உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g90 9/8 பக். 31
  • எமது வாசகரிடமிருந்து

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • எமது வாசகரிடமிருந்து
  • விழித்தெழு!—1990
  • இதே தகவல்
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1991
  • ‘எங்கள் புதல்விகள் நெருங்கிய பாசத்துடன் இருக்கும்படி உதவி செய்தது’
    விழித்தெழு!—1992
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1991
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1990
g90 9/8 பக். 31

எமது வாசகரிடமிருந்து

மரண வியாபாரிகள் போரயுதங்களுக்காக ஒரு வருடத்திற்கு பத்து இலட்சம் டாலர் கொடுத்துவிட்டு, பசியின் பாதிப்புகளினால் 14 இலட்சம் பிள்ளைகளை மரிக்க விடுவது எவ்வளவு படுமோசமான பைத்தியக்காரத்தனமாயிருக்கிறது! (ஆகஸ்ட் 1990) போரயுத வியாபாரிகளின் மிகப்பெரிய கொடுமைகளை வெளியரங்கமாக்குவதில் விழித்தெழு! ஒரு நல்ல வேலை செய்கிறது, அதே சமயத்தில் சிருஷ்டிகர் எவ்வாறு ஒரு புதிய உலகத்தைச் சீக்கிரத்தில் கொண்டு வருவார், அதில் சமாதானமும் பாதுகாப்பும் செழித்தோங்கும் என்பதையும் அது காட்டுகிறது.

C.G.P., ஜெர்மன் குடியரசு

பாதுகாப்பான உணவு ஜூலை 1990 விழித்தெழு! பத்திரிகையில் வந்த “பாதுகாப்பாக உணவருந்துங்கள்” என்ற கட்டுரையை நான் ஆர்வத்துடன் படித்தேன். ஒன்றரை வருடத்திற்கு முன்பு நாங்கள் ஓர் அயல் நாட்டிற்குப் பிரயாணம் செய்தபோது, அங்கே அவர்கள் பாத்திரங்களைச் சூடான சோப் நீரில் கழுவினார்கள். ஆனால் அதிலிருந்து சோப் நுரைகளை எடுப்பதற்குப் பாத்திரங்களைக் காய வைப்பதற்கு முன்னால் அலசாமல் விட்டுவிட்டார்கள் என்பதை அறிய வந்தது எனக்கு ஆச்சரியமாயிருந்தது. உங்களுடைய கட்டுரை அலசுவதைப் பற்றி குறிப்பிடாததினால், இது அவசியமில்லை என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை இது அர்த்தப்படுத்துமா?

S.B., ஐக்கிய மாகாணங்கள்

சோப் நுரை படிந்த பாத்திரங்களை அலம்புவது உடல் ஆரோக்கியத்துக்கடுத்த ஒரு முக்கிய படி, அதை நீங்கள் குறிப்பிட்டதற்கு நாங்கள் போற்றுகிறோம்.—ஆசிரியர்.

அநேக ஆட்கள் மணிக்கணக்கில் அறையின் வெப்பநிலையில் உணவை விட்டு வைக்கிறார்கள் என்பதும், சமையல் செய்வதற்கு முன்னால் தங்கள் கைகளைக் கழுவாமல் விட்டுவிடுவது போன்ற எளிய காரியங்களைச் செய்யாமல் இருப்பதும் ஆச்சரியமாயிருக்கிறது. நியு யார்க்கிலுள்ள உங்கள் தலைமை காரியாலயத்திற்கு நான் சென்றிருந்தேன். அவர்களுடைய உச்ச அளவு தூய்மை என்னைக் கவர்ந்தது. நம்முடைய வீடுகளில் அந்த உதாரணத்தை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

M.B., ஐக்கிய மாகாணங்கள்

கண்ணைக் கவரும் வான் வெளிக்காட்சிகள். சிறிது நேரத்திற்கு முன்னால் என்னுடைய நான்கு வயது மகள் இடியும் மின்னலும் எங்கிருந்து வருகிறது என்று என்னைக் கேட்டாள். நான் அவளுக்கு ஒரு பதிலைக் கொடுத்தேன். ஆனால் அவளுடைய ஆர்வமுள்ள விருப்பத்தை என்னால் திருப்தி செய்ய முடியவில்லை. விஞ்ஞான புத்தகங்களை எடுத்துப் பார்த்தேன். ஆனால் அவற்றில் இருந்த விளக்கங்கள் அதிக தொழில் நுட்பம் வாய்ந்தவையாக இருந்தன. ஆகஸ்ட் 1990 இதழில் உள்ள உங்கள் கட்டுரை என்னுடைய கேள்விகளுக்குத் தெளிவாகவும் புரிந்து கொள்ளும் விதத்திலும் பதிலளித்தது. என்னுடைய பிள்ளைகளில் அந்தப் படங்கள் என்னே ஒரு பதிவை ஏற்படுத்திவிட்டன! அதற்குப் பின்பு பல நாட்களுக்கு அவர்களுடைய படுக்கை நேர கதை ‘இடியும் மின்னலும்’தான்.

