வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஜூலை 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 சாமுவேல் 18-19
“பர்சிலாவைப் போல அடக்கமாக நடந்துகொள்ளுங்கள்”
பர்சிலா தன் வரையறைகளை அறிந்த மனிதர்
பர்சிலா செய்த உதவிக்குத் தாவீது நன்றியுள்ளவராய் இருந்தார் என்பதில் சந்தேகமில்லை. அந்த அழைப்பு, ஏதோ பொருள் தேவைகளைப் பூர்த்தி செய்வதன்மூலம் கைமாறு செய்வதற்கு ராஜா விரும்பியதாகத் தெரியவில்லை. செல்வந்தரான பர்சிலாவுக்கு அதுபோன்ற உதவி தேவைப்பட்டிருக்காது. அந்த முதியவரிடம் மெச்சத்தகுந்த குணங்கள் இருந்ததால் தன்னுடைய அரசவையில் அவர் இருக்க வேண்டுமென தாவீது விரும்பியிருக்கலாம். அங்கே நிரந்தரமாய் ஓர் இடத்தைப் பெறுவது கெளரவமாயிருக்கும்; அதோடு, ராஜாவுடன் நட்புறவு கொள்ளும் சிறப்புரிமையையும் அவருக்கு அளிக்கும்.
பர்சிலா தன் வரையறைகளை அறிந்த மனிதர்
பர்சிலாவின் முதுமையும் அதைச் சார்ந்த குறைபாடுகளும் அவர் அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். அதிக காலம் உயிர் வாழ மாட்டாரென அவர் நினைத்திருக்கலாம். (சங்கீதம் 90:10) தாவீதை ஆதரிப்பதற்குத் தன்னால் முடிந்ததை அவர் செய்துவிட்டார், அதோடு முதுமையால் வரும் குறைபாடுகளையும் அவர் அறிந்திருந்தார். கெளரவமும் முதன்மையான நிலையில் இருக்க வேண்டுமென்ற எண்ணமும் தன்னுடைய பலத்தை எதார்த்தமாய் மதிப்பிடாதபடி தடுக்க அவர் அனுமதிக்கவில்லை. பெயருக்கும் புகழுக்கும் பதவிக்கும் ஆசைப்பட்ட அப்சலோமைப்போல் இல்லாமல் பர்சிலா ஞானமாக, தன்னடக்கத்துடன் நடந்துகொண்டார்.—நீதிமொழிகள் 11:2.
பர்சிலா தன் வரையறைகளை அறிந்த மனிதர்
பர்சிலாவைப் பற்றிய பதிவு சமநிலை அவசியம் என்பதைச் சிறப்பித்துக் காட்டுகிறது. வாழ்க்கையை நிம்மதியாக அனுபவிக்க வேண்டும் என்று நினைப்பதால் அல்லது பொறுப்பை ஏற்பதற்குத் தகுதி இல்லை என்று நினைப்பதால் சிறப்பான சேவையைச் செய்வதற்கான வாய்ப்பை மறுக்கவோ அதை அடைவதற்காக முயற்சி எடுக்காதிருக்கவோ கூடாது. நாம் பலத்திற்காகவும் ஞானத்திற்காகவும் கடவுளைச் சார்ந்திருந்தால் அவர் நம்முடைய குறைகளை நிவர்த்தி செய்வார்.—பிலிப்பியர் 4:13; யாக்கோபு 4:17; 1 பேதுரு 4:11.
எனினும், நம்முடைய வரையறைகளை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும். உதாரணமாக, ஒரு கிறிஸ்தவர் ஆன்மீக நடவடிக்கைகளில் ஏற்கெனவே சுறுசுறுப்பாக ஈடுபட்டிருக்கிறார். கூடுதலான பொறுப்புகளை ஏற்றுக்கொண்டால் பொருள் சம்பந்தமாகவும் ஆன்மீக ரீதியிலும் தன்னுடைய குடும்பத்தாரின் தேவைகளைக் கவனிக்க வேண்டிய வேதப்பூர்வ கடமைகளைச் செய்ய முடியாமல் போகலாமென அவர் உணருகிறார். இதுபோன்ற சூழ்நிலையில், கூடுதலான பொறுப்புகளைத் தற்சமயம் ஏற்க மறுப்பது அவர் தன்னடக்கத்தோடும் நியாயத்தன்மையோடும் நடந்துகொள்வதற்கு அடையாளமாய் இருக்கும், அல்லவா?—பிலிப்பியர் 4:5, NW; 1 தீமோத்தேயு 5:8.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
‘ஓட்டத்தைக் கடைசிவரை ஓடி முடியுங்கள்’
19 உடல்நலப் பிரச்சினையோடு நீங்கள் போராடிக்கொண்டிருக்கிறீர்களா? யாராவது உங்களைத் தவறாகப் புரிந்துவைத்திருக்கிறார்களா? அப்படியென்றால், மேவிபோசேத்தின் வாழ்க்கை அனுபவம் உங்களுக்கு உதவும். (2 சா. 4:4) அவருக்குக் கால் ஊனமாக இருந்தது. தாவீது ராஜாவும் அவரைத் தவறாகப் புரிந்துகொண்டார். இதற்கெல்லாம் மேவிபோசேத் எந்த விதத்திலும் காரணம் கிடையாது. இருந்தாலும், இதையெல்லாம் நினைத்து அவர் கோபத்தில் கொந்தளிக்கவில்லை. தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயங்களுக்கு நன்றியோடு இருந்தார். முன்பு தாவீது தனக்குக் காட்டிய கருணைக்காக அவர் நன்றியோடு இருந்தார். (2 சா. 9:6-10) அதனால், தாவீது தன்னை அநியாயமாக நடத்திய சமயத்தில் இந்த எல்லா விஷயத்தையும் அவர் நினைத்துப்பார்த்தார். தாவீது செய்த தவறை நினைத்து அவர் கோபப்படவில்லை; யெகோவாவையும் குறை சொல்லவில்லை. யெகோவாவால் நியமிக்கப்பட்ட ராஜாவுக்கு எப்படியெல்லாம் ஆதரவு கொடுக்கலாம் என்பதைப் பற்றியே யோசித்தார். (2 சா. 16:1-4; 19:24-30) நம்முடைய நன்மைக்காக அவருடைய அருமையான உதாரணத்தை பைபிளில் யெகோவா பதிவு செய்து வைத்திருக்கிறார்.—ரோ. 15:4.
