பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஆதியாகமம் 48-50
வயதானவர்கள் ஒரு களஞ்சியம்
இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவுடைய “அற்புதமான செயல்களை” வயதான சகோதர சகோதரிகள் கண்ணாரப் பார்த்திருக்கிறார்கள். அதைப் பற்றி அவர்கள் சொல்லும்போது, யெகோவாவின்மீதும் அவருடைய வாக்குறுதிகளின்மீதும் நம் விசுவாசம் பலமடைகிறது. (சங் 71:17, 18) வைரமாக ஜொலிக்கும் வயதான சகோதர சகோதரிகள் உங்கள் சபையில் இருந்தால், அவர்களிடம் இதைப் பற்றியெல்லாம் கேளுங்கள்:
பிரச்சினைகள் மத்தியிலும் யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்ய அவர் உதவி செய்த விதம்
பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் அவர்கள் பார்த்த வளர்ச்சி
பைபிள் சத்தியங்களில் புதிய விளக்கங்கள் கிடைத்தபோது அவர்கள் அனுபவித்த சந்தோஷம்
யெகோவாவின் அமைப்பில் அவர்கள் பார்த்த மாற்றங்கள்