ஆடியோ பதிவுகளை நன்றாக பயன்படுத்துங்கள்
1. வெப்சைட்டில் வாசிப்பது மட்டும் இல்லாமல் வேறு என்னவும் செய்ய முடியும்?
1 பைபிளில் இருக்கும் அருமையான விஷயங்களை வாசிப்பதற்கு jw.org வெப்சைட்டை நிறையப் பேர் பயன்படுத்துகிறார்கள். (பிர. 12:10) வெப்சைட்டில் நிறைய விஷயங்களை கேட்பதற்கு ஆடியோ பதிவுகளும் இருக்கின்றன. அதை நீங்கள் எப்படி நன்றாக பயன்படுத்தலாம்?
2. தனியாகவோ குடும்பமாகவோ படிக்கும்போது ஆடியோ பதிவுகளை எப்படிப் பயன்படுத்தலாம்?
2 தனியாகவோ குடும்பமாகவோ படிக்கும்போது: பயணம் செய்யும்போதும் மற்ற வேலைகளை செய்யும்போதும் பைபிள் மற்றும் நம்முடைய புத்தகங்களின் ஆடியோ பதிவுகளைக் கேட்கலாம். இப்படி செய்தால், ‘பொன்னான நேரத்தை நன்றாகப் பயன்படுத்த’ முடியும். (எபே. 5:15, 16) குடும்ப வழிபாட்டில் எப்போதும்போல் நாமாகவே படிப்பதற்கு பதிலாக ஆடியோ பதிவுகளைக் கேட்கலாம். அந்த பதிவோடு சேர்ந்து நம் கையிலிருக்கும் புத்தகத்திலும் அதைக் கவனிக்கலாம். நாம் தனியாகப் படிக்கும்போதும் அதைப் பயன்படுத்தலாம். முக்கியமாக, நாம் நன்றாக வாசிக்க பழகுவதற்கும் ஒரு புதிய மொழியைக் கற்றுக்கொள்வதற்கும் ஆடியோ பதிவுகளைப் பயன்படுத்தலாம்.
3. ஊழியத்தில் யாருக்கெல்லாம் ஆடியோ பதிவுகளைப் போட்டுக் காட்டலாம்?
3 ஊழியம் செய்யும்போது: புத்தகங்களைப் படிக்க நேரம் இல்லை என்று சொல்பவருக்கு ஆடியோ பதிவைப் போட்டுக் காட்டலாம். அல்லது, வேறு மொழி பேசும் ஒருவருக்கு அவருடைய மொழியிலேயே ஆடியோ பதிவைப் போட்டுக் காட்டலாம். அவருடைய ‘சொந்த மொழியில்’ பைபிள் விஷயங்களைக் கேட்கும்போது அவருக்கு சந்தோஷமாக இருக்கும். (அப். 2:6-8) சில ஊர்களில், ‘கேட்பது’ அவர்களுடைய கலாச்சாரத்தில் ஒரு முக்கியமான பாகமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, மாங் என்ற இனத்தை சேர்ந்த மக்கள் அவர்களுடைய முன்னோர்களைப் பற்றிய விஷயங்களை அவர்களுடைய பிள்ளைகளுக்கு சொல்வார்கள். கேட்ட விஷயங்களை அந்த பிள்ளைகள் அவர்களுடைய பிள்ளைகளுக்கு சொல்வார்கள். ஆப்பிரிக்காவை சேர்ந்த நிறைய மக்கள் கதை கேட்டு கற்றுக்கொள்ள விரும்புகிறார்கள்.
4. நாம் என்ன கேள்விகளைக் கேட்டுக்கொள்ளலாம்?
4 ஊழியத்தில் சந்திக்கும் ஒருவருக்கு அவருடைய மொழியில் ஆடியோ பதிவை உங்களால் போட்டுக் காட்ட முடியுமா? உங்களுக்கு தெரிந்த ஒருவருக்கு ஈ-மெயில் மூலமாக ஆடியோ பதிவுகளை அனுப்ப முடியுமா? ஆர்வமாக கேட்ட ஒருவரை மறுபடியும் போய் பார்க்கும்போது ஒரு புத்தகத்தின் ஆடியோ பதிவை டவுன்லோடு செய்து சிடி-யில் போட்டுக் கொடுக்க முடியுமா? ஆடியோ பதிவாக கொடுக்கும் புத்தகம், சிற்றேடு, பத்திரிகை, துண்டுப்பிரதி போன்றவற்றை ஊழிய அறிக்கையில் சேர்த்துக்கொள்ளலாம். ஆடியோ பதிவுகள் நம் நன்மைக்காகவும் பைபிள் விஷயங்களை மற்றவர்களுடைய மனதில் விதைப்பதற்காகவும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.—1 கொ. 3:6.