உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 9/01 பக். 1
  • உங்கள் ஊழியத்தை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உங்கள் ஊழியத்தை
  • நம் ராஜ்ய ஊழியம்—2001
  • இதே தகவல்
  • பத்திரிகையை அளிக்க எவ்வாறு தயாரிக்கலாம்?
    நம் ராஜ்ய ஊழியம்—2006
  • சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்கும் பத்திரிகைகளை அளியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—2007
  • பத்திரிகை அளிப்புக்கு சொந்தமாகவே தயாரியுங்கள்
    நம் ராஜ்ய ஊழியம்—1996
  • மாதிரி பிரசங்கங்களைப் பயன்படுத்தும் விதம்
    நம் ராஜ்ய ஊழியம்—2005
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2001
km 9/01 பக். 1

உங்கள் ஊழியத்தை

முழுமையாக நிறைவேற்றுகிறீர்களா?

1 இயேசுவின் சீஷர்கள் மக்களுக்கு ‘முழுமையாக சாட்சி’ கொடுப்பதன் மூலம் தங்கள் ஊழியத்தை நிறைவேற்றினார்கள் என அப்போஸ்தலர் புத்தகம் நமக்கு சொல்கிறது. (அப். 2:40; 8:25; 28:23; NW) உண்மையில் அதுவே அப்போஸ்தலன் பவுலின் நோக்கமாக இருந்தது. (அப். 20:24, NW) நற்செய்தியை அறிவிக்கும் ஊழியராக அதுவே உங்களுடைய இலக்காகவும் இல்லையா? இதை நீங்கள் எப்படி செய்யலாம்?

2 பிரசங்கத்தை தயாரியுங்கள்: ஊழியத்தில் திறம்பட சாட்சி கொடுப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள தயாரிப்பு மிகவும் முக்கியம்​—⁠குறிப்பாக பத்திரிகைகளை அளிக்கும் விஷயத்தில். ஏனெனில் பத்திரிகைகளிலுள்ள விஷயங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, சிறந்த விதத்தில் நமக்கு உதவுவதற்கு இந்த நம் ராஜ்ய ஊழியம் இதழ் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது; இடது பக்கத்திலுள்ள பத்தியில் சமீபத்திய காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளுக்கான மாதிரி பிரசங்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் அநேகரை கவரும் காலத்திற்கேற்ற விஷயங்கள் ஒவ்வொரு இதழிலிருந்து சிறப்பித்துக் காட்டப்படும். இந்த சுருக்கமான பிரசங்கங்களை நீங்கள் எப்படி இன்னும் விரிவாக விளக்கலாம்?

3 உங்களுடைய பிராந்தியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக தோன்றும் பிரசங்கத்தை தேர்ந்தெடுங்கள். அங்கு கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையை கவனமாகப் படித்து, அக்கறையைத் தூண்டும் முக்கிய பகுதிகளை குறித்துக் கொள்ளுங்கள். கலந்து பேசுவதற்குப் பொருத்தமான வசனத்தை அந்தப் பத்திரிகையிலிருந்து கண்டுபிடித்து அதை வீட்டுக்காரருக்கு வாசித்துக் காட்டலாம். பத்திரிகையை வாசிக்க வீட்டுக்காரரை தூண்டுவதற்கு சிறிய முடிவுரையையும் சேர்த்துக்கொள்ளுங்கள். பொருத்தமானால், யெகோவாவின் சாட்சிகளுடைய உலகளாவிய வேலைக்கு வீட்டுக்காரர் நன்கொடை கொடுப்பதைப் பற்றியும் சுருக்கமாக சேர்த்துக்கொள்ளுங்கள். இப்போது உங்களுடைய பிரசங்கத்தை ஒத்திகை பாருங்கள்.

4 பைபிளை பயன்படுத்த திட்டமிடுங்கள்: நீங்கள் நன்றாக திட்டமிடுகையில், பெரும்பாலும் ஒரு வசனத்தையும் உங்களுடைய பிரசங்கத்தில் சேர்த்துக்கொள்ளலாம். முதலாவதாக, நம்முடைய பிராந்தியத்தில் பேசப்படும் எல்லா மொழி பைபிள்களையும் எடுத்துச் செல்வதை உறுதிப்படுத்திக் கொள்வது முக்கியம். பிறகு, அப்பிராந்தியத்தில் பைபிளை பயன்படுத்துவதில் பிரச்சினை எதுவும் இல்லையெனில் நம் உரையாடலை பைபிள் வசனத்துடனே ஆரம்பிக்கலாம். சிநேகப்பான்மையுடன் அவர்களுக்கு வணக்கம் சொல்லி இவ்வாறு ஆரம்பிக்கலாம்:

◼ “இதில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா என்பதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்” என்று சொல்லிவிட்டு ஆதியாகமம் 1:1-ஐ வாசிக்கவும், பிறகு இவ்வாறு கேளுங்கள்: “நீங்கள் இந்த வசனத்திலுள்ளதை ஒத்துக்கொள்கிறீர்களா?” அவர் ஒத்துக்கொள்கிறாரென்றால் தொடர்ந்து இவ்வாறு கேளுங்கள்: “நானும் இதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் எல்லாவற்றையும் கடவுளே படைத்திருப்பதால் துன்மார்க்கத்துக்கும் அவரே காரணர் என நீங்கள் நினைக்கிறீர்களா?” அவர் என்ன பதிலளிக்கிறார் என்பதைக் கேட்ட பிறகு பிரசங்கி 7:29-ஐ வாசியுங்கள். அறிவு புத்தகத்தின் 71-⁠ம் பக்கத்தைத் திருப்பி 2-⁠ம் பாராவை வாசியுங்கள். அந்தப் புத்தகத்தை வாசித்துப் பார்க்கும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள். ஆதியாகமம் 1:1-⁠ல் உள்ள குறிப்பை வீட்டுக்காரர் ஒத்துக்கொள்ளாதபோது படைப்பு (ஆங்கிலம்) புத்தகத்தை வாசிக்கும்படி அவரை உற்சாகப்படுத்துங்கள்.

5 ஆர்வம் காட்டுவோர் அனைவரையும் மீண்டும் சந்தியுங்கள்: ஆர்வம் காட்டுவோரை மீண்டும் போய் சந்திக்காவிட்டால் உங்கள் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற முடியாது. பத்திரிகைகளை அல்லது வேறு பிரசுரங்களை நீங்கள் அளித்தாலும், அளிக்காவிடினும் பிரசங்கத்திற்கு நன்கு செவிகொடுத்திருந்தால் அந்த நபரின் பெயரையும் விலாசத்தையும் குறித்து வையுங்கள். சரியான சமயத்தில் மீண்டும் சந்திப்பதன் மூலம் அந்த நபரின் ஆர்வத்தை வளர்க்க ஊக்கமாக முயற்சி செய்யுங்கள். பைபிள் படிப்பு ஏற்பாட்டை பற்றி சொல்ல தயங்காதீர்கள்.

6 ‘முழுமையாக சாட்சி கொடுக்கும்படி’ இயேசு கட்டளையிட்டிருந்ததை முதல் நூற்றாண்டு சீஷர்கள் அறிந்திருந்தனர். (அப். 10:42, NW) அதே கட்டளை நமக்கும் பொருந்துகிறது; ஏனெனில் சீஷராக்குவதற்கான ஒரே வழி அதுவே. (மத். 28:19, 20) நம் ஊழியத்தை முழுமையாக நிறைவேற்ற நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோமாக.​—⁠2 தீ. 4:⁠5, NW.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்