பைபிளில் இருக்கும் புதையல்கள் | புலம்பல் 1-5
பொறுமையோடு காத்திருப்பது சகித்திருக்க உதவும்
தாங்க முடியாத அளவுக்கு கஷ்டங்கள் வந்தாலும் நம்பிக்கையோடு சகித்திருக்க எரேமியாவுக்கு எது உதவியது?
யெகோவா மனம் திருந்தியவர்களுக்கு ‘இறங்கி வந்து உதவி செய்வார்’ என்றும் மோசமான நிலைமையிலிருந்து அவர்களை விடுவிப்பார் என்றும் எரேமியா நம்பினார்
“சிறு வயதிலேயே பாரமான சுமைகளை” சுமக்க எரேமியா பழகிக்கொண்டார். விசுவாசத்துக்கு வரும் சோதனைகளைச் சகிக்க இளம் வயதிலேயே கற்றுக்கொண்டால் வளர வளர எப்படிப்பட்ட சோதனைகள் வந்தாலும் அதைச் சுலபமாக சமாளிப்போம்.