ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
மே 9-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி, மே 15 காவற்கோபுரத்தையும் மே 8 விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம். பொது போக்குவரத்தில் பயணம் செய்யும்போது பத்திரிகை அளிப்பதுபோல் ஒரு நடிப்பு இருக்கட்டும். விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டின் விசேஷ வினியோகிப்பு மே 15-ம் தேதி முடிவடையும். அம்மாதத்தின் மீதமுள்ள நாட்களில் பத்திரிகைகளை நாம் அளிப்போம்.
15 நிமி: புதிய சிற்றேட்டைப் பயன்படுத்தி ஆர்வத்தை வளருங்கள். ஊழியக் கண்காணியின் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டைப் பெற்றுக்கொண்ட ஒவ்வொருவரையும் நாம் மீண்டும் போய் சந்தித்து அவர்கள் காட்டிய ஆர்வத்தை வளர்க்க வேண்டும். 2-ம் பக்கத்திலுள்ள பொருளடக்கத்தைப் பயன்படுத்தி மேலோட்டமாக அந்தச் சிற்றேட்டைப் பற்றி சுருக்கமாகச் சொல்லுங்கள், ரத்தினச் சுருக்கமாகச் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ள (தடித்த எழுத்திலுள்ள தலைப்புகளுக்குக் கீழ் நேரெழுத்தில் பட்டியலிடப்பட்டுள்ள) பகுதியிடம் கவனத்தைத் திருப்புங்கள். ஏற்கெனவே பேசிய விஷயங்களின் அடிப்படையில் மீண்டும் தொடர்ந்து உரையாட இதிலுள்ள பயனுள்ள தகவலை சுருக்கமாகக் கலந்துரையாடலாம். உதாரணமாக, முதல் சந்திப்பின்போது 3-4 பக்கங்களில் உள்ளவற்றை பேசியிருந்தால், மறுசந்திப்பின்போது 5-ம் பக்கத்தில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ள, “கடவுளுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்கிறதா?” என்ற பகுதியைப் பயன்படுத்தலாம். அதை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் கலந்தாலோசியுங்கள். 6-8, 17-18 போன்ற பக்கங்களில் சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ள பகுதிகளை அல்லது சபை பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு பகுதிகளை மறுபார்வை செய்யுங்கள். சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றைப் பயன்படுத்தி மறுசந்திப்பு செய்வதை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். அதில் கொடுக்கப்பட்டுள்ள வசனங்களில் ஓரிரு வசனங்களை வாசித்து, கலந்தாலோசிக்க வேண்டும். சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ள மற்றொரு பகுதியைக் காட்டி அடுத்த முறை வரும்போது அதைக் கலந்தாலோசிப்பதாகச் சொல்லி பிரஸ்தாபி முடிக்கிறார்.
20 நிமி: “நடைமுறையான குடும்ப அட்டவணை போடுங்கள்.” இரண்டு நிமிடத்திற்கும் குறைவான அறிமுகத்துக்குப் பிறகு ஓர் அட்டவணையை எழுதி வைப்பது எவ்வளவு பயனுள்ளது என்பதை வலியுறுத்துங்கள், 6-ம் பக்கத்திலுள்ள அட்டவணையை எப்படிப் பூர்த்தி செய்வது என்பதைச் சொல்லுங்கள். பின்னர், “குடும்ப அட்டவணை—சபை கூட்டங்கள்” என்ற கட்டுரையைக் கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள். சபை கூட்ட நேரங்களை மற்ற காரியங்கள் எடுத்துக்கொள்ளாதபடி எப்படிப் பார்த்துக்கொள்கிறார்கள் என்பதைச் சபையாரிடம் கேளுங்கள். வரவிருக்கும் வாரங்களில் குடும்ப அட்டவணையிலுள்ள கூடுதல் அம்சங்கள் கலந்தாலோசிக்கப்படும்.
பாட்டு 176, முடிவு ஜெபம்.
மே 16-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: “குடும்ப அட்டவணை—குடும்பமாக வெளி ஊழியத்திற்கு.”a தவறாமல் குடும்பமாக ஊழியத்தில் கலந்துகொள்வதால் கிடைக்கும் பலன்களைப் பற்றிச் சபையாரைச் சொல்ல சொல்லுங்கள்.
20 நிமி: புதிய சிற்றேட்டைப் பெற்றுக்கொண்டவர்களிடம் பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல். ஊழியக் கண்காணியின் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும். முந்தைய ஊழியக் கூட்டத்தில் இடம்பெற்ற மறுசந்திப்பு செய்வது போன்ற நடிப்பை சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள்; முக்கியமாக, சிறப்பித்துக் காட்டப்பட்டுள்ள இன்னொரு பகுதியைக் குறித்து அந்த நடிப்பின் முடிவில் சொல்லப்பட்டதைக் குறிப்பிடுங்கள். (முடிந்தால்) அதே பிரஸ்தாபிகள் அந்தப் பகுதியைப் பயன்படுத்தி அடுத்த மறுசந்திப்புக்கு ஏற்பாடு செய்வதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். பின்னர், பிரஸ்தாபி அந்தச் சிற்றேட்டின் கடைசி அட்டையைக் காட்டி பைபிள் படிப்பு ஏற்பாட்டை சொல்கிறார், அடுத்த முறை வரும்போது, தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் பாடம் 1-ஐப் படிப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்கிறார். விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டைப் பெற்றுக்கொண்டவர்களுக்கு பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் கவனத்தை ஒருமுகப்படுத்தும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
பாட்டு 58, முடிவு ஜெபம்.
