உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g94 9/22 பக். 20-21
  • ஒரு பெரும்கனவு நனவானது!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஒரு பெரும்கனவு நனவானது!
  • விழித்தெழு!—1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • காற்றில் மிதக்கும் அச்சு இயந்திரங்கள்!
  • முழு-வர்ண பத்திரிகைகளுக்கான திளைப்புடன்கூடிய பிரதிபலிப்பு
  • எஜமானுடைய சொத்துக்களை பராமரித்தல்
    நம் ராஜ்ய ஊழியம்—1998
  • அன்புக்கும் விசுவாசத்துக்கும் கீழ்ப்படிதலுக்கும் ஓர் அத்தாட்சி
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2005
  • நான்கு வண்ண அச்சிடும் முறையை நெருங்கிப்பார்த்தல்
    விழித்தெழு!—1988
  • தடையுத்தரவின்கீழ் இருக்கையில் பைபிள் பிரசுரங்களை அச்சடித்தல்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
மேலும் பார்க்க
விழித்தெழு!—1994
g94 9/22 பக். 20-21

ஒரு பெரும்கனவு நனவானது!

நைஜீரியாவிலுள்ள விழித்தெழு! நிருபர்

பிப்ரவரி 9, 1994 அன்று, 500-க்கும் அதிகமான சாட்சிகள் நைஜீரியாவில் உள்ள பெத்தேலில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது பரிமாறுபவர்கள் இனிப்புப் பண்டமாக ஐஸ்க்ரீமை சக்கர வண்டிகளில் வைத்துத் தள்ளிக்கொண்டுவந்தனர். “என்ன விசேஷம்?” வியப்பில் சிலர் சத்தமாக கேட்டனர். “ஐஸ்க்ரீம் மட்டுமல்ல, ஆனால் வனிலா, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, மற்றும் பிஷ்டாச்சியோ என்று இவ்வளவு விதவிதமாக வருகிறதே!”

“நான்கு-வர்ண ஐஸ்க்ரீம்! இதற்கு ஒரு விசேஷ முக்கியத்துவம் இருக்கிறது,” என்று அறிவித்தார் மதிய உணவு வேளையில் தலைமை தாங்கியவர். “நான்கு-வர்ண [முழு-வர்ண] அச்சடிப்புக்கு நாம் மாற்றியதைக் கொண்டாடுவதற்காகத்தான் இது!”

அதைத் தொடர்ந்து வந்த இடிமுழக்கம் போன்ற கைத்தட்டல் ஏதோ சாப்பாட்டு அறையில் இருந்த ஐஸ்க்ரீமுக்காக மட்டுமல்ல. அது தொழிற்சாலையில் உள்ள புதிய அச்சு இயந்திரங்களின் மாற்றத்திற்குப் போற்றுதலைத் தெரிவிப்பதற்காக இருந்தது. அவை ஏற்கெனவே காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளை முழு வர்ணத்தில் அச்சடிக்கத் தொடங்கியிருந்தன. முழு-வர்ண அச்சடிப்பு இப்பொழுது உலகமுழுவதும் ஒரு நிஜமாக இருந்தது. அச்சடிக்கும் பெரிய கிளைகளில் முழு-வர்ண அச்சடிப்புக்கு மாற்றப்படும் கடைசி கிளை நைஜீரியாதான். இது 1980-களின் மத்தியில் தொடங்கிய ஒரு முதற்படியாக இருந்தது. நைஜீரியாவில், 1994, மார்ச் 15, காவற்கோபுரம் இதழோடு, இரு-வர்ண அச்சடிப்பு ஒரு கடந்தகால காரியமாக ஆகிவிட்டிருந்தது.

க்யோனிக் மற்றும் பேயர் ராபிடா 104 என்ற இந்த இரண்டு புதிய அச்சு இயந்திரங்களும் நெதர்லாந்து கிளையில் இருந்து கொண்டுவரப்பட்டன. அச்சு இயந்திரங்களோடுதானே ப்ளேட் ஸ்கேன்னர், ஃபோல்டர், ஸ்டிச்சர், ட்ரிம்மர், ஷீட்டர் ஆகிய மற்ற அச்சடிக்கும் உபகரணங்களும் கொண்டுவரப்பட்டன. எல்லாம் சேர்த்து, இயந்திரங்களின் மொத்த எடை 130 டன்னாக இருந்தது.

காற்றில் மிதக்கும் அச்சு இயந்திரங்கள்!

