நான்கு வண்ண அச்சிடும் முறையை நெருங்கிப்பார்த்தல்
ஜனவரி 8, 1987 இதழ் தொடங்கி பெரும்பாலான ஆங்கில மொழி “விழித்தெழு!” பதிப்புகள் மற்றும் சில மற்ற மொழிப்பதிப்புகள் நிரந்தரமாக நான்கு-வண்ண அச்சிடுதல் என்பது மூன்று அடிப்படை வண்ணங்களுடன் கருப்பையும் சேர்த்து இயற்கை வண்ணங்களை நகலாக்கும் செய்முறை. அச்சடிக்கப்பட்ட தாளில் எப்படி நான்கு-வண்ண படங்கள் உண்டாக்கப்படுகின்றன? என்ன தொழில் நுட்பம் இப்பொழுது உபயோகிக்கப்படுகிறது? நியுயார்க்கிலுள்ள புரூக்லினில் உவாட்ச் டவர் சொஸயிட்டியின் காரியாலயத்தில் நான்கு-வண்ண அச்சிடும் முறையில் என்ன உட்பட்டிருக்கிறது என்பதில் ஒரு பகுதியை பின்வரும் கட்டுரை விவரிக்கிறது.
பத்திரிக்கைகளிலும் நாளேடுகளிலும் படங்களை அச்சடித்தல் ஒரு காட்சிப்போலியை உண்டாக்குகிறது. உதாரணமாக பரவலாக உபயோகிக்கப்படும் ஆஃப்செட் (offset) அச்சிடும் முறையினால் ஒரு கருப்பு-வெள்ளை புகைப்படம் அல்லது படத்தின் பிரதி எப்படி உண்டாக்கப்படுகிறது என்பதைக் கவனிக்கலாம்.
கருப்பு வெள்ளையில் அச்சிடுவது ஓர் அச்சுமையை உபயோகிக்கிறது-கருப்பு. இருந்தபோதிலும் நீங்கள் ஒரு கருப்புவெள்ளை படத்தை உற்றுநோக்கும்போது சாம்பல் சாயையும் கண்களுக்குத் தென்படுகிறது. ஓர் அச்சிடப்பட்ட தாளில் அநேகவிதமான சாம்பலின் சாயைகளோடுகூட கருப்பும் எப்படி உண்டாக்கப்படுகிறது? புள்ளிகள் மூலம்.
புள்ளிகளா? ஆம், மையப்புள்ளிகள், நீங்கள் சக்திவாய்ந்த உருப்பெருக்கக் கண்ணாடி மூலம் ஒரு படத்தை உற்று கவனிக்கையில் அந்தப் படம் அநேக சிறிய புள்ளிகளால் உண்டாயிருப்பதைப் பார்ப்பீர்கள். அங்கே ஓர் ஓவியரின் படத்தின் அல்லது ஒரு புகைப்படத்தின் தொடர்ச்சியான சாயை இனிமேலும் காணப்படுவதில்லை. தாளில் அச்சிடப்பட்ட ஒரு படம் புள்ளிகளாக மாற்றப்படவேண்டும்.
புள்ளிகள் எப்படி உண்டாக்கப்படுகின்றன? படம் அல்லது புகைப்படம் அலகிடு இயந்திரம் (scanner) என்று அழைக்கப்படும் ஒரு பெரிய இயந்திரத்தின் மூலமாக சிறிய, தெளிவாக வரையறுக்கப்பட்ட புள்ளிகளின் வேலைப்பாடாக மறுபடியும் நிர்மாணிக்கப்படுகிறது. அலகிடு இயந்திரம் ஒரு கணிப்பொறியைக் கொண்டிருக்கிறது. அது சாயைகளை மின்னணுவியல் முறையில் பகுத்தறிந்து பலதரப்பட்ட அளவிலான புள்ளிகளை உண்டுபண்ணுகிறது. இந்தப் புள்ளிகளைப் புகைப்படத் தகட்டில் பதிவாக்குவதற்கு ஒரு லேசர் ஒளிக்கற்றை உபயோகிக்கப்படுகிறது இப்டியாக புள்ளிகளின் அளவை மாற்றுவதன் மூலம் சாம்பலின் அநேக சாயைகள் பெறப்படுகின்றன. அந்தப் புள்ளிகள் மையை ஏற்றுக்கொண்டபிறகு அவைகள் அச்சுத் தகடுகளிலிருந்து காகிதத்திற்கு மாற்றப்படுகின்றன.
