வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஏப்ரல் 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 31
“யாக்கோபும் லாபானும் சமாதான ஒப்பந்தம் செய்கிறார்கள்”
it-1-E பக். 883 பாரா 1
கலயெத்
யாக்கோபும் லாபானும் தங்களுக்குள் இருந்த பிரச்சினைகளைச் சரிசெய்துகொண்டு சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். இதை அடையாளப்படுத்துகிற விதத்தில் யாக்கோபு ஒரு கல்லை எடுத்து நினைவுக்கல்லாக நாட்டினார். பிறகு, தன் சொந்தக்காரர்களிடம் கற்களைக் குவிக்க சொன்னார். அந்தக் கற்குவியல், ஒரு மேஜை போன்று இருந்திருக்கலாம். அதன்மீதுதான் ஒப்பந்த உணவை வைத்துச் சாப்பிட்டார்கள். அதன்பிறகு, லாபான் அந்த இடத்துக்கு “ஜெகர்-சகதூதா” என்கிற அரமேயிக் (சீரிய) பெயரை வைத்தார். ஆனால், யாக்கோபு அதற்கு இணையான, “கலயெத்” என்கிற எபிரெயப் பெயரை வைத்தார். லாபான், “இன்று எனக்கும் உனக்கும் இடையில் சாட்சியாக [எபி., யெத்] இருப்பது இந்தக் கற்குவியல்தான் [எபி., கல்]” என்று சொன்னார். (ஆதி 31:44-48) அந்தக் கற்குவியல் (மற்றும் நினைவுக்கல்), அந்த வழியாகப் போகிற எல்லாருக்கும் ஒரு சாட்சியாக இருந்தது. வசனம் 49-ல் சொல்லியிருக்கிறபடி, அது ‘காவற்கோபுரமாக [எபி., மிட்ஸ்பா]’ இருந்தது. யாக்கோபும் லாபானும், அவர்களும் அவர்களுடைய குடும்பமும் சமாதானமாக இருப்போம் என்று கொடுத்த வாக்குறுதிக்கு இது சாட்சியாக இருந்தது. (ஆதி 31:50-53) இதற்கு பிறகு வாழ்ந்தவர்கள்கூட இதே காரணத்துக்காக கற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இது அவர்களுக்கிடையே ஒரு மவுன சாட்சியாக இருந்தது.—யோசு 4:4-7; 24:25-27.
it-2-E பக். 1172
காவற்கோபுரம்
யாக்கோபு கற்களைக் குவித்து வைத்து, அதற்கு “கலயெத்” (அர்த்தம் “சாட்சிக் குவியல்”) என்றும் “காவற்கோபுரம்” என்றும் பெயர் வைத்தார். அதன் பிறகு லாபான், “நாம் ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்துபோன பின்பு என்னையும் உன்னையும் யெகோவா கண்காணிக்கட்டும்” என்று சொன்னார். (ஆதி 31:45-49) யாக்கோபும் லாபானும் ஒப்பந்தம் செய்தபடி, சமாதானமாக இருக்கிறார்களா இல்லையா என்று யெகோவா பார்ப்பதை இந்தக் கற்குவியல் ஞாபகப்படுத்தியது.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 1087-1088
குலதெய்வச் சிலை
மெசொப்பொத்தாமியாவிலும் அதற்குப் பக்கத்திலுள்ள இடங்களிலும் செய்யப்பட்ட புதைபொருள் ஆராய்ச்சியிலிருந்து, குலதெய்வச் சிலை யாரிடம் இருக்கிறதோ அவர்களுக்குத்தான் பரம்பரைச் சொத்துக் கொடுக்கப்பட்டது என்பது தெரியவருகிறது. சிலசமயங்களில், ஒரு மருமகனிடம் இறந்துபோன தன் மாமனாருடைய குலதெய்வச் சிலைகள் இருந்ததென்றால், அவருடைய சொத்துபத்துகள் தனக்குக் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் நீதிமன்றத்துக்குப் போகலாம் என்று நூஸியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு பலகையில் இருந்து தெரிந்துகொள்கிறோம். (ஏன்ஷியன்ட் நியர் ஈஸ்டர்ன் டெக்ஸ்ட்ஸ், ஜெ. பிரிட்சர்டு என்பவரால் பதிப்பிக்கப்பட்டது, 1974, பக். 