அச்சு இயந்திரங்களை அனுப்ப எடுத்த தீர்மானத்தோடே அவற்றை எப்படி அனுப்புவது என்ற பிரச்சினையும் சேர்ந்து வந்தது. முப்பத்தைந்து டன் அச்சு இயந்திரங்கள் ஒரு சூட்கேஸினுள் அடங்காதே! நெதர்லாந்திலிருந்து இவற்றை அனுப்பும் விவகாரங்களை ஒருங்கிணைத்தவராகிய பெர்ன்ட் ஸேவுயர்பிர் சொன்னார்: “இந்த இயந்திரங்களுக்குச் சேதமேதுமின்றி மிகச் சிறந்த முறையில் பாதுகாப்பாக அனுப்புவது எப்படி என்று நாங்கள் யோசிக்க வேண்டியிருந்தது.”

சாதாரணமாக இந்தமாதிரி அச்சு இயந்திரங்களெல்லாம் மரச்சட்டங்களால் செய்யப்பட்ட பெரிய பெட்டிகளில் வைத்து அனுப்பப்படுகின்றன. ஆனால் கடல் பயணத்தில் ஏற்படும் குலுக்கங்களையும் துறைமுகத்தில் ஏற்றி இறக்கும்போது ஏற்படும் ஆட்டங்களையும் தாங்குவதற்கு மரப் பெட்டிகள் போதுமானளவு உறுதியானவையாக இல்லாமல் போகலாம் என சகோதரர்கள் யோசித்தார்கள். குறைந்த செலவும் அதிக பாதுகாப்புமான ஒரு மாற்றுவழி, அவற்றை 40-அடி-நீள ஸ்டீல் பார்சல் பெட்டிகளில் அனுப்புவதாகும். ஆனால் அவ்வளவு பெரிய இயந்திரங்களைப் பெட்டிகளுக்குள் வைத்து வெளியே எடுப்பது எப்படி முடியும்? சகோதரர் ஸேவுயர்பிர் சொன்னார்: “இது ஒரு சவாலாக இருந்தது. காரணம் அச்சு இயந்திரங்களைப் பெட்டிகளுக்குள் அடைத்த அனுபவம் எங்களுக்கு இருந்ததேயில்லை. அந்த அச்சு இயந்திரங்களை உற்பத்தி செய்த நிறுவனத்தினருக்கும்கூட அவற்றை இந்தமுறையில் எவ்வாறு அனுப்புவது என்பதைப் பற்றிய எந்தவொரு யோசனையும் இல்லாதிருந்தது.”

காற்று மெத்தைகளை உபயோகிப்பதே இதற்குப் பரிகாரமாக இருந்தது. இவை காற்றடைக்கப்பட்ட மாடியூல்கள் என்றும் அறியப்படுகின்றன. இந்தக் காற்று மெத்தைகள் பார்ப்பதற்கு ஒன்றும் கவர்ச்சிகரமானவை அல்ல; இருப்பினும் அவை ஒரு பிரமாண்டமான வேலையைச் செய்கின்றன. அவை அலுமினியத்தாலும் ரப்பராலும் செய்யப்பட்ட, தட்டையான, கிட்டத்தட்ட ஒரு பெரிய கனமான ப்ரீஃப்கேஸைவிட பெரிய துண்டுகளாகும். அழுத்தப்பட்ட காற்று அவற்றினுள் அடிக்கப்பட்டுக் கீழ்நோக்கித் தள்ளப்படுகிறது. இது இந்தக் காற்று மெத்தைகள், அதற்குமேல் இருக்கும் பொருள் எதுவாக இருந்தாலும் அதோடு சேர்த்து, நிலமட்டத்திலிருந்து சற்று மேலே எழும்பி நிற்கும்படி செய்கிறது.

இவ்வாறு ஒரு அச்சு இயந்திரத்தின், பல டன் எடையுள்ள பாகங்களையும்கூட ஒரு மெல்லிய காற்று மெத்தை தாங்கி நிற்கும்படி செய்யமுடியும். அவை அந்தரத்தில் நின்று, காற்றில் மிதக்கின்றன! ஒரு பாகம் நிலமட்டத்திலிருந்து தூக்கப்பட்டுவிட்டால், அதை உங்களுக்கு விருப்பப்பட்ட இடத்திற்கெல்லாம் கையால் தள்ளிக்கொண்டு போவது சுலபமாக இருக்கிறது.

பெட்டிகளுக்குள் காற்று மெத்தைகளை போதுமானளவு சுலபமாக தள்ளிவிடுவதற்கு வசதியாக, சாட்சிகள் அவற்றின் தரையில் ஹார்டுபோர்டுகளை வைத்தனர். ஒவ்வொரு பெட்டிகளின் தரை நன்கு தட்டையாக இருக்கும்படியும் அவர்கள் பார்த்துக்கொள்ள வேண்டியதாயிருந்து. இயந்திரங்களை ஒருமுறை அந்தப் பெட்டிகளுக்குள் வைத்துவிட்டதும், சகோதரர்கள் ஒவ்வொரு பெட்டியின் பக்கங்களிலும் மேலேயும் ஸ்டீல் சட்டங்களை வைத்து அடித்தனர். இது அனுப்பப்படும் சரக்கை மிகப் பத்திரமாக வைக்க உதவுகிறது. எல்லா பாகங்களையும் பெட்டிகளுக்குள் அடைத்து வைக்க ஆகஸ்ட் 1993-ல் இரண்டு வாரங்கள் தேவைப்பட்டன.

