உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 12/8 பக். 27
  • முன்னேற்றத்தின் விலை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • முன்னேற்றத்தின் விலை
  • விழித்தெழு!—1988
  • இதே தகவல்
  • மனித சக்தி அதை நிறுத்த முடியுமா?
    விழித்தெழு!—1990
  • நிலையான சமாதானத்தை யாரால் கொண்டுவர முடியும்?
    விழித்தெழு!—1996
  • போராயுத வியாபாரம் அது எவ்விதம் உங்களை பாதிக்கிறது
    விழித்தெழு!—1990
  • உலகளவில் ராணுவ செலவுகள் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை தாண்டியது—பைபிள் என்ன சொல்கிறது?
    வேறுசில தலைப்புகள்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1988
g88 12/8 பக். 27

முன்னேற்றத்தின் விலை

“மனிதன் ஏற்கெனவே வைத்திருக்கும் கொடூரமான ஆயுதங்கள் ஆபத்தாக இருக்க, இவ்வுலகில் மனிதவர்க்கம் தன்னுடைய வளரிளம்பருவத்தினரின் ஒழுக்கத்தில் சிக்கிக்கொள்ளும் ஆபத்தில் இருக்கிறது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு நம்முடைய விஞ்ஞான அறிவு கடந்ததொன்றாகிவிட்டது. நாம் அநேக விஞ்ஞான மனிதரைக் கொண்டிருக்கிறோம், ஆனால் கடவுளுடைய மனிதரோ மிகக் குறைவு,” என்றார் 1948-ல் தளபதி ஓமர் N. பிராட்லி. அவர் தொடர்ந்து கூறியதாவது: “மனிதன் ஜீவன் மற்றும் மரணத்தின் நிலையுறுதியற்ற இரகசியங்களைத் தொட்டு விளையாடிக்கொண்டிருக்க, ஆவிக்குரிய இருளில் கண்தெரியாதவனாய் இடறிவிழுந்துகொண்டிருக்கிறான். உலகம் ஒளியின்றி ஞானத்தையும், மனச்சாட்சியின்றி சக்தியையும் சாதனையாய்க் கொண்டிருக்கிறது.”

இன்று, ஏறக்குறைய 40 ஆண்டுகளுக்குப் பின்பு, அவனுடைய வார்த்தைகள் கூடுதல் அர்த்தமுடையவையாயிருக்கின்றன. இதைச் சிந்தித்துப் பாருங்கள்: 20-ம் நூற்றாண்டு முன்னேற்றம், போராயுதங்களுக்காக செலவு செய்யப்பட்டிருக்கும் தொகையை கணக்கிட்டால், 1986 ஒரு புதிய பதிவையுடைய ஆண்டாக இருக்கும். உலக முழுவதும் இராணுவ ஆயுதங்களுக்காக ரூ.13,00,000 கோடி செலவு செய்யப்பட்டிருக்கிறது. “இது சரித்திரத்திலேயே உயர்ந்த எண்ணிக்கையாக நிமிடத்துக்கு ரூ.2.5 கோடியாக இருக்கிறது . . . இது உலக உற்பத்தியில் 6 சதவிகிதத்தைக் குறிக்கிறது,” என்று தி உவாஷிங்டன் போஸ்ட் (The Washington Post) ரூத் லெகர் சிவர்டு தனிப்பட்ட விதத்தில் மேற்கொண்ட ஆய்வின் புள்ளிவிவர அடிப்படையில் அறிக்கைசெய்கிறது. தி உவர்ல்டுவாட்ச் நிறுவனம் குறிப்பிட்டதாவது, ஆயுதங்களுக்கான செலவு “உலக வர்த்தகத்தில் உணவுக்கு முன் துப்பாக்கிகளுக்கே” இருக்கிறது என்றும் ஆயுதங்கள் ஆராய்ச்சிக்காகத் தங்களை ஈடுபடுத்தியிருக்கும் 5,00,000 விஞ்ஞானிகளுக்கான செலவு, “எரிபொருள் சக்திக்கான புதிய தொழில்நுட்ப அபிவிருத்தி, மனித ஆரோக்கியத்தில் முன்னேற்றம், உணவு உற்பத்தியைப் பெருக்குதல், காற்று, நிலம், நீர் நச்சுப்படுவதைத் தடுத்தல் ஆகிய காரியங்களுக்கான மொத்த செலவைவிட” அதிகமாயிருக்கிறது. அக்கறைக்குரிய ஒரு காரியம், வல்லரசுகள் இராணுவத்துக்காக செய்திருக்கும் செலவு தங்களுடைய மக்கள்தொகையை பத்துமுறைக்கும் அதிகமாகக் கொல்லுவதற்கு தேவையான ஆயுதங்களை உற்பத்திசெய்திருக்கின்றன.

தெளிவாகவே, ஆயுதக் குவிப்பு மனிதவர்க்கத்தை வாதித்துக்கொண்டிருக்கும் ஏராளமான காரியங்களை நீக்கிவிடவில்லை, அல்லது மனிதனை சமாதானத்துக்கு அருகாமையிலும் கொண்டுவரவில்லை. மாறாக, தளபதி பிராட்லி பல ஆண்டுகளுக்கு முன்பு விளக்கியபடி இருக்கிறது: “நாம் சமாதானத்தைப் பற்றி தெரிந்திருப்பதைவிட போரைப் பற்றி அதிகமாக தெரிந்திருக்கிறோம், உயிர்வாழ்வதைவிட உயிரைக் கொல்லுவதைப் பற்றியே அதிகமாக தெரிந்திருக்கிறோம். இதுதான் தனிச்சிறப்புக்கும் முன்னேற்றத்துக்குமான 20-ம் நூற்றாண்டின் உரிமைப்பாராட்டல்.” (g87 7⁄22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்