219, 220 மற்றும் அடிக்குறிப்பு 51) ஒருவேளை, ராகேல் இதை மனதில் வைத்துதான் தன்னுடைய அப்பாவின் குலதெய்வச் சிலைகளை எடுத்திருக்கலாம். தன்னுடைய கணவன் யாக்கோபை தன் அப்பா ஏமாற்றியதால் அப்படிச் செய்ததாக அவள் நியாயப்படுத்தியிருக்கலாம். (ஆதி 31:14-16-ஐ ஒப்பிடுங்கள்.) குலதெய்வச் சிலைகளுக்கும் சொத்து உரிமைக்கும் நெருங்கிய சம்பந்தம் இருந்ததனால்தான் லாபான்கூட அதைக் கண்டுபிடிப்பதற்காக ரொம்ப கடினமாக முயற்சி செய்தார். அதனால், தன்னுடைய சொந்தக்காரர்களைக் கூட்டிக்கொண்டு யாக்கோபைப் பிடிப்பதற்காக ஏழு நாள் பயணம் செய்கிறார். (ஆதி 31:19-30) ராகேல் செய்தது யாக்கோபுக்குத் தெரியவே தெரியாது. (ஆதி 31:32) யாக்கோபு அந்தக் குலதெய்வச் சிலைகளைப் பயன்படுத்தி, லாபானுடைய மகன்களிடமிருந்து சொத்துக்களைப் பறிக்க முயற்சி செய்ததாக எந்தப் பதிவும் இல்லை. அவருக்கும் அந்தச் சிலைகளுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் கொடுத்த பொய்த் தெய்வச் சிலைகளையெல்லாம் சீகேமுக்குப் பக்கத்தில் இருக்கிற ஒரு மரத்துக்கு அடியில் யாக்கோபு புதைத்து வைத்தார். அதில் இந்தக் குலதெய்வச் சிலைகளும் இருந்திருக்கலாம்.—ஆதி 35:1-4.
யெகோவா நம் புகலிடம்
8 யாக்கோபு ஆரானை அடைந்தவுடன், அவருடைய மாமா லாபான் அவரை அன்போடு வரவேற்றார்; பின்பு, லேயாளையும் ராகேலையும் அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார். ஆனால் பிற்பாடு, யாக்கோபைச் சுரண்டிப்பிழைக்கப் பார்த்தார்; பத்துத் தடவை அவருடைய சம்பளத்தை மாற்றினார்! (ஆதி. 31:41, 42) இருந்தாலும், எப்போதும்போல் யெகோவா தன்னைக் கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கையுடன் யாக்கோபு இந்த அநியாயங்களைச் சகித்தார். அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை, யெகோவா அவரைக் கவனித்துக்கொண்டார். சொல்லப்போனால், கானான் தேசத்துக்குத் திரும்பிப் போகும்படி யாக்கோபிடம் கடவுள் சொன்னபோது, “திரளான ஆடுகளும், வேலைக்காரிகளும், வேலைக்காரரும், ஒட்டகங்களும், கழுதைகளும்” அவரிடம் இருந்தன. (ஆதி. 30:43) யாக்கோபு மனம் நெகிழ்ந்துபோய் கடவுளிடம் இப்படிச் சொன்னார்: “அடியேனுக்கு தேவரீர் காண்பித்த எல்லா தயவுக்கும் எல்லா சத்தியத்துக்கும் நான் எவ்வளவேனும் பாத்திரன் அல்ல, நான் கோலும் கையுமாய் இந்த யோர்தானைக் கடந்துபோனேன்; இப்பொழுது இவ்விரண்டு பரிவாரங்களையும் உடையவனானேன்.”—ஆதி. 32:10.