வெள்ளைக் காகிதத்தில் அச்சிடும்போது, சாயை இலேசானதாக இருந்தால் புள்ளிகள் சிறியதாயிருக்கும். ஆழ்ந்த சாயைகள் பெரிய அளவிலான புள்ளிகளால் உண்டாக்கப்படும். ஆகவே மூலப் புகைப்படம் அல்லது படத்தில் தொடர்ச்சியாகக் கண்ணுக்குத் தெரிகிற கருப்பு மற்றும் சாம்பல் சாயைகளைப் புள்ளிகள் கண்களை ‘ஏமாற்றுவதினால்’ உண்டாக்குகின்றன.
வண்ணப்படப் பிரதியை உண்டாக்குவது அதிகச் சிக்கலானது
முழுவண்ணப் பிரதி உண்டாக்குவது கருப்பு வெள்ளையை விட அதிகச் சிக்கலானது. இங்கே மூன்று அடிப்படை வண்ணங்கள் மற்றும் கருப்பு உபயோகிக்கப்படுகிறது: (1) சியான் (பச்சை கலந்த நீலம்) (2) மெஜென்ட்டா (மங்கலான கருஞ்சிவப்பு) (3) மஞ்சள்; மற்றும் (4) கருப்பு, இந்த நான்கு மைகளையும் ஏந்திய புள்ளிகள் அச்சு இயந்திரத்தால் காகிதத்தின் மேல் பாளங்களாகச் சேர்க்கப்படுவதன் மூலம் அச்சிடப்பட்ட காகிதத்தில் உங்கள் கண்கள் காணும் பலதரப்பட்ட வண்ணங்கள் அச்சுப்பிரதியில் உண்டாக்கப்படுகின்றன.
இருப்பினும், முதலாவது மூலப்படம் அல்லது புகைப்படத்திலிருந்து பிரதான வண்ணங்கள் ஒவ்வொன்றையும் மற்றும் கருப்பையும், ஒவ்வொரு வண்ணத்தின் இலேசான மற்றும் ஆழ்ந்த சாயைகளைக் குறிக்கும் புள்ளிகளின் குழுக்களாகப் பிரிப்பது அவசியமாயிருக்கிறது. ஆனால் அச்சிடப்பட்ட தாளில் நீங்கள் காணும் வித்தியாசமான மற்ற எல்லா வண்ணங்களையும் இந்த நான்கு வண்ணங்கள் எப்படி உண்டாக்கும்?
நம்முடைய பத்திரிக்கையில் நம்மிடம் இருக்கும் ஒரு பச்சை புல்வெளியின் புகைப்படத்தின் பிரதியை உண்டாக்க விரும்புகிறோம் என்று வைத்துக்கொள்வோம். அச்சிடும்போது காகிதம் அச்சு இயந்திரத்திலுள்ள நான்கு பிரிவுகளினூடே கடந்து செல்லும். அப்போது ஒவ்வொரு பிரிவும் ஏதோ ஒரு வண்ணத்தைக் கூட்டும், ஒரு தொகுதி அச்சுத்தகடுகளில் உள்ள புள்ளிகள் சியான் மையை எடுத்துக்கொண்டு அவைகளின் வடிவைக் காகிதத்திற்கு மாற்றுகிறது. அச்சு இயந்திரத்தின் நெடுகே காகிதம் அதிவேகத்தில் நகரும்போது, இன்னொரு தொகுதி புள்ளிகள் கொண்ட தகடுகள் மஞ்சள் மையை எடுத்துக்கொண்டு அவைகளின் முத்திரையைக் காகிதத்தின் மீது சியான் மற்றும் மஞ்சள் மைகளிலிருந்து பிரதிபலிக்கப்படும். ஒளி வெள்ளைக் காகிதத்துடன் சேர்த்து கண்ணுக்குப் பச்சை நிறமாகத் தோன்றுகிறது. நான்கு அச்சடிக்கும் பிரிவுகள் தங்கள் புள்ளிச் சேர்வுகளை நான்கு வண்ண மைகளில் இடும்பொழுது வானவில்லின் மற்ற வண்ணங்கள் விளைவடைகின்றன.
