மார்ச் ஊழியக் கூட்டங்கள்
மார்ச் 1-ல் துவங்கும் வாரம்
8 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள்.
17 நிமி: “கிறிஸ்துவின் மரணத்தை உலக முழுவதும் ஆசரித்தல்.” கேள்விகளும் பதில்களும். பிப்ரவரி 1, 1997, காவற்கோபுரம் பக்கங்கள் 11-12, பாராக்கள் 10-14-ல் உள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள். நமக்காக மீட்கும்பொருளைக் கொடுக்கும்படி யெகோவாவின் மிகச் சிறந்த அன்பு அவரை எவ்வாறு தூண்டியது என்பதை வலியுறுத்துங்கள்.
20 நிமி: ஏப்ரல், மே மாதங்களில் துணைப் பயனியர் செய்வதற்கான வலுவான காரணங்கள். ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். துணைப் பயனியர் செய்வதைப் பற்றி எல்லாரும் கருத்துடன் சிந்திக்கும்படி உற்சாகப்படுத்துகிறார். ஜனவரி 1999, நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 3-ல் உள்ள ஒழுங்கான மற்றும் துணைப் பயனியர்களின் மணிநேரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை மறுபார்வை செய்யுங்கள். முழுநேர ஊழியம் என்ற சிலாக்கியத்தை இன்னும் அதிகமானோர் ருசிக்க இந்த மாற்றம் உதவும். மற்றவர்களுக்கு பிரசங்கிக்க கிறிஸ்துவின் பலியின்மீதுள்ள நம் போற்றுதல் எப்படி தூண்டுதலாய் அமைகிறது என்பதை விளக்குங்கள். (2 கொ. 5:14, 15) இந்த வருட நினைவு ஆசரிப்பு நாள் ஏப்ரல் முதல் தேதியில் வருகிறது. இந்த மாதம் முழுவதும் ஊழிய வேலையில் இன்னும் அதிகமாக பங்குகொள்ள எல்லா ராஜ்ய பிரஸ்தாபிகளுக்கும் இது என்னே ஓர் சிறந்த வாய்ப்பு! துணைப் பயனியர் சேவையைப் பற்றி கலந்தாலோசிக்கும் பிப்ரவரி 1997 மற்றும் மார்ச் 1998 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கைகளிலிருந்து முக்கிய குறிப்புகளை தெரிவுசெய்து அவற்றை மறுபார்வை செய்யுங்கள். கொடுக்கப்பட்டிருந்த மாதிரி அட்டவணைகளை எப்படி ஏற்றவாறு மாற்றியமைக்கலாம் என்பதை சிந்தியுங்கள். ஊழியத்திற்காக சபையில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை மறுபார்வை செய்யுங்கள். ஊழியத்தில் மற்றவர்களோடு பங்குகொள்ள போதுமான வாய்ப்பை அவை அளிக்கும். கூட்டம் முடிந்த பிறகு துணைப் பயனியர் விண்ணப்ப படிவங்களைப் பெற்றுக்கொள்ளும்படி பிரஸ்தாபிகளை உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 44, முடிவு ஜெபம்.
மார்ச் 8-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை.
