மே 28-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
மே 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 44; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 2 பாரா. 8-15 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எரேமியா 49-50 (10 நிமி.)
எண் 1: எரேமியா 49:28-39 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: யெகோவா என்ற பெயர் ‘பலத்த கோட்டையாய்’ இருப்பது எப்படி?—நீதி. 18:10, NW (5 நிமி.)
எண் 3: மரியாள் தன் மாம்ச உடலுடன் பரலோகத்துக்கு ஏறிச் சென்றாளா?—நியாயங்காட்டி பக். 258 பாரா. 1-2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். ஜூன் மாத பிரசுர அளிப்பைக் குறிப்பிடுங்கள், அதை அளிப்பதுபோல் ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
25 நிமி: “உங்கள் பிள்ளைகள் தயாரா?” கேள்வி-பதில். பள்ளியில் எதிர்ப்படும் சில சவால்களைச் சொல்லும்படி பெற்றோரையும் பிள்ளைகளையும் கேளுங்கள். பாரா 3-ஐ கலந்தாலோசித்த பிறகு ஒரு அப்பா வகுப்பு ஆசிரியராகவும் மகன் மாணவனாகவும் நடித்து ஒத்திகை பார்க்கிறார்கள். அப்போது, வகுப்பில் கொடுக்கப்பட்ட ஆட்சேபணைக்குரிய நியமிப்பை தான் ஏன் ஏற்றுக்கொள்ள முடியாது அல்லது ஆட்சேபணைக்குரிய நிகழ்ச்சியில் ஏன் கலந்துகொள்ள முடியாது என்று மாணவன் ஆசிரியரிடம் விளக்குகிறான்.
பாட்டு 91; ஜெபம்