ஏப்ரல் 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 32-33
“ஆசீர்வாதத்துக்காகப் போராடுகிறீர்களா?”
யெகோவாவை உள்ளார்வத்தோடு தேடுகிறீர்களா?
கடின முயற்சியோடு யெகோவாவைத் தேடியவர்களைப் பற்றிய உதாரணங்கள் பைபிளில் பொதிந்துள்ளன. அவர்களில் ஒருவரே யாக்கோபு; மாம்ச உருவெடுத்து வந்த கடவுளுடைய தூதனை அவர் இறுக பற்றிக்கொண்டு விடியற்காலை மட்டும் அவரோடு கடினமாக போராடினார். இதனால் யாக்கோபுக்கு இஸ்ரவேல் (கடவுளோடு போராடியவர்) என்ற பெயர் கொடுக்கப்பட்டது. ஏனெனில் அவர் கடவுளோடு ‘போராடினார்,’ அதாவது, விடாப்பிடியாக, தீவிர முயற்சியோடு, தொடர்ந்து போராடினார். உள்ளார்வத்தோடு அவர் எடுத்த முயற்சியை அந்த தேவதூதர் ஆசீர்வதித்தார்.—ஆதியாகமம் 32:24-30.
it-2-E பக். 190
நொண்டி
நொண்டி ஆன யாக்கோபு. யாக்கோபு, சுமார் 97 வயதாக இருந்தபோது, மனித உருவில் இருந்த தேவதூதரோடு ஓர் இரவு முழுவதும் போராடினார். தன்னை ஆசீர்வதிக்கும்வரை அந்தத் தேவதூதரை அவர் போகவிடவில்லை. அந்தச் சமயத்தில் தேவதூதர் யாக்கோபுடைய இடுப்புமூட்டைத் தொட்டார். அது பிசகியது. அதனால், யாக்கோபு நொண்டி நொண்டி நடந்தார். (ஆதி 32:24-32; ஓசி 12:2-4) அந்தத் தேவதூதர், “நீ கடவுளோடும் [கடவுளுடைய தூதரோடும்] மனிதரோடும் போராடி கடைசியில் ஜெயித்துவிட்டாய்” என்று சொன்னார். ஆனாலும், யாக்கோபுக்கு இருந்த அந்தக் கால் ஊனம் உண்மையிலேயே அந்தத் தேவதூதரை அவர் தோற்கடிக்கவில்லை என்பதை அவருக்கு ஞாபகப்படுத்தியது. ஏனென்றால், கடவுளுடைய நோக்கத்தாலும் அவருடைய அனுமதி இருந்ததாலும்தான் யாக்கோபினால் தேவதூதரோடு போராட முடிந்தது. யெகோவா இதை அனுமதித்ததற்கு என்ன காரணம்? யாக்கோபு, கடவுளின் ஆசீர்வாதம் தனக்கு எவ்வளவு முக்கியம் என்று காட்டுவதற்காகத்தான்.