20 நிமி: “ ‘வாருங்கள்’ என அவர்களை அழையுங்கள்.” கேள்விகளும் பதில்களும். அக்கறைக் காட்டும் புதியவர்களை எப்போதும் சபை கூட்டங்களுக்கு வரும்படி அழைக்க வேண்டிய தேவையை வலியுறுத்துங்கள். அறிவு புத்தகம் பக்கம் 159, பாரா 20 மற்றும் பக்கங்கள் 161-3, பாராக்கள் 5-8-ல் உள்ள பொருளை உபயோகித்து ஆர்வம் காண்பிக்கும் ஒரு நபரோடு கலந்தாலோசிப்பது போல ஒரு நடிப்பை செய்துகாட்டுங்கள். ஏப்ரல் 1 அன்று, பைபிள் மாணாக்கர்களும் அக்கறைக் காண்பிக்கும் மற்றவர்களும் நினைவு ஆசரிப்பிற்கு வர உதவுவதற்கு ஒவ்வொருவரும் விசேஷ முயற்சி எடுக்கும்படி உற்சாகப்படுத்துங்கள். அச்சிட்ட அழைப்பிதழின் ஒரு பிரதியைக் காண்பித்து அதை எவ்வாறு திறம்பட உபயோகிக்கலாம் என்பதை விளக்குங்கள். நினைவுநாள் அழைப்பிதழ்களை அனைவரும் இந்த வாரமே கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
15 நிமி: “குடும்ப அங்கத்தினர் முழுமையாய் ஒத்துழைப்பது எப்படி—சபை கூட்டங்களில்.” ஒரு குடும்பம் கலந்தாலோசிக்கிறது. கட்டுரையிலுள்ள முக்கிய குறிப்புகளின் பேரில் குறிப்பு சொல்கையில், குடும்பமாக அவர்கள் எவ்வாறு கூட்டங்களுக்கு தயாரிக்கலாம் என்பதைப் பற்றி கலந்தாலோசிக்கின்றனர். பங்குகொள்ள ஒருவருக்கொருவர் எவ்வாறு உதவலாம் என்பதையும் சரியான நேரத்தில் கூட்டங்களுக்கு வர குடும்பமாக அவர்கள் என்ன செய்யலாம் என்பதையும் பற்றி கலந்தாலோசிக்கின்றனர்.
பாட்டு 62, முடிவு ஜெபம்.
மார்ச் 15-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “உதவி ஊழியர்கள் பெருமதிப்பு வாய்ந்த சேவை செய்கிறார்கள்.” தகுதிவாய்ந்த உதவி ஊழியர் கொடுக்கும் பேச்சு. நம் ஊழியம் புத்தகம், பக்கங்கள் 57-9-ல் உள்ள முக்கிய குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள். சபைக்கு உதவுவதற்காக உதவி ஊழியர்கள் சபையில் எவ்வாறு உபயோகிக்கப்படுகின்றனர் என்பதை விளக்குங்கள்.
15 நிமி: 1999 வருடாந்தர புத்தகத்தை (ஆங்கிலம்) அனுபவித்தல். கணவன் மனைவிக்கிடையே கலந்தாலோசிப்பு. முதன்முறையாக வருடாந்தர புத்தகம் 1927-ல்தான் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது என்று கணவன் விளக்குகிறார்; அப்போதிலிருந்து 70-ற்கும் அதிகமான வருடங்களாக யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய அறிக்கையும் அதில் இடம்பெற்றிருக்கிறது. பக்கம் 31-ல் இருக்கும் “1998 மொத்த எண்ணிக்கை” என்பதிலுள்ள முக்கிய விஷயங்களை மறுபார்வை செய்கின்றனர். பின்னர், பக்கங்கள் 3-5-ல் உள்ள “ஆளும் குழுவிலிருந்து வந்த கடிதம்” என்பதை கலந்தாலோசிக்கின்றனர். அங்கு உற்சாகப்படுத்தப்பட்டதற்கு இணங்க தாங்கள் எப்படி செயல்படுவார்கள் என்பதைப் பற்றி கூறுகிறார்கள்.
பாட்டு 68, முடிவு ஜெபம்.
மார்ச் 22-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். ஏப்ரல் மாதத்தில் துணைப் பயனியர் சேவை செய்பவர்களின் பெயர்களை அறிவியுங்கள். விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்னும் சமயம் இருக்கிறது என்பதை விளக்குங்கள். ஏப்ரல் மாதம் முழுவதற்குமாக ஊழியத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கூட்டங்களைப் பற்றி தெரிவியுங்கள். தினந்தோறும் வேதவாக்கியங்களை ஆராய்தல்—1999 மற்றும் 1999 காலண்டரில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 1 வரை அட்டவணையிடப்பட்டிருக்கும் நினைவு ஆசரிப்புக்கான பைபிள் வாசிப்பை படிக்கும்படி அனைவரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: நினைவு ஆசரிப்புக்காக தயாரியுங்கள். பேச்சு. பைபிள் மாணாக்கர்களும் அக்கறையுள்ள மற்றவர்களும் நினைவு ஆசரிப்புக்கு வர உதவுவதற்கு எல்லாரும் திட்டமிட வேண்டும். நினைவுச் சின்னங்களில் யார் பங்கெடுக்கலாம் என்பதையோ இந்த ஆசரிப்பின் முக்கியத்துவம் பற்றியோ கலந்துகொள்ளும் புதியவர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம். ஏப்ரல் 1, 1996, காவற்கோபுரம், பக்கங்கள் 6-8-ல் கூறப்பட்டிருப்பதை மறுபார்வை செய்யுங்கள். இந்த ஆசரிப்பின் அர்த்தத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்ள புதியவர்களுக்கு நாம் எப்படி உதவலாம் என்பதை விளக்குங்கள். “நினைவு ஆசரிப்பு நினைப்பூட்டுதல்கள்” என்ற பகுதியை மறுபார்வை செய்து, அதற்காக சபையில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளைப் பற்றிக் கூறி முடியுங்கள்.
