உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp20 எண் 3 பக். 13
  • உதவிக்கரம் நீட்டுபவர்களுக்கு ஆசீர்வாதம்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உதவிக்கரம் நீட்டுபவர்களுக்கு ஆசீர்வாதம்!
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இறைவேதம் என்ன சொல்கிறது?
  • கஷ்டப்படுகிறவர்களுக்கு எப்படி உதவலாம்?
  • யெகோவாவின் உதவியை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2004
  • இனச் சகிப்பின்மைக்கு என்னதான் தீர்வு?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • நீங்கள் ‘தேவனிடத்தில் ஐசுவரியவான்களாய்’ இருக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2007
  • செம்மறியாடுகளுக்கும் வெள்ளாடுகளுக்கும் என்ன எதிர்காலம் உள்ளது?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1995
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2020
wp20 எண் 3 பக். 13
ஒருவர் வரைபடத்தைப் பயன்படுத்தி இன்னொருவருக்கு வழி காட்டுகிறார்.

வயது, இனம், மதம் என்று எந்த வித்தியாசமும் பார்க்காமல் நீங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வீர்களா?

உதவிக்கரம் நீட்டுபவர்களுக்கு ஆசீர்வாதம்!

இன்று நிறைய பேருக்கு சாப்பாடு இல்லை, குடியிருப்பதற்கு வீடு இல்லை. இன்னும் சிலருக்கு எதிர்காலத்தைப் பற்றிய கவலை இருக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு உதவ நாம் முயற்சி செய்யும்போது இறைவனுடைய ஆசியும் அருளும் நமக்குக் கிடைக்கும். எப்படிச் சொல்கிறோம்?

இறைவேதம் என்ன சொல்கிறது?

“ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்.”—நீதிமொழிகள் 19:17.

கஷ்டப்படுகிறவர்களுக்கு எப்படி உதவலாம்?

இயேசு சொன்ன ஒரு கதையில், கொள்ளைக்காரர்கள் ஒரு மனுஷனை அடித்துப் போட்டார்கள். அவன் சாகிற நிலையில் கிடந்தான். (லூக்கா 10:29-37) அப்போது, அந்த வழியாகப் போன ஒருவர் அவனுக்குத் தேவையான உதவிகளைச் செய்து அவனை நன்றாகக் கவனித்துக்கொண்டார். இத்தனைக்கும் அவர் வேறொரு இனத்தைச் சேர்ந்தவர்.

இரக்கமுள்ள அந்த நபர், அடிபட்ட நபருக்கு வெறுமனே முதலுதவியோ பண உதவியோ மட்டும் செய்யவில்லை. அவனுக்கு ஆறுதலாக இருந்து அந்த கஷ்டத்திலிருந்து வெளிவர உதவி செய்தார்.

இந்தக் கதையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்ய முடியுமோ அப்படியெல்லாம் நாம் உதவி செய்ய வேண்டும். (நீதிமொழிகள் 14:31) சீக்கிரத்தில் வறுமைக்கும் வேதனைக்கும் இறைவன் முடிவு கொண்டுவரப் போவதாக இறைவேதம் சொல்கிறது. ஆனால், இதையெல்லாம் இறைவன் எப்போது செய்வார், எப்படிச் செய்வார் என்ற கேள்வி நம் மனதில் வரலாம். உங்களுடைய அன்பான படைப்பாளர் உங்களுக்கு என்ன ஆசீர்வாதங்களைக் கொடுக்கப் போகிறார் என்று அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

“இறைவன் என்னை கைவிட்டதே இல்ல”!

காம்பியா நாட்டிலிருந்து வேறொரு நாட்டிற்கு குடிமாறிய ஒருவர் இப்படிச் சொல்கிறார்:

“ஐரோப்பாக்கு நான் வந்தப்போ எனக்கு வேலை இல்ல. கையில காசு இல்ல. இருக்க வீடு இல்ல. ஒண்ணுமே இல்ல. ஆனா, இறைவேதத்துல இருந்து கத்துக்கிட்ட விஷயங்கள் எனக்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. கடினமா உழைக்கிறதுக்கு சொல்லி கொடுத்துச்சு., மத்தவங்ககிட்ட உதவி கேக்குறதுக்கு பதிலா அவங்களுக்கு உதவி செய்ய தூண்டுச்சு. இறைவன் என்னை கைவிட்டதே இல்ல. எப்பவுமே எனக்கு உதவி செஞ்சிருக்காரு.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்