ஜூலை 11-17
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 சாமுவேல் 20-21
“யெகோவா நீதி வழங்குகிற கடவுள்”
it-1-E பக். 932 பாரா 1
கிபியோன்
ஒரு இஸ்ரவேலரைக் கொல்லும் உரிமை தங்களுக்கு இல்லை என்று கிபியோனியர்களுக்குத் தெரிந்திருந்தது. அதனால், தங்களுக்கு நடந்த அநியாயத்தை யெகோவா சரிசெய்யும்வரை பொறுமையாகக் காத்திருந்தார்கள். அவர்களுக்கு என்ன உதவி வேண்டும் என்று தாவீது கேட்டபோது, சவுலின் ஏழு “மகன்களை” கொலை செய்வதற்காகத் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால், ஏன் “மகன்களை” கேட்டார்கள்? ஏனென்றால், ‘சவுல்மீதும் அவனுடைய குடும்பத்தார்மீதும் கொலைப்பழி இருந்தது’ என்று முதல் வசனம் சொல்கிறது. அப்படியென்றால், கிபியோனியர்களைக் கொலை செய்வதில் சவுலுக்கு முக்கிய பங்கு இருந்திருந்தாலும் அவருடைய ‘மகன்களும்’ அதற்கு உடந்தையாக இருந்திருக்க வேண்டும். (2சா 21:1-9) அதனால் இவர்களைக் கொன்றது, அப்பா செய்த பாவத்துக்காக பிள்ளைகளை தண்டிப்பது போல் இருக்காது. (உபா 24:16) அதற்குப் பதிலாக, “உயிருக்கு உயிர்” ஈடாக கொடுக்க வேண்டும் என்ற சட்டத்தின்படிதான் இருக்கிறது.—உபா 19:21.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
கிறிஸ்தவ மூப்பர்கள் ‘நம் சந்தோஷத்திற்குச் சக வேலையாட்கள்’
14 சாத்தானும் அவனுடைய ஆட்களும் போடுகிற தடைக்கற்களையெல்லாம் தாண்டி, உலகம் முழுவதும் நாம் ஊழியம் செய்துவருகிறோம். நம்மில் சிலர் மலை போன்ற பிரச்சினைகளை எதிர்ப்பட்டபோது, யெகோவாமீது முழுமையாகச் சார்ந்திருந்து, அவற்றை வெற்றிகரமாக மேற்கொண்டோம். ஆனாலும், இந்த உலகத்திடமிருந்து வருகிற பிரச்சினைகளோடு நாம் சதா மல்லுக்கட்டுவதால் சிலசமயம் களைத்துப்போகிறோம், சோர்ந்துபோகிறோம். அத்தகைய பலவீனமான நிலையில், சாதாரணமாகச் சமாளிக்க முடிந்த பிரச்சினைகளைக்கூட சமாளிக்க முடியாமல் உள்ளம் உடைந்துபோகிறோம். இதுபோன்ற சமயங்களில் மூப்பர்கள் கொடுக்கும் உதவி, இழந்துபோன சந்தோஷத்தையும் பலத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ள நமக்கு உதவும்; அநேகருடைய அனுபவமும் அதுதான். சுமார் 65 வயதுள்ள பயனியர் சகோதரி ஒருவர் சொல்கிறார்: “கொஞ்ச நாட்களுக்கு முன்பு, என் உடல்நிலை சரியில்லாமல் இருந்தது, ஊழியத்திற்குப் போய்வரும்போது ரொம்பவே களைப்பாக இருந்தது. நான் மிகவும் சோர்வாக இருப்பதைக் கவனித்த ஒரு மூப்பர் என்னிடம் வந்து பேசினார். பைபிளிலிருந்து நிறைய விஷயங்களை எடுத்துச்சொன்னார், மனதிற்கு உற்சாகமாய் இருந்தது. அவர் கொடுத்த ஆலோசனைகளைப் பின்பற்றினேன், பயனடைந்தேன். அந்த மூப்பர் நான் பலவீனமாக இருந்ததைக் கவனித்து உதவிசெய்தார், எவ்வளவு அன்பு அவருக்கு!” ஆம், ‘தங்கள் கண்களை நம்மைவிட்டு விலக்காதிருக்கும்’ மூப்பர்கள், அபிசாயைப் போல ‘உதவிக்கு வர’ தயாராய் இருக்கிறார்கள் என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலாய் இருக்கிறது!
ஜூலை 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 சாமுவேல் 22
“உதவிக்காக யெகோவாவையே நம்பியிருங்கள்”
உண்மையிலேயே ‘கடவுளிடம் நெருங்கி வர’ முடியுமா?
11 கடவுளுக்கு “மகா வல்லமை” இருப்பதாக வாசிப்பது ஒரு விஷயம். (ஏசாயா 40:26) ஆனால் அவர் எவ்வாறு இஸ்ரவேலர்களை செங்கடல் வழியாக நடத்திச் சென்று, 40 வருடங்களாக வனாந்தரத்தில் பாதுகாத்து வந்தார் என்பதை வாசிப்பது வேறு விஷயம். இதை வாசிக்கையில், அலையலையாய் பொங்கியெழும் கடல் இரண்டாக பிளப்பதை உங்களால் கற்பனை செய்ய முடியும். அந்தத் தேசத்தினர்—மொத்தத்தில் சுமார் 30,00,000 பேர்—சமுத்திரத்தின் உலர்ந்த தரை வழியாக நடந்துபோவதையும், இருபுறமும் இமாலய மதில்கள்போன்று தண்ணீர் இறுகி குவிந்து நிற்பதையும் மனத்திரையில் பார்க்க முடியும். (யாத்திராகமம் 14:21; 15:8) வனாந்தரத்தில் கடவுள் கரிசனையோடு பாதுகாப்பளித்ததற்கும் அத்தாட்சியை பார்க்க முடியும். பாறையிலிருந்து தண்ணீர் பாய்ந்து வந்தது. வெண்ணிற விதைகள் வடிவில் உணவு தரையில் விழுந்தது. (யாத்திராகமம் 16:31; எண்ணாகமம் 20:11) தமக்கு வல்லமை இருப்பதை மட்டுமல்ல, அதை தம் மக்களுக்காக பயன்படுத்துவதையும் யெகோவா இவ்வாறு வெளிப்படுத்தினார். “நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமான” அத்தகைய வல்லமையுள்ள கடவுளிடமே நம் ஜெபங்கள் போய் சேருகின்றன என்பதை அறிவது நம்பிக்கையூட்டுகிறது அல்லவா?—சங்கீதம் 46:1.