நமது உற்பத்தி வரிசை
அச்சிலிருந்து முழுமையான பொருள் வருவதற்கு வெகு முன்னமே அதிகவேலை செய்யப்பட வேண்டும் அச்சிடப்படவேண்டிய புகைப்படம் அல்லது ஓவியத்தின் பிலிம் (நெகட்டிவ்கள் அல்லது பாசிட்டிவ்கள்) தயாரிக்கப்படவேண்டும். இந்தப் பிலிம் அச்சு இயந்திரத்திற்கான அச்சுத் தகடுகளைத் தயாரிப்பதற்கு அடிப்படையாக இருக்கும்.
அச்சிடப்பட்ட பத்திரிகையின் ஒரு வண்ணப்பக்கம், மூன்று பிரதான வண்ணங்களுக்கு ஒவ்வொன்றும் மற்றும் கருப்புக்கு ஒன்றுமாக, குறைந்தது நான்கு துண்டு பிலிம்களைத் தேவைப்படுத்துகிறது. இந்தப் பிலிம் நம்முடைய லேசர் ஒளிக்கற்றையைக் கொண்டிருக்கும் அலகிடு இயந்திரத்தின் மூலமாக உண்டாக்கப்படுகிறது. அலகிடும் இயந்திரம் அச்சுப்பிரதி உண்டாக்கப்பட வேண்டிய புகைப்படத்தை அல்லது ஓவியத்தைப் பகுத்தாராய்ந்து பிம்பத்தை அதன் நினைவு மையத்தில் (memory) சேர்த்துவைக்கிறது.
அலகிடு இயந்திரம் பத்து அடி நீள (3 மீ) கடைசல் இயந்திரம் போன்றிருக்கிறது. அது வண்ணப்படம் உருளையில் சுற்றும்போது உருவிப்பார்க்கிற அதிக செறிவுள்ள ஒளிக்கற்றையைக் கொண்டிருக்கிறது. அது அலகிடும்போது, ஒளியானது பிரதிபலிக்கப்படுகிறது மற்றும் ஒளியியல் கருவிகள் மூலம் ஒவ்வொரு அடிப்படை வண்ணங்களுக்கும் ஒன்றாக மூன்று ஒளிப்பாதைகளாகப் பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஒளிப்பாதையையும் ஓர் அடிப்படை வண்ணத்தைத் தவிர மற்றவை எல்லாவற்றையும் தடைசெய்கிற ஒரு வடிபட்டியைக் கொண்டிருக்கிறது. மூலப்பிரதியில் கருப்பாகத் தோன்றும் பகுதிகளில் மூன்று அடிப்படை வண்ணங்களின் சமிக்கைகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் கருப்பு உண்டாக்கப்படுகிறது.
அலகிடு இயந்திரம் ஒரு கணிப்பொறியின் உதவியால் ஒவ்வொரு வண்ணத்தின் செறிவையும் மின்னணுச் சமிக்கைகளாக மாற்றுகிறது மற்றும் ஒரு மின்னணு “தடுப்பு” முறையின் மூலம் ஒத்த புள்ளிகளை விளைவிக்கிறது. அதன் பிறகு அவைகள் கணிப்பொறியின் நினைவு மையத்தில் சேர்த்துவைக்கப்படுகின்றன.
ஒருவேளை படமோ அலகிட இயந்திரத்தின் உருளையின் மேல் வளைப்பதற்கும் பெரிதாகவோ அல்லது விறைப்பாகவோ இருக்குமானால் என்ன செய்வது? அப்போது ஒரு வண்ணப் புகைப்படம் அல்லது நெகெட்டிவ் (35 மி.மீ அல்லது அதைவிடப் பெரிய அளவு) தயாரிக்கப்பட்டு உருளையின் மேல் பொருத்தப்படுகிறது. அலகிடு இயந்திரத்தால் பிம்பத்தை பெரிதாக்கவோ அல்லது சிறிதாக்கவோ முடியும்.
