உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 4/8 பக். 7-8
  • ஏய்ட்ஸ்-ம் ஒழுக்கமும்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஏய்ட்ஸ்-ம் ஒழுக்கமும்
  • விழித்தெழு!—1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஒழுக்கங்களில் ஒரு மாற்றம்?
  • எய்ட்ஸ் ஏன் இவ்வளவு பரவலாகப் பரவியிருக்கிறது?
    விழித்தெழு!—1989
  • எய்ட்ஸ் வளரிளமைப் பருவத்தினருக்கு ஒரு பேராபத்து
    விழித்தெழு!—1992
  • எய்ட்ஸ்—நான் ஆபத்திலிருக்கிறேனா?
    விழித்தெழு!—1993
  • அபாயத்தில் இருப்பது யார்?
    விழித்தெழு!—1987
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 4/8 பக். 7-8

ஏய்ட்ஸ்-ம் ஒழுக்கமும்

1980-ம் ஆண்டுகளில் இவ்விதமாக ஏய்ட்ஸ் பெருவாரியாக பரவுவதற்கு 1960 மற்றும் 1970 ஆண்டுகளில் என்ன நடந்தது? எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற பாலின சுதந்திரத்தின் “புதிய ஒழுக்கம்” ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதைக்குறித்து எழுதுகையில், நியு யார்க்கில் குறிப்பிட்ட ஒரு பத்தியில் தொடர்ந்து எழுதிவரும் ரே கெரிஸன் பின்வருமாறு எழுதினார்:

“திடீரென்று ஏய்ட்ஸ் பெருவாரியாக பரவியிருப்பது, ஒரு வேகமாக போகும் விரைவு வண்டியை விட கீழ் நோக்கி வேகமாக போய்கொண்டிருக்கும் அதன் மதிப்பீடுகளைச் சமுதாயம் மறு ஆய்வு செய்ய அதனைத் தூண்ட வேண்டும்.

பல வருடங்களாக அரசியல்வாதிகளும் நீதிமன்றங்களும் குடிமக்களின் சொந்த விஷயங்கள் அவர்களுக்குரியதே, அதில் எவரும் தலையிடக்கூடாது என்ற திகைக்க வைக்கும் வாதத்தைப் பிரகடனம் செய்து வந்திருக்கிறார்கள்.

“சொந்த விஷயங்களைப் பற்றிய இந்த மசோதாவின்படி, அதில் ஈடுபடுகிறவர்களின் ஒப்பந்தம் இருந்தால், அது சரி என்பதாக அர்த்தமாகிறது. அது உண்மையில் சொல்வது என்னவென்றால், மற்றவர்களுடைய உரிமைகளின் மீது வந்து மோதாத பட்சத்தில் இரண்டு அல்லது அதிகமான ஆட்கள் அவர்கள் விரும்பியதைச் செய்யலாம்.

“இவ்விதமாக ஒழுக்கக் கட்டுப்பாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக நீக்கப்பட்டு, கட்டுபாடற்ற நடத்தைக் கட்டவிழ்ந்துவிடப்பட்டு, 30 வருடங்களுக்கு முன் நினைத்துங்கூட பார்க்கப்படாத தராதரங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டன.

“இப்பொழுது இதன் கசப்பான அறுவடை நம்மீது வந்திருக்கிறது.”

ஆண்புணர்ச்சிக்காரர்கள் குறிப்பாக வேதனைகளை அனுபவிக்கிறார்கள். அவர்களுடைய வரையரையற்ற பாலுறவும் அவர்கள் மத்தியில் சாதாரணமாக இருக்கும் பாலுறவுப் பழக்கங்களுமே இதற்குக் காரணமாகும். சயன்ஸ் டைஜஸ்ட் பின்வருமாறு சொல்லுகிறது: “நோய்க் கட்டுப்பாட்டு மையம் ஒன்றின் ஆராய்ச்சி, ஆய்வு செய்யப்பட்ட ஏய்ட்ஸ் நோயாளிகள் அவர்களுடைய வாழ்நாளில் சாராசரியாக 1100 துணைகளோடுப் பாலுறவு வைத்துக்கொண்டிருந்ததைக் காண்பித்தது.”

ஆனால் வரையறையற்ற பாலுறவுகளில் ஈடுபடுவது ஆண்புண்ர்ச்சிக்காரர்கள் மட்டுமல்ல—பொதுவாக சமுதாயமே எதுவும் சரி என்ற ஒழுக்க தாராதரத்தை ஏற்றுக்கொண்டுவிட்டிருக்கிறது. இதன் விளைவாக, சமுதாய சுகாதார ஹார்வர்ட் பள்ளியின் முதல்வர் ஹார்வே V. பைன்பெர்க், ஏய்ட்ஸ் “மெதுவாக ஆனால் தடை செய்யப்பட முடியாத வகையில், எதிர்பாலினரோடு உறவுகொள்ளும் சமுதாயத்தினுள்ளும் பரவி வருகிறது” என்பதாகச் சொல்லுகிறார்.