“யெகோவா பற்றுமாறாதவர், மன்னிப்பவர்”
4 யெகோவா தாம் பற்றுமாறாதவர் என்பதை எப்படி வெளிக்காட்டுகிறார்? தம் உண்மையுள்ள ஊழியர்களை ஒருபோதும் கைவிடுவதில்லை. அப்படிப்பட்ட ஊழியர்களில் ஒருவரான தாவீது ராஜா யெகோவாவின் பற்றுமாறா அன்புக்குக் கண்கண்ட சாட்சி. (சங்கீதம் 101:6-ஐ வாசியுங்கள்) [2 சாமுவேல் 22:26] கஷ்ட காலங்களில் யெகோவா தாவீதைப் பற்றுமாறா அன்போடு வழிநடத்தினார், பாதுகாத்தார், விடுவித்தார். (2 சா. 22:1) யெகோவா தாம் பற்றுமாறாதவர் என்பதை வெறும் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காண்பிப்பவர் என்பதை தாவீது தன் சொந்த அனுபவத்தில் கண்டார். தாவீதிடம் யெகோவா ஏன் பற்றுமாறாதவராய் நடந்துகொண்டார்? ஏனென்றால், தாவீது ‘பற்றுமாறாதவராய்’ இருந்தார். தம் ஊழியர்கள் பற்றுமாறா அன்பைக் காட்டும்போது யெகோவாவின் உள்ளம் பூரிக்கிறது; அதற்குக் கைமாறாக அவர்களிடம் பற்றுமாறா அன்பைப் பொழிகிறார்.—நீதி. 2:6-8.
5 யெகோவா தம்முடைய ஊழியர்களிடம் பற்றுமாறா அன்பை எப்படிக் காண்பித்திருக்கிறார் என்பதைச் சிந்தித்துப் பார்க்கும்போது ஊக்கம் பெறுவோம். ரீட் என்ற சகோதரர் சொல்கிறார்: “தாவீதோட கஷ்டகாலங்கள்ல யெகோவா அவருக்கு எப்படியெல்லாம் உதவுனாருன்னு படிக்கும்போது ரொம்பவே ஆறுதலா இருக்கும். தாவீது மலை குகைன்னு உயிரை கையில பிடிச்சிட்டு ஓடின சமயங்களிலெல்லாம் யெகோவா அவருக்குத் துணையா இருந்தார். அதைப் படிக்கும்போது அப்படியே மெய்சிலிர்த்துபோகும்! எப்படிப்பட்ட சூழ்நிலையா இருந்தாலும் சரி, நிலைமை எவ்வளவு மோசமானாலும் சரி, நான் யெகோவாவுக்கு பற்றுமாறாதவனா இருக்கிறவரைக்கும் அவர் என்கூட இருப்பாருன்னு தெரிஞ்சிக்கிட்டேன்.” நிச்சயம் நீங்களும் இதே போல்தான் உணருவீர்கள்.—ரோ. 8:38, 39.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள்
7 மனத்தாழ்மைக்கு மகுடமாய் விளங்கும் யெகோவாவின் முன்மாதிரி தாவீதின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அதனால்தான், “உம்முடைய ரட்சிப்பின் கேடகத்தையும் எனக்குத் தந்தீர்; உம்முடைய காருணியம் [“மனத்தாழ்மை,” NW] என்னைப் பெரியவனாக்கும்” என்று அவர் பாடினார். (2 சா. 22:36) இஸ்ரவேலில் தன்னைப் பெரியவனாக, உயர்ந்தவனாக ஆக்கியது யெகோவாவின் மனத்தாழ்மையே, அதாவது தன்மீது யெகோவா மனத்தாழ்மையோடு கவனம்செலுத்தி உதவியதே, என்பதை அவர் ஒப்புக்கொண்டார். (சங். 113:5-7) நம்முடைய விஷயத்திலும் அது உண்மைதானே? குணங்கள், திறமைகள், பொறுப்புகள் என ‘அனைத்தும் நாம் யெகோவாவிடமிருந்து பெற்றுக்கொண்டதுதானே?’ (1 கொ. 4:7) எனவே, தன்னைச் சிறியவராக நடத்திக்கொள்கிற ஒருவர் ‘உயர்ந்தவராக’ இருக்கிறார் என்பது, அவர் யெகோவாவின் சேவையில் அதிக பிரயோஜனமுள்ளவராக ஆவதை அர்த்தப்படுத்துகிறது. (லூக். 9:48) எவ்விதத்தில் என்று பார்ப்போம்.