it-1-E பக். 1228
இஸ்ரவேல்
1. யாக்கோபுக்குச் சுமார் 97 வயதாக இருந்தபோது கடவுள் அவருக்குக் கொடுத்த பெயர்தான் இது. தன்னுடைய அண்ணன் ஏசாவைப் பார்ப்பதற்காக யாபோக் காட்டாற்று பள்ளத்தாக்கை யாக்கோபு கடந்துபோனார். அந்த ராத்திரியில்தான் ஒரு தேவதூதரோடு அவர் போராடினார். விடாமல் போராடியதால் கடவுளுடைய ஆசீர்வாதத்துக்கு அடையாளமாக அவருக்கு இஸ்ரவேல் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. அதனால், யாக்கோபு அந்த இடத்துக்கு பெனியேல் அல்லது பெனூவேல் என்று பெயர் வைத்தார். (ஆதி 32:22-31) அதற்குப் பிறகு, யாக்கோபு பெத்தேலில் இருக்கும்போது கடவுள் அவருடைய பெயர் மாற்றத்தை உறுதிசெய்தார். அன்றிலிருந்து சாகும்வரை யாக்கோபு அடிக்கடி இஸ்ரவேல் என்றுதான் அழைக்கப்பட்டார். (ஆதி 35:10, 15; 50:2; 1நா 1:34) பைபிளில் 2,500 தடவைக்கும் அதிகமாக இஸ்ரவேல் என்ற பெயர் இருக்கிறது. இருந்தாலும், அதில் நிறைய தடவை யாக்கோபுடைய சந்ததியான இஸ்ரவேல் தேசத்தைக் குறிப்பதற்காகத்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.—யாத் 5:1, 2.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
இனிய உறவுகளுக்குக் கைகொடுக்கும் இனிமையான பேச்சு
10 இனிமையாகப் பேசுவதும் நன்றாகப் பேச்சுத்தொடர்பு கொள்வதும் ஒருவருக்கொருவர் சமாதானமாக இருப்பதற்கும் அதைக் காத்துக்கொள்வதற்கும் உதவுகின்றன. அதுமட்டுமல்லாமல், மற்றவர்களோடு நமக்குள்ள உறவுகளை மேம்படுத்த நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வது, அவர்களோடு எப்போதும் நல்ல பேச்சுத்தொடர்பை வைத்துக்கொள்ள உதவும். நாமாக முன்வந்து மற்றவர்களுக்கு அன்பான செயல்களைச் செய்வது நல்ல பேச்சுத்தொடர்புக்கு வழிவகுக்கும்; அதாவது, மற்றவர்களுக்கு உதவ வழிதேடுவது, நல்லெண்ணத்தோடு பரிசு கொடுப்பது, மற்றவர்களை உபசரிப்பது ஆகியவை நல்ல பேச்சுத்தொடர்புக்கு வழிவகுக்கும். இப்படிச் செய்வதால், ஒருவர்மீது ‘நெருப்புத் தணலைக் குவிக்கவும்’ முடியும். இதன் பலனாக, அவரிடமுள்ள நற்பண்புகள் தெளிவாகத் தெரிய ஆரம்பிக்கலாம்; அது, பிரச்சினைகளைக் குறித்து மனம்திறந்து பேசுவதை எளிதாக்கலாம்.—ரோ. 12:20, 21.
11 இந்த உண்மையை முற்பிதாவான யாக்கோபு அறிந்திருந்தார். தன்மீது ஏசாவுக்குக் கடுங்கோபம் இருந்ததால் தன்னைக் கொன்றுவிடுவாரோ எனப் பயந்து யாக்கோபு அவரைவிட்டு ஓடிப்போயிருந்தார். வருடங்கள் உருண்டோடிய பிறகு யாக்கோபு திரும்பிவந்தார். அவரைச் சந்திக்க ஏசா 400 ஆண்களோடு சென்றார். யாக்கோபு பயத்தில் யெகோவாவிடம் உதவிகேட்டு மன்றாடினார். பின்னர், தனக்கு முன்னே எக்கச்சக்கமான கால்நடையை ஏசாவுக்குப் பரிசாக அனுப்பினார். அப்புறம் என்ன, வெற்றிதான்! இருவரும் சந்தித்தபோது ஏசாவின் கல்நெஞ்சம் கரைந்திருந்தது; அவர் ஓடோடி வந்து யாக்கோபைக் கட்டியணைத்தார்.—ஆதி. 27:41-44; 32:6, 11, 13-15; 33:4, 10.
