ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை கொடுங்கள்
ஏன் முக்கியம்: பைபிள் படிப்பு நடத்துவதற்கு பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைத்தான் முக்கியமாக பயன்படுத்துகிறோம். அதனால், இந்தப் புத்தகத்தை ஊழியத்தில் நன்றாகப் பேசி கொடுப்பதற்கு நம் திறமைகளை மெருகூட்ட வேண்டும். (நீதி. 22:29) நிறைய விதங்களில் இந்தப் புத்தகத்தை ஊழியத்தில் கொடுக்கலாம். நமக்கு எது பிரயோஜனமாக இருக்கிறதோ அந்த விதத்தைப் பயன்படுத்தலாம். நிறைய சமயங்களில் நாம் நற்செய்தி புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பு நடத்துகிறோம். அதற்குப் பின்பு, பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து படிப்பை ஆரம்பிக்கிறோம். சிலசமயங்களில், ஒருவர் ரொம்ப ஆர்வம் காட்டினால் நாம் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைக் கொடுக்கலாம்.
இந்த மாதம் செய்து பாருங்கள்:
குடும்ப வழிபாட்டில் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை ஊழியத்தில் கொடுப்பது போல் நடித்துப் பாருங்கள்.
நீங்கள் என்ன பேசப் போகிறீர்கள் என்பதை உங்களோடு ஊழியம் செய்கிற நபரிடம் சொல்லுங்கள். (நீதி. 27:17) நீங்கள் தயாரித்திருப்பதில் ஏதாவது மாற்றம் செய்யவேண்டி இருந்தால் தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள்.