ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
நவம்பர் 10-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 4-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் நவம்பர் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் முதலாவது) நவம்பர் 15 காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு தத்ரூபமான நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒரேவொரு பத்திரிகையை மட்டுமே சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே அளிப்பதாக அந்த நடிப்புகள் இருக்க வேண்டும். ஒரு நடிப்பில், நம் உலகளாவிய வேலைக்கு எப்படி நிதியுதவி அளிக்கப்படுகிறது என்ற விளக்கத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.—காவற்கோபுரம், பக். 2 அல்லது விழித்தெழு! பக். 5-ஐக் காண்க.
15 நிமி: “ஆயத்தமாயிருங்கள்.”a ஆவிக்குரிய காரியங்களுக்கு பயனுள்ள விதத்தில் செலவிடக்கூடிய நேரத்தை இந்த உலக கவலைகளும் கவனச் சிதறல்களும் எடுத்துக்கொள்ளாதபடி பார்த்துக்கொள்ள எது தங்களுக்கு உதவுகிறது என்பதை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
20 நிமி: உங்கள் நண்பர்களை நீங்கள் எப்படி தேர்ந்தெடுக்கிறீர்கள்? கடவுளை வணங்குங்கள் புத்தகம், பக்கங்கள் 47-9-லிருந்து சபையாருடன் கலந்தாலோசிப்பு. பாரா 13-ல் கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளையும் வசனங்களையும் பயன்படுத்தி, நம் நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவும் பைபிள் நியமங்களின் பேரில் குறிப்பு சொல்லுமாறு சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 127, முடிவு ஜெபம்.
நவம்பர் 17-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். வெளி ஊழியத்தில் இந்த மாத பிரசுர அளிப்பை பயன்படுத்திய போது ஆர்வமிக்க அனுபவங்களை பெற்ற இரண்டு, மூன்று பிரஸ்தாபிகளைப் பேட்டி காணவும். சிலர் பைபிள் படிப்புகளை ஆரம்பித்திருக்கலாம்.
15 நிமி: தாராள மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள். காவற்கோபுரம், நவம்பர் 1, 2003, பக்கங்கள் 27-30-ன் அடிப்படையில் மூப்பரின் பேச்சு.
18 நிமி: “பாராட்டு புத்துணர்ச்சியூட்டுகிறது.”b குடும்ப மகிழ்ச்சி புத்தகத்தில் பக்கங்கள் 49-50, பாரா 21-லுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளவும். மற்றவர்களின் பாராட்டால் உற்சாகத்தைப் பெற்றவர்களிடம் அதைப் பற்றி சுருக்கமாக சொல்ல சொல்லவும்.
பாட்டு 58, முடிவு ஜெபம்.
நவம்பர் 24-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கை. பக்கம் 4-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் அடிப்படையில் நவம்பர் 8 விழித்தெழு!-வையும் (பத்திரிகை அளிப்பு பகுதியில் மூன்றாவது) டிசம்பர் 1 காவற்கோபுரத்தையும் அளிப்பதைக் காட்டும் இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். பக்கம் 4-ல் கொடுக்கப்பட்டுள்ள வசனத்தைத் தவிர வேறு வசனத்தையும் பயன்படுத்தலாம். ஒரேவொரு பத்திரிகையை மட்டுமே சிறப்பித்துக் காட்டினாலும் இரண்டு பத்திரிகைகளையும் சேர்த்தே அளிப்பதாக அந்த நடிப்புகள் இருக்க வேண்டும். பயணம் செய்யும்போது சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது போல் அல்லது உள்ளூருக்குப் பொருத்தமான வேறொரு முறையில் பத்திரிகைகளைக் கொடுப்பது போல் ஒரு நடிப்பை அமைத்துக்கொள்ளுங்கள்.
10 நிமி: கேள்விப் பெட்டி. மூப்பரின் பேச்சு.
23 நிமி: “யெகோவாவுடன் நெருக்கமான உறவை வளர்த்துக்கொள்ளுதல்.”c கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள். வசனங்கள் எப்படி பொருந்துகின்றன என்பதை சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். தங்கள் தனிப்பட்ட பைபிள் படிப்பின் தரத்தை முன்னேற்றுவிக்க எது உதவியிருக்கிறது என சொல்வதற்கு ஓரிருவரை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 202, முடிவு ஜெபம்.
டிசம்பர் 1-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நவம்பர் மாதத்திற்கான வெளி ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். டிசம்பர் மாதத்துக்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள். கொடுக்கப்பட்டுள்ள ஓரிரண்டு பிரசங்கங்களை சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள். கூடுதல் பிரசங்கங்களைக் கண்டுபிடிப்பதற்கு உவாட்ச் டவர் பப்ளிக்கேஷன் இன்டெக்ஸ்-ஐப் பிரஸ்தாபிகள் எப்படி பயன்படுத்தலாம் என்பதை விளக்குங்கள்.—செப்டம்பர் 2001 நம் ராஜ்ய ஊழியம், பக். 2-ஐக் காண்க.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: மற்றவர்களுக்குக் கற்பிக்க போதிய தகுதி பெற்றிருத்தல். காவற்கோபுரம், ஜூன் 1, 2000, பக்கங்கள் 16-17, பாராக்கள் 9-13-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு. திறம்பட்ட விதத்தில் கற்பிப்பது நம் ஊழியத்தின் முக்கிய இலக்காக இருக்கிறது. செம்மறியாடு போன்றவர்களுக்கு உதவுவதில் வெற்றி காண்பது, தகவல் தெரிவிக்கும் விதத்திலும் தூண்டுவிக்கும் விதத்திலும் ராஜ்ய செய்தியை அவர்களுக்கு சொல்லும் நம் திறமையை சார்ந்திருக்கிறது. பின்வரும் கேள்விகளைக் கலந்தாலோசியுங்கள்: (1) பிரசங்கிப்பதற்கும் போதிப்பதற்கும் இடையே என்ன வித்தியாசம் உள்ளது? (2) பைபிள் படிப்பு நடத்த சிலர் தயங்குவது ஏன்? (3) போதிக்கும் திறமையை நாம் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? (4) மாணாக்கர் தான் படிப்பதைப் புரிந்துகொள்கிறார் என்பதை நாம் எப்படி உறுதிப்படுத்திக் கொள்ளலாம்? (5) எந்த இலக்கை மாணாக்கர் அடைய நாம் உதவ வேண்டும்?
பாட்டு எண் 70, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.