it-1-E பக். 980
இஸ்ரவேலின் கடவுளே கடவுள்
பெனியேலில் யெகோவாவுடைய தூதரோடு போராடியதால், யாக்கோபுக்கு இஸ்ரவேல் என்ற பெயர் கொடுக்கப்பட்டது. யாக்கோபு தன்னுடைய அண்ணன் ஏசாவைச் சந்தித்து சமாதானம் செய்த பிறகு, சுக்கோத்திலும் பிறகு சீகேமிலும் இருந்தார். சீகேமில் ஏமோரின் மகன்களிடமிருந்து ஒரு பெரிய நிலத்தை வாங்கி அங்கு கூடாரம் போட்டு தங்கினார். (ஆதி 32:24-30; 33:1-4, 17-19) “அங்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, ஏல் எல்லோகே இஸ்ரவேல் என்று அதற்குப் பெயர் வைத்தார்.” அதன் அர்த்தம் “இஸ்ரவேலின் கடவுளே கடவுள்.” (ஆதி 33:20) பலிபீடத்துக்கு தன்னுடைய புது பெயரையும் சேர்த்து வைத்ததிலிருந்து யாக்கோபு அந்தப் பெயரை ஏற்றுக்கொண்டதையும் அதற்கு நன்றியுடன் இருந்ததையும் காட்டினார். அதோடு, திரும்பவும் வாக்குபண்ணப்பட்ட தேசத்துக்குள் கடவுள் தன்னை பத்திரமாகக் கூட்டிட்டு வந்ததற்காகவும் நன்றியோடு இருந்ததைக் காட்டினார். “இஸ்ரவேலின் கடவுளே கடவுள்” என்பது பைபிளில் ஒரே ஒரு தடவைதான் இருக்கிறது.
ஏப்ரல் 27–மே 3
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 34-35
“கெட்ட சகவாசத்தால் விளையும் படுமோசமான விளைவுகள்”
w97 2/1 பக். 30 பாரா 4
சீகேம்—பள்ளத்தாக்கிலுள்ள அந்தப் பட்டணம்
அந்தப் பட்டணத்திலுள்ள இளவயது ஆண்கள் ஒருவேளை துணையின்றி தங்கள் பட்டணத்துக்கு வழக்கமாய் வந்து போய்க்கொண்டிருந்த இந்த இளம் கன்னிப் பெண்ணை எவ்வாறு கருதுவர்? அத்தேசத்தின் பிரபு அவளைக் “கண்டு, அவளைக்கொண்டுபோய், அவளோடே சயனித்து, அவளைத் தீட்டுப்படுத்தினான்.” ஒழுக்கங்கெட்ட கானானியரோடு கூட்டுறவு கொள்வதன் மூலம் தீனாள் ஏன் நெருப்போடு விளையாடினாள்? தன்னுடைய வயதிலுள்ள பெண்களின் தோழமை தனக்குத் தேவை என்பதாக அவள் நினைத்ததாலா? அவளுடைய சில சகோதரர்களைப் போல அவள் தலைக்கனம் பிடித்தவளாகவும் தனித்தியங்குபவளாகவும் இருந்தாளா? ஆதியாகம பதிவை வாசித்து, யாக்கோபும் லேயாளும் தங்களுடைய மகள் சீகேமுக்குச் சென்று வந்ததால் ஏற்பட்ட துயரமான பின்விளைவுகளின் காரணமாக அவர்கள் அனுபவித்த வேதனையையும் அவமானத்தையும் புரிந்துகொள்ள முயன்றுபாருங்கள்.—ஆதியாகமம் 34:1-31; 49:5-7; 1985 ஆங்கில காவற்கோபுரம், ஜூன் 15, பக்கம் 31-ஐயும் காண்க.