பக்கம் ஒழுங்கு செய்யும் நிலையம்
அடுத்தாக, கணிப்பொறியில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் பக்கம் ஒழுங்கு செய்யும் நிலையத்தில் காட்சிக்குக் கொண்டுவரப்படுகிறது. இந்த நிலையம் ஒரு விரல் பதி பலகையையும் (keyboard) ஒரு பெரிய தொலைக்காட்சி திரையைப் போன்ற ஒரு தகவல் பரப்பு மையத்தையும் (monitor) கொண்டிருக்கிறது. சில விரல்பதிபித்தான்களை அழுத்தும்போது இயக்குபவர் திரையில் படத்தைத் தோன்றச் செய்கிறார். மின்னணு முறை மூலமாக அவர் நிறச் சாயைகளில் தேவைப்படும் சரிப்படுத்துதல்களைச் செய்கிறார். விவரங்கள் இன்னும் தெளிவாக்கப்படலாம் அல்லது நீக்கப்படலாம்.
இந்த நிலையம் பல்வேறுபட்ட படங்களின் பாகங்களையும் ஒன்று சேர்த்த ஒரு படத்தையும் உருவாக்கக்கூடும். உதாரணமாக, ஒரு படத்திலிருந்து சூரிய அஸ்தமனம், இரண்டாவதிலிருந்து ஒரு மனிதன், மூன்றாவதிலிருந்து ஒரு வீடு ஆகியவற்றை ஒன்று சேர்த்து சூரிய அஸ்தமனத்தின்போது ஒரு மனிதன் வீட்டுக்கு முன்னால் இருப்பதைப்போன்ற ஒரு படத்தை உருவாக்கலாம்.
சரி செய்தல்களுக்குப் பிறகு மாதிரிப்படங்கள் (proofs) அல்லது பிலிம் தயாரிக்க படத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் மின்னணு சைகைகளைக் கணிப்பொறிமூலம் மற்ற இயந்திரங்களுக்கு அனுப்பப்படக்கூடும்.
மாதிரி வண்ணப் படங்கள் தயாரித்தல்
ஒரு மாதிரி வண்ணப்படம் தயாரிக்க மாதிரி வண்ணப்படம் உண்டாக்கும் கருவி சிவப்பு, பச்சை மற்றும் நீள ஒளிக்கற்றைகளை உபயோகிக்கிறது. இந்த மாதிரிப்படப் பொருள் நீங்கள் படங்களைப் பதனிட அனுப்புகையில் ஒரு புகைப்படக் கருவிக் கடையிலிருந்து நீங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளும் அதேவிதமான காகிதத்தால் ஆனது.
பல பணியாட்கள் மாதிரிப்படங்களை ஆராய்கிறார்கள். ஒருவேளை படத்திலிருக்கும் வானம் வேண்டி அளவு நீளமாக இல்லை-அதிகம் பச்சையாக உள்ளது என்று சிலர் உணரலாம். “கொஞ்சம் மஞ்சளை அங்கிருந்து எடுத்துவிடுங்கள்” என்று மற்றவர்கள் ஆலோசனை அளிக்கின்றனர். “ஆனால் பழக்கடையிலுள்ள வாழைப்பழங்கள் மஞ்சளாகவோ இருக்கவேண்டும்.” என்று இன்னொருவர் எச்சரிக்கிறார். ஆகவே வானத்திலிருந்து சிறிய மஞ்சளை எடுக்கவும், ஆனால், வாழைப்பழத்திலிருந்து அதை எடுக்காமலிருக்கவும் வண்ணச் சாயையில் சரிப்படுத்துதல்களைச் செய்ய வேண்டியிருக்கும். இதைச் செய்ய பக்கம் ஒழுங்கு செய்யும் நிலையத்திற்குத் திரும்புகிறோம். அங்கே இயக்குபவர் மாற்றங்களைச் செய்கிறார்.
நாம் இப்பொழுது அச்சிடப்போகும் படத்தின் ஓர் உண்மையான நகலைப் பெற்றிருக்கிறோம். இந்தப்படம் அங்கீகரிக்கப்பட்டவுடன் பிலிம் உண்டாக்க பக்கங்களை ஒழுங்குபடுத்துவதற்கு நேரம் வந்துவிட்டது என்று கணிப்பொறிக்கு அறிவிக்கிறோம்.
