ஒன்றுக்கொன்று ஏற்ற படைப்பு
வெளவாலுக்கு தேன் உரிஞ்சுவதற்கேற்ற மூக்கு இருக்கிறது, சதம் என்ற அமெரிக்கக் கற்றாழை வகை தாவரம் (century plant) மகரந்தத் தேவையில் இருக்கிறது, இரண்டுமே ஒன்றையொன்று பிரியப்படுத்த நினைக்கிறது. அது இல்லாமல் இதுவும் இது இல்லாமல் அதுவும் வாழ இயலாது.
சான்பார்னின் நீண்ட மூக்கு வெளவால் கோடைப் பருவத்தில் அரிஜோனாவுக்கும் நியு மெக்ஸிக்கோவுக்கும் இடமாறிச் செல்கிறது. அந்தச் சமயத்தில் சதம் என்ற தாவரம் கிளைகளில் மஞ்சள் நிற மலர்க் கொத்துகளோடு தண்டை ஏறக்குறைய 20 அடிக்கு உயர்த்தி நிற்கிறது. வெளவால் இரவு நேரங்களில் உணவு அருந்துகிறது; அந்த மஞ்சள் மலர்கள் இரவு நேரத்தில்தான் தேன் உற்பத்திச் செய்கின்றன; பகல் நேரத்தில் மீதமிச்சம்தான் பறவைகளுக்கு. வெளவால் மலர்களில் இறங்கும்போது, அதன் நாவு இரத்தத்தால் நிரம்பி, தன்னுடைய உடல் அளவில் மூன்றில் ஒரு பங்கு நீளம் நீண்டு, தேன் எடுக்கிறது. அது விடைபெறும்போது, தான் செல்லும் அடுத்த செடிக்கு மகரந்தம் எடுத்துச் செல்கிறது. கோடை மாதங்களில் உயிர் பிழைத்திருப்பதற்கு வெளவால் அந்தத் தாவரத்தையே நம்பியிருக்கிறது; அயல்மலர் மகரந்த சேர்க்கைக்கு அந்தத் தாவரம் வெளவாலையே நம்பியிருக்கிறது.
ஆனால் மனிதன் யோசனையின்றி வெளவால்களைக் கொல்லுதலும் அவற்றின் உறைவிடங்களை அழிப்பதும் சதம் என்ற தாவரத்துக்கும் கேடு விளைவிப்பதாகும். மனிதன் எப்பொழுதாவது வாழவும் வாழவிடவும் கற்றுக்கொள்வானா? (g88 7⁄22)