மே 30-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 33; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 3 பாரா. 1-9 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: சங்கீதங்கள் 26-33 (10 நிமி.)
எண் 1: சங்கீதம் 31:9-24 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: உண்மையான மனத்தாழ்மை காட்டிய பைபிள் உதாரணங்கள் (5 நிமி.)
எண் 3: இரட்சிக்கப்படுவதற்கு யூதர்கள் இயேசுமீது விசுவாசம் வைக்க வேண்டுமா?—rs பக். 222 பாரா 4-பக். 223 பாரா 1 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: ஆராய்ச்சி செய்வது எப்படி. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 33-38-ல் உள்ள தகவல்களின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்; அதில் ஒரு பிரஸ்தாபி தனக்குத்தானே பேசிக்கொண்டு, ஊழியத்தில் ஒருவர் கேட்ட கேள்விக்கு ஆராய்ச்சி சாதனங்களைப் பயன்படுத்திப் பதில் கண்டுபிடிக்கிறார்.
10 நிமி: முன்னேறுகிற பைபிள் படிப்புகளை நடத்துதல்—படிப்பின்போது ஜெபிப்பது. மார்ச் 2005 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 8-ல் உள்ள கட்டுரையின் அடிப்படையில் கொடுக்கப்படும் பேச்சு. இந்தப் பகுதியை தயாரிக்கும்போது, ஜூலை 15, 2002 காவற்கோபுரத்தில் பக்கம் 27, பாரா. 5-6-ல் உள்ள குறிப்புகளை எடுத்துப்பாருங்கள். இயேசு கிறிஸ்துவின் மூலமாக யெகோவா தேவனிடம் ஜெபம் செய்வதன் முக்கியத்துவத்தை தன்னுடன் படிக்கிற பைபிள் மாணவருக்கு ஒரு பிரஸ்தாபி விளக்குவது போன்ற ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 37; ஜெபம்