நவம்பர் 16-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
நவம்பர் 16-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 49; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 81 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 1 நாளாகமம் 26-29 (8 நிமி.)
எண் 1: 1 நாளாகமம் 29:20-30 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: உலக அழிவு என்றால் என்ன?—பேச்சுப் பொருள்கள் 11அ (5 நிமி.)
எண் 3:எலிசபெத்—தலைப்பு: கடவுளுக்கு பயந்து, உண்மையாக இருங்கள்—லூக். 1:5-7, 11-13, 24, 39-43 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: “நான் நட்டேன், அப்பொல்லோ நீர் பாய்ச்சினார்; ஆனால், கடவுள்தான் வளரச் செய்தார்.”—1 கொ. 3:6.
10 நிமி: ஆர்வம் காட்டுபவர்களுக்கு தொடர்ந்து ‘நீர் பாய்ச்சுங்கள்.’ (1 கொ. 3:6-8) ஒரு ஒழுங்கான பயனியரையும் பிரஸ்தாபியையும் பேட்டி எடுங்கள். ஆர்வம் காட்டியவர்களை எப்போது போய் பார்க்கிறார்கள்? போவதற்கு முன்பு எப்படி தயாரிக்கிறார்கள்? வீட்டில் போய் பார்க்கும்போது அவர்கள் இல்லை என்றால் அவர்களை சந்திப்பதற்கு என்ன செய்கிறார்கள்? நல்ல அனுபவம் ஏதாவது இருந்தால் அதைப் பற்றி கேளுங்கள்.
20 நிமி: “ஆடியோ பதிவுகளை நன்றாக பயன்படுத்துங்கள்.” கேள்வி-பதில். ஆடியோ பதிவுகளை jw.org வெப்சைட்டிலிருந்து எப்படி டவுன்லோடு செய்யலாம் என்று சொல்லுங்கள். ஒரு ஆடியோ பதிவைப் போட்டுக் காட்டுங்கள்.
பாட்டு 91; ஜெபம்