உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g90 8/8 பக். 26
  • “பேராபத்திற்குக் காரணம்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “பேராபத்திற்குக் காரணம்”
  • விழித்தெழு!—1990
  • இதே தகவல்
  • துப்பாக்கிகள் ஒரு மரண வழி
    விழித்தெழு!—1991
  • துப்பாக்கிகள் ஒரு வாழ்க்கை முறை
    விழித்தெழு!—1991
  • துப்பாக்கிகள் ஆண்களுக்கு மட்டுமல்ல
    விழித்தெழு!—1991
  • மறுபடியும் உயிர் பெறுகிற இரண்டு பையன்கள்
    என்னுடைய பைபிள் கதை புத்தகம்
மேலும் பார்க்க
விழித்தெழு!—1990
g90 8/8 பக். 26

“பேராபத்திற்குக் காரணம்”

நான் சிறுபையனாக இருந்த காலத்திலிருந்தே துப்பாக்கிகளைக் கையாண்டு இருக்கிறேன். ஆனால் இனிமேல் ஒன்றை எப்போதுமே நான் வைத்திருக்கப் போவதில்லை. எங்களுக்கு ஒரு சிறு பண்ணையுள்ளது. அதில் எலிகளை கட்டுப்படுத்துவதற்காக ஒரு துப்பாக்கி தேவைப்பட்டது என்று நான் உணர்ந்தேன். ஒரு நாள் பயிர் செய்ய ஆயத்தம் செய்துகொண்டு, என் மனைவியும் நானும் வயலில் வேலை செய்து கொண்டிருந்தோம். குறிப்பாக அன்று உஷ்ணமாக இருந்ததால், வீட்டில் வெப்பநிலை குறைவாக இருந்தபடியால் எங்கள் இரு மகன்களையும் அங்கேயே விட்டு வந்தோம். நாங்கள் சில நூறு அடிகள் தள்ளிதான் இருந்தோம்; மேலும் அவர்கள் சேர்ந்து விளையாடிக்கொண்டு நல்லபடியாக இருப்பார்கள் என்று நினைத்தோம். பெரிய பையன் என்னிடம் ஓடிவந்து “அப்பா, பாப்பா சுட்டுக்கொல்லப்பட்டது என்று நான் நினைக்கிறேன்!” என்று கூக்குரலிட்ட போது, நான் டிராக்டர் மீது இருந்தேன். நான் வீட்டிற்கு ஓடிச்சென்று என் மனைவி குழந்தைக்கு பின் பக்கம் படிகளில் CPR (இருதயமும் நுரையீரலும் மறுபடியும் இயங்கும்படி செய்வது) வழங்குவதைப் பார்த்தேன். நான் 911-க்கு டயல் செய்யும்போது, என் மகன் உயிருடன் இருக்கும்படி உதவவும் அப்படி இல்லையென்றால், உயிர்த்தெழுதலில் தயவுசெய்து அவனை நினைவில்கொள்ளவும் யெகோவாவிடம் மன்றாடினேன். அவன் அவனுடைய தாயின் கரங்களில் மரித்தான்.

அவனுக்கு வயது இரண்டரை ஆண்டுகள். அவன் மிகவும் இளையவனாகவும் அறியாதவனாகவும் இருந்தான். அதிகாரப்பூர்வமான அறிக்கை அந்தத் துப்பாக்கி சூட்டை தற்செயலாக ஏற்பட்ட விபத்தாக பட்டியலிடுகிறது. பெரிய பையன் எங்கள் படுக்கை அறையிலிருந்து அந்தத் துப்பாக்கியை எடுத்து, அதில் குண்டை வைத்து, விளையாடிக் கொண்டிருந்தான். இந்த முறையில் ஏற்பட்ட எங்கள் மகனின் இழப்பு, யெகோவா அவனை மறுபடியும் எங்களிடம் திருப்பிதரும் நாள் வரை நாங்கள் உணரக்கூடிய ஒரு பேரிழப்பாகும்.

பையன்களைத் தனியே விட்டுச்சென்றது ஒரு தவறாகும், ஆனால் வீட்டில் ஒரு துப்பாக்கியை வைத்திருந்ததுதான் அந்தப் பேராபத்திற்கு முக்கிய காரணமாகும். ஒரு துப்பாக்கி, அழிவின் கருவி மட்டுமேயன்றி வேறொன்றுமாகாது. நான் ஒன்றை வைத்திருந்ததற்கு என்றுமே நியாயம் சொல்ல முடியாது.—அரிசோனாவிலுள்ள ஒரு சாட்சியிடமிருந்து டிசம்பர் 1988 பெற்ற கடிதம். (g89 5⁄22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்