உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g89 1/8 பக். 29-30
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1989
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • சோவியத் போதை மருந்துப் பழக்கம்
  • உடற் தகுதிக்கான விலை
  • ஆழ்கடல் சீதோஷண அறிவிப்பாளர்கள்
  • வானவெளியில் பயமுறுத்தும் சிதறல்கள்
  • உலகளவிலான ஒரு மொழி?
  • தேவையற்ற நேர்மை
  • மிகப் பெரிய காலக்ஸி
  • இரத்தமேற்றுதல் மறு பரிசீலனை
  • சுறுசுறுப்பான படுக்கைகள்
  • இத்தாலிய சாலைகளில் படுகொலை
  • ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பைபிள்
  • அஞ்சல் தலை சேகரிப்பு—கருத்தைக் கவரும் ஓய்வுநேர விருப்பவேலை மற்றும் பெரும் வாணிகம்
    விழித்தெழு!—1995
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1986
  • கறந்த பாலிலிருந்து பால் பவுடருக்கு
    விழித்தெழு!—1999
  • தாய்ப்பாலூட்டுதலின் அடிப்படைகள்
    விழித்தெழு!—1994
மேலும் பார்க்க
விழித்தெழு!—1989
g89 1/8 பக். 29-30

உலகத்தைக் கவனித்தல்

சோவியத் போதை மருந்துப் பழக்கம்

ஜெர்மனியில், கொலோனிலுள்ள சோவியத் தூதரகம் வெளியிடும் சோவ்ஜெத்யூனியன் ஹியூத் என்ற பத்திரிகையின்படி, மருந்துகளை தகாதமுறையில் உபயோகிப்பவர்கள் 46,000 பேர் சோவியத் யூனியன் பதிவேட்டில் உள்ளனர். சோவியத் ஜார்ஜியாவில் இத்துர்ப்பழக்கத்துக்கு உட்பட்டவர்களை வைத்து செய்யப்பட்டக் கணக்கீடு வெளிப்படுத்துவது என்னவெனில், இதில் 91.7 சதவிகிதத்தினர் ஆண்கள், 81.9 சதவிகிதத்தினர் 20-லிருந்து 34 வயதுக்குட்பட்டவர்கள், 49 சதவிகிதத்தினர் திருமணமானவர்கள். இந்தத் துர்ப்பழக்கத்திற்குக் காரணங்களாக அவர்கள் குறிப்பிடுபவைகளில், மகிழ்ச்சியைத் தேடுதல் (68.3 சதவிகிதம்), மற்றவர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆசை (25.3 சதவிகிதம்), வாழ்க்கையில் அதிருப்தியும் மறக்க வேண்டும் என்ற ஆசையும் (7.5 சதவிகிதம்), தகாத ஆர்வம் (2.3 சதவிகிதம்), உளவியல் சம்பந்தபட்ட குழப்பம் (2.3 சதவிகிதம்), போதை பொருட்களடங்கிய மருந்துகள் (1.3 சதவிகிதம்) ஆகியவையும் உட்பட்டிருக்கின்றன.

உடற் தகுதிக்கான விலை

“சுவிட்சர்லாந்தில், விளையாட்டுகளில் வளர்ந்துவரும் ஆர்வமும் உடற்தகுதிக்கான அதிக முழக்கமும், விளையாட்டு விபத்துகளின் அதிகரிப்புக்கு வழிநடத்தி உள்ளன” என்று சுவிஸ் செய்தித்தாள் பேஸ்லர் ஸீட்டங் அறிவிக்கின்றது. 1986-ல் சுமார் 3,73,000 சுவிஸ் குடிமக்கள் விளையாட்டு சம்பந்தப்பட்ட விபத்துகளில் காயப்படுத்தப்பட்டுள்ளனர். இது ஏதாவது ஒரு விளையாட்டில் சுறுசுறுப்பாக ஈடுபடும் எல்லாரிலும் 10 சதவிகிதத்திற்கு மேற்பட்டோரை குறிக்கிறது. இதில் ஐந்தில் ஒரு பகுதியினர் மருத்துவமனையில் சேர வேண்டியவர்களாயிருந்தனர். விபத்துக்கு காரணங்கள் என்று குறிப்பிடப்பட்டவைகளில் “கவனத்தை ஒருமுகப்படுத்த இயலாமை அல்லது மோசமான உடற் தகுதி” ஆகியவையும் உண்டு. தரம் குறைந்த சாதனங்களும்கூட காரணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. விளையாட்டு விபத்துக்களைக் குறைப்பதற்கான ஏற்பாடுகள் ‘நேர்மையாக விளையாட வேண்டுமென்கிற’ வேண்டுகோளை குறிப்பிடத்தக்க அளவில் அழுத்திக் காட்டுகின்றது.