ஜூலை 25-31
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 சாமுவேல் 23-24
“யெகோவாவுக்குக் கொடுப்பதற்காகத் தியாகங்கள் செய்கிறீர்களா?”
it-1-E பக். 146
அர்வனா
பலி கொடுப்பதற்குத் தேவையான இடத்தையும் மாட்டையும் விறகுகளையும் இலவசமாகத் தருவதற்கு அர்வனா தயாராக இருந்தார். ஆனால், அவை எல்லாவற்றையும் காசு கொடுத்துத்தான் வாங்க வேண்டும் என்பதில் தாவீது ரொம்ப உறுதியாக இருந்தார். 2 சாமுவேல் 24:24-ல் பார்க்கும்போது, தாவீது அந்தக் களத்துமேட்டையும் மாடுகளையும் 50 வெள்ளி சேக்கலுக்கு வாங்கியிருக்கிறார். ஆனால் 1 நாளாகமம் 21:25-ல் தாவீது அதே இடத்தை 600 சேக்கல் தங்கத்தைக் கொடுத்து வாங்கியதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த இரண்டு வசனங்களிலும் ஏன் வித்தியாசமாகச் சொல்லப்பட்டிருக்கிறது? பலி கொடுப்பதற்குத் தேவையான மாடுகளையும், விறகுகளையும், பலிபீடம் கட்டுவதற்குத் தேவையான ஒரு சின்ன இடத்தையும் மட்டும்தான் தாவீது ஆரம்பத்தில் வாங்கினார். அதை வாங்குவதற்கு தாவீது கொடுத்த தொகையைத்தான் 2 சாமுவேல் புத்தகத்தில் பார்க்கிறோம். ஆனால், பல வருஷங்கள் கழித்து அதே இடத்தில் கட்டப்பட்ட ஆலயத்தைப் பற்றி 1 நாளாகமம் புத்தகத்தில் விவரிக்கப்பட்டிருக்கிறது. (1நா 22:1-6; 2நா 3:1) ஆலயத்தைக் கட்ட ரொம்பப் பெரிய இடம் தேவைப்பட்டது. அதற்குத் தேவையான முழு இடத்தையும் வாங்குவதற்குத்தான் தாவீது 600 சேக்கல் தங்கத்தைக் கொடுத்தார் என்று தெரிகிறது, பலிபீடம் கட்டுவதற்கான இடத்தை வாங்குவதற்கு இல்லை.
‘சத்தியத்தைப் பற்றிய முக்கிய அம்சங்களிலிருந்து’ கற்றுக்கொள்ளுங்கள்
8 ஓர் இஸ்ரவேலர் யெகோவாவுக்கு நன்றி தெரிவிக்க மனப்பூர்வமாகப் பலி செலுத்தியிருந்தால் (அல்லது, யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற மனப்பூர்வமாகத் தகனபலி செலுத்தியிருந்தால்) பழுதற்ற மிருகத்தைத் தேர்ந்தெடுப்பது அவருக்கு ஒரு பிரச்சினையாகவே இருந்திருக்காது. மிகச் சிறந்ததை யெகோவாவுக்குக் கொடுப்பதில் அவர் சந்தோஷம்தான் கண்டிருப்பார். இன்று கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்தின்படி பலிகளைச் செலுத்துவதில்லை என்றாலும் வேறு விதமான பலிகளைச் செலுத்துகிறார்கள்; ஆம், தங்கள் நேரம், சக்தி, பணம், பொருள் ஆகியவற்றை யெகோவாவின் சேவைக்காக அர்ப்பணிக்கிறார்கள். நம் நம்பிக்கையை ‘எல்லாருக்கும் அறிவிப்பதும்,’ ‘நன்மை செய்வதும், நம்மிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதும்’ கடவுளுக்குப் பிரியமான பலிகள் என அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். (எபி. 13:15, 16) இவற்றை நாம் என்ன மனநிலையோடு செய்கிறோம் என்பது, யெகோவா நமக்கு வழங்கியிருக்கும் எல்லாவற்றுக்காகவும் எந்தளவு நன்றியுடன் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது. ஆகவே, இஸ்ரவேலரைப் போலவே நாமும் என்ன மனநிலையோடும் உள்நோக்கத்தோடும் யெகோவாவைச் சேவிக்கிறோம் என்பதைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவசியம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
இரண்டு சாமுவேல் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
23:15-17. உயிரையும் இரத்தத்தையும் குறித்த கடவுளுடைய சட்டத்தின் பேரில் தாவீதுக்கு ஆழ்ந்த மதிப்பு இருந்தது. அதனால்தான் இந்தச் சந்தர்ப்பத்தில், அச்சட்டத்தை மீறுவதைப் போல் தோன்றிய ஒன்றைச் செய்வதற்குக்கூட அவர் மறுத்தார். கடவுளுடைய எல்லாக் கட்டளைகளின் பேரிலும் நாம் இத்தகைய மனப்பான்மையை வளர்க்க வேண்டும்.
ஆகஸ்ட் 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 ராஜாக்கள் 1-2
“செய்த தவறிலிருந்து நீங்கள் பாடம் கற்றுக்கொள்கிறீர்களா?”
it-2-E பக். 987 பாரா 4
சாலொமோன்
“சாலொமோன் ராஜா பல்லாண்டு வாழ்க!” என்று மக்கள் எல்லாரும் ஆரவாரம் செய்த சத்தத்தைக் கேட்டவுடன் அதோனியாவும் அவனோடு இருந்த சதிகாரர்களும் பயத்திலும் குழப்பத்திலும் தப்பித்து ஓடினார்கள். அதோனியா அடைக்கலத்துக்காக வழிபாட்டுக் கூடாரத்தில் ஒளிந்துகொண்டிருந்தான். சாலொமோன், தன்னுடைய ஆட்சியில் சமாதானம் இருக்க வேண்டும் என்று விரும்பியதால் ஆட்சியை ஆரம்பிக்கும்போதே ஒருவரைப் பழிவாங்க வேண்டாம் என்று நினைத்தார். அதனால், அதோனியா “ஒழுங்காக நடந்துகொண்டால்” அவனுடைய உயிருக்கு எந்த ஆபத்தும் வராது என்று சாலொமோன் தன்னுடைய ஆட்கள் மூலம் சொல்லி அனுப்பினார்.—1ரா 1:41-53.