முடிவான உற்பத்திப் பொருள்
பிலிம் பதிவு செய்யும் கருவி லேசர் ஒளிக்கதிரைக் கொண்டிருக்கிறது. லேசர் ஒளிக்கதிர் சமிக்கைகளுக்குப் பிரதிபலித்து மின்னணுப் புள்ளிகளை நெகெட்டிவ் பிலிம்களின் மேல் வெளிப்டச் செய்கிறது. ஒவ்வொரு வண்ணத்திற்கும் தனியே ஒரு பிலிம் துண்டு தயாரிக்கப்படுகிறது. ஒரு பிலிம் மூலப்படத்தின் மெஜென்ட்டாவைக் குறிப்பிடும் புள்ளிகளைக் கொண்டிருக்கிறது; இரண்டாவது சியானைக் கொண்டிருக்கிறது; மூன்றாவது மஞ்சளைக் கொண்டிருக்கிறது. மற்றும் நான்காவது கருப்பைக் கொண்டிருக்கிறது. இந்தப் பிலிம்கள் பத்திரிக்கையில் தோன்றும் படத்தின் உண்மை அளவைக் கொண்டிருக்கின்றன.
படிக்கும் பகுதிகளில் மற்றும் படங்களின் முடிவான ஒன்று சேர்த்தல் ஓர் ஒளியூட்டப்பட்ட மேஜையின் மீது செய்யப்படுகிறது. நாம் இப்பொழுது படங்களைப் புள்ளிகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் துண்டு பிலிம்களை அவைகளின் சரியான அச்சிடும் வரிசையில் எடுத்துக் கொள்கிறோம். இந்தப் பிலிம்களின் அடுக்கு, பிம்பம் இணைப்பவரிடம் கொடுக்கப்படுகிறது. அவர் பிலிமின் தரத்தைப் பார்க்கிறார், மற்றும் ஒரு தனி பிளாஸ்டிக் தகட்டில் வார்த்தைகள் அல்லது படிக்கும் பகுதிகளை நெகெட்டிவ் வடிவில் சேர்க்கிறார். இந்த வேலையைச் செய்பவர்கள் உருப்பெருக்கக் கண்ணாடிகளை உபயோகிப்பதன் மூலம் ஒவ்வொரு வண்ணத்தின் பிலிமும் மற்றதின்மேல் மிகத்துல்லியமாகப் பொருந்துவதை நிச்சயப்படுத்திக் கொள்கிறார்கள். சரியாக இணைந்திராவிடில் படத்தின் அச்சிடும்போது படம் உருக்குலைந்துவிடும்.
நாம் இப்பொழுது ஒரு பத்திரிகை தயாரிப்பதற்கான படங்களையும் படிக்கும் பகுதிகளையும் சரியான இடங்களில் கொண்டிருக்கிறோம். நாம் இந்தப் பத்திரிக்கையின் எல்லா துண்டுகளின் இன்னொரு மாதிரிப் பிரதியை உண்டாக்குகிறோம். இது அங்கீகரிக்கப்பட்ட பிறகு நாம் நியூ யார்க்கிலுள்ள புரூக்ளின் மற்றும் வால்கில் தொழிற் சாலைகளின் அச்சுத்தகடு அறைகளுக்கு இந்தப் பொருட்களை அனுப்பக்கூடும்.
நகல்களின் கோவைகள் உலகிலுள்ள உவாட்ச் டவர் சொஸைட்டியின் மற்ற நான்கு-வண்ணம் அச்சிடும் கிளைகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஒவ்வொரு கிளையும் பிலிம்களிலிருந்து அச்சிடும் தகடுகளைத் தயாரிக்கிறது.