ஆழ்கடல் சீதோஷண அறிவிப்பாளர்கள்

சமுத்திரத்தின் ஆழங்களுக்கு மூழ்கும் திமிங்கலங்கள் தற்போது சீதோஷண அறிவிப்பாளர்களுக்கு மதிப்பு வாய்ந்த செய்திகளைக் தர உதவி செய்கின்றன என்று லண்டனின் தி ஸண்டே டைம்ஸ் அறிவிக்கின்றது. பைலட், சாம்பல் மற்றும் முதுகில் திமிலுடைய திமிங்கலங்களைப் போன்ற ஆழங்களுக்கு மூழ்கும் பாலூட்டிகளில், வெவ்வேறு ஆழங்களில் எதிர்படும் நீரின் சீதோஷண அளவு போன்ற விவரங்களை அறிவிக்கும் சூப் கிண்ணம் போன்ற, 1.5 பவுண்டு எடையுள்ள செய்தி அறிவிக்கும் கருவி பொருத்தப்படுகின்றது. பூமியின் காற்றுகளையும் புயல்களையும் கடலின் வெப்பமே இயக்குவதால், நீரின் சீதோஷணத்தின் இந்த அளவீடுகள், சீதோஷணம் குறித்த திருத்தமான முன்னறிவிப்புக்கு உதவுகின்றன. பல சமயங்களில் கப்பல்கள் அடையமுடியாத பரந்த கடற்பரப்புகளில் இந்தப் பாலூட்டிகள் திரிவதால் அரை அல்லது அதற்கு மேற்பட்ட மைல் ஆழங்களிலிருந்து மேற்பரப்பை அடைந்தப்பின் அவற்றின் செய்தி அறிவிக்கும் கருவிகள் சீதோஷணம் குறித்த செய்திகளை ஒரு துணைக்கோளுக்கு ஒலிபரப்புகிறது.

வானவெளியில் பயமுறுத்தும் சிதறல்கள்

விஞ்ஞானிகள் தங்களின் விண்வெளி முயற்சிகளுக்கு, அதிகரித்துவரும் ஒரு பயமுறுத்தலை கூர்ந்து கவனித்து வருகின்றனர். அவை பூமியை வட்டமிடும் விண்வெளி சிதைவுகளாகும். அவர்களின் கணிப்பின்படி, முன்னால் அனுப்பப்பட்ட விண்கலன்களிலிருந்து சிதறிய சாய துகள்கள் உட்பட லட்சக்கணக்கில் சிறு குப்பைக்கூளங்கள் கோள் பாதையில் இருக்கின்றன. இந்த சிறிய பொருட்கள் ஏன் இவ்வளவு கவனிக்கத்தக்கதாக இருக்கின்றன? “வேகமாக நகரும் கடலை அளவிலான ஒரு சிறு துகள் 100 மில்லியன் டாலர் துணைக்கோளை வெகு சுலபமாகத் தகர்த்துவிடக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றார்கள்” என்று தி நியு யார்க் டைம்ஸ் குறிப்பிடுகிறது. “மிக மோசமான நிலையில், துகள்களாகிக் கொண்டிருக்கும் ஒரு துணைக்கோளானது தொடர்ச்சியான அழிவுகள் வரும்படி மற்ற உடைசல்களைத் தொடங்கி வைக்கும்.” இத்தகைய விபத்துக்கள் ஏற்கெனவே நடந்துவிட்டன என்று சிலர் சந்தேகிக்கின்றனர். வட்டமிடும் சிதைவுகள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு ஒரு கெட்ட கனவாகவே இருக்கிறது. இவைகள் தொலைநோக்கிகளில் குறுக்கிட்டு நட்சத்திரப் புகைப்படங்களைக் குழப்புவதுடன், பல பிழையான வானசாஸ்திரக் “கண்டுபிடிப்புகளுக்கு” காரணமாயிருக்கின்றன. பேஸ்பால் அல்லது அதைவிடப் பெரிய அளவிலான சுமார் 7,000 வட்டமிடும் பொருட்கள் இப்பொழுது கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