ஆப்பிரிக்காவில் குறிப்பாக இந்த நோய் மக்கள் அனைவரையும் தாக்கி வருகிறது. கடந்த நவம்பரில், தி நியு யார்க் டைம்ஸின் மருத்துவ நிருபர் லாரன்ஸ் K. அல்ட்மேன் பின்வருமாறு எழுதினார்: “ஆப்பிரிக்காவில், எதிர் பாலாரோடு உறவு கொள்ளும் ஆட்களுக்குங்கூட ஏய்ட்ஸ் பரவி வருவதாகத் தெரிகிறது. இவ்விடத்து ஆராய்ச்சியாளர்களின்படி, ஆண்களைத் தாக்குவது போலவே அது பெண்களையும் தாக்குகிறது.”

ஒரு ஆணிடமிருந்து ஏய்ட்ஸை ஒரு பெண் பெற்றுக்கொள்வாளேயானால், இருவருமே இதனால் பாதிக்கப்படுவதை உணராதிருக்கலாம். ஆனால் ஏய்ட்ஸ் கிருமிகளுள்ள தாய்மார்களுக்குப் பிறக்கும் அப்பாவிக் குழந்தைகள் இதற்குச் சில நேரங்களில் பலியாகிவிடுகிறார்கள். விலைமாதர்களோடு பாலுறவுக்கொள்ளும் ஆண்களுக்கும் இந்த நோய் வரலாம்.

எல்லா இடங்களிலும் ஜனங்கள் பயந்து கொண்டிருக்கிறார்கள். என்ன நடக்கும்?

ஒழுக்கங்களில் ஒரு மாற்றம்?

“இது பாலுறவுப் புரட்சியை ஒரு முடிவுக்குக் கொண்டுவரும்” என்பதாக ஐக்கிய மாகாணங்களில் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் டாக்டர் டோனால்ட் ப்ரான்ஸிஸ் முன்னறிவிக்கிறார். அவர் சொல்லுகிற விதமாகவே, “தோல் நோயையும் கல்லீரல் அழற்சியையும் ஒருவாறு ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இதை அவ்விதமாக ஏற்றுக்கொள்ள முடியாது.”

நோய்க் கட்டுப்பாடு மையத்தின் டாக்டர் வால்டர் R. டெளடில் மேலுமாக பின்வருமாறு சொல்லுகிறார்: “நாம் அனைவரும் நம்முடைய வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.” டெளடிலின் பிரகாரம், “இது ஒழுக்கத்துக்குரிய பிரச்னை இல்லை. ஆனால் இது தீங்கிழைக்கும் நோய்க் கிருமிகளின் உண்மையாக இருக்கிறது.”

என்றபோதிலும் இது தீங்கிழைக்கும் நோய்க் கிருமிகளின் உண்மையைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது—ஒழுக்கம் இதில் நிச்சயமாகவே உட்பட்டிருக்கிறது. சமுதாயம் புறக்கணிக்க தெரிந்து கொண்டிருக்கும் ஒழுக்க தராதரங்களை ஏற்படுத்தியவன் மனிதன் அல்ல. உயர்தரமான புத்திக்கூர்மையுள்ள ஒரு நபர் அதைப் பதிவு செய்து வைக்கும்படியாகச் செய்திருக்கிறார். நாம் நம்முடைய பேரரசராக அவரை ஏற்றுக்கொள்வது, அவைகளுக்குக் கீழ்ப்படிந்திருக்க நமக்கு உதவி செய்யும்.

ஆனால் என்ன தராதரங்களை அல்லது நடத்தை விதிகளை அவர் கொடுத்திருக்கிறார்? அவைகளுக்குக் கீழ்ப்படிவது நம்மை எவ்விதமாகப் பாதுகாக்கும்? (g86 4/22)

[பக்கம் 8-ன் பெட்டி]

ஏய்ட்ஸ் பரவுவதைத் தடைச்செய்தல்

டெட்ராய்ட் நியூஸில் எழுதுகையில் ஜூன் ப்ரெளன் இது எவ்விதமாக கூடிய காரியம் என்பதை விளக்கினார்: “தேசத்தின் பாலுறவுப் பழக்கங்களில் ஒரு மாற்றமே அதிகரிப்பின் வேகத்தைத் தீவிரமாக குறைக்கக்கூடிய ஒரு நிவாரணமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரோக்கியமுள்ள ஒரு நபரை வாழ்க்கைத் துணையாகக் கொண்டு மரணம் வரையாக அவருக்கு உண்மையுள்ளவராக இருந்தால் ஏய்ட்ஸ் மறைந்தே போய்விடும். இது பைபிள் போதகம் போல தோன்றக்கூடும். ஆனால் பாலுறவினால் கடத்தப்படும் புதிய நோய்கள் முன்னதைவிட அதிக கொடியதாக தொடர்ந்து வந்துகொண்டிருக்கையில், பொதுவாக அசட்டைச் செய்யப்படும் பைபிளின் பாலுறவுச் சம்பந்தமான பற்றுமாறா உறுதிப்பாடு திடீரென்று நவீன உடல்நல நோக்குநிலையிலிருந்து அறிவுள்ளதாகத் தோன்றுகிறது.”

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்