தகடு செய்யும் முறையில் அதிக செறிவுள்ள ஊதா மேற்கதிர் பிலிமின் ஊடே செலுத்தப்பட்டு படங்களும் வார்த்தைகளும் அச்சுத் தகட்டின் மேல் வெளியாக்கப்படுகின்றன. இந்தத் தகடு அலுமினியம் கலந்த கலப்பு உலோகம் மற்றும் இரசாயனப் பொருட்களால் மேற்பூச்சு கொடுக்கப்பட்டது. அச்சு உருளைகளின் மீது பொருத்தமாக வளைக்கப்படும் இந்தத் தகடுகள் எவ்வளவு பருமன் உடையவை? இது அச்சுகளுக்கு ஏற்ப மாறக்கூடியதாக இருக்கிறது. ஆனால் நம்முடைய புருக்லின் இயந்திரத்திற்கு தகடுகளின் பருமன் 8/ 1000 அங்குலம் மட்டுமே! நியூ யார்க் நகரத்திற்கு வெளியே உள்ள நம்முடைய உவாட்ச்டவர் பண்ணை ஆலைகளில் அச்சு இயந்திரங்கள் இன்னும் பெரியவையாக இருப்பதால் தகடுகளின் பருமனும் அதிகரிக்கிறது.
அச்சுத்தகடுகள் அச்சு இயந்திரத்தின்மேல் சரியான வண்ண வரிசையில் வைக்கப்பட்டு இப்பொழுது பத்திரிக்கையை அச்சிடுவதற்குத் தயாராக இருக்கின்றன. அச்சு இயந்திரத்தின் உருளைகள் சுற்றுகையில் ஒவ்வொரு தகடும் அதனுடைய மையை அந்த மையின் தனிப்பட்ட கொள் கலத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது. உலோகத் தகட்டிலிருந்து மையானது ரப்பர் தகடு அல்லது விரிப்புப் போர்த்தப்பட்ட ஓர் உருளைக்கு மாற்றப்பட்டு அது அந்த மையை முறைப்படி காகிதத்திற்கு மாற்றுகிறது.
நம்முடைய வேலை இன்னமும் முடிவை எட்டவில்லை. நான்கு மைகளையும் ஒன்றன்மேல் ஒன்றாக சுமத்தும்போது ஓர் ஒட்டும் கலவை உண்டாகிறது. அது விரைவாக உலரவைக்கப்படவேண்டும் ஆகவே காகிதம் ஓர் அச்சு இயந்திரத்தின் ஒரு கோடியில் உள்ள அதிவேக வெப்பக் காற்று உலர்த்தும் இயந்திரம் வழியாகச் செல்கிறது. உயர் வெப்பம் மையை விரைவாக உலர்த்துகிறது. பிறகு வெப்பமூட்டப்பட்ட காகிதம் தண்ணீரால் குளிரூட்டப்படும் உருளைகளின் மேல் பாய்ந்து செல்கிறது. அது வெப்பத்தைக் குறைத்து மையைக் கெட்டியாக்குகிறது.
வண்ண வரம்புகள்
இந்தச் செய்முறை ஒரு மூலப்படம் அல்லது புகைப்படத்தின் வண்ணங்களை எவ்வளவு நன்றாக பிரதி செய்கிறது? மனிதனின் கண்கள் காணுவதை எந்த இயந்திரமும் துல்லியமாக மீண்டும் உண்டாக்க முடியாது மனிதனின் கண் ஐம்பது இலட்சத்திலிருந்து ஒரு கோடிவரையிலான வண்ண பேதங்களைப் பார்க்கக்கூடும்! ஆகவே நாம் மூலப்படத்தின் பிரகாசமான வெள்ளையை மறுபடியும் அதேமாதிரி உண்டாக்க முடியாது.
இன்னொரு முக்கியமான அம்சமானது உபயோகிக்கப்படும் காகிதத்தின் தரம், அதன் இயைபு, மற்றும் அந்தக் காகிதத்தின் மேல் மைகள் எவ்வளவு நன்றாக ஏற்றப்பட்டிருக்கிறது என்பதைப் பொருத்து வண்ணத்தெளிவு வரையறுக்கப்படுகிறது. விழித்தெழு! மற்றும் காவற்கோபுரம் பத்திரிக்கையின் காகிதத் தரம் விலையைக் கருத்தில் கொண்டு வரம்புக்கு உட்பட்டிருக்கிறது. ஏனென்றால், மட்டுப்படுத்தப்பட்ட பணம் உடையவர்கள் உட்பட பூமியெங்கும் உள்ள இலட்சக்கணக்கானோர் இவைகளை எளிதில் வாங்குவதற்கு இந்தப் பத்திரிக்கைகளின் விலை எவ்வளவு குறைவாக இருக்கமுடியுமோ அவ்வளவு குறைவாக இருக்க விரும்புகிறோம்.