it-1-E பக். 49
அதோனியா
தாவீது இறந்த பிறகு அதோனியா, பத்சேபாளிடம் போய் ஒரு விஷயத்தைக் கேட்டான். சாலொமோன் ராஜாவிடம் எப்படியாவது பேசி, தாவீது ராஜாவைக் கவனித்துக்கொண்ட அபிஷாக்கை தனக்குக் கல்யாணம் செய்து வைக்கச் சொல்லிக் கேட்டான். ராஜாவாக ஆவதற்கு தனக்குத்தான் உரிமை இருந்தது என்றும் அந்த உரிமை அவனிடமிருந்து தட்டிப்பறிக்கப்பட்டது என்றும் அவன் இன்னமும் நினைத்துக்கொண்டு இருந்தான் என்பதை அவன் சொன்ன வார்த்தைகளிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. “நான்தான் ராஜாவாகியிருக்க வேண்டும், அது உங்களுக்கே நன்றாகத் தெரியும். அதைத்தான் இஸ்ரவேலர்கள் எல்லாரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்தார்கள்” என்று அவன் சொன்னான். நடந்த எல்லாவற்றுக்கு பின்பும் யெகோவா இருந்தார் என்று தெரிந்திருந்தும் அவன் அப்படி நினைத்தான். (1ரா 2:13-21) மேலோட்டமாகப் பார்த்தால், தன்னை ராஜாவாகத்தான் ஆக்கவில்லை, அதற்கு நஷ்ட ஈடாக அபிஷாக்கையாவது கல்யாணம் செய்து வைக்கலாமே என்று அவன் கேட்டதுபோல் தெரியலாம். ஆனால், அவன் இன்னமும் பதவி வெறி பிடித்தவனாகத்தான் இருந்தான் என்பதை அவனுடைய வார்த்தைகள் ரொம்பத் தெளிவாகக் காட்டுகின்றன. அதை நாம் எப்படிச் சொல்லலாம்? அந்தக் காலத்தில் இருந்த ஒரு சட்டத்தின்படி அடுத்ததாக யார் ராஜாவாக ஆகப்போகிறாரோ அவருக்குத்தான் ராஜாவுடைய மனைவிகளையும், மறுமனைவிகளையும் கல்யாணம் செய்துகொள்வதற்கான உரிமை இருந்தது. (2சா 3:7-ஐயும் 16:21-ஐயும் ஒப்பிட்டுப் பாருங்கள்.) இந்தச் சதித்திட்டத்தை சாலொமோன் புரிந்துகொண்டதால் அதோனியாவைக் கொலை செய்ய உத்தரவு போட்டார். அதோனியா உடனே கொல்லப்பட்டான்.—1ரா 2:22-25.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ஒன்று இராஜாக்கள் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
2:37, 41-46. கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படியாமல் போனாலும் தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என நினைப்பது எவ்வளவு பயங்கரமானது! ‘ஜீவனுக்குப் போகிற இடுக்கமான வாசலை’ விட்டுவிட்டு வேண்டுமென்றே வழிவிலகிச் செல்பவர்கள் தங்களுடைய ஞானமற்ற தீர்மானத்தால் வரும் பின்விளைவுகளை அனுபவிப்பார்கள்.—மத்தேயு 7:14.
ஆகஸ்ட் 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 ராஜாக்கள் 3-4
“ஞானம்—ரொம்பவே விலைமதிப்புள்ளது”
அவர் உங்களுக்கு நல்ல உதாரணமா, கெட்ட உதாரணமா?
4 சாலொமோன் ஆட்சி செய்ய ஆரம்பித்தபோது கடவுள் அவருடைய கனவில் தோன்றி என்ன வேண்டுமெனக் கேட்டார். தனக்கு அனுபவம் போதாது என்பதை உணர்ந்த சாலொமோன் ஞானத்தைத் தரும்படி கேட்டார். (1 இராஜாக்கள் 3:5-9-ஐ வாசியுங்கள்.) அவர் செல்வத்தையும் மகிமையையும் கேட்காமல் ஞானத்தைக் கேட்டதற்காகக் கடவுள் சந்தோஷப்பட்டு, “ஞானமும் உணர்வுமுள்ள இருதயத்தை” மட்டுமல்லாமல் செல்வச்செழிப்பையும் தந்தார். (1 இரா. 3:10-14) இயேசு சொன்னபடி, சாலொமோன் ஞானத்தில் ஈடிணையற்று விளங்கியதால் சேபா நாட்டு ராணியே அதைப் பற்றிக் கேள்விப்பட்டு நேரில் பார்க்க வெகு தூரம் பயணப்பட்டு வந்தாள்.—1 இரா. 10:1, 4-9.
5 நமக்கும் கடவுள் அற்புதமாக ஞானம் தருவாரென நாம் எதிர்பார்ப்பதில்லை. “கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்” என்று சாலொமோன் எழுதினார்; அதேசமயத்தில், அதைப் பெற நாமும் முயல வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டி, ‘நீ உன் செவியை ஞானத்திற்குச் சாய்த்து, உன் இருதயத்தைப் புத்திக்கு அமையப்பண்ணு’ என்றார். ஞானத்தை ‘வா என்று கூப்பிடு,’ ‘நாடு,’ ‘தேடு’ என்றெல்லாம் குறிப்பிட்டார். (நீதி. 2:1-6) ஆகவே, நாம் ஞானத்தைப் பெற முடியும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
6 ‘தெய்வீக ஞானத்தை உயர்வாய் மதிப்பதில் சாலொமோன் வைத்த முன்மாதிரியை நான் பின்பற்றுகிறேனா?’ என நம்மையே கேட்டுக்கொள்வது நல்லது. பொருளாதார நெருக்கடிகளை மனதில் வைத்து அநேகர் வேலை செய்வதற்கும் பணம் சம்பாதிப்பதற்குமே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; அல்லது, என்ன வகையான படிப்பைப் படிக்க வேண்டும்... எத்தனை காலம் படிக்க வேண்டும்... போன்ற தீர்மானங்கள் எடுக்கிறார்கள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் எப்படி? நீங்கள் தெய்வீக ஞானத்தை உயர்வாய் மதித்து அதை நாடுகிறீர்கள் என்பதை உங்கள் தீர்மானங்கள் காட்டுகின்றனவா? இன்னுமதிக ஞானத்தைப் பெற, பணத்தையும் படிப்பையும் பற்றிய உங்கள் கண்ணோட்டத்தைச் சற்று மாற்ற வேண்டியிருக்குமா? ஞானத்தைப் பெறுவதும் அதற்கேற்ப நடப்பதும் உங்களுக்கு நீடித்த நன்மை தரும் என்பதில் சந்தேகமே இல்லை. “அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்ளுவாய்” என்று சாலொமோன் எழுதினார்.—நீதி. 2:9.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவா உடன்படிக்கைகளின் கடவுள்
