மார்ச் 29-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மார்ச் 29-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 5, பாரா. 1-6, பக். 60, 61-ல் உள்ள பெட்டிகள்
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 சாமுவேல் 14-15
எண் 1: 1 சாமுவேல் 14:24-35
எண் 2: யெகோவாவிடம் நெருங்கிச் செல்வதற்கான வழிகள் (யாக். 4:8)
எண் 3: நட்சத்திரத்தால் இயேசுவிடம் வழிநடத்தப்பட்ட ஞானிகள், அல்லது சாஸ்திரிகள் யார்? (rs பக். 177 பாரா. 1-3)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: பைபிள் படிப்புகளை ஆரம்பித்தல். இந்த ஊழியம் அடுத்த முறை செய்யப்படும் தேதியைக் குறிப்பிடுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பித்து, தொடர்ந்து நடத்தி வந்திருக்கிற ஒரு பிரஸ்தாபியைப் பேட்டி காணுங்கள். ஊழியத்தில் என்னென்ன அறிமுகக் குறிப்புகளைப் பயன்படுத்தி நல்ல பலன் கண்டிருக்கிறார்? மறுசந்திப்புகளைச் செய்யும்போது என்னென்ன விஷயங்களை அவர் மனதில் வைக்கிறார்? அவர் பயன்படுத்துகிற ஓர் அறிமுகக் குறிப்பை நடித்துக் காட்டச் சொல்லுங்கள்.
10 நிமி: வரலாறு காணாத தேடுதல் வேட்டையில் ஈடுபடுங்கள்! ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில், பக்கம் 95–ல், “பாத்திரவான்களைத் தேடிக் கண்டுபிடித்தல்” என்ற உபதலைப்பிலுள்ள விஷயங்களின் அடிப்படையில் பேச்சு.
10 நிமி: “ஊழியத்தில் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருங்கள்.” கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.