அநேகரை உந்துவிக்கும் வைராக்கியம்
நற்கிரியைகள் மீது கொரிந்தியர்களுக்கு இருந்த வைராக்கியம் உடன் கிறிஸ்தவர்கள் ‘அநேகரை தூண்டியதால்’ அப்போஸ்தலன் பவுல் அவர்களை பாராட்டினார். (2 கொ. 9:2, NW) சுவிசேஷ வேலையில் வைராக்கியமாக பங்குகொள்வதன் மூலம், தனி நபரோ ஒரு குடும்பமோ ஒரு புத்தகப் படிப்பு தொகுதியோ அல்லது முழு சபையோ இதுபோன்ற பாதிப்பை மற்றவர்கள்மீது ஏற்படுத்த முடியும். ஊழியத்திற்கான வைராக்கியத்தை காண்பிப்பதற்கு உதவும் சில வழிகள் இதோ!
◼ சனிக்கிழமைகளை பத்திரிகை ஊழியத்திற்காக ஒதுக்கி வையுங்கள்.
◼ ஞாயிற்றுக்கிழமைகளில் கொஞ்சம் ஊழியம் செய்யுங்கள்.
◼ விசேஷ ஊழியத்திற்காக எப்போதாவது ஏற்பாடு செய்யப்பட்டால் அதில் கலந்துகொள்ளுங்கள்.
◼ வேலையிலோ பள்ளியிலோ கிடைக்கும் விடுமுறையை ஊழியத்திற்கு பயன்படுத்துங்கள்.
◼ வட்டாரக் கண்காணியின் சந்திப்பின்போது ஊழியத்திற்கு ஆதரவு கொடுங்கள்.
◼ வருஷத்தில் ஒரு மாதமோ பல மாதங்களோ துணைப் பயனியர் ஊழியம் செய்யுங்கள்.
◼ கூடுமானால், ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பிப்பதற்கு உங்களுடைய சூழ்நிலைமைகளை ஒழுங்கமைத்துக்கொள்ளுங்கள்.
2000 யெகோவாவின் சாட்சிகளுடைய வருடாந்தர புத்தகம் (ஆங்கிலம்), பக்கங்கள் 17-19-ஐக் காண்க.