நம்முடைய வேலை இலாபத்தை எதிர்பார்ப்பதில்லை என்பதாலும் கூட வாசகர்களுக்கு விலை மலிவாக்கப்படுகிறது. விலை மலிவுக்கு மற்றும் ஒரு காரணம், இந்தப் பத்திரிகைகளை உற்பத்தி செய்கிற உவாட்ச் டவர் சொஸைட்டியின் கிளைகளின் ஆயிரக்கணக்கான வேலையாட்கள் எல்லாரும் தாங்களாகவே முன்வந்து வேலை செய்யும் முழுநேர ஊழியக்காரர்கள், அவர்கள் தங்க இடமும் உணவும் மற்றும் செலவுக்காக மாதந்தோறும் ஓர் சிறு தொகையும் மட்டுமே பெற்றுக்கொள்கிறார்கள்.
முயற்சி தகுதியுள்ளது
சம்பந்தப்பட்ட பொருளடக்கத்தை எழுதுவதிலிருந்து, அச்சிட்டு அதை அவருடைய வீட்டுக்குக் கொண்டுவரும் வரையிலும், உட்பட்டிருக்கும் பேரளவிலான வேலைக்கும் தொழில் நுட்பத்திற்கும் ஒரு பத்திரிக்கையை முழு வண்ணத்தில் பார்க்கிற சாதாரணமான நபர் முதலில் போற்றுதலை அளிக்காமல் இருக்கலாம். உண்மையில் ஒரு பத்திரிகையை அச்சுக்கு ஆயத்தமாக்குவதற்கு, ஓர் ஆங்கில விழித்தெழு! போன்று ஒரு மொழியில் தேவைப்படுகிற சில ஆயிரக்கணக்கான பிரதிகளானாலும் சரி அல்லது இலட்சக்கணக்கான பிரதிகளைக் கொண்ட காவற்கோபுரம் பத்திரிகையானாலும் சரி ஏறக்குறைய ஒரே அளவு முயற்சி தேவைப்படுகிறது.
ஆனாலும் இந்த முயற்சி தகுதியுள்ளது. இயற்கை வண்ணம் அச்சிடப்பட்டப் பொருளை அதிக அக்கறையூட்டுவதாயும் கவர்ச்சியுள்ளதாயும் ஆக்குவதால் வாசிக்க ஊக்குவிக்கிறது. நம்முடைய சிருஷ்டிகர் வண்ணத்தில் பார்க்க நம்மைப் படைத்திருப்பதால் நாம் வண்ணத்திற்குச் சாதகமான முறையில் பிரதிபலிக்கிறோம் என்பது வெளிப்படை....ஆகவே ஆங்கில விழித்தெழு! பத்திரிகையை நான்கு வண்ணத்தில் அச்சிடும் இந்த முன்னேற்றப்படி விரும்பத்தக்கதே நம்முடைய அச்சிடும் முறைகளைத் தொடர்ந்து எப்படி விருத்தி செய்யலாம் என்று கற்றுக் கொண்டிருக்கையில், நம்முடைய பத்திரிகைகளை இன்னும் அதிக பயனுள்ளவையாகவும் அனுபவித்துக் களிக்கக் கூடியவையாகவும் ஆக்க நாம் அவைகளின் தரத்தைத் தொடர்ந்து மேம்படுத்துவோம். (g87 1/8)
[பக்கம் 21-ன் படங்கள்]
இயக்குபவர் அலகிடு இயந்திரத்தைத் தயார் நிலையில் வைக்கிறார்
இடைச்செருகு: படத்தின் பெரிதாக்கப்பட்ட பாகம்
[பக்கம் 22-ன் படங்கள்]
பக்கம் ஒழுங்குசெய்யும் நிலையத்தில் இயக்குபவர்
[பக்கம் 23-ன் படங்கள்]
மாதிரி வண்ணப்படங்களை மூலப்படத்துடன் ஒப்பிட்டுப்பார்த்தல்