“பாலியல் முறைகேட்டிலிருந்து விலகி ஓடுங்கள்”
14 சீகேமுக்கு தீனாளை ரொம்பவே பிடித்துவிட்டதால், அவன் “அவளைக் கொண்டுபோய்ப் பலாத்காரம் செய்தான்.” அப்படிச் செய்வது அவனுக்குத் தவறாகத் தெரியவில்லை, ஒரு சாதாரண விஷயமாகத்தான் தோன்றியது. (ஆதியாகமம் 34:1-4-ஐ வாசியுங்கள்.) அந்தச் சம்பவத்துக்குப் பிறகு தீனாளுக்கும் அவளுடைய குடும்பத்தாருக்கும், அடுத்தடுத்து பல சோகமான விஷயங்கள் நடந்தன.—ஆதியாகமம் 34:7, 25-31; கலாத்தியர் 6:7, 8.
உங்கள் மனம் புண்படுகையில்
பொதுவாக, புண்பட்டவர் தன்னுடைய மனம் ஆறுவதற்காகவே பழிவாங்குகிறார். உதாரணமாக, பூர்வகாலத்தில் வாழ்ந்த யாக்கோபுவின் மகன்களை எடுத்துக்கொள்ளுங்கள்; அவர்களுக்கு தீனாள் என்ற சகோதரி இருந்தாள்; அவளை சீகேம் என்ற கானானியன் கற்பழித்ததைக் கேள்விப்பட்டபோது அவர்கள் “மனங்கொதித்து மிகவும் கோபங் கொண்டார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ஆதியாகமம் 34:1-7) யாக்கோபின் இரண்டு மகன்களான சிமியோனும் லேவியும், தங்கள் சகோதரிக்கு இழைக்கப்பட்ட அநியாயத்திற்கு வஞ்சம் தீர்க்க சதித்திட்டம் போட்டார்கள்; சீகேமையும் அவனுடைய குடும்பத்தாரையும் தீர்த்துக்கட்ட அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள். அவர்களுடைய சூழ்ச்சி பலிக்கவே, கானானியரின் பட்டணத்திற்குள் நுழைந்து சீகேமையும் எல்லா ஆண்மக்களையும் கொன்றுபோட்டார்கள்.—ஆதியாகமம் 34:13-27.
அத்தனை பேரையும் அவர்கள் கொன்று குவித்ததால் பிரச்சினை ஓய்ந்ததா? தன்னுடைய மகன்கள் செய்த காரியத்தை யாக்கோபு அறிந்தபோது அவர்களைக் கண்டித்து, ‘நீங்கள் என்னைத் தொல்லைக்கு உட்படுத்திவிட்டீர்கள். இந்நாட்டில் வாழ்வோரிடத்தில் . . . என்னை இழிவுபடுத்திவிட்டீர்கள். . . . அவர்கள் ஒன்றுசேர்ந்து என்னைத் தாக்கினால் நானும் என் குடும்பத்தாரும் அழிந்துபோவோம்’ என்றார். (ஆதியாகமம் 34:30, பொது மொழிபெயர்ப்பு) ஆம், அவர்கள் வஞ்சம் தீர்த்ததால் பிரச்சினை தீர்வதற்குப் பதிலாக அதிகரிக்கவே செய்தது; கொதித்துப் போயிருந்த சுற்றுவட்டாரத்து மக்கள் தங்களைத் தாக்குவார்களோ என்ற பயத்திலேயே அவர்கள் வாழ வேண்டியிருந்தது. அவர்கள் தாக்கப்படாமல் இருப்பதற்காகத்தான், குடும்பமாக அந்த இடத்தைவிட்டுப் பெயர்ந்து பெத்தேலுக்குச் செல்லும்படி கடவுள் யாக்கோபுக்குக் கட்டளையிட்டிருக்கலாம்.—ஆதியாகமம் 35:1, 5.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 600 பாரா 4
தெபோராள்