உலகளவிலான ஒரு மொழி?

மக்ரம், க்ரான், மாக்நீல் ஆகியோரின் புத்தகமான “ஆங்கிலத்தின் கதை” சொல்கிறது, ஆங்கிலமானது உலகமுழுவதும் சுமார் 100 கோடி மக்களால் பேசப்படுகின்றது. இதில் 35 கோடி பேர் அதைத் தங்கள் தாய்மொழியாகப் பேசுகின்றனர். கவர்ச்சிகரமான உச்சரிப்போடுகூடிய ஆங்கில பேச்சு வழக்கு எண்ணற்றவையாகும். இந்திய ஆங்கிலம், ஜமைக்கன் ஆங்கிலம், அமெரிக்க ஆங்கிலம், ஆஸ்திரேலிய ஆங்கிலம், தென் ஆப்பிரிக்க ஆங்கிலம் ஆகியவற்றுடன் மிகவும் போற்றப்படுகின்ற ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் ஆங்கிலத்துடன்கூட பிரிட்டிஷ் காக்னி மற்றும் “ஷயர்” போன்ற ஆங்கிலத்தின் வேறுபாடுகள் மற்றும் ஸ்கட்டிஷ், வெல்ஷ், ஐரிஷ் ஆங்கிலம் என்று இருக்கின்றன. இந்த ஆசிரியர்கள் தங்களுடைய புத்தகத்தில் நமக்குத் தெரிவிப்பது என்னவெனில் 1,85,000 ஜெர்மன் வார்த்தைகளுடனும், அதைவிடக் குறைந்த 1,00,000 பிரெஞ்சு வார்த்தைகளுடனும் ஒப்பிடும்போது ஆங்கிலத்தில் ஏறக்குறைய 5,00,000 வார்த்தைகள் உள்ளன. (விஞ்ஞான, தொழில்நுட்ப, மருத்துவ தொடர்களைச் சேர்க்காமல்) சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு ஜுலியஸ் சீசர் பிரிட்டனில் இறங்கியபோது ஆங்கிலம் ஒரு மொழியாக இருக்கவில்லை என்பதை உணரும்போது இது மிகவும் குறிப்பிடத்தக்கது.

தேவையற்ற நேர்மை

லண்டனின் தி டைம்ஸில் பின்வருமாறு காணப்பட்டது: “சில சந்தர்ப்பங்களில் அப்பட்டமாக சிறு பொய்கள் கூறும் எல்லா வியாபார நிர்வாகிகளுக்கும் எச்சரிக்கை–நீங்கள் ஒரு புது செயலரை நியமிக்கும் முன் அவளுடைய மதத்தைக் குறித்து விசாரியுங்கள். ஏனெனில், நகரத்தில் ஒரு முக்கிய மனிதர் தான் சந்திக்க விரும்பாத ஒருவருடன் தொலைபேசியில் பேச அழைக்கப்பட்ட போது, அவர் தன்னுடைய தற்காலிக செயலரிடம் “நான் வேலையாக இருக்கிறேன், பின்னால் நான் அவரை கூப்பிடுவேன் என்று சொல்” என்றார். ஆழ்ந்த யோசனையுடன் அவள் “நான் பொய் சொல்ல முடியாது, நான் ஒரு யெகோவாவின் சாட்சி” என்று பதில் சொன்னபோது அவரால் தன் காதுகளை நம்ப முடியவில்லை.”

