மார்ச் 22-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மார்ச் 22-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv பிற்சேர்க்கை பக். 239-ல் உள்ள தலைப்பு முதல் பக். 242 வரை.
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 10-13
எண் 1: 1 சாமுவேல் 10:17-27
எண் 2: கிறிஸ்மஸ் பைபிளில் ஆதாரங்கொண்ட கொண்டாட்டமா? (rs பக். 176 பாரா. 1-4)
எண் 3: பரிணாமம் கிறிஸ்தவத்துடன் ஏன் ஒத்துப்போவதில்லை
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். நினைவுநாள் சம்பந்தப்பட்ட அறிவிப்புகள் ஏதாவது இருந்தால், அவற்றையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
15 நிமி: ஏப்ரல்-ஜூன் காவற்கோபுர சிறப்பிதழை அளிப்பதற்குத் தயாரியுங்கள். இந்த இதழிலுள்ள முக்கிய விஷயங்களைக் கலந்தாலோசியுங்கள். என்ன கேள்வியை, எந்த வசனத்தைப் பயன்படுத்தி இதை அளிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் எனச் சபையாரைக் கேளுங்கள். இரண்டு நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: நினைவுநாள் அனுசரிப்பில் கலந்துகொண்ட ஆர்வமுள்ளவர்களுக்கு உதவுங்கள். நினைவு அனுசரிப்புக்கு வந்திருந்த பைபிள் மாணாக்கர்களுக்கும், செயலற்ற பிரஸ்தாபிகளுக்கும், புதியவர்களுக்கும் பிரஸ்தாபிகள் எப்படி உதவலாம் என்பதை நினைப்பூட்டும் விதத்தில் ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. (மார்ச் 2008 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 8-ஐக் காண்க.) சுருக்கமான நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். நினைவுநாள் பைபிள் வாசிப்புப் பகுதியை வாசிக்கும்படி எல்லாருக்கும் நினைப்பூட்டுங்கள்.