(g89 10/22) P.G., ஜெர்மன் குடியரசு

வசைமொழி சொற்களால் திட்டுதல். வசைமொழி சொற்களால் திட்டுதல் பற்றிய உங்கள் கட்டுரைக்கு நன்றி. (ஆகஸ்ட் 1990) என்னுடைய பெற்றோர் என்னை ஒருபோதும் புகழ்ந்ததில்லை அல்லது உணவு, உடை அல்லது பணம் போன்ற பொருளாதார காரியங்களைக் கொடுப்பதைத் தவிர என்னை நேசிக்கிறார்கள் என்றும் காட்டியதில்லை. என் நாவைக் கட்டுப்படுத்தியிருந்தால் அது நிலைமையை மேம்படுத்தியிருக்கும் என்று நான் இப்பொழுது உணருகிறேன். அந்தக் கட்டுரை உண்மையிலேயே நேரத்திற்கு ஏற்றதாய் இருந்தது.

S.M., ஆஸ்திரேலியா

அந்தக் கட்டுரை எனக்கு ஏமாற்றத்தைத் தந்தது. பெற்றோருக்கு ஒரு நாள் எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதைப் பிள்ளை மீது காண்பிக்க அவர்களுக்கு அதிகாரமில்லை. அதற்கு இரையாவோர் மாற வேண்டும் என்று சொல்லும் கட்டுரைக்குப் பதிலாக, அந்தப் பிரச்னையின் வேராகிய பெற்றோரைப் பற்றி ஒரு கட்டுரையைத் தயவுசெய்து தாருங்கள்.

M.W., ஐக்கிய மாகாணங்கள்

உங்கள் குறிப்புகள் நல்ல முறையில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இருந்தபோதிலும் அந்தக் கட்டுரை ‘பிரச்னையின் வேருக்குச்’ செல்லும்படியான நோக்கத்தோடு எழுதப்படவில்லை, ஆனால் இளைஞர்கள் ஒரு கடினமான சூழ்நிலையைச் சமாளிக்க உதவி செய்ய எழுதப்பட்டது. அந்தக் கட்டுரை மேலுமாக சொன்னது: “வசைமொழிக்கு எந்த ஒரு சாக்குபோக்கும் இல்லை.” ஆகையால் பெற்றோரின் வசைமொழிக்கு இரையாவோர் தாங்கள் அதற்கு உத்தரவாதமுள்ளவர்கள் என்று உணர வேண்டிய அவசியமில்லை. இருந்தபோதிலும் விவேகத்துடன் செயல்படுவதன் மூலம் இளைஞர்கள் இந்த மோசமான சூழ்நிலையிலிருந்து சிறந்ததைப் பெற்றிட முடியும்.—ஆசிரியர்.

அந்தக் கட்டுரை உண்மையிலேயே உற்சாகமூட்டுவதாய் இருந்தது. நான் வளரும் பருவத்தில் இருக்கும்போது இது கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என் மாற்றாந்தகப்பன் பலவிதங்களில் எங்களைத் திட்டியிருக்கிறார். என்னைப் பார்த்துக் கூச்சலிட்டு உண்மையிலேயே புண்படுத்தும் வார்த்தைகளைக் கூறுவார். நான் அழுது கொண்டே உறங்கச் செல்வேன். முந்தினவைகளை மறந்து, கடும் சினத்தைத் தணித்து யெகோவாவுக்காக என் வாழ்க்கையை வாழ அவர் எனக்கு உதவி செய்திருக்கிறார்.

(g89 11/08) Y.M., ஐக்கிய மாகாணங்கள்

பிறருடன் சம்பாஷிப்பது “பிறருடன் சம்பாஷிப்பதை நான் எப்படி விருத்தி செய்துகொள்ளலாம்?” (ஜூலை 1990) என்ற கட்டுரை என் கவனத்தைக் கவர்ந்தது. சம்பாஷணைகளில் பங்குகொள்வது எனக்குக் கடினமாக இருந்திருக்கிறது. அந்தக் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள சில இளைஞர்களைப் போல நான் பெரும்பாலும் இருந்தேன். யெகோவா தேவனுடைய உதவியுடனும், நீங்கள் கொடுத்த நல்ல ஆலோசனைகளையும் கொண்டு இப்பொழுது நான் இந்த விஷயத்தில் அதிக முன்னேற்றத்தைக் காண்கிறேன். “இளைஞர் கேட்கின்றனர் . . .” என்ற கட்டுரைகளின் ஏற்பாட்டிற்காக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நன்றியுணர்ச்சி உடையவர்களாயிருக்கின்றனர் என்று நான் நம்புகிறேன்.

(89 12/08) M.C.M., பிரேசில்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்