மிகப் பெரிய காலக்ஸி

“வானசாஸ்திரிகளால் இரண்டு பத்தாண்டுகளாக கவனிக்கப்பட்டுவரும் ஒரு காலக்ஸியானது பால்வீதி மண்டலத்தைப் போன்று 13 மடங்கு பெரியது என்று வானசாஸ்திரிகள் கண்டுபிடித்துள்ளனர்” என்று தி நியு யார்க் டைம்ஸ் அறிவிக்கிறது. “இது மார்க்கேரியன் 348 என்ற அந்த காலக்ஸியை, இதுவரை அறியப்பட்ட காலக்ஸிகளிலேயே பெரிதாக ஆக்குகின்றது. ஆன்டிரமேடா விண்மீன்கள் கூட்டத்தின் திசையில் சுமார் 300 மில்லியன் ஒளி வருடங்கள் தூரத்தில் அமைந்துள்ள இந்த காலக்ஸியின் அளவு 1.3 மில்லியன் ஒளி வருடம் என்று கணக்கிடப்படுகின்றது. (ஒரு ஒளி வருடம் என்பது சுமார் ஒரு லட்சம் கோடி மைல்கள் ஆகும்) நம்முடைய சூரியக் குடும்பத்தை ஒரு பாகமாகக் கொண்ட பால்வீதி மண்டலத்தின் விட்டம் சுமார் 1,00,000 ஒளி வருடமாகும்.

இரத்தமேற்றுதல் மறு பரிசீலனை

மரணத்தை விளைவிக்கும் ஏய்ட்ஸ் நோயின் பெருத்த அபாயமானது பாரம்பரியமாக அதிகம் இரத்தமேற்றுதலில் ஈடுபட்டிருந்த நாடுகளில்கூட மருத்துவர்களை இது குறித்து மறுபரிசீலனைச் செய்ய கட்டாயப்படுத்துகிறது. உதாரணமாக, மெய்ன்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மருத்துவச் சுகாதார நிபுணர்கள் வெளியிடும் ஜெர்மன் மருத்துவத் தாளான அர்ஸ்திஷ் ப்ராக்ஸிஸ், மருத்துவத் துறையின் அங்கத்தினர்களைப் பாதுகாக்க கிருமிகளை நீக்க அல்லது ஏய்ட்ஸ் கிருமியால் பாதிக்கப்பட்ட உபகரணங்களை அழிக்க ஒரு செயல்முறையை சிபாரிசு செய்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து ஏய்ட்ஸ் நோயை விளைவிக்கும் HIV என்ற வைரஸ் பற்றிக் குறிப்பிட்டு இந்தத் தாள் கூறுவதாவது: “முழுமையாக HIV இல்லாத இரத்தம் இல்லை என்ற எண்ணத்துடன் தான் இரத்தமேற்றுதல் மருத்துவமானது செய்யப்பட வேண்டும். எனவே இரத்தமேற்றுதல் அவசியம் என்பதைக் காட்டும் நோய்க் குறிகள் மிக கவனமாக மதிப்பிடப்பட வேண்டும்.”

சுறுசுறுப்பான படுக்கைகள்

நோய்க்குப்பின் உடல்நிலை தேறும்வரை படுக்கையிலேயே இருக்கவேண்டிய மருத்துவமனை நோயாளிகளுக்கு அதிக பட்ச கவனிப்பும் பாதுகாப்பும் தருவதற்காக இன்டியானாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம், தன்னை உபயோகிப்பவரை ‘ஒற்றறியும்’ ஒரு படுக்கையைத் தயாரித்து இருக்கின்றது. படுக்கையைவிட்டு எழக்கூடாது என உத்தரவிடப்பட்டிருக்கும் நோயாளி நழுவப் பார்க்கும் போது, படுக்கை விளிம்பின் அடியில் இருக்கும் விசேஷமான உணருக் கருவிப் பட்டைகள் வேறு அறைக்கு எச்சரிப்பு செய்தியை அனுப்பும். அங்கே அவரை கவனிக்க வேண்டிய தாதி, நோயாளியை கவனிக்கும்படி எச்சரிக்கப்படுவார். வயதில் முதிய அல்லது மருந்தின் வேகத்திற்குட்பட்டிருக்கும் நோயாளிகள் உதவியின்றி படுக்கையினின்று எழும் போது விழுந்துவிடுவதிலிருந்துக் காப்பாற்ற இந்த உணரு கருவிகள் உதவுகின்றன. “நோயாளிகள் தங்களைக் காயப்படுத்திக் கொள்ளுமுன் அவர்களுக்கு இந்தப் படுக்கைகளை நாம் கொடுப்போமக” என்று தாதியான மேரி ஸ்மித் விளக்குகின்றார். ஹெல்த் பத்திரிகை, இந்த விசேஷ படுக்கைகள் ஏற்கெனவே பல டஜன் கணக்கில் மருத்துவமனைகளில் பொருத்தப்பட்டுவிட்டன என்று அறிவிக்கின்றது.

