தென் ஆப்பிரிக்க சிறு மான் பற்றுமாறா ஜோடி
ஆப்பிரிக்க மானினத்தைச் சேர்ந்த, தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் சிறு மானை வந்து பாருங்கள்.
“தென் ஆப்பிரிக்க சிறு மானின் நடத்தையிலிருக்கும் மிகவும் விரும்பத்தக்க அம்சங்களில் ஒன்று, மிகவும் பலமான மற்றும் நீண்ட காலம்—ஒருவேளை இருவரில் ஒருவர் மரிக்கும் வரையிலுமாக நீடித்திருக்கும் ஜோடி பிணைப்பாகும்” என்பதாக ஆப்பிரிக்க வனவாழ்வு பத்திரிகையில் பீட்டர் நார்டன் குறிப்பிடுகிறார். “ஜோடி ஏறக்குறைய எல்லாச் சமயங்களிலும் அருகிலேயே ஒன்றாகவே சேர்ந்து தங்கியிருக்கிறது—அவை ஒன்றுக்கொன்று 15 மீட்டர் தொலைவுக்குள் 97 சதவீத நேரத்தையும், ஐந்து மீட்டர் தொலைவுக்குள் 77 சதவீத நேரத்தையும் செலவிடுவதை என்னுடைய செய்தி குறிப்பு காண்பிக்கிறது. அவை ஓய்வெடுக்கையில் அல்லது திகிலடைந்திருக்கையில் எப்பொழுதும் கை எட்டு தூரத்திலேயே இருக்கின்றன.
ஆப்பிரிக்க சிறு மான் ஜோடி, மாறி மாறி ஒன்று புல் மேய்கையில் மற்றொன்று பாறை ஒன்றின் மீது தங்கி காவல் காத்து நிற்கிறது. பின்னர் அவை இடத்தை மாற்றிக் கொள்கின்றன. நார்டன் குறிப்பிடுகிறார்: “முதிர் கருவுக்கு ஊட்டமளிப்பதற்கும் தன் குட்டிக்கு பால் கொடுப்பதற்கும் பெண் மான் அதிகமாக உண்ண வேண்டியிருப்பதால், ஆண் மானே பிற விலங்குகளை கொன்று தின்கிற மிருகங்களுக்காக காவல் காப்பதில் அதிகமான நேரத்தை செலவிடுகிறது.”
மற்ற மானினங்களோடு ஒப்பிட, ஆப்பிரிக்க சிறு மானின் குளம்புகள், தனிச் சிறப்பானவையாக செங்குத்தான வழவழப்பான பாறைகள் மீது ஏறுவதற்கு ஏற்றதாக இருக்கின்றன. பாதுகாப்பான பாறை சரிவுகளிலிருந்து, ஓர் எக்காளம் போன்ற விசில் சப்தத்தினால் பிற விலங்குகளைக் கொன்று தின்கிற மிருகங்களைப் பற்றி எச்சரிப்புக் கொடுக்கிறது. அபாய ஒலி அநேகமாக இரு குரலிசையாக இருக்கிறது. பெண் குரல் ஆண் குரலைத் தொடர்ந்து நொடிப் பொழுதில் கேட்கிறது. அவை நிச்சயமாக ஒன்றில் ஒன்று அக்கறையுள்ளவையாக இருக்கின்றன. உண்மையாகவே பற்றுமாறா ஜோடி. (g89 9/8)