டிசம்பர் 29, 1993, மாலை 6:00 மணிக்கு, நைஜீரியா பெத்தேல் வளாகத்தில் முதல் ஐந்து பெட்டிகள் வந்து சேர்ந்தன. அதிக சிரத்தையாகவும் துல்லியமாகவும் இயந்திரங்களை இறக்கும் வேலையைத் தொடங்க சகோதரர்கள் ஆவலாகவும் தயாராகவும் காத்திருந்தனர். அவர்கள் அடுத்தநாள் அதிகாலை வரை இரவு முழுவதும் வேலைசெய்தனர். இயந்திரங்கள் காற்று மெத்தைகளுக்கிடையில் பொதிக்கப்பட்டு இருந்ததால், பணியாளர்கள் அழுத்தப்பட்ட காற்றை உள்ளே செலுத்தினர். ஒவ்வொரு பாகமாக, இயந்திரத்தின் எல்லா பாகங்களும் பெட்டிகளிலிருந்து சறுக்கி வெளியேறின. பின்னர் ஒவ்வொரு பாகங்களையும் பாரம்தூக்கிகள் தொழிற்சாலையின் நுழைவாயிலில் விசேஷமாக கட்டப்பட்ட மேடைகளின்மேல் தூக்கிவைத்தன. காற்று மெத்தைகள் மீண்டும் உபயோகப்படுத்தப்பட்டன. கூட்டத்தினர் ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருக்கையில், இயந்திரங்கள் எங்கு வைத்து இயக்கப்பட வேண்டுமோ அங்குக் கைகளால் தள்ளிக்கொண்டு போகப்பட்டன.

முழு-வர்ண பத்திரிகைகளுக்கான திளைப்புடன்கூடிய பிரதிபலிப்பு

1994, பிப்ரவரி 3-ம் தேதி இரவு 7:45 மணிக்கு, அந்த அச்சு இயந்திரங்கள் நைஜீரியாவின் முதல் ஆங்கில மொழி முழு-வர்ண காவற்கோபுரம் பத்திரிகையை அச்சடித்தன. விரைவில் அந்த அச்சு இயந்திரங்கள், யொருபா, இக்போ, இஃபிக், மற்றும் பிரெஞ்சு மொழிகளிலும்கூட பத்திரிகைகளை அச்சடித்தன.

பெத்தேல் குடும்பத்தினருக்கு முதல் பிரதிகள் கிடைத்தபோது, பிரதிபலிப்பு என்னவாக இருந்தது? “நான் கிளர்ச்சியடைந்தேன்!” என்று வியந்தார் ஒருவர். “இந்த நாட்டில் உற்பத்தி செய்த மற்றெந்தப் பிரசுரத்தைவிடவும் இதன் கவர்ச்சி மிகவும் மேலோங்கி நிற்கிறது.”

மற்றொருவர் சொன்னார்: “அவை கிடைக்க ஆரம்பித்தவுடனேயே, நான் 20 பிரதிகளைப் பெற்று, என் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுப்பிவிட்டேன். அவற்றை வெளி ஊழியத்தில் உபயோகிக்க என்னால் அதிகம் காத்திருக்கமுடியவில்லை.”

புதிய முழு-வர்ண பத்திரிகைகளைப்பற்றி எப்படி உணர்கிறார் என்று மற்றொருவரைக் கேட்டபோது, அவர் பதிலளித்ததாவது: “பிரமாதம்! உலகம் பூராவும் இருக்கிற ஒவ்வொருவரையும் யெகோவா கவனித்துக்கொள்கிறார் என்பதற்கு இது மற்றொரு அத்தாட்சியாக இருக்கிறது!”

ஆகவே பெத்தேலில் சேவை செய்பவர்கள் தங்களுடைய நான்கு-வர்ண ஐஸ்க்ரீமை ருசிபார்க்கும்போது, நான்கு-வர்ண பத்திரிகைகளைப்பற்றி நினைத்தனர். இது ஒருவர் அதைப்பற்றி சொன்னதுபோல, “ஒரு பெரும்கனவு நனவானது.”

[பக்கம் 21-ன் படங்கள்]

அச்சு இயந்திரத்தின், பல டன் எடையுள்ள பாகங்களையும்கூட ஒரு மெல்லிய காற்று மெத்தைத் தாங்கி நிற்கும்படி செய்யப்பட்டது

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்