1. ரெபெக்காளின் தாதி. ரெபெக்காள், தன்னுடைய அப்பா பெத்துவேலை விட்டு ஈசாக்கை கல்யாணம் செய்வதற்காக பாலஸ்தீனாவுக்கு வந்தபோது தெபோராளும் அவளோடு வந்தாள். (ஆதி 24:59) பல வருஷங்களாக ஈசாக்குடைய வீட்டில் வேலை செய்த பிறகு, தெபோராள் யாக்கோபுடைய வீட்டிற்குச் சென்றாள். ஒருவேளை ரெபெக்காள் இறந்தபிறகு அவள் இப்படிப் போயிருக்கலாம். அநேகமாக, ஈசாக்குக்கும் ரெபெக்காளுக்கும் கல்யாணமாகி சுமார் 125 வருஷங்களுக்குப் பிறகு தெபோராள் இறந்திருக்க வேண்டும். அவள் பெத்தேலில் இருந்த ஒரு பெரிய மரத்தின் அடியில் அடக்கம் செய்யப்பட்டாள். அந்த மரத்துக்கு யாக்கோபு வைத்த பெயரிலிருந்து (அலொன்-பாகத், அதாவது “அழுகையின் கருவாலி மரம்”) அவருடைய குடும்பத்தின் அன்பை அவள் எந்தளவுக்குச் சம்பாதித்து இருந்தாள் என்று தெரிகிறது.—ஆதி 35:8.
வாசகர் கேட்கும் கேள்விகள்
பூர்வ இஸ்ரவேலில், மேசியா வந்த வம்சாவளிக்கும் மூத்தமகன் உரிமைக்கும் ஏதாவது சம்பந்தம் இருந்ததா?
சம்பந்தம் இருந்ததாகச் சில சமயங்களில் நம் பிரசுரங்களில் சொல்லியிருக்கிறோம். அந்தக் கருத்து எபிரெயர் 12:16-ல் இருக்கும் விஷயத்தோடு ஒத்திருந்ததாக நினைத்தோம். ஏசா ‘பரிசுத்த காரியங்களை மதிக்கவில்லை’ என்றும், ‘ஒரேவொரு வேளை உணவுக்காகத் தன்னுடைய மூத்தமகன் உரிமையை [யாக்கோபுக்கு] கொடுத்துவிட்டான்’ என்றும் அந்த வசனம் சொல்கிறது. யாக்கோபு “மூத்தமகன் உரிமையை” பெற்றுக்கொண்டபோது, மேசியாவின் மூதாதையாக ஆனார் என்று அந்த வசனம் சொல்வதாக நாம் நினைத்தோம்.—மத். 1:2, 16; லூக். 3:23, 34.
ஆனால், மற்ற பைபிள் பதிவுகளை ஆராய்ச்சி செய்யும்போது ஒரு விஷயம் புரிகிறது. அதாவது, ஒருவர் மேசியாவின் மூதாதையாக இருப்பதற்கு மூத்தமகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பது புரிகிறது. சில அத்தாட்சிகளை இப்போது பார்க்கலாம்:
யாக்கோபின் (இஸ்ரவேலின்) மகன்களில் முதல் மகன், லேயாளுக்குப் பிறந்த ரூபன். பிற்பாடு, அவருடைய அன்பு மனைவி ராகேலுக்குப் பிறந்த முதல் மகன், யோசேப்பு. ஒழுக்கங்கெட்ட காரியத்தை ரூபன் செய்ததால், மூத்தமகன் உரிமை யோசேப்புக்குப் போய்விட்டது. (ஆதி. 29:31-35; 30:22-25; 35:22-26; 49:22-26; 1 நா. 5:1, 2) இருந்தாலும், மேசியாவின் வம்சாவளி ரூபன் வழியிலும் வரவில்லை, யோசேப்பின் வழியிலும் வரவில்லை. லேயாளின் மூலம் யாக்கோபுக்குப் பிறந்த நான்காவது மகனான யூதாவின் வழியில்தான் மேசியாவின் வம்சாவளி வந்தது.—ஆதி. 49:10.