உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb20 மார்ச் பக். 8
  • நான் யாரை அழைக்கப்போகிறேன்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நான் யாரை அழைக்கப்போகிறேன்?
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
  • இதே தகவல்
  • நினைவு நாள் நிகழ்ச்சிக்கு நீங்கள் தயாரா?
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • மார்ச் 17—நினைவுநாள் அழைப்பிதழ் வினியோகிப்பு
    நம் ராஜ்ய ஊழியம்—2012
  • நினைவுநாள் அழைப்பிதழ்—உலகெங்கும் விநியோகிப்பு!
    நம் ராஜ்ய ஊழியம்—2010
  • ஆர்வங்காட்டியிருக்கிற அனைவருக்கும் உதவுதல்
    நம் ராஜ்ய ஊழியம்—1993
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2020
mwb20 மார்ச் பக். 8
ஒரு சகோதரரும் சாட்சியாக இல்லாத அவருடைய சொந்தக்காரரும் சமையல் அறையில் இருக்கும் ஒரு மேஜைக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுடைய மனைவிகள் பேசிக்கொண்டே சமைத்துக்கொண்டிருக்கிறார்கள். நம் சகோதரர், தன்னுடைய சொந்தக்காரருக்கு நினைவுநாள் அழைப்பிதழைக் கொடுக்கிறார்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

நான் யாரை அழைக்கப்போகிறேன்?

நினைவுநாள் நிகழ்ச்சிக்கு நம்முடைய பகுதியில் இருக்கும் மக்களை அழைப்பதற்காக ஒவ்வொரு வருஷமும் நாம் விசேஷ முயற்சி எடுக்கிறோம். இப்படி, நாம் அழைக்கும் பெரும்பாலானவர்கள் நமக்கு அறிமுகம் இல்லாதவர்கள். ஆனால், நமக்கு அறிமுகமானவர்களையும் நாம் அழைக்க வேண்டும். தங்களுக்குத் தெரிந்தவர்கள் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அழைக்கும்போது, மக்கள் பெரும்பாலும் அதில் கலந்துகொள்வார்கள். (yb08 பக். 12 பாரா 1; பக். 14 பாரா 2) நீங்கள் யாரையெல்லாம் அழைக்கலாம்?

  • சொந்தக்காரர்கள்

  • கூடவேலை செய்பவர்கள் அல்லது கூடப்படிப்பவர்கள்

  • அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள்

  • மறுசந்திப்புகள், முன்பு உங்களோடு பைபிள் படித்தவர்கள், இப்போது படித்து வருபவர்கள்

செயலற்ற பிரஸ்தாபிகளை மூப்பர்கள் அழைப்பார்கள். உங்களுக்குத் தெரிந்த ஒருவரின் வீடு உங்கள் பகுதியில் இல்லையென்றால் என்ன செய்யலாம்? அவர் வாழும் பகுதியில் நினைவுநாள் நிகழ்ச்சி எங்கே நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, jw.org வெப்சைட்டின் முதல் பக்கத்துக்குப் போங்கள். பிறகு, எங்களைப் பற்றி என்ற பகுதிக்குள் போய், “இயேசுவின் மரண நினைவுநாள் நிகழ்ச்சி” என்ற லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். அப்போது, நிகழ்ச்சி நடக்கிற நேரத்தையும் இடத்தையும் கண்டுபிடிக்கலாம். இந்த வருஷ நினைவுநாள் நிகழ்ச்சிக்காகத் தயாராகும்போது யாரையெல்லாம் அழைக்கலாம் என்று யோசித்துப்பாருங்கள். பிறகு, அவர்களைக் கூப்பிடுங்கள்.

படங்களின் தொகுப்பு: 1. நம் சகோதரர் இடைவேளையின்போது ஒருவரிடம் சாட்சி கொடுக்கிறார். 2. ஹோட்டலில் வேலை செய்யும் ஒருவரிடம் நம் சகோதரர் வீடியோவைக் காட்டுகிறார்.
    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்