தொழில்துறை வேதியல் பொருட்களின் அருவருப்பான பக்கம்
குளிர்ச்சியான டிசம்பர் மாத மாலையில், 1984-ம் ஆண்டு நள்ளிரவுக்குச் சற்று பின்னர், சரித்திரத்தின் மிகவும் மோசமான தொழில்துறை விபத்து ஏற்பட்டது. இந்திய குடியரசுக்கு வெளியே இருந்த உலகில் வெகு சிலருக்கு மாத்திரமே போப்பால் என்ற பெயர் பரிச்சயமாயிருந்தது. இது தேசத்தின் மையப் பகுதியில் 8,00,000-க்கும் அதிகமான மக்கள் தொகயுள்ள ஒரு தொழில் துறைப் பட்டணமாக இருக்கிறது. உறங்கிக் கொண்டிருந்த அப்பட்டணத்தார் கல்லெறி தொலைவில் நடை பெற்று வந்த சாவுக்கேதுவான சம்பவங்களை அறியாதவர்களாகவே இருந்தனர்.
போப்பாலிலுள்ள ஐக்கிய மாகாண யூனியன் கார்பைட் தொழிற்சாலையில், பூச்சுக் கொல்லிகளைத் தயாரிப்பதற்கு ஒரு கொடிய வேதியல் பொருளான மீத்தைல் ஐஸோசைனேட் (MIC) பயன்படுத்தப் படுகிறது. இது 45 டன்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு சேமிப்பு கொள்கலத்தில் அபாயகரமாக உயர் அழுத்தம் உருவாக ஆரம்பித்தது. திடீரென்று பழுதடைந்த ஒரு அடைப்பிதழிலிருந்து திரளான நச்சுத்தன்மையுள்ள வாயு வெளிப்பட, அமைதியான பட்டணத்தின் மீது மரணமும் வேதனையும் படர ஆரம்பித்தது. 2,500 ஆண்கள், பெண்கள் மற்றும் பிள்ளைகள் உயிரிழந்தார்கள். நூறாயிரக்கணக்கானோர் ஊனமடைந்தார்கள்.
எருமை மாடுகளும், ஆடுமாடுகளும் நாய்களும் ஆயிரக்கணக்கில் மாண்டுபோனதால் நாட்டுப் புறப் பகுதிகளில் இவற்றின் பிணங்கள் சிதறிக் கிடக்க, சாலைகளிலும் நகர வீதிகளிலும் வழி இல்லாமலிருந்தது. போப்பால் தற்காலிகமாக ஒரு மாபெரும் சுடுகாடாக மாறியது. இடைவிடாமல் பிணங்கள் எரிக்கப்பட்டன. 25 பிணங்கள் உயரத்துக்கு அடுக்கி வைக்கப்பட்ட எழுபது பாடைகள் சவங்களுடன் சுட்டெரிக்கப்பட்டது. அவசரமாக தோண்டப்பட்ட மாபெரும் கல்லறைகளில்—ஒரே சமயத்தில் பல பிணங்கள் புதைக்கப்பட்டன.
பின்னர் திடீரென மற்றொரு விபத்து ஐரோப்பாவைத் தாக்கியது. இது “ரைனில் போப்பால்” என்றழைக்கப்பட்டது. ஸ்விட்சர்லாந்தில் பேஸலுக்கு மேலிருந்த ஒரு தொழிற்சாலையிலிருந்து கசிந்து வந்த நச்சுத்தன்மையிள்ள 40 டன்கள் கழிவுப் பொருள் ரைன் நதிக்குள் சென்றது. “ஜெர்மன் பிரெஞ்சு எல்லையோரமாக ரைன்லாந்துக்குள்ளும் நெதர்லாந்து வழியாக வட சமுத்திரத்திற்குள்ளும் நீரோட்டத்துடன் கலந்து சென்ற போது” அதனால் நூறாயிரக்கணக்கான மீன்களும் விலங்குகளும் மாண்டன. செய்தித் தாள் தலையங்கக் கட்டுரை சொன்னதாவது: “சுவிட்சர்லாந்து நாட்டவர் சுத்தமானவர்களாகவும் வேதியல் தொழிற்சாலை உட்பட அவர்களின் தொழில் துறை பாதுகாப்பானதாகவும் ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்தது. அதெல்லாம் இப்பொழுது கடந்த காலத்திற்குரியதாகி விட்டன.”