மே 23-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் பெற்றுக்கொண்ட நன்கொடைக்கு சொஸைட்டி அனுப்பிய நன்றிக் கடிதத்தையும் வாசியுங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி, ஜூன் 1 காவற்கோபுரத்தையும் ஜூன் 8 விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம்.
18 நிமி: “யெகோவாவின் நாள் சமீபித்திருக்கிறது.”b இந்தப் பகுதியைத் தயாரிக்கும்போது, தானியேல் தீர்க்கதரிசனம் புத்தகத்தில் 59-ம் பக்கத்தில் 28-வது பாராவைப் பாருங்கள்.
15 நிமி: “குடும்ப அட்டவணை—குடும்பப் படிப்பு.”c குடும்பப் படிப்புக்கு எப்படி அட்டவணை போட்டிருக்கிறார்கள் என்றும் அதைத் தவறாமல் நடத்துவதற்கு என்ன முயற்சி எடுக்கிறார்கள் என்றும் சொல்வதற்கு ஓரிருவரை முன்கூட்டியே ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 152, முடிவு ஜெபம்.
மே 30-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். மே மாத ஊழிய அறிக்கையை சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். ஜூன் மாதத்திற்கான பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள். (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) ஜனவரி 2005 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் ஆலோசனையாகக் கொடுக்கப்பட்டுள்ள ஓரிரு பிரசங்கங்களைப் பிரசுர அளிப்புக்கு எப்படிப் பயன்படுத்தலாம் என்பதை நடித்துக் காட்டுங்கள். பயனுள்ள பிற பிரசங்கங்களையும் பயன்படுத்தலாம்.
20 நிமி: “குடும்ப அட்டவணை—தினவசனம்.”d தினவசனத்தைக் குடும்பமாகக் கலந்தாலோசிப்பதிலிருந்து அவர்கள் எப்படிப் பயனடைந்தார்கள் என்பதையும் எப்படிப்பட்ட அட்டவணை அதற்கு நடைமுறையாக இருந்தது என்பதையும் சபையாரைச் சொல்ல சொல்லுங்கள்.
15 நிமி: “முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—பகுதி 9.”e 2-வது பாராவைக் கலந்தாலோசிக்கும்போது டிசம்பர் 2004 நம் ராஜ்ய ஊழியத்தில், 8-ம் பக்கத்திலுள்ள ஓரிரு குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டுங்கள். பைபிள் படிப்பு நடத்துவது போன்ற சுருக்கமான நடிப்பையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தேவைப்படுத்துகிறார் சிற்றேட்டில் 2-வது பாடத்தை முடித்த பிறகு படிப்பு நடத்துபவர் அந்த மாணாக்கரிடம், “கடவுள் பெயர் என்ன என்பதை உங்கள் நண்பருக்கு எப்படி விளக்கிக் காட்டுவீர்கள்?” என கேட்கிறார். சங்கீதம் 83:17-லிருந்து அதை எப்படிக் காட்டுவாரென அந்த மாணாக்கர் சொன்னதும் படிப்பு நடத்துபவர் அவரைப் பாராட்டுகிறார்.
பாட்டு 134, முடிவு ஜெபம்.
ஜூன் 6-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “பத்திரிகை மார்க்கத்தில் சந்திப்பவரின் ஆர்வத்தை வளருங்கள்.”f 3-வது பாராவைக் கலந்தாலோசிக்கும்போது நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் 227-32 பக்கங்களிடம் கவனத்தைத் திருப்புங்கள். அதிலுள்ள தகவலைப் பயன்படுத்தி, கடவுளுடைய ராஜ்யம் என்னவெல்லாம் செய்யப் போகிறது என்பதை ஒரேவொரு வசனத்தைக் காட்டி கலந்தாலோசிக்கும் அநேக மறுசந்திப்புகளுக்காகத் தயாரிக்கலாம். தன் பத்திரிகை மார்க்கத்தில் உள்ளவரிடம் பிரஸ்தாபி ஒரேவொரு வசனத்தைக் காட்டி எப்படிக் கலந்தாலோசிக்கலாம் என்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். வசனத்தைச் சுருக்கமாகக் கலந்தாலோசித்து, அந்த வசனத்தின் பொருத்தத்தை பிரஸ்தாபி விளக்க வேண்டும்; இவ்வாறு அந்த வீட்டுக்காரர் சரிவர புரிந்துகொள்வதற்கும், அவருடைய வாழ்க்கைக்கு அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காண்பதற்கும் உதவுகிறார்.
பாட்டு 107, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
f ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.