15 ஆபிரகாமின் சந்ததியார் ஒரு தேசமாக நியாயப்பிரமாணத்தின்கீழ் ஒழுங்கமைக்கப்பட்டதால், அந்த முற்பிதாவுக்கு தாம் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார். பொ.ச.மு. 1473-ல் மோசேக்குப் பின்வந்த யோசுவா இஸ்ரவேலரை கானானுக்குள் வழிநடத்தினார். அதைப் பின்தொடர்ந்து கோத்திரங்கள் மத்தியில் தேசம் பிரிக்கப்பட்டதானது, ஆபிரகாமின் வித்திற்கு தேசத்தை கொடுப்பேன் என்று யெகோவா அளித்த வாக்குறுதியை நிறைவேற செய்தது. இஸ்ரவேலர் உண்மையுள்ளவர்களாய் இருந்தபோது, அவர்களுடைய சத்துருக்கள்மீது வெற்றி தருவதாக தாம் அளித்த வாக்குறுதியை யெகோவா நிறைவேற்றினார். இது விசேஷமாக தாவீது ராஜாவின் ஆட்சியின்போது உண்மையாய் இருந்தது. தாவீதின் குமாரனாகிய சாலொமோனின் காலத்திற்குள், ஆபிரகாமிய உடன்படிக்கையின் மூன்றாவது அம்சம் நிறைவேறியது. “யூதாவும் இஸ்ரவேலும் கடற்கரை மணலத்தனை ஏராளமாயிருந்து, புசித்துக் குடித்து மகிழ்ந்துகொண்டிருந்தார்கள்.”—1 இராஜாக்கள் 4:20.
ஆகஸ்ட் 15-21
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 ராஜாக்கள் 5-6
“அன்பாலும் கடின உழைப்பாலும் உருவான ஆலயம்”
w11-E 2/1 பக். 15
உங்களுக்குத் தெரியுமா?
லீபனோன் மலைத்தொடர்களில் இருந்த தேவதாரு மரங்கள் குறிப்பாக சில விஷயங்களுக்குப் பேர்போனதாக இருந்தது. உதாரணத்துக்கு, அது நீடித்து உழைக்கக்கூடியதாக இருந்தது; ரொம்ப அழகாகவும் வாசனையாகவும் இருந்தது. அதோடு, இந்த மரக்கட்டைகளில் பூச்சியும் பிடிக்காது. அப்படியென்றால், ரொம்பத் தரமான பொருள்களைத் தேர்ந்தெடுத்து சாலொமோன் ஆலயத்தைக் கட்டியிருக்கிறார் என்று தெரிகிறது. அன்று இருந்ததுபோல் இன்று லீபனோன் மலைத்தொடர்களில் அந்தளவுக்கு தேவதாரு மரங்கள் இல்லை. சின்ன சின்ன தொகுதிகளாக ஒருசில இடங்களில் மட்டும்தான் இருக்கின்றன.
it-1-E பக். 424
தேவதாரு மரம்
ஆலயத்தைக் கட்டுவதற்கு நிறைய தேவதாரு மரங்கள் தேவைப்பட்டன. இந்த மரங்கள் எல்லாவற்றையும் எருசலேமுக்குக் கொண்டுவர ஆயிரக்கணக்கான வேலையாட்கள் தேவைப்பட்டார்கள். முதலில் அவர்கள் இந்த மரங்களை வெட்டி அவற்றை தீரு அல்லது சீதோன் நகரத்துக்குக் கொண்டுவந்தார்கள். ஏனென்றால், இந்த நகரங்கள்தான் மத்தியதரைக் கடலுக்குப் பக்கத்தில் இருந்தன. அங்கிருந்து அந்தக் கனமான மரக்கட்டைகளை ஒன்றாகக் கட்டி கடல்வழியாக மிதக்க வைத்து யோப்பா என்ற இடத்துக்குக் கொண்டுவந்தார்கள். பின்பு, இந்த மரக்கட்டைகளை அங்கிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்தார்கள்.—1ரா 5:6-18; 2நா 2:3-10.
it-2-E பக். 1077 பாரா 1
ஆலயம்
இஸ்ரவேலர்களிலிருந்து 30,000 ஆண்களை சாலொமோன் வேலைக்கு வைத்தார். அவர்களை பத்தாயிரம் பத்தாயிரம் பேராக ஒவ்வொரு மாதமும் லீபனோனுக்கு அனுப்பினார். இவர்கள் ஒரு மாதம் வேலை செய்தார்கள். மீதி இரண்டு மாதங்கள் அவர்களுடைய வீட்டில் ஓய்வெடுத்தார்கள். (1ரா 5:13, 14) இஸ்ரவேலிலிருந்த மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்களிலிருந்து 70,000 பேரை சுமை சுமக்கிறவர்களாகவும் 80,000 பேரை மலைகளில் கற்களை வெட்டி செதுக்குகிறவர்களாகவும் நியமித்தார். (1ரா 5:15; 9:20, 21; 2நா 2:2) இந்த வேலையை மேற்பார்வை செய்ய சாலொமோன் 3,300 நிர்வாகிகளையும் அவர்களுக்குத் தலைவர்களாக 550 பேரையும் நியமித்தார். (1ரா 5:16; 9:22, 23) இந்த மொத்த எண்ணிக்கையில் 250 பேர் இஸ்ரவேலர்கள், மீதி 3,600 பேர் இஸ்ரவேலிலிருந்த மற்ற தேசத்தைச் சேர்ந்தவர்கள்.—2நா 2:17, 18.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
g-E 5/12 பக். 17, பெட்டி
பைபிள்—துல்லியமான தீர்க்கதரிசனங்கள் இருக்கிற புத்தகம், பகுதி 1
துல்லியமான காலக்கணக்குகள்
பைபிளில் சில சம்பவங்கள் எப்போது நடந்தன என்ற தேதியும் வருஷமும் ரொம்பத் துல்லியமாகக் சொல்லப்பட்டிருக்கின்றன. இந்த விவரங்கள் எவ்வளவு முக்கியமானவையாக இருக்கின்றன என்பதற்கு ஒரு உதாரணம் 1 ராஜாக்கள் 6:1-ல் இருக்கிறது. எருசலேமில் ஆலயத்தைக் கட்டுகிற வேலையை சாலொமோன் ராஜா எப்போது ஆரம்பித்தார் என்று அதில் சொல்லப்பட்டிருக்கிறது. “இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த 480-வது வருஷத்தில் [479 முழு வருஷங்கள்], சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவான நான்காம் வருஷத்தில், சிவ் மாதத்தில் (அதாவது, இரண்டாம் மாதத்தில்) யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தை கட்ட ஆரம்பித்தார்.”