20 நிமி: நாம் மரிக்கையில் நமக்கு என்ன நேரிடுகிறது? (ஆங்கிலம்) ஒரு மூப்பர் இந்தச் சிற்றேட்டின் மதிப்பையும் உபயோகத்தையும் இரண்டோ மூன்றோ தகுதிவாய்ந்த பிரஸ்தாபிகளோடு கலந்தாலோசிக்கிறார். வெளி ஊழியத்தில் இதை திறம்பட உபயோகிக்கிறோமா? பின்வரும் காரியங்களை அந்தக் குழுவினர் கலந்தாலோசிக்கின்றனர்: இந்த விஷயத்தில் ஏன் அநேகர் ஆர்வம் காட்டுகின்றனர்? பொய் மத போதகங்களுக்கு எதிராக என்ன நம்பிக்கையை இந்தச் சிற்றேடு முக்கியப்படுத்திக் காட்டுகிறது? பின் அட்டையில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளை உபயோகித்து நாம் எவ்வாறு அக்கறையைத் தூண்டலாம்? இந்த சிற்றேட்டை அளிக்க என்ன சந்தர்ப்பங்கள் இருக்கின்றன? பக்கம் 27-ல், பாரா 14-ல் உள்ள வசனங்களை உபயோகித்து ஒரு நடிப்பை செய்துகாட்டுங்கள். இந்தச் சிற்றேட்டை நல்ல விதத்தில் உபயோகிக்க கவனமாய் இருக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 92, முடிவு ஜெபம்.
மார்ச் 29-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். மார்ச் மாத வெளி ஊழிய அறிக்கையை போடும்படி எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள். ஏப்ரல் மாதத்தில் நாம் காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை அளிப்போம். புதிய பத்திரிகைகளைக் காண்பித்து, சிறப்பாக இருக்கும் கட்டுரைகளை குறிப்பிட்டு, ஆர்வத்தைத் தூண்டும் சில குறிப்புகளைப் பற்றி சொல்லுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டை அனைவரும் வைத்திருக்க வேண்டும்; அக்கறை காண்பிக்கும் அனைவருடனும் பைபிள் படிப்பை ஆரம்பிக்க அதை உபயோகிக்க வேண்டும்.
15 நிமி: சபை தேவைகள்.
18 நிமி: ஆலோசனையை எப்படி ஏற்றுக்கொள்ள வேண்டும்? மூப்பர் கொடுக்கும் பேச்சு. நம்முடைய மனநிலை, நடத்தை, நண்பர்கள் அல்லது சபை காரியங்களில் பங்குகொள்வது சம்பந்தமாக நம் அனைவருக்குமே ஆலோசனைகள் கிடைக்கின்றன. சில சமயங்களில் நாம் ஆலோசனையை ஏற்காமல் இருக்கலாம் அல்லது சட்டென புண்பட்டுவிடலாம். ஆலோசனையை ஏற்று, பொருத்த விருப்பமுள்ளவர்களாய் இருப்பது நம் ஆவிக்குரிய நலனுக்கு அதிக பிரயோஜனமாய் இருக்கும். நாம் ஏன் ஆலோசனையை ஏற்று, மதிக்கவேண்டும் என்பதற்கான காரணங்களை வலியுறுத்தும் சில முக்கிய காரணங்களை மறுபார்வை செய்யுங்கள்.—ஏப்ரல் 1, 1988, காவற்கோபுரம், பக்கங்கள் 28-31-ஐக் காண்க.
பாட்டு 118, முடிவு ஜெபம்.