் காண்க.) யெகோவா தங்களை எவ்வாறு பலப்படுத்தினார் என்பதை காட்டும் உற்சாகமூட்டும் அனுபவங்களை சிலர் சொல்வதற்கு ஏற்பாடு செய்யவும்.
பாட்டு 81 மற்றும் முடிவு ஜெபம்.
ஜனவரி 19-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஜனவரி 26-க்கான வெளி ஊழிய ஏற்பாடுகளைப் பற்றிக் குறிப்பிடுங்கள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: மகிழ்ச்சியைக் கொண்டுவரும் குடும்பப் படிப்பு. ஒரு தம்பதியினர், தங்கள் குடும்பத்தின் ஆவிக்குரிய தேவைகளைப் பற்றி கலந்தாலோசிக்கின்றனர். தங்கள் பிள்ளைகள் உலகப்பிரகாரமான செல்வாக்குகளால் எதிர்மறையான விதத்தில் பாதிக்கப்படுவதைக் குறித்து கவலைப்படுபவர்களாக, தங்கள் பிள்ளைகளின் ஆவிக்குரிய தன்மையை பலப்படுத்த வேண்டிய தேவையை உணருகின்றனர்; ஆனால், தங்களுடைய குடும்பப் படிப்பு எப்பொழுதாவது நடப்பதாகவும், பெரும்பாலும் பலனற்றதாகவும் இருந்து வந்திருப்பதை ஒத்துக்கொள்கின்றனர். பிரயோஜனமுள்ள குடும்பப் படிப்பு நடத்துவது சம்பந்தமாக ஆகஸ்ட் 1, 1997 காவற்கோபுரம், பக்கங்கள் 26-9-ல் பரிந்துரை செய்யப்பட்டிருக்கும் குறிப்புகளை ஒன்றாக சேர்ந்து அவர்கள் மறுபார்வை செய்கின்றனர். தங்கள் பிள்ளைகளின் ஆவிக்குரிய நலனைப் பாதுகாப்பதற்காக அவற்றைப் பின்பற்ற இருவரும் தீர்மானமாய் இருக்கின்றனர்.
பாட்டு 146 மற்றும் முடிவு ஜெபம்.
ஜனவரி 26-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். பிப்ரவரி மாதத்திற்கான பிரசுர அளிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். என்றும் வாழலாம், அறிவு, குடும்ப மகிழ்ச்சி ஆகிய புத்தகங்களிலிருந்து, அவற்றை அளிப்பதற்கு உதவியாக இருக்கும் ஓரிரண்டு குறிப்புகளைச் சொல்லுங்கள்.
15 நிமி: “யெகோவாவின் வணக்க ஸ்தலத்திற்கு மரியாதை காட்டுங்கள்.” கேள்விகளும் பதில்களும். மூப்பரால் கையாளப்பட வேண்டும். சபையாரைப் புண்படுத்தாத விதத்தில் குறிப்புகளை சொல்ல வேண்டும்.
18 நிமி: உலகளாவிய சாட்சி பகரும் வேலையில் நம்முடைய பங்கைக் குறித்து அறிக்கை செய்தல். (நம் ஊழியம் புத்தகத்தில் பக்கங்கள் 100-2, 106-10-ன் அடிப்படையில்) பேச்சு மற்றும் கலந்தாலோசிப்பை செயலர் கையாளுகிறார். நம்முடைய ஊழியத்தை தவறாமல் அறிக்கை செய்ய வேண்டியதற்கான பைபிள்பூர்வ முன்மாதிரியைக் காட்டிய பின்பு, “நாம் ஏன் நம்முடைய வெளி ஊழியத்தை அறிக்கை செய்கிறோம்” என்ற உபதலைப்பை மறுபார்வை செய்வதற்கு இரண்டு உதவி ஊழியர்களை அழைக்கிறார். பின்பு, குறித்த நேரத்தில் திருத்தமான அறிக்கைகளை போடுவதன் முக்கியத்துவத்தை செயலர் வலியுறுத்துகிறார். தனிப்பட்ட இலக்குகளை வைப்பது ஏன் பலன்தருகிறது என்பதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு, சாட்சி பகரும் வேலையில் முழுமையான பங்கை உடையவர்கள் பெறும் ஆசீர்வாதங்களைப் பற்றிய உற்சாகமான குறிப்புகளை சொல்லி முடிக்கிறார்.
பாட்டு 189 மற்றும் முடிவு ஜெபம்.