கி.மு. 1034-தான் சாலொமோன் ஆட்சிக்கு வந்த நான்காவது வருஷம் என்று பைபிள் சொல்கிறது. அந்த வருஷத்திலிருந்து 479 வருஷங்கள் நாம் பின்னால் போனால் கி.மு. 1513 வருகிறது. அந்த வருஷத்தில்தான் இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையானார்கள்.
ஆகஸ்ட் 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 ராஜாக்கள் 7
“இரண்டு தூண்கள் நமக்கு சொல்லும் பாடம்”
w13-E 12/1 பக். 13 பாரா 3
‘உங்களுக்கு மலைகளிலிருந்து செம்பு கிடைக்கும்’
எருசலேமில் ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு சாலொமோன் ராஜாவுக்கு எக்கச்சக்கமான செம்பு தேவைப்பட்டது. அதில் நிறைய செம்பு, தாவீது ராஜா சீரியர்களை கைப்பற்றியதால் கிடைத்தது. (1 நாளாகமம் 18:6-8) ஆலயத்தில், “செம்புக் கடல்” என்று அழைக்கப்பட்ட ஒரு பெரிய தண்ணீர்த் தொட்டி இருந்தது. அது 66,000 லிட்டர் கொள்ளளவுடன் 30 டன் எடையுள்ளதாக இருந்தது. அதிலிருக்கிற தண்ணீரைப் பயன்படுத்திதான் குருமார்கள் தங்களைச் சுத்தப்படுத்திக்கொண்டார்கள். (1 ராஜாக்கள் 7:23-26, 44-46) அதோடு, ஆலயத்தின் நுழைவு மண்டபத்துக்கு முன்பு இரண்டு பிரமாண்டமான செம்பு தூண்கள் செய்யப்பட்டிருந்தது. அதன் உயரம் 26 அடி (8 மீ.) இருந்தது. அந்தத் தூண்களுடைய உச்சியில் 7.3 அடி (2.2 மீ.) உயரத்தில் கும்பங்கள் வைக்கப்பட்டிருந்தன. அந்தத் தூண்களுக்கு உள்ளே வெற்றிடமாக இருந்தது. அந்தத் தூண்களுடைய சுவர் 3 இன்ச் (7.5 செ.மீ.) தடிமனாக இருந்தது. அதன் விட்டம் 5.6 அடி (1.7 மீ.) இருந்தது. (1 ராஜாக்கள் 7:15, 16; 2 நாளாகமம் 4:17) இந்தப் பொருள்களைச் செய்வதற்கு மட்டுமே எவ்வளவு செம்பு தேவைப்பட்டிருக்கும், இல்லையா?
it-1-E பக். 348
போவாஸ்
இடது பக்கம் இருந்த தூணுக்கு போவாஸ் என்று பெயர். அநேகமாக அதற்கு, “பலத்தோடு” என்று அர்த்தம். வலது பக்கம் இருந்த தூணுக்கு யாகீன் என்று பெயர். அதற்கு, “அவர் [அதாவது, யெகோவா] உறுதியாய் நிலைநாட்டுவாராக” என்று அர்த்தம். ஆலயத்தின் முன்னால் நின்று இந்தப் பெயர்களுடைய அர்த்தத்தை வலது பக்கத்திலிருந்து இடது பக்கம் வாசிக்கும்போது ஒருவருக்கு இந்த அர்த்தம்தான் கிடைக்கும்: ‘பலத்தோடு [ஆலயத்தை] அவர் [அதாவது, யெகோவா] உறுதியாய் நிலைநாட்டுவாராக.’—1ரா 7:15-21.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 263
குளிப்பது
தன்னுடைய மக்கள் சுத்தமாக இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். ஆலயத்தில் அவர் செய்த ஏற்பாடுகளிலிருந்து இதை நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. “செம்புக் கடல்” என்று அழைக்கப்பட்ட பெரிய தொட்டியிலிருந்த தண்ணீரைப் பயன்படுத்தி குருமார்கள் அவர்களுடைய கைகளையும் கால்களையும் கழுவினார்கள். (2நா 4:2-6) பாவப் பரிகார நாளன்று, தலைமைக் குரு இரண்டு தடவை குளிக்க வேண்டியிருந்தது. (லேவி 16:4, 23, 24) வழிபாட்டுக் கூடாரம் இருந்த சமயத்தில்கூட (1) போக்கு ஆட்டை முகாமுக்கு வெளியில் எடுத்துக்கொண்டு போனவர்கள்... (2) பலி செலுத்திய மிருகங்களின் மீதி பாகங்களை முகாமுக்கு வெளியில் எடுத்துக்கொண்டு போனவர்கள்... (3) சிவப்பான இளம் பசுவைப் பலி கொடுப்பதற்காக முகாமுக்கு வெளியில் எடுத்துக்கொண்டு போனவர்கள்... திரும்பவும் முகாமுக்குள் வருவதற்குமுன் குளிக்க வேண்டியிருந்தது. அதோடு, அவர்களுடைய உடைகளையும் துவைக்க வேண்டியிருந்தது.—லேவி 16:26-28; எண் 19:2-10.