போப்பால் வாசிகளும் ரைன் நதியோரத்தில் வசித்து வந்த மக்களும் 66,000-க்கும் மேற்பட்ட மருந்துக் கலவைகளைச் சேர்த்து ஒன்றுபடுத்தியிருப்பதாக பெருமைப்பாராட்டிக் கொண்டிருக்கும் தொழில் நுணுக்க சகாப்தத்தில் பலியாகிவிட்டிருக்கிறார்கள். மனிதர்களுக்கு வாழ்க்கையைச் சுலபமாக்கவே அநேகமாக இவை முறைப்படுத்தப்படுகின்றன, ஆனால் வேடிக்கை என்னவென்றால், இவைகளில் பல மிகவும் நச்சுத்தன்மையுள்ளவையாகவும் மனிதர்களுக்கும், இயற்கை கோளாறை மட்டுப்படுத்தும் அமைப்புக்கும் கொடிய மற்றும் பாழ்ப்படுத்தும் பக்க பாதிப்புகளை உண்டுபண்ணவும் கூடும். இந்த வேதியல் பொருட்களை ஒரு நிபுணர் “உயிர் கொல்லிகள்” (பையோசைட்ஸ்) என்பதாக வகைப்படுத்தியிருக்கிறார்.
நீளமான பெயர்களையும் ஒரு சிலரே உச்சரிக்கக் கூடியதுமான பெயர்களையுமுடைய வேதியல் பொருட்கள் பலவாக இருக்கின்றன. வசதிக்காக இவைகள் PCB, DDT, PCDD, PCDF, TCDD போன்ற எழுத்துக்களால் அழைக்கப்படுகின்றன. நச்சுத்தன்மையுள்ள இந்த வேதியல் பொருட்களின் கலவை மனிதர்களுக்கும் உயிர் வாழ்வதற்கு மனிதன் நம்பியிருக்கும் பூமியின் வள ஆதாரங்களுக்கும் சாவுக்கேதுவான ஆபத்தாக இருக்கிறது. “ஆயிரமாயிரமாக நச்சுத்தன்மையுள்ள பொருட்கள் சுற்றுப்புறச் சூழலுக்குள் செலுத்தப்படுகின்றன” என்பதாக ஐ.மா. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு ஏஜென்ஸியின் பிரதிநிதி ஒருவர் சொன்னார். இவை காற்று, மேல்மட்ட நீர் மற்றும் நிலத்தடி குடி நீர் மற்றும் மண்ணின் தரத்துக்கு ஆபத்தாக இருந்து வர இருக்கும் பல பத்தாண்டுகளுக்கு மண்ணை நச்சுப்படுத்திவிடக்கூடும்.
ஐக்கிய மாகாணங்களில் மாத்திரமே ஆபத்து விளைவிக்கக்கூடிய 1,50,000 கோடி காலன் (5,70,000 கோடி லிட்டர்) வேதியல் கழிவுப் பொருட்கள் ஒவ்வொரு ஆண்டும் நிலத்தடி நீர் அமைப்புக்குள் சென்றுகொண்டிருக்கிறது என்று ஐ.மா. சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு ஏஜென்ஸி மதிப்பிடுகிறது.a பாதுகாப்பு அளவுகளுக்கு மேல் செல்ல ஒரு காலன் (3.8 லிட்டர்) கரைமம் 2 கோடி காலன் (7.6 கோடி லிட்டர்) நிலத்தடி நீரை அசுத்தப்படுத்தி விடக்கூடும் என்பதை அறிந்திருப்பதால், 1,50,000 கோடி காலன் (5,70,000 கோடி லிட்டர்) நச்சுத்தன்மையுள்ள வேதியல் பொருட்கள் என்ன செய்துகொண்டிருக்கின்றன என்பதை எண்ணிப் பார்ப்பது நம்மை தடுமாறச் செய்வதாக உள்ளது.