இத்தாலிய சாலைகளில் படுகொலை

“விடியற்காலையில் எழுந்து, ஆட்ரியாட்டிக் கடற்கரையை அடைய நான்கு மணிநேரப் பயணத்திற்குமேல் இருக்க, சூரியக்குளியல் குளித்தும், ஓட்டுநருக்குச் சற்றும் பொருந்தாத உணவை உண்டும், மீண்டும் சூரியவெப்பத்தில் காய்ந்தும், பின் வாகனத்தில் சமைத்தும் வீடு செல்கின்றனர்.” இத்தாலியில், இவ்வாறு அனேக ஞாயிறுக்கிழமைகள் கழிக்கப்படுகின்றன என்று கூறுகின்றது கொரியர் டெல்லா சேரா என்ற செய்தித்தாள். இந்த நிலைமைகளின் கீழ்தான், வீடு திரும்பி, தூங்கி, மறுநாள் அடுத்த வார வேலையை எவ்வளவு சீக்கிரம் துவங்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் துவங்குவதற்காக ஓட்டுநர் இயங்குகின்றனர். இத்தாலியின் உள்துறை அமைச்சரகத்தின்படி இதனால் விளையும் தூக்க மயக்கம், சரியான கவனக்குறைவு, வேகம் ஆகியவைத் தான் இத்தாலியில் சாலை விபத்துக்களுக்கு முக்கிய காரணங்கள் ஆகும். 1987-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 13 நாட்களில் இத்தாலியில் நிகழ்ந்த மொத்தம் 9,902 சாலை விபத்துக்களில், 348 பேர் உயிரிழந்தனர், மற்றும் 7,823 பேர் காயமடைந்தனர்.

ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பைபிள்

தி சன்–ஹெரால்டு என்ற செய்தித்தாளின்படி, ஆஸ்திரேலியாவின் இரண்டாவது நூற்றாண்டு வருடமான 1988-ல், அங்குள்ள முக்கிய ப்ராட்டஸ்டண்டு சர்ச்சுகளின் விருப்பமுள்ள குறிக்கோள் இதுவே. திட்டமிடப்பட்டிருக்கும் இந்த இலவச பைபிள் அளிப்பு “நற்செய்தி 88 நடவடிக்கை” என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் பங்கெடுக்கும் சர்ச்சுகளுக்கு 2கோடி 40லட்சம் ரூபாய்க்கும் அதிகம் செலவாகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. அதிகாரம் பெற்ற பிரதிநிதிகளின் கூற்றுப்படி “பார்வைக்கு ஆர்வம் தருவதாயும், கவர்ச்சியூட்டும் வகையிலும் அமைக்கப்பட்ட” சிறப்பு பதிப்பு பைபிள்கள் தயாரிக்கப்படும். பைபிள் சங்கமும், உலக வீட்டு பைபிள் சங்கமும் இந்த பைபிள்களை அளிக்கும். இந்த நடவடிக்கையின் நிர்வாகி, இந்த அளிப்பு வெறுமென தபால் பெட்டியில் போடுவதாக இராமல், சர்ச்சின் அங்கத்தினர், ஒவ்வொரு தெருவிலுமுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பார்த்து, வீடு வீடாக இலவச பைபிள்களை அளிப்பார்கள் என்று கூறுகின்றார். (g88 1⁄8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்