ஆகஸ்ட் 29–செப்டம்பர் 4
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 ராஜாக்கள் 8
“மக்கள்முன் சாலொமோன் செய்த உள்ளப்பூர்வமான ஜெபம்”
w09 11/15 பக். 9 பாரா. 9-10
உங்கள் ஜெபங்களுக்கு மெருகூட்ட பைபிளைப் படியுங்கள்
9 கடவுள் நம் ஜெபங்களுக்குப் பதிலளிக்க வேண்டுமானால் அவற்றை இருதயப்பூர்வமாகச் செய்ய வேண்டும். சாலொமோன் செய்த இருதயப்பூர்வ ஜெபம், 1 இராஜாக்கள் 8-ஆம் அதிகாரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த ஜெபத்தை அவர் பொ.ச.மு. 1026-ல், யெகோவாவின் ஆலய அர்ப்பண விழாவின்போது திரளான மக்களுக்குமுன் செய்தார். ஒப்பந்தப் பெட்டி மகா பரிசுத்த ஸ்தலத்திற்குள் வைக்கப்பட்ட பிறகு, யெகோவாவுடைய மேகம் அந்த ஆலயத்தை நிரப்பியபோது, சாலொமோன் அவரைப் புகழ்ந்தார்.
10 சாலொமோனின் ஜெபத்தைப் படித்துப் பாருங்கள், அதில் இருதயத்தைப் பற்றி அவர் சொல்கிற வசனங்களைக் கவனியுங்கள். ஒரு நபருடைய இருதயத்தை யெகோவா மட்டுமே அறிந்திருக்கிறார் என்று சாலொமோன் சொன்னார். (1 இரா. 8:38-40) பாவம் செய்த ஒருவர், ‘முழு இருதயத்தோடு கடவுளிடத்தில் திரும்பினால்’ அவர் மன்னிக்கப்படுவாரென அதே ஜெபம் காட்டுகிறது. அதோடு, கடவுளுடைய மக்கள் சத்துருக்களால் சிறைபிடிக்கப்படுகையில் அவர்கள் முழு இருதயத்தோடு ஜெபம் செய்தால், அந்த ஜெபத்தைக் கடவுள் கேட்பார் எனவும் காட்டுகிறது. (1 இரா. 8:48, 58, 61) அப்படியானால், நீங்களும் இருதயப்பூர்வமாக ஜெபம் செய்ய வேண்டும்.
உத்தம கைகளை உயர்த்தி ஜெபியுங்கள்
7 நாம் மற்றவர்கள் சார்பில் ஜெபம் செய்தாலும்சரி, தனியாக ஜெபம் செய்தாலும்சரி, பணிவோடு செய்யவேண்டும் என்பதே மனதில் வைக்கவேண்டிய முக்கிய வேதாகம கொள்கை. (2 நாளாகமம் 7:13, 14) எருசலேமில் யெகோவாவின் ஆலய பிரதிஷ்டையின்போது சாலொமோன் ராஜா மற்றவர்கள் சார்பில் பணிவோடு ஜெபம் செய்தார். உலகில் அதுவரை கட்டப்பட்டிராத அழகு கொஞ்சும் பிரமாண்டமான கட்டிடம் ஒன்றை அப்போதுதான் சாலொமோன் கட்டிமுடித்திருந்தார். ஆனாலும் அவர் பணிவோடு இவ்வாறு ஜெபம் செய்தார்: “தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?”—1 இராஜாக்கள் 8:27.
8 மற்றவர்கள் சார்பில் நாம் ஜெபம் செய்யும்போது, சாலொமோனைப் போலவே பணிவைக் காட்ட வேண்டும். போலி பக்தியைத் தவிர்த்து, குரலில் பணிவைக் காட்ட வேண்டும். வார்த்தை ஜாலங்களோடும், நாடக பாணியிலும் உள்ள ஜெபங்கள் பணிவான ஜெபங்கள் அல்ல. அவை ஜெபம் செய்கிறவரிடம் நம் கவனத்தை ஈர்க்குமே ஒழிய, கடவுளிடம் அல்ல. (மத்தேயு 6:5) ஜெபத்தில் நாம் என்ன சொல்கிறோம் என்பதுகூட பணிவை வெளிப்படுத்தும். பணிவோடு ஜெபம் செய்யும்போது, நாம் விரும்பும் விதத்தில் சில விஷயங்களை கடவுள் செய்தே ஆகவேண்டும் என்ற தோரணையில் வற்புறுத்த மாட்டோம். அதற்கு பதிலாக, யெகோவாவின் பரிசுத்தமான விருப்பத்திற்கு ஏற்றாற்போல் செய்யும்படி நாம் அவரிடத்தில் விண்ணப்பம் செய்வோம். சங்கீதக்காரன் கடவுளிடத்தில் மன்றாடியபோது, சரியான மனநிலையை வெளிக்காட்டினார்: “யெகோவாவே, இப்போது தயவாய் காப்பாற்றி அருளும்! யெகோவாவே, இப்போது தயவாய் வெற்றியைத் தந்தருளும்!”—சங்கீதம் 118:25, NW; லூக்கா 18:9-14.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 1060 பாரா 4
பரலோகம்
தங்குவதற்கு யெகோவாவுக்கென்று ஒரு குறிப்பிட்ட இடம் இல்லை என்று சாலொமோன் சொல்லவில்லை. அதேசமயத்தில், யெகோவா தூணிலும் இருக்கிறார் துரும்பிலும் இருக்கிறார் என்றும் அவர் சொல்லவில்லை. அது நமக்கு எப்படித் தெரியும்? அடுத்து வருகிற வசனங்களில், “நீங்கள் குடியிருக்கிற பரலோகத்திலிருந்து . . . கேளுங்கள்” என்று அவர் சொன்னார். இது நம்முடைய கண்ணுக்குத் தெரிகிற வானத்தையும் தாண்டி இருக்கிற ஒரு இடம். அங்குதான் பரலோகத்துக்குரிய உடலில் இருக்கிற தேவதூதர்கள்கூட இருக்கிறார்கள்.—1ரா 8:30, 39.