வேதியல் பொருட்களும் கழிவுப் பொருட்களும் ஆபத்தானவையாக இருப்பதாலும் அவை கவலையீனமாக வீசியெறியப்படுவதாலும் நதிகளும் ஓடைகளும் அசுத்தப்படுத்தப்படுகின்றன. மீன்கள் மாண்டு போகின்றன. நதிகளும் ஓடைகளும் சமுத்திரத்தினுள் பிரவேசிக்கையில் சாவு விளைவிக்கும் வேதியல் பொருட்கள் அவைகளோடு சேர்ந்து பாய்கின்றன. பிரபல சமுத்திர சுற்றுப்புறச்சூழல் நிபுணர் ஜாக்குவிஸ் காஸ்டோவின் பிரகாரம் ஒரு சமயம் மீன்கள் மிகுதியாக காணப்பட்ட ஒரு சில இடங்களில் இன்று மீன்களைப் பார்க்க முடிவதில்லை.
தூய்மைக்கேட்டின் காரணமாக பறவை மற்றும் மிருக ஜீவன்களுங்கூட அச்சுறுத்தப்பட்டு வருகின்றன. வனவிலங்கு சரணாலயங்களும் பாதுகாப்பாக இல்லை. “பத்து தேசீய வனவிலங்கு புகலிடங்களின் தூய்மை நச்சுத் தன்மையுள்ள வேதியல் பொருட்களால் கெடுக்கப்பட்டிருக்கிறது, இன்னும் 74 அந்த அபாயத்திலிருக்கிறது . . . செலினியம் போன்ற மற்ற வேதியல் பொருட்களையும் கொண்ட வேளாண்மைக் கழிவுகள் புகலிடத்திலுள்ள நீந்தும் பறவையை பெரும் எண்ணிக்கையில் கொன்று விட்டிருக்கிறது,” என்பதாக 1986 பிப்ரவரி 4 தேதியிட்ட தி நியு யார்க் டைம்ஸ் குறிப்பிட்டிருந்தது.
உலக நிபுணர்கள், எதிர்காலத்தை நம்பிக்கையூட்டும் வகையில் வருணிப்பதில்லை. பூமியின் வள ஆதாரங்கள் வேகமாக குறைந்து வருவது மண் இழப்போடும் காற்று மற்றும் நீரின் தூய்மைக் கேட்டோடும் நின்றுவிடுவதில்லை. பல ஆயிர வருடங்களாக தங்களுடைய இலைகள் நிறைந்த கைகளை பல நூற்றுக்கணக்கான அடிகள் தூரத்துக்கு காற்றில் பரப்பி நின்ற பூமியின் பெரும் வெப்ப மண்டல மழைக் காடுகளைப் பற்றி என்ன? நம்முடைய கண் எதிரில் குறைந்துக் கொண்டே வரும் மற்ற வளங்களைப் போலவே சம்பவிக்கும் ஆபத்து இதற்கும் இருக்கின்றதா? நாம் உணர்ந்தாலும் உணராவிட்டாலும், அடுத்த கட்டுரை காண்பிக்கும் விதமாகவே, நம்முடைய வாழ்க்கை யெகோவாவின் செழிப்பான இந்தக் கைவேலைப்பாடுகளினால் பாதிக்கப்படுகிறது. (g87 7⁄22)
[அடிக்குறிப்புகள்]
a 1